sk 25

வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.. SK 25 இல் இணையும் ஜெயம் ரவி, அதர்வா.. ஜெயம் ரவி நண்பனா? வில்லனா?..

அமரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் ராணுவம் தொடர்பான திரைப்படமாக இருக்கலாம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு பிரபல இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சூரரை போற்று மாதிரியான நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் சுதா கொங்காரா. அடுத்து சிவகார்த்திகேயன் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் திரைப்படமும் மிக சீரியசான ஒரு திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணையும் ஜெயம் ரவி:

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஜெயம்ரவி வில்லனாக நடித்த போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஏனெனில் விஜய் சேதுபதி மாஸ்டர், விக்ரம் மாதிரியான திரைப்படங்களில் வில்லனாக நடித்த பொழுது அது அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.

ஜெயம் ரவிக்கும் அப்படியான வரவேற்பை இந்த வில்லன் கதாபாத்திரம் பெற்றுக் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஹீரோவுக்கு இணையான ஒரு கதாபாத்திரமாக வில்லனின் கதாபாத்திரமும் இந்த திரைப்படத்தில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம். அந்த வகையில் அதர்வா மற்றும் ஜெயம் ரவி இருவரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 வது திரைப்படத்தில் இணைகின்றனர்.