இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு பெரும்பாலும் ரசிகர்கள் காத்திருக்கும் திரைப்படமாக குட் பேட் அக்லி திரைப்படம் இருந்து வருகிறது.
ஏனெனில் விடாமுயற்சி திரைப்படத்தை பொறுத்தவரை அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். விடாமுயற்சி திரைப்படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த வகையிலான சண்டை காட்சிகள் எதுவும் இருக்கவில்லை.
எனவே குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெகுவாக காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் 30 நிமிட காட்சிகளை மட்டும் விநியோகஸ்தர்களுக்கும், முக்கிய பிரபலங்களுக்கும் திரையிட்டுள்ளனர்.
அந்த காட்சிகள் அனைத்தும் பிரமாதமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதே சமயம் படத்தின் வசூலும் அதிகமாக இருக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.