படம் எடுக்குறதுல எனக்கு குரு சுந்தர் சிதான்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி!.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி முதலில் எஃப்.எம் ரேடியோவில்தான் பணிப்புரிந்து வந்தார். அதில் பிரபலங்களை வம்பிழுக்க க்ராஷ் டாக் என்னும் ஒரு நிகழ்ச்சியை செய்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவருக்கு வரவேற்பு அதிகமானது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார் ஆர்.ஜே பாலாஜி. அதன் பிறகு எல்.கே.ஜி என்கிற திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடித்தார்.

அந்த திரைப்படத்திற்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து ஆர்.ஜே பாலாஜி திரைப்படங்களை இயக்கலாம் என முடிவு செய்தார். அப்படி அவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படமும் வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது.

rj-balaji

இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசும்போது படம் இயக்குவதில் எனக்கு குரு என்றால் சுந்தர் சிதான். அவர் ஒருமுறை என்னிடம் பேசும்போது படம் இயக்கும்போது அதை ஜாலியாக செய்ய வேண்டும். காமெடி எடுக்கும்போது ஆறு மணிக்கு மேல் அவர்களை வேலை வாங்கினால் அவர்கள் ஜாலியாகவா வேலை பார்ப்பார்கள்.

நான் மொத்த படக்குழுவையும் ஏதாவது ஒரு ஊருக்கு சுற்றுலா மாதிரி அழைத்து சென்று படப்பிடிப்பை முடித்துவிடுவேன் என கூறினார் சுந்தர் சி. அதே ஃபார்முலாவைதான் நானும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் பின்பற்றினேன் என்கிறார் ஆர்.ஜே பாலாஜி.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version