Tag Archives: good bad ugly

அஜித்தால் சன் பிக்சர்ஸ்க்கு வந்த நஷ்டம்… நிறுவனம் எடுத்த முடிவு..!

சமீப காலமாக நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்பது தமிழ் சினிமாவில் வரவேற்பு பெறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக விடாமுயற்சி திரைக்கு வந்து பெரும் வெற்றியை அடையவில்லை.

இது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் இவ்வளவு காலங்கள் அஜித் நடித்த திரைப்படங்கள் சுமாரான திரைப்படங்களாக இருந்தாலுமே நல்ல வெற்றியை பெற்று வந்தன.

ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரை அஜித்துக்கான ஹீரோயிசம் விஷயங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அந்த படம் தோல்வியை கண்டது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது. ஆனால் ஓடிடியில் வெளியாகியும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

அதனால்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் வாங்க இருந்தது.

ஆனால் விடாமுயற்சி படத்தால் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக குட் பேட் அக்லி திரைப்படத்தை அவர்கள் வாங்கவில்லை. அதனால்தான் இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

இதுவரை குட்  பேட் அக்லி வசூல்… கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படமே நல்ல வெற்றியை கொடுத்ததால் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் குட் பேட் அக்லி வெளியான முதல் நாள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் போக போக அந்த படத்திற்கான வரவேற்பு என்பது குறைய துவங்கியது.

good bad ugly

ஏனெனில் முழுக்க முழுக்க இந்த படம் ரசிகர்களுக்கான திரைப்படமாக எடுக்கப்பட்டது. எனவே பொது மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் இந்த திரைப்படம் இதுவரையில் 283 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மற்ற அஜித் திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவான வசூல்தான் என கூறப்படுகிறது.

தல யின் அடுத்த பட கூட்டணி.. ஷாக் கொடுத்த அஜித் 65 அப்டேட்.!

நடிகர் அஜித் தொடர்ந்து தமிழில் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடிக்கும் திரைப்படங்கள் குறித்து சில அப்டேட்டுகள் வெளியாகியிருக்கின்றன. தற்சமயம் கார் ரேஸ் மீது ஆர்வமாக இருப்பதால் அஜித் தொடர்ந்து அதன் மீது கவனம் செலுத்தி வருகிறார். எனவே குறைவாகவே படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை ஆரம்பத்தில் அட்லீதான் இயக்க இருந்தார். ஆனால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய தாமதமானது. இந்த காரணத்தினால் தற்சமயம் நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து அடுத்த படத்தை துவங்கிவிட்டார் அட்லீ.

இந்த நிலையில் ஷாக்கிங் கொடுக்கும் விதமாக கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. கே.ஜி.எஃப் மாதிரியான கதைகள் எல்லாம் அஜித்திற்கு செட் ஆக கூடிய கதையாகும்.

எனவே அஜித்தும் பிரசாந்த் நீலும் ஒன்றினைந்தால் அது பெரிய காம்போவாக இருக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன. இதுக்குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

10 நாட்களில் குட் பேட் அக்லி வசூல்.. போட்ட காசை எடுத்துச்சா..!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவான ‘குட் பேட் அக்லி” திரைப்படம், கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அஜித்தின் பெரிய ரசிகனாக உள்ள ஆதிக், இந்த படத்தை ஒரு ஃபேன் பாய் படமாக சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

திரிஷா, அர்ஜூன் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, பிரியா வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முழு ஓட்டத்திலும் அஜித் தான் மையமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை பல்வேறு வித்தியாசமான தோற்றங்களில் ஆதிக் முன்னிறுத்தி ரசிகர்களுக்கு ட்ரீட் வழங்கியுள்ளார். வில்லன் வேடத்தில் அர்ஜூன் தாஸ் சிறப்பாக நடித்துள்ளார். கதையமைப்பு மிக வலுவாக இல்லாவிட்டாலும், படமே ஒரு ரசிகர்களுக்கான படம் என்பதால் ரசிகர்கள் சுலபமாக ரசித்து வருகிறார்கள்.

 

ரசிகர்கள் இந்த படத்தைக் கொண்டாடினாலும், பொதுமக்கள் இதை எவ்வளவு அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது சில நாட்களில் வெளிவரும். தற்போது வரை படம் ஹிட் கொடுத்துள்ளது, இன்னும் எவ்வளவு வசூலிக்க வேண்டுமெனும் கணக்குகள் செய்யப்படுகின்றன.

இந்தியாவிலேயே வசூல் விவரம்:

  • 1ம் நாள் – ₹29.25 கோடி
  • 2ம் நாள் – ₹15 கோடி
  • 3ம் நாள் – ₹19.75 கோடி
  • 4ம் நாள் – ₹22.3 கோடி
  • 5ம் நாள் – ₹15 கோடி
  • 6ம் நாள் – ₹7 கோடி
  • 7ம் நாள் – ₹5.55 கோடி
  • 8ம் நாள் – ₹5.37 கோடி
    👉 மொத்தம்: ₹119.22 கோடி

உலகளவில் கடந்த 8 நாட்களில் படம் ₹196.5 கோடியை தொட்டு இருந்தது. தற்சமயம் 10 நாட்களில் 228 கோடி வசூல் செய்துள்ளது இந்த திரைப்படம்

படத்தின் தயாரிப்பு, விளம்பர செலவுகள் சேர்த்து மொத்த பட்ஜெட் ₹200 கோடி ஆகும். தற்போது அந்த இலக்கைதாண்டி சென்று கொண்டுள்ளது குட் பேட் அக்லி. இன்னும் சில நாட்களில் லாபத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமைகள் மூலமும் கணிசமான வருமானம் கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது. உலகம் முழுவதும் 8000 திரையரங்குகளில் வெளியான படம் இது.

இந்த ஆண்டு மிகப்பெரியடாப் ஓபனிங்பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. ₹220 கோடி வசூல் செய்துவிட்டால், அதில் ₹114 கோடி விநியோகஸ்தர்களுக்காக போகும் – இதன் அடிப்படையில் படம் வெற்றி பெற்றதாக கருதப்படும். அந்த வகையில் ஏற்கனவே குட் பேட் அக்லி வெற்றி படமாக மாறியுள்ளது.

 

 

 

8 நாட்களில் மொத்த வசூல் நிலவரம்.! குட் பேட் அக்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட்.!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவான ‘குட் பேட் அக்லி” திரைப்படம், கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அஜித்தின் பெரிய ரசிகனாக உள்ள ஆதிக், இந்த படத்தை ஒரு ஃபேன் பாய்’ படமாக சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

திரிஷா, அர்ஜூன் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, பிரியா வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முழு ஓட்டத்திலும் அஜித் தான் மையமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை பல்வேறு வித்தியாசமான தோற்றங்களில் ஆதிக் முன்னிறுத்தி ரசிகர்களுக்கு ட்ரீட் வழங்கியுள்ளார். வில்லன் வேடத்தில் அர்ஜூன் தாஸ் சிறப்பாக நடித்துள்ளார். கதையமைப்பு மிக வலுவாக இல்லாவிட்டாலும், படமே ஒரு ரசிகர்களுக்கான படம் என்பதால் ரசிகர்கள் சுலபமாக ரசித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் இந்த படத்தைக் கொண்டாடினாலும், பொதுமக்கள் இதை எவ்வளவு அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது சில நாட்களில் வெளிவரும். தற்போது வரை படம் ஹிட் கொடுத்துள்ளது, இன்னும் எவ்வளவு வசூலிக்க வேண்டுமெனும் கணக்குகள் செய்யப்படுகின்றன.

இந்தியாவிலேயே வசூல் விவரம்:

  • 1ம் நாள் – ₹29.25 கோடி
  • 2ம் நாள் – ₹15 கோடி
  • 3ம் நாள் – ₹19.75 கோடி
  • 4ம் நாள் – ₹22.3 கோடி
  • 5ம் நாள் – ₹15 கோடி
  • 6ம் நாள் – ₹7 கோடி
  • 7ம் நாள் – ₹5.55 கோடி
  • 8ம் நாள் – ₹5.37 கோடி
    👉 மொத்தம்: ₹119.22 கோடி

உலகளவில் கடந்த 8 நாட்களில் படம் ₹196.5 கோடியை தொட்டுவிட்டது. தமிழகத்தில் மட்டும் இதுவரை ₹113.05 கோடி வரை வசூலாகியுள்ளது.

படத்தின் தயாரிப்பு, விளம்பர செலவுகள் சேர்த்து மொத்த பட்ஜெட் ₹200 கோடி ஆகும். தற்போது அந்த இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் லாபத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமைகள் மூலமும் கணிசமான வருமானம் கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது. உலகம் முழுவதும் 8000 திரையரங்குகளில் வெளியான படம் இது.

இந்த ஆண்டு மிகப்பெரிய ‘டாப் ஓபனிங்’ பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. ₹220 கோடி வசூல் செய்துவிட்டால், அதில் ₹114 கோடி விநியோகஸ்தர்களுக்காக போகும் – இதன் அடிப்படையில் படம் வெற்றி பெற்றதாக கருதப்படும்.

அந்த இலக்கை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ரசிகர்கள் அனைவரும் இன்னும் சில நாட்கள் காத்திருந்து பார்க்கலாம்!

குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் நிலவரம்

ரசிகர்களின் பெரும் ஆதரவோடு நேற்று வெளியான அஜித் திரைப்படம் குட் பேட் அக்லி. இதில் கதை அம்சம் என்று பெரிதாக எதுவும் கிடையாது ஆனால் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

அதனால் அஜித் ரசிகர்கள் எல்லோரும் படத்தை கொண்டாடி வருகின்றனர் தமிழ்நாடு அளவில் மதுரை மாதிரியான சில இடங்களில் முதல் ஷோ வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டது.

good bad ugly

இதனால் நிறைய திரையரங்குகள் 12 மணி காட்சியிலிருந்து தான் பட காட்சிகளே துவங்கியது. அதனால் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் குறைவாக தான் வந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 28.50 கோடி ரூபாய்க்கு ஓடி இருக்கிறது குட் பேட் அக்லி திரைப்படம்

அநியாயமான விலை.. குட் பேட் அக்லி முதல் காட்சியில் பிரச்சனை.. என்னப்பா இது?.

வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. நடிகர் அஜித் நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார்.

மிகப்பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தினால் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கால்வாசி திரையரங்குகள் தற்சமயம் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான புக்கிங் ஓபன் செய்து இருக்கிறது.

இந்த நிலையில் மதுரையில் மட்டும் முதல் காட்சியான ஒன்பது மணி காட்சிக்கான புக்கிங் இப்பொழுது வரை ஓபன் செய்யவில்லை. இதில் என்ன பிரச்சனை என்று பார்க்கும் பொழுது விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதன்படி மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் முதல் காட்சியினை 1900க்கும் சாதாரண திரையரங்குகள் 500 ரூபாய்க்கும் விற்க வேண்டும் அப்படி விற்கவில்லை என்றால் முதல் காட்சியை அவர்களுக்கு கொடுக்க முடியாது என்று விநியோகஸ்தர்கள் கூறியிருக்கின்றனர்.

12 மணி காட்சியில் இருந்துதான் அவர்கள் படத்தை துவங்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் இவ்வளவு டிக்கெட் விலை வைத்து விற்க முடியாது என்கிற காரணத்தினால் மதுரையில் உள்ள திரையரங்குகள் 12 மணி காட்சியையே முதல் கட்சியாக ஓபன் செய்து வைத்திருக்கின்றன.

விஜய்யை மறைமுகமாக கலாய்த்த அஜித்.. குட் பேட் அக்லி ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா.!

நடிகர் அஜித் நடிப்பில் அடுத்தவரை இருக்கும் குட் பேட் ஆக்லி திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான ஈடுபாடுகள் இருந்து வருகிறது படத்தின் டிரைலர் வெளியானது முதலே அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

அஜித்திற்கு ஒரு ஃபேன் பாய் திரைப்படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அஜித்தின் மிகப்பெரிய ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் பழைய அஜித் திரைப்படங்களில் இருந்த முக்கியமான விஷயங்களையும் வசனங்களையும் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பது தெரிகிறது.

Good-bad-ugly-1

அதனால் திரையரங்குகளில் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்த திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறைய கலாய் வசனங்களும் ட்ரெண்டிங்கில் இருக்கும். வசனங்களும் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் விஜய் குறித்த சில வசனங்களும் படத்தில் இருப்பதாக இப்பொழுது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி வாட் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ என்று ஒரு மேடையில் விஜய் பேசிய அந்த வசனமும் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே விஜய்யை கலாய்க்கும் விதமாக காட்சிகள் இந்த படத்தில் இருக்குமா என்று இப்பொழுது கேள்விகள் எழுந்து வருகின்றன.

குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம்..!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு பெரும்பாலும் ரசிகர்கள் காத்திருக்கும் திரைப்படமாக குட் பேட் அக்லி திரைப்படம் இருந்து வருகிறது.

ஏனெனில் விடாமுயற்சி திரைப்படத்தை பொறுத்தவரை அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். விடாமுயற்சி திரைப்படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த வகையிலான சண்டை காட்சிகள் எதுவும் இருக்கவில்லை.

எனவே குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெகுவாக காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் 30 நிமிட காட்சிகளை மட்டும் விநியோகஸ்தர்களுக்கும், முக்கிய பிரபலங்களுக்கும் திரையிட்டுள்ளனர்.

அந்த காட்சிகள் அனைத்தும் பிரமாதமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதே சமயம் படத்தின் வசூலும் அதிகமாக இருக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தளபதி ரசிகர்களை வச்சி செய்யும் பாடல் வரிகள்.. குட் பேட் அக்லி படத்தின் ஓ.ஜி சம்பவம் பாடல் வெளியானது..!

விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் ரீமேக் ஆக விடா முயற்சி திரைப்படம் உருவாக்கப்பட்டது.

அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் பிரேக் டவுன் திரைப்படத்தில் பெரிதாக சண்டை காட்சிகள் எதுவும் இருக்காது. அதே ஹாலிவுட் தரத்திலேயே அந்த படம் தமிழிலும் படமாக்கப்பட்டது.

ஆனால் இங்கு முக்கிய நட்சத்திரங்களின் ரசிகர்களை பொறுத்தவரை பெரிதாக சண்டை காட்சிகள் மாஸ் டயலாக்குகள் இருந்தால் தான் அந்த திரைப்படத்தை கொண்டாடுவார்கள் என்கிற நிலை இருக்கிறது.

இதனால் விடாமுயற்சி திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் வெகுவாக காத்துக் கொண்டிருக்கும் படமாக குட்பேட் அக்லி திரைப்படம் இருக்கிறது.

இந்த திரைப்படத்தை மார்க் ஆண்டனி  திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஓ ஜி சம்பவம் என்கிற பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க அஜித்துக்கு எதிரான மனநிலையை கொண்ட ரசிகர்களை சாடும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் பாடல் வரிகளும் அதேபோல அமைந்து இருக்கின்றன தற்சமயம் அஜித் ரசிகர்களால் இந்த பாடல் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இது பெரிய சம்பவமால இருக்கு… 2 பேர் கூட்டணியில்.. குட் பேட் அக்லி ஒ.ஜி சம்பவம் பாடல்.!

முன்பு ஒரு காலத்தில் நடிகர்களை பார்த்து அவர்களது நடிப்பின் மீது பிரியம் கொண்டு ரசிகர்கள் ஆனவர்கள் எல்லாம் இப்பொழுது இயக்குனராகி அந்த நடிகர்களுக்கான சிறப்பான திரைப்படங்களை இயக்குவதை பார்க்க முடிகிறது.

அப்படியான இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் மிக பெரிய ரசிகராக இருந்து இயக்கிய திரைப்படம்தான் குட் பேட் அக்லி. அதே மாதிரி லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனுகாக இயக்கிய திரைப்படம் விக்ரம்.

இப்படி தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக சிறப்பான திரைப்படங்களை இயக்குவது இப்பொழுது அதிக ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் திரைப்படம்தான் குட் பேட் அக்லி.

நடிகர் அஜித்தின் மீது அதிக பிரியம் கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு ரசிகராக அவரை வைத்து இயக்கும் திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஓஜி சம்பவம் என்கிற ஒரு பாடலை ஆதிக் ரவிச்சந்திரனும் ஜிவி பிரகாஷும் சேர்ந்து பாடி இருக்கின்றனர்.

இந்தப் பாடல் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான ஒரு பாடலாக இருக்கிறது. இதன் ப்ரோமோ தற்சமயம் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

புஷ்பா 2வுக்கு இணையான வெற்றியை கொடுக்கணும்.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை திரையரங்குகளா..! களத்தில் இறங்கிய குட் பேட் அக்லி.!

அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் திரைப்படம் அமைந்துவிட்டாலே போதும்.

அதில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்கிற நிலை இருந்து வருகிறது இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அடுத்து அஜித் நடித்துவரும் திரைப்படம் குட் பேட் அக்லி.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். ஏற்கனவே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி என்கிற திரைப்படத்தில் பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தினால் இந்த திரைப்படமும் அவருக்கு நல்ல வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் அதிக வரவேற்பை பெற்றது. எனவே இந்த படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படம் எப்படியும் 500 கோடி ரூபாய் வசூல் கொடுக்கும் புஷ்பா 2 திரைப்படத்தை போல தமிழில் ஒரு முக்கியமான இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.