அனிமே விரும்பிகள் பலரும் அதிகமாக விரும்பும் ஒரு தொடராக ஒன் பீஸ் சீரிஸ் இருந்தது. 1000க்கும் அதிகமான எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸ் உலக அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த தொடரை ரியல் ஆக்ஷன் தொடராக எடுக்க முடிவு செய்தது.
அப்படியாக வெளியான ஒன் பீஸ் முதல் சீசனானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மாயாஜால கடல் கொள்ளையர் கதையான ஒன் பீஸ் ஒரு புதையலை அடிப்படையாக கொண்டு செல்லும் கதையாகும்.
அனிமேவில் இந்த கதை எப்படி இருந்ததோ அதே வகையில் நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸாகவும் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகமானது அடுத்து வர இருக்கிறது. அதன் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது.