கமல் சார் பண்ணுன அந்த விஷயம் பத்தி யாருமே பேசுறது இல்ல!.. உத்தமவில்லன் பிரச்சனை குறித்து உண்மையை கூறிய தயாரிப்பாளர்!..

தமிழ் சினிமாவில் தற்சமயம் இரண்டு பிரச்சனைகள்தான் பெரும் பிரச்சனைகளாக இருந்து வருகின்றன. நடிகர் சிம்பு கொரோனா குமார் என்கிற திரைப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்கிவிட்டு நடித்து கொடுக்கவில்லை என்பது ஒரு பிரச்சனை.

அதே போல உத்தமவில்லன் திரைப்படம் தோல்வியை கண்டதை அடுத்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல்ஹாசன் ஒரு திரைப்படம் நடித்து கொடுக்க வேண்டும் என்பது மற்றொரு பிரச்சனை. உத்தமவில்லன் திரைப்படம் படமாக்கப்பட்டப்போதே அதன் கதையில் மாற்றங்களை செய்ய சொல்லியிருக்கிறார் லிங்குசாமி.

ஆனால் கமல்ஹாசன் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் அப்படியே படத்தை ரிலீஸ் செய்துள்ளார். வெளியான படமும் தோல்வியை கண்டது. இதனை தொடர்ந்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மற்றொரு திரைப்படத்தில் நடித்து தருவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Uttama-Villain
Uttama-Villain

ஆனால் இப்போது வரை அவர் எந்த படத்திலும் நடித்து கொடுக்கவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டாக இருக்கிறது. இதுக்குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் தங்கப்பன் பேசும்போது ஒரு சில தகவல்களை பகிர்ந்திருந்தார்.

அதாவது உத்தமவில்லன் படத்தின் தோல்விக்கு பிறகு 2015 ஆம் ஆண்டே தன்னை வைத்து படம் எடுத்துக்கொள்ளும்படி கமல்ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கால் ஷூட் கொடுத்தார். ஆனால் அப்போது படம் தயாரிக்க பணம் இல்லாததால் திருப்பதி பிரதர்ஸ் அந்த கால் ஷீட்டை தவறவிட்டனர்.

இந்த நிலையில் இப்போது வந்து மீண்டும் கமல் நடித்து தர வேண்டும் என கேட்பது என்ன நியாயம் என கேட்டுள்ளார் தங்கப்பன்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version