அனிமே விரும்பிகள் பலரும் அதிகமாக விரும்பும் ஒரு தொடராக ஒன் பீஸ் சீரிஸ் இருந்தது. 1000க்கும் அதிகமான எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸ் உலக அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த தொடரை ரியல் ஆக்ஷன் தொடராக எடுக்க முடிவு செய்தது.
அப்படியாக வெளியான ஒன் பீஸ் முதல் சீசனானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மாயாஜால கடல் கொள்ளையர் கதையான ஒன் பீஸ் ஒரு புதையலை அடிப்படையாக கொண்டு செல்லும் கதையாகும்.
அனிமேவில் இந்த கதை எப்படி இருந்ததோ அதே வகையில் நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸாகவும் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகமானது அடுத்து வர இருக்கிறது. அதன் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
எப்போதுமே தமிழ் சினிமாவில் ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்களுக்காக எப்போதுமே மக்கள் காத்துக்கொண்டிருப்பது வழக்கமான விஷயம்தான். ஏனெனில் பெரும்பான்மையான மக்கள் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவது கிடையாது.
திரையரங்க டிக்கெட் விலையும், அங்கு விற்கும் உணவுகளின் விலையுமே அதற்கு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் திரைப்படம் வெளியாகும்போதே ஓ.டி.டியில் எப்போது வரும் என்பதுதான் பெரும்பாலும் மக்களின் ஆர்வமாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அமேசான் ப்ரைம் ஓ.டி.டியை பொறுத்தவரை அதில் விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
மேலும் ஜின் தி பெட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட்டில் இருந்து Novacaine திரைப்படம் வெளியாகிறது.
தாய்லாந்து, கொரியா மாதிரியான நாடுகளில் வெளியாகும் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் தற்சமயம் ஓடிடியில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் Ziam என்கிற திரைப்படம் இருந்து வருகிறது.
Netflix-ல் வெளியாகி இருக்கும் Ziam திரைப்படம் தமிழ் டப்பிங் வெளியாக இருக்கிறது. படத்தின் கதைப்படி உலகம் மிகப்பெரிய பசி பட்டினியை சந்திக்கிறது. அந்த சமயத்தில் ஒரு நிறுவனம் மீன்கள் மூலமாக அந்த பசி பட்டினியை தீர்க்கிறது.
ஏதோ ஒரு நிலையில் அந்த மீன் நஞ்சாக மாறியதால் நோம்பியாக மாறுகிறார்கள் மனிதர்கள் இந்த நிலையில் ஒரு மருத்துவமனையே மொத்தமாக சோம்பியாக மாறுகிறது.
அந்த மருத்துவமனையில் கதாநாயகனின் மனைவி மாட்டிக்கொள்கிறார். இந்த ஜோம்பிகள் எல்லாம் தாண்டி தனது மனைவியை கதாநாயகன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதையாக இருக்கிறது. ரத்தம் தெரிக்க தெரிக்க இருக்கும் இந்த படம் இப்பொழுது அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
Netflix ஓடிடி தளத்தில் பிரபலமாக இருந்து வரும் பல சீரியஸ்களில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் முக்கியமான ஒரு சீரிஸ் ஆகும்.
ஒரு சின்ன கிராமத்தில் நடக்கும் மர்மமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியஸின் கதைகளம் துவங்கியது. போகப் போக அதன் பிரம்மாண்டம் என்பது அதிகரிக்க துவங்கியது.
மேலும் அந்த கிராமத்தில் நடக்கும் அவ்வளவு மர்மமான விஷயங்களையும் ஐந்து சிறுவர்களை கொண்ட ஒரு குழு கண்டறிவதாக கதையின் களம் செல்லும். இந்த நிலையில் இறுதியாக வந்த நான்காவது சீசனில் மொத்த கிராமமும் இந்த மர்ம விஷயத்தில் சிக்கிக் கொண்டதாக கதை முடிந்திருந்தது.
அதற்குப் பிறகு இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்சமயம் இதன் ஐந்தாவது சீசன் வெளிவர இருக்கிறது. இதன் ட்ரெய்லர் இப்பொழுது வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஐந்தாவது பாகம் மட்டுமே மூன்று தேதிகளில் வெளியாக இருக்கிறது.
நவம்பர் 26 இல் பாதி எபிசோடுகளும் பிறகு கிறிஸ்மஸின் பொழுது பாதி எபிசோடுகளும் வழியாக இருக்கிறது. இது இல்லாமல் கடைசி எபிசோடு மட்டும் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்சமயம் netflixல் வெளியாகி இருக்கும் Hostage என்கிற வெப் சீரிஸ் இன் ட்ரைலர் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது.
அமெரிக்காவின் அதிக பலம் மிக்கவராக அமெரிக்காவின் அதிபர் தான் இருப்பார்கள். ஆனால் ஹாலிவுட் சினிமாக்கள் எல்லாம் அந்த அதிபரையே மிரட்டும் வகையிலான கதை அம்சங்களை கொண்டிருக்கும்.
இந்தியாவில் பிரதமரை மிரட்டுவது போன்ற கதை அம்சங்களை பார்க்க முடியாது. ஏனெனில் இங்கிருக்கும் தணிக்கை குழு அதற்கு அனுமதி கொடுப்பது கிடையாது. ஆனால் ஹாலிவுட் அப்படி இல்லை என்பதால் அந்த மாதிரி கதை அம்சத்தில் திரைப்படங்களும் சீரிஸ்களும் வருகின்றன.
அப்படியாக தற்சமயம் வந்திருக்கும் சீரிஸ் தான் Hostage. இதன் கதை அம்சத்தை பொருத்தவரை அமெரிக்க அதிபராக ஒரு பெண் இருக்கிறார். அவருடைய கணவர் கடத்தப்படுகிறார். அவர் யாரால் கடத்தப்படுகிறார் அவர்கள் என்ன மாதிரியான கோரிக்கைகளை வைக்கப் போகிறார்கள் என்பதாக இந்த சீரியஸின் கதை செல்ல இருக்கிறது இதன் ட்ரையலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது
எப்பொழுதுமே மர்ம நாவல்கள் என்பது ஆங்கிலேய மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானதாகும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் மர்மம் மற்றும் துப்பறிப்பது தொடர்பாக நாவல்கள் வருவது கிடையாது. ஆனால் அமெரிக்கா போன்ற இடங்களில் தொடர்ந்து அதிக பிரபலமாக இந்த மாதிரி நாவல்கள் தான் இருந்திருக்கின்றன.
அப்படி வெகு காலங்களாக பிரபலமாக இருந்த ஒரு கதைதான் பிராங்கன்ஸ்டைன். இறந்த மனிதனின் உடல்களை தைத்து அதற்கு உயிர் கொடுக்கும் ஒரு விஞ்ஞானி.
அதனை தொடர்ந்து அந்த உயிர் பெற்ற பிராங்கன்ஸ்டைன் என்கிற மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதாக கதை இருக்கும். தமிழில் கூட இதன் அடிப்படையில் நாளைய மனிதன் என்கிற திரைப்படம் வந்துள்ளது.
இந்த கதையை பலமுறை ஹாலிவுட்டில் படமாக்கிய பிறகு கூட இப்பொழுது மீண்டும் அதை ஒரு வெப் சீரிஸாக எடுத்து இருக்கின்றனர். ஆனால் இது கொஞ்சம் த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் இந்த சீரியஸின் டீசரை வெளியிட்டுள்ளது ஆஸ்கார் விருது பெற்ற Guillermo del Toro இந்த சீரிஸை இயக்குகிறார்.
நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட வெப் சீரிஸ்களை எடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு தமிழில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து netflix இயக்கிய தயாரித்த நிறைய சீரியஸ்கள் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
அப்படியாக ஏற்கனவே தமிழ் டப்பிங்கில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற சீரிஸ்தான் சாண்ட்மேன் சீரிஸ். இந்த சீரிஸை பொருத்தவரை கனவுகளின் கடவுளான கதாநாயகனை வைத்து கதைகளம் செல்கிறது.
ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு கடவுள் இருப்பது போல கனவுகளை உருவாக்குவதற்கும் கடவுள் என்று ஒரு கதாபாத்திரம் இருக்கும். அதுதான் சாண்ட்மேன் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு சாவே இருக்காது.
அதை வைத்து கதை செல்லும். இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் முற்றிலும் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. கனவுகளின் கடவுளை கொல்வதற்கான ஏற்பாடுகள் இதில் நடப்பதாக தெரிகிறது.
ஏனெனில் கனவுகளின் கடவுளை அழித்துவிட்டால் கனவுகளே இல்லாமல் போய்விடும் அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதாக இந்த சீரிஸின் கதை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதன் ட்ரைலர் தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இரண்டாவது சீசன் ஜூலை 3 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
சமீப காலமாக நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்பது தமிழ் சினிமாவில் வரவேற்பு பெறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக விடாமுயற்சி திரைக்கு வந்து பெரும் வெற்றியை அடையவில்லை.
இது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் இவ்வளவு காலங்கள் அஜித் நடித்த திரைப்படங்கள் சுமாரான திரைப்படங்களாக இருந்தாலுமே நல்ல வெற்றியை பெற்று வந்தன.
ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரை அஜித்துக்கான ஹீரோயிசம் விஷயங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அந்த படம் தோல்வியை கண்டது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது. ஆனால் ஓடிடியில் வெளியாகியும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
அதனால்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் வாங்க இருந்தது.
ஆனால் விடாமுயற்சி படத்தால் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக குட் பேட் அக்லி திரைப்படத்தை அவர்கள் வாங்கவில்லை. அதனால்தான் இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
நெட்ப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் சீரிஸ்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அந்த வகையில் ஒன் பீஸ் என்கிற அணிமே ரியல் டைம் சீரிஸாக நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்பட்டது.
இதன் முதல் சீசன் போன வருடம் வெளியான நிலையில் இதற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஜப்பான் அனிமே எப்படி இருக்குமோ அதே போலவே நிஜத்தில் கதாபாத்திரங்களை கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் அதன் இரண்டாம் சீசன் தற்சமயம் தயாராகி வருகிறது அதற்கான ப்ரோமோ ஒன்றை நெட்ப்லிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஹாலிவுட்டில் எடுக்கப்படும் வெப் சீரிஸ்களில் நிறைய வகை உண்டு. காதல் தொடர்பான வெப் சீரிஸ்கள் ஒரு பக்கம் என்றால் மர்மமான வெப்சைட் சொல் மறுபக்கம் எடுக்கப்படும் இதற்கு நடுவே நிஜ கதைகளை தழுவி வரும் வெப் தொடர்களும் நிறைய இருக்கின்றன.
வெப் சீரிஸ்களை அதிகம் எடுப்பதில் netflix நிறுவனம்தான் முதலிடம் வகித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நெட்ப்லிக்ஸ் எடுத்த மெனன்டஸ் பிரதர்ஸ் என்கிற வெப் சீரிஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்கள் உண்மையிலேயே இருந்த கொலைகார சகோதரர்கள் ஆவார்கள் இவர்கள் செய்த கொலைகள் பற்றி அப்பொழுதே அதிகமாக பேசப்பட்டது அதனை தொடர்ந்து அவர்களுக்கு ஜாமீன் இல்லாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.
சமீபத்தில்தான் அவர்களது சிறை தண்டனை குறைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த சீரிஸ் வெளியாகி இருக்கிறது. இதில் எவ்வளவு கொடூரமான முறையில் இவர்கள் இந்த கொலைகளை செய்திருக்கின்றனர் என்பதை வெளிப்படையாக காட்டி இருக்கின்றனர். இது மீண்டும் அமெரிக்காவில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
ஹாலிவுட்டில் பிரபலமான பல சீரிஸ்கள் இருக்கின்றன. அவற்றிற்கு இங்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அப்படியாக வரவேற்பை பெற்ற சீரிஸ்களில் ஸ்குவிட் கேம் முக்கியமான சீரிஸ் ஆகும்.
ஸ்குவிட் கேம் சீரிஸை பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய பரிசு தொகைக்காக அங்கு கேம் விளையாட செல்வார்கள். ஒவ்வொரு விளையாட்டிலும் நிறைய நபர்கள் கொலை செய்யப்படுவார்கள். இந்த நிலையில் இறுதி வரை தாக்கு பிடிக்கும் நபர்களுக்கு தொகையை பிரித்து கொடுத்துவிடுவார்கள்.
சில பணக்காரர்களின் மகிழ்ச்சிக்காக இந்த விளையாட்டு ஒரு தீவில் நடத்தப்படும். இந்த நிலையில் முதல் சீசனில் இந்த ஸ்குவிட் கேம்க்குள் சென்று வெளியேறுவார் கதாநாயகன். அதனை தொடர்ந்து அவர்களை பழி வாங்க இரண்டாம் சீசனில் மீண்டும் அந்த விளையாட்டுக்குள் இவர் செல்கிறார்.
இந்த நிலையில் அவரை பிடிப்பதற்காக கேமை நடத்தும் தலைவனே அந்த கேமுக்குள் வருகிறான். அதை வைத்து இரண்டாம் சீசன் சென்று கொண்டிருந்தது. ஆனால் பாதியிலேயே இரண்டாம் சீசன் முடிந்துவிட்டது.
மீதி கதை மூன்றாம் சீசனில்தான் வரும் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்சமயம் மூன்றாம் சீசனுக்கு ட்ரைலர் வெளியாகியுள்ளது. மேலும் மூன்றாம் சீசன் ஜுன் 27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நயன்தாரா இருவருமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிரபலங்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாக தான் இருக்கின்றன.
இருந்தாலும் கூட இப்பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை நயன்தாரா நடித்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஆவணப்படம்தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது.
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாரா தனுஷிடம் ஒப்புதல் வாங்காமலேயே இந்த ஆவணப்படத்திற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்கிற வகையில் தனுஷ் வழக்கு தொடர்ந்தே இருக்கிறார்.
nayanthara
நெட்ஃப்ளிக்ஸ் முடிவு:
இந்த நிலையில் சென்னை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் சினிமா வட்டாரத்தினர் கூறும் பொழுது தனுஷ் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்று கூறி வருகின்றனர் எனவே அவர் கேட்ட 10 கோடி நஷ்டஈடு நயன்தாரா கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த வழக்கில் நெட்ஃப்ளிக்ஸ் மீதும் பழி சுமத்தி இருக்கிறார் தனுஷ். எனவே இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 30 கோடி ரூபாய் கொடுத்து தான் இந்த ஆவண படத்தை நயன்தாராவிடம் வாங்கி இருக்கிறது எனவே இதில் சிக்கல் ஏற்படும் நிலையில் அந்த ஆவண படத்தை நீக்குவதோடு மட்டும் அல்லாமல் நெட்ஃப்ளிக்ஸ் நயன்தாராவிடம் நஷ்ட ஈடு கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இதனால் நயன்தாரா இருவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்கக்கூடிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips