Tag Archives: ஜெயம் ரவி

லோகேஷ் படத்தில் வில்லனாக களம் இறங்கும் ஜெயம் ரவி… இதுதான் காரணம்..!

தற்சமயம் ரவி மோகன் என பெயரை மாற்றி இருந்தாலும் அனைவராலும் ஜெயம் ரவி என்றே இன்னும் அடையாளம் காணப்பட்டு வருகிறார் ஜெயம் ரவி. சமீப காலங்களாகவே ஜெயம் ரவி தேர்ந்தெடுத்த கதைகளங்கள் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை.

இறைவன், அகிலன் என அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் அவருக்கு தோல்வியைதான் ஏற்படுத்தி கொடுத்தன. இதனை தொடர்ந்து அவருக்கு மார்கெட் என்பது குறைய துவங்கியது. இந்த நிலையில் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனையை சந்தித்தார் ஜெயம் ரவி.

தற்சமயம் இவர் கதை தேர்ந்தெடுப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஜெயம் ரவி. இது பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஏனெனில் ஜெயம் ரவி தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்த நடிகராவார். திடீரென ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார். இத்தனைக்கும் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவிக்கு பிறகு சினிமாவிற்கு வந்தவர் என பலரும் பேசி வந்தனர்.

இந்த நிலையில் அடுத்து லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம் ஜெயம் ரவி. அவருக்கு அதிக பண கஷ்டம் இருப்பதாகவும் அதனால்தான் வில்லனாக வரும் வாய்ப்பை கூட ஏற்றுக்கொண்டு நடிக்கிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

 

ஜெயம் ரவி இயக்கத்தில் யோகி பாபு அடுத்து வர இருக்கும் காம்போ..!

விவாகரத்துக்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி நிறைய புது முயற்சிகளை எடுக்கத் தொடங்கி இருக்கிறார். கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதே மாதிரி அவருடைய தயாரிப்பிலும் இயக்கத்திலும் படங்கள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜெயம் ரவியின் தயாரிப்பில் இரண்டு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வருமென்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதேபோல யோகி பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை ஜெயம் ரவியே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இருந்த ஜெயம் ரவியில் இருந்து மொத்தமாக மாறுபட்ட ஒரு ஜெயம் ரவியை இனி திரையில் பார்க்கலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன.

குழந்தைகள் மீது இருவருக்குமே அக்கறையில்லை.. ஜெயம் ரவி ஆர்த்தி குறித்து சாடிய பிரபலம்.!

சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டின் திருமண விழாவில் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் வந்திருந்தார். இது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து குறித்த பேச்சுக்களை மீண்டும் துவக்கி வைத்து இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருந்தார். அதில் அவர் கூறும்பொழுது பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு குடும்பத்தை பார்த்துக் கொள்வதில் சிரமங்கள் இருக்க தான் செய்யும். எல்லா பிரபலங்களுமே இந்த சிக்கலை சந்திக்கின்றனர்.

இந்த நிலையில் விவாகரத்து என்பதும் நடந்து விடுகிறது. விவாகரத்து என்பதே அவர்கள் இரண்டு பேருக்கும் உள்ளே மட்டும் நடக்கக் கூடிய ஒரு விஷயம் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு அந்த திரையுலகம் என்பதே மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது.

jayam ravi

குடும்பம் தூக்கம் என பலவற்றையும் மறந்து தங்களுக்கான இடத்தை சினிமாவில் பிடிப்பதற்காக அவர்கள் அதிகமாக போராட வேண்டி இருக்கிறது. இதனால் அவர்களால் குடும்பத்தை கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதுதான் ஜெயம் ரவி ஆர்த்தி விஷயத்திலும் நடந்தது.

அதன் பிறகு சமூக ஊடகங்கள் இதை பெரிதாக பேச துவங்கியது. ஜெயம் ரவி ஆர்த்தி இருவருமே இப்படி சண்டை போட்டுக் கொள்வது அவர்களது குழந்தைகளை தான் மிகவும் பாதிக்கும். இவர்கள் இருவருமே படித்தவர்கள் தான் அவர்களது துறையில் வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டே இருக்கின்றனர் என்று இது குறித்து பேசி இருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.

விரைவில் திருமணம்…ரவி மோகன் குறித்து பிரபலம் சொன்ன தகவல்..!

ரவி மோகன் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். ரவி மோகன் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

அவரை குறித்து சினிமாவில் பெரிதாக சர்ச்சை என்று கூட எதுவுமே வந்தது கிடையாது. அப்படியிருக்கும்போது சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து ரவி மோகன் குறித்தும் அவரது மனைவி ஆர்த்தி குறித்தும் பல்வேறு வகையான வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

முக்கியமாக ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அப்போதைய சமயத்தில் ஜெயம் ரவி நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு விஷேசத்திற்கு கெனிஷாவுடன் வந்துள்ளார் ஜெயம் ரவி. இருவரும் ஒரே மாதிரியான ஆடை அணிந்து வந்துள்ளனர். இதுக்குறித்து பேசிய பத்திரிக்கையாளர் அந்தணன் கூறும்போது ஜெயம் ரவி அடுத்து கெனிஷாவுடன் சேர்ந்து வாழ போகிறார்.

அதை மக்களுக்கு உணர்த்தும் விதத்தில்தான் இப்படி வந்துள்ளார் என இதுக்குறித்து கூறியுள்ளார். மக்கள் மத்தியிலும் இந்த விஷயம் பிரபலமாகி வருகிறது. 

டாடா இயக்குனரின் அடுத்த படைப்பு.. ஆளுங்கட்சியை சாடும் ரவி மோகனின் கராத்தே பாபு.!

சமீப காலங்களாகவே நடிகர் ரவி மோகனுக்கு பெரிதாக வெற்றி படங்கள் என்று எதுவுமே அமையவில்லை. இறுதியாக அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் திரைப்படம்தான். அதுவும் பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் என்பதால் அதை ரவி மோகனின் வெற்றி படமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆனால் அதற்கு பிறகு வெளிவந்த அகிலன், இறைவன்,சைரன் மாதிரியான படங்கள் எல்லாம் அவருக்கு வெகுவாக தோல்வியை ஏற்படுத்தி கொடுத்தன. சமீபத்தில் வெளியான ப்ரதர் திரைப்படம் கூட பெரிய வெற்றியை பெற்று தரவில்லை.

அதனை தொடர்ந்து இனி நடிக்கும் திரைப்படங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் ரவி மோகன். அந்த வகையில் அடுத்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார்.

தற்சமயம் இவர் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிய நிலையில் டாடா திரைப்படத்தை இயக்கி வெற்றி கொடுத்த இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் டீசர் தற்சமயம் வெளியானது. அதனை வைத்து பார்க்கும்போது ஆர்.கே நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ரவி மோகன் இருக்கிறார். அவரது பெயர் முன்பு கராத்தே பாபு என இருந்துள்ளது. பிறகு அரசியலுக்கு வந்த பிறகு அவர் பெயரை மாற்றி வைத்துள்ளார்.

இதில் வரும் முதலமைச்சர் கதாபாத்திரம் தமிழ் மீது பற்றுள்ளதாக இருக்கிறது. எனவே படத்தில் ஆளுங்கட்சியைதான் வம்பிழுத்து உள்ளனர் என்கின்றனர் ரசிகர்கள்.

மேலும் நான் என் பெயரை மாற்றியுள்ளேன் என கூறும் போது ஜெயம் ரவி என்கிற பெயர் ரவி மோகன் என மாறுகிறது. இதன் மூலம் தனது பெயர் மாறியதையும் ரவி மோகன் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

 

 

 

ரொம்ப நாளா இருந்த அந்த ஆசை.. விவாகரத்துக்கு பிறகு செய்ய போறேன்.. வெளிப்படையாக பேசிய ரவி மோகன்.!

ஜெயம் ரவி என பரவலாக அழைக்கப்பட்டு தற்சமயம் பெயரை மாற்றியிருப்பவர் நடிகர் ரவி மோகன். நடிகர் ரவிமோகன் சமீப காலமாக நடிக்கும் திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வருகிறது.

சமீபத்தில் அவர் நடித்த அகிலன், இறைவன், சைரன் மாதிரியான படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்சமயம் அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படம் வெளியானது.

அந்த திரைப்படத்தை இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கினார். அந்த திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதற்கு நடுவே ரவி மோகனின் சொந்த வாழ்க்கையும் அவ்வளவாக சிறப்பாக செல்லவில்லை. அவரது வாழ்க்கையில் அவருக்கும் அவரது மனைவிக்குமிடையே சுமூகமான உறவுகள் நீடிக்கவில்லை.

jayam ravi

இதனை அடுத்து இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர். மேலும் ரவி மோகன் வங்கியில் வைத்திருந்த பணத்தையும் அவரது மனைவி கையகப்படுத்திவிட்டதாக கூறப்பட்டது.

இதனால் ரவி கோவாவில் சென்று தங்கி வந்தார். இந்த நிலையில் வெகு நாட்களாகவே தனக்கு இமயமலைக்கு செல்ல ஆசை இருந்து வருவதாகவும் எனவே இமயமலை செல்ல இருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார் ரவி மோகன்

அடுத்து சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தில் ரவி மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அநேகமாக அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் இமயமலைக்கு கிளம்பலாம் என கூறப்படுகிறது.

மனம் வருந்தும்படி பேசிய வி.ஜே சித்து.. கடுப்பாகி ஜெயம் ரவி எடுத்த முடிவு.. காமெடி பண்ணதால் வந்த வினை.!

நடிகர் ஜெயம் ரவி வெகு வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக சினிமாவில் தனக்கென தனி இடத்தை இவர் பிடித்து வைத்துள்ளார். இந்த நிலையில் சமீப காலமாகவே ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கை சொந்த வாழ்க்கை இரண்டுமே பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

சமீப காலங்களாகவே அவர் நடித்த இறைவன், அகிலன், சைரன் மாதிரியான எந்த திரைப்படங்களுமே பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதற்கு நடுவே அவரது சொந்த வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. இந்த நிலையில் தற்சமயம் கோவாவில் இருந்து வருகிறார் ஜெயம் ரவி.

சமீபத்தில அவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படம் வெளியானது. இது தொடர்பான ப்ரோமோஷனில் இருந்து வந்த ஜெயம் ரவி திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் இனி யாரும் தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம்.

jayam ravi

ரவி மோகன் என அழைத்தால் போதும் என கூறியிருந்தார். இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பின்னணி காரணமாக வி.ஜே சித்து என்கிற யூ ட்யூப்பர் இருந்ததாக கூறப்படுகிறது.

பட ப்ரோமோஷனுக்காக வி.ஜே சித்து யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்றிருந்தார் ஜெயம் ரவி. அப்போது அவரிடம் பேசிய வி.ஜே சித்து ஏன் 20 வருடங்கள் ஆன பிறகும் ஜெயம் ரவி என்றே பெயர் வைத்துள்ளீர்கள். அதை மாற்றலாம் அல்லவா என கூறியதோடு அல்லாமல் நகைச்சுவையான சில பெயர்களையும் பரிந்துரை செய்துள்ளார்.

இது ஜெயம் ரவியை மனதை பாதித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பேட்டிக்கு பிறகு தனது பெயரை மாற்றி அறிக்கை விட்டுள்ளார் ஜெயம் ரவி.

காதலிக்க நேரமில்லை பத்தி சொல்ல ஒண்ணுமில்லை.. அதிருப்தியில் ரசிகர்கள்..!

சமீப காலங்களாகவே நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு என்பதே இல்லாமல் இருந்து வருகிறது. சில வருடங்களாகவே குறிப்பிடும்படி பெரிய வெற்றி படங்கள் எதுவுமே ஜெயம் ரவிக்கு அமையவில்லை.

இந்த நிலையில் அவரது சொந்த வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார் ஜெயம் ரவி. எனவே கண்டிப்பாக வெற்றி படம் கொடுக்க வேண்டிய ஒரு நிலையில் ஜெயம் ரவி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்சமயம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படத்தை கிருத்தியா உதயநிதி இயக்கியிருக்கிறார்.

இந்த படம் ஒரு முக்கோண காதல் கதையை கொண்ட படமாகும். பெரும்பாலும் கிருத்திகா உதயநிதி காதல் படங்களைதான் இயக்கி வருகிறார். அவர் ஏற்கனவே இயக்கிய வணக்கம் சென்னை திரைப்படமும் கூட முக்கோண காதல் கதையை கொண்ட படமாகதான் இருந்தது.

ஆனால் அந்த படம் கொடுத்த வரவேற்பை காதலிக்க நேரமில்லை திரைப்படம் கொடுக்கவில்லை. இந்த படத்தை கிட்டத்தட்ட ஓ காதல் கண்மணி போலவே முயற்சி செய்துள்ளனர். ஆனால் மணிரத்தினத்திற்கு ஒர்க் அவுட் ஆன அளவிற்கு கிருத்திகா உதயநிதிக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை.

பாடல்களை பொருத்தவரை என்னை இழுக்குதடி பாடலை தவிர மற்ற பாடல்களும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் படம் குறித்து ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

வாழ்க்கையே வெறுத்து போச்சு.. மனம் வருந்தும் ஜெயம் ரவி.. எப்படி இருந்த மனுஷன்..!

ஜெயம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் நடிகர் ஜெயம் ரவி. முதல் படமே தமிழ் சினிமாவில் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதற்கு பிறகு அவர் நடித்த எம்.குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி என வரிசையாக அப்போது வெற்றி படங்களை கொடுத்து வந்தார் ஜெயம் ரவி. ஆனால அவ்வளவுக்கும் மாற்றாக இப்போது தொடர்ந்து அவர் தோல்வி படங்களாக கொடுத்து வருகிறார்.

மேலும் சொந்த வாழ்க்கையிலும் கூட அவருக்கு அவ்வளவு சுமூகமான வாழ்க்கை அமையவில்லை. ஆர்த்தி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார் ஜெயம் ரவி. ஆனால் பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவியை விட்டு பிரிந்தார் ஜெயம் ரவி. இந்த நிலையில் தனது தொடர் தோல்வி திரைப்படங்கள் குறித்து அவர் சமீபத்தில் பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது தோல்வி என்பது யாருக்குமே நிரந்தரம் இல்லை.

2014 ஆண்டுகளில் எனக்கு படங்கள் எல்லாம் தோல்வி அடைந்து வந்தன.அதற்கு பிறகு நான் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அந்த சமயத்தில் ஒரே திரைப்படத்தில் மூன்று வருடங்களாக நடித்து வந்தேன். அப்போதைய சமயத்தில் எந்த படமும் நன்றாக போகவில்லை.

என் தரப்பில் என்ன தவறு உள்ளது. எதனால் எனது திரைப்படங்கள் ஓடுவதில்லை என்பதை என்னால் கண்டறிய முடியவில்லை. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு எனக்கு வெற்றி படமாக இருந்தது.

2015 ஆம் ஆண்டு தனி ஒருவன்,ரோமியோ ஜூலியட், பூலோகம் என மூன்று படங்களுமே பெரும் வெற்றியை பெற்று கொடுத்தன. தோல்விக்கும் வெற்றிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாம் கீழே விழுவது தோல்வி கிடையாது.

ஆனால் மீண்டும் எழாமல் இருந்தால்தான் அது தோல்வி என கூறியுள்ளார் ஜெயம் ரவி. எனவே இந்த வருடம் நான் மீண்டும் எழுந்துவிடுவேன். அதற்கான நல்ல கதைகளையும் ,திறமையான இயக்குனர்களையும் தேர்ந்தெடுத்துள்ளேன் என கூறியுள்ளார் ஜெயம் ரவி.

 

வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.. SK 25 இல் இணையும் ஜெயம் ரவி, அதர்வா.. ஜெயம் ரவி நண்பனா? வில்லனா?..

அமரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் ராணுவம் தொடர்பான திரைப்படமாக இருக்கலாம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு பிரபல இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சூரரை போற்று மாதிரியான நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் சுதா கொங்காரா. அடுத்து சிவகார்த்திகேயன் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் திரைப்படமும் மிக சீரியசான ஒரு திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணையும் ஜெயம் ரவி:

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஜெயம்ரவி வில்லனாக நடித்த போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஏனெனில் விஜய் சேதுபதி மாஸ்டர், விக்ரம் மாதிரியான திரைப்படங்களில் வில்லனாக நடித்த பொழுது அது அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.

ஜெயம் ரவிக்கும் அப்படியான வரவேற்பை இந்த வில்லன் கதாபாத்திரம் பெற்றுக் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஹீரோவுக்கு இணையான ஒரு கதாபாத்திரமாக வில்லனின் கதாபாத்திரமும் இந்த திரைப்படத்தில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம். அந்த வகையில் அதர்வா மற்றும் ஜெயம் ரவி இருவரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 வது திரைப்படத்தில் இணைகின்றனர்.

சிவகார்த்திகேயனுடன் கூட்டணி.. செலக்‌ஷனில் மாற்றத்தை கொண்டு வந்த ஜெயம் ரவி..!

நடிகர் ஜெயம் ரவிக்கு வெகு வருடங்களாகவே ஒரு நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படம் என்று ஒரு திரைப்படம் கிடைக்கவே இல்லை.

பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தாலும் கூட அதே நிறைய நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் என்பதால் ஜெயம் ரவியின் வெற்றி படம் என்று அதை கூற முடியாது.

இந்த நிலையில் ஜெயம் ரவி தொடர்ந்து புது கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். எனவே விவாகரத்துக்கு பிறகு அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் கதையையும் அலசி ஆராய்ந்து நடித்து வருகிறார்.

புது கூட்டணி:

jayam ravi

மேலும் தொடர்ந்து இப்பொழுது பிரபலமாக இருக்கும் இயக்குனர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே வெற்றிமாறனிடம் தன்னை வைத்து ஒரு படம் பண்ணும்படி கேட்டு இருக்கிறார்.

வெற்றிமாறனும் அதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார். இதேபோல நிறைய இயக்குனர்களிடம் பேசி வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி சேர்ந்து நடிக்க போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

முக்கியமாக ஜெயம் ரவி அந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக சினிமாவில் களமிறங்கிய பொழுது அது அவருக்கு அது பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அதே மாதிரியான வரவேற்பை ஜெயம் ரவியும் பெற நினைக்கிறார் என்று கூறப்படுகிறது.

விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயம் ரவி..! நீதிபதி போட்ட உத்தரவு.!

ஜெயம் ரவி விவாகரத்து குறித்த விஷயங்கள் சில மாதங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது ஏனெனில் தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாத ஒரு நடிகராக இருந்து வந்தவர் நடிகர் ஜெயம் ரவி.

ஆனால் அவரே விவாகரத்து விஷயத்தில் முதலில் அறிக்கை விட்டார் என்பது பலரும் அறிந்த விஷயமாக இருந்தது. பணரீதியான நெருக்கடி மற்றும் உறவுகளுக்கு இடையே இருந்த பிரச்சனை இந்த மாதிரியான நிறைய காரணங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல்தான் ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நீதிமன்றத்தின் பதில்:

jayam ravi aarthi

இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு ஒன்றை கொடுத்திருந்தார் ஜெயம் ரவி. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் ஜெயம் ரவி ஆஜரான பிறகு அவரிடம் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவனும் மனைவியும் ஆலோசனை பெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றனர்.

சமரச ஆலோசனைக்கு பிறகும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டாம் என்று முடிவுடனே இருந்தால் அதற்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளை பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.