Tag Archives: ott

மனிதர்களை வேட்டையாடும் புது உயிரினம்.. தமிழில் வெளிவந்த Alien: Earth சீரிஸ்..!

ஏலியன் எர்த் என்பது அமெரிக்காவில் வெளிவந்த சயின்ஸ் ஃபிக்ஸன் ஹாரர் கதை ஆகும். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த ஏலியன் என்கிற திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு இதன் கதைக்களம் அமைந்திருந்தது.

இந்த சீரிஸானது 2120 இல் கதை நடக்கிறது. நிறைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த அந்த காலக்கட்டத்தில் ஒரு உயிரினம் ஆராய்ச்சிக்காக எடுத்து வரப்படுகிறது. ஆக்டோபஸ் மாதிரி இருக்கும் அந்த உயிரினம் திடீரென ஒரு நாள் தப்பிக்கிறது.

தொடர்ந்து அது மனிதர்களை வேட்டையாட துவங்குகிறது. இந்த நிலையில் மனிதர்கள் அதனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதாக கதை அமைந்துள்ளது.

இந்த சீரிஸ் தற்சமயம் எஃப்.எக்ஸ் என்னும் ஓ.டி.டியில் கிடைக்கிறது.

 

 

அனிமே லவ்வர்களுக்கு அடுத்த ட்ரீட்.. வெளியான ஒன் பீஸ் சீசன் 2 ட்ரைலர்..!

அனிமே விரும்பிகள் பலரும் அதிகமாக விரும்பும் ஒரு தொடராக ஒன் பீஸ் சீரிஸ் இருந்தது. 1000க்கும் அதிகமான எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸ் உலக அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த தொடரை ரியல் ஆக்‌ஷன் தொடராக எடுக்க முடிவு செய்தது.

அப்படியாக வெளியான ஒன் பீஸ் முதல் சீசனானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மாயாஜால கடல் கொள்ளையர் கதையான ஒன் பீஸ் ஒரு புதையலை அடிப்படையாக கொண்டு செல்லும் கதையாகும்.

அனிமேவில் இந்த கதை எப்படி இருந்ததோ அதே வகையில் நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸாகவும் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகமானது அடுத்து வர இருக்கிறது. அதன் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

மகா அவதார் நரசிம்மா ஓ.டி.டியில் எப்போ வருது.. அப்டேட்..!

அனிமேஷன் திரைப்படமாக வெளிவந்து இப்பொழுது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது மகா அவதார் நரசிம்மா.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்மா அவதாரத்தின் கதையைக் கொண்டு வெகு காலங்களாகவே திரைப்படங்கள் வந்துள்ளன ஆனால் அனிமேஷனில் ஒரு சிறப்பான திரைப்படமாக மகா அவதார் நரசிம்மா வந்தது.

அனிமேஷன் திரைப்படம் என்பதால் காட்சிப்படுத்துவதில் மிக பிரம்மாண்டமான ஒரு படமாக இந்த படம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் இந்திய அளவில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எப்பொழுது ஓடிடியில் வரும் என்று பலரும் ஆர்வமாக எதிர்பார்க்க துவங்கியிருக்கின்றனர். இந்த படம் ஏற்கனவே திரையரங்களில் நல்ல வெற்றியை கொடுத்து விட்டதால் சில நாட்களிலேயே ஓடிடியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை அடுத்து ஆகஸ்ட் 3 வது வாரம் அல்லது செப்டம்பரில் இந்த படம் ஓ டி டிக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

மார்கன் to படைத்தலைவன்.. இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்கள்..!

எப்போதுமே தமிழ் சினிமாவில் ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்களுக்காக எப்போதுமே மக்கள் காத்துக்கொண்டிருப்பது வழக்கமான விஷயம்தான். ஏனெனில் பெரும்பான்மையான மக்கள் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவது கிடையாது.

திரையரங்க டிக்கெட் விலையும், அங்கு விற்கும் உணவுகளின் விலையுமே அதற்கு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் திரைப்படம் வெளியாகும்போதே ஓ.டி.டியில் எப்போது வரும் என்பதுதான் பெரும்பாலும் மக்களின் ஆர்வமாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.  அமேசான் ப்ரைம் ஓ.டி.டியை பொறுத்தவரை அதில் விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

மேலும் ஜின் தி பெட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட்டில் இருந்து Novacaine திரைப்படம் வெளியாகிறது.

மேலும்

Hunter Season 2

Rangeen,

The plot,

Handsomeguys ஆகியவை வெளியாகின்றன.

Hotstar ஓடிடியில்

ரோந்த்

Sarzameen

Washington Black Season 1 ஆகியவை உள்ளது.

Tendkotta OTT:

படை தலைவன்

கலியுகம்

Aha OTT:

ராஜ புத்திரன்

Madala Murders

Until Dawn

Happy Gilmore 2

Trigger

ஆகியவை வெளியாகி இருக்கின்றன.

ஓ.டி.டில இந்த பிரச்சனையா? இப்படி ஆயிடுச்சே கூலி படத்தோட நிலை..

பெரிய திரைப்படங்களை வெளியிடுவதில் தொடர்ந்து ஓடிடி நிறுவனங்கள் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். முக்கியமாக ஓடிடிக்கு வரும் காலத்தை முடிந்த அளவிற்கு தாமதம் செய்கின்றன.

இதற்கு காரணமாக திரையரங்குகள் தான் இருக்கின்றன. பெரிய திரைப்படங்களை அதிக நாளைக்கு ஓட வைத்து திரையரங்குகள் காசு பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

இதனால் சீக்கிரம் ஓடிடிக்கு வந்துவிட்டால் மக்கள் திரையரங்கிற்கு வர மாட்டார்கள் என்பதாலேயே திரையரங்கு முதலாளிகள் பேசி படத்திற்கான ஓடிடி தேதியை மாற்றுகின்றனர். தக்லைஃப் திரைப்படத்திற்கும் இந்த மாதிரி நடந்தது.

இதற்கு முன்பு வரை படம் வெளியாகி மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு பிறகு ஒரு திரைப்படம் ஓடிடிக்கு வந்துவிடும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது அது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கூலி திரைப்படம் பெரிய வசூல் செய்யும் என்று பலரும் நினைத்து வருவதால் ஓடிடியை பொருத்தவரை படம் வெளியாக எட்டு வாரங்கள் அதாவது இரண்டு மாதங்கள் கழித்து தான் ஓடிடிக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இரண்டு மாதத்திற்கு தொடர்ந்து படம் அதிக வசூலை கொடுத்துக் கொண்டிருக்குமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. அதே சமயம் ஓடிடியில் மட்டுமே படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

OTT: விஜய்யின் கோட் மாதிரியான கதை.. Butterfly – Official Trailer | Prime Video அசத்தல் வெப் சீரிஸ்.!

நிறைய ஆக்ஷன் காட்சிகளை கொண்ட திரைப்படங்களுக்கும் வெப் சீரிஸ்களுக்கும் எப்பொழுதுமே வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்தியா வரை வந்து பிரபலம் அடைந்திருக்கும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், மிஷின் இம்பாசிபிள் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே இந்த மாதிரி ஆக்ஷன் கதைக்களங்களை கொண்ட திரைப்படங்கள் தான்.

அந்த வகையில் தற்சமயம் அமேசான் Butterfly  என்கிற ஒரு வெப்சீரிஸை உருவாக்கி இருக்கிறது. இதன் கதைப்படி அப்பா மற்றும் மகள் இருவரும் இணைந்து அரசுக்கு எதிராக செயல்படுவது போல கதை அமைந்து உள்ளது.

அரசுக்காக வேலை செய்து வந்த ஏஜெண்டாக இருக்கும் தந்தை ஒரு காலகட்டத்தில் இறந்து விடுகிறார். பிறகு திடீரென்று சில வருடங்களுக்குப் பிறகு அவர் தனது மகளின் முன்பு தோன்றுகிறார். அதற்குப் பிறகுதான் இது அரசு செய்த சதி வேலை என தெரிகிறது.

இதற்கு நடுவே அரசாங்கத்தில் அதே மாதிரி ஏஜெண்டாக வேலைக்கு சேரும் மகள் கதாபாத்திரமும் சண்டை போடுவதில் திறமை மிக்கவராக மாறியிருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருமே அரசுக்கு எதிராக திரும்பி செய்யும் காரியங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியஸின் கதைகளும் செல்கிறது இதன் ட்ரெய்லர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

 

 

OTT Review: தமிழில் வந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கு சீரிஸ்: The Hunt – The Rajiv Gandhi Assassination Case

இந்தியாவில் நடந்த படுகொலைகளில் தமிழ்நாட்டில் நடந்து இந்தியா முழுக்க தீயாய் பரவிய ஒரு படுகொலை என்றால் அது ராஜீவ் காந்தி படுகொலைதான்.

பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட அந்த சமயத்தில் அது பெரிதாக பேசப்பட்டது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அடுத்த நாளிலிருந்து விசாரணை துவங்கி 90 நாட்களில் அதற்கு சம்பந்தப்பட்டவர்களை உளவுத்துறை கைது செய்தது.

இந்த 90 நாட்களும் அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது அப்போதைய காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

ஆனால் இப்பொழுது இந்த தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு அது அவ்வளவாக தெரியாது. எனவே அதை விவரிக்கும் வகையில் இந்த சீரிஸ் எடுக்கப்பட்டு இருக்கிறது.

சோனி லைவில் வெளியாகி இருக்கும் இந்த சீரியஸிற்கு முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முக்கியமாக உண்மையில் இருந்தவர்களின் முகசாயலோடு ஒத்துப்போகும் வகையில் கதாபாத்திரங்களை இந்த சீரியஸில் உருவாக்கி இருக்கின்றனர். எனவே இதற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.டி.டி பிரச்சனையில் சிக்கிய 9 இயக்குனர்கள்!.. வீட்டுக்கு அனுப்பிய தயாரிப்பு நிறுவனம்!.

OTT Rights: 2022 கொரோனா பிரச்சனைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓ.டி.டி உரிமத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க துவங்கியது. கொரோனா சமயத்தில் திரையரங்குகள் இல்லாத காரணத்தால் புது படங்களை பார்ப்பதற்காக மக்கள் ஓ.டி.டி தளங்களை சப்ஸ்க்ரைப் செய்ய துவங்கினார்கள்.

இந்த நேரத்தில் தங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்க ஓ.டி.டி நிறுவனங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியாகாமல் இருந்த திரைப்படங்களை வாங்கி தங்கள் தளங்களில் வெளியிட்டன. இந்த நிலையில் திரைப்படங்களுக்காக பெரும் தொகையை கூட கொடுக்க தயாராக இருந்தன ஓ.டி.டி நிறுவனங்கள்.

இந்த நிலையில் திரையரங்குகள் திறந்த பிறகும் கூட ஓ.டி.டி தளங்கள் நல்ல விலைக்கு திரைப்படங்களை வாங்கியதால் ஓ.டி.டி உரிமம் மூலமாக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நல்ல தொகை கிடைக்க துவங்கியது. இதனை கணக்கு பண்ணி நடிகர்களும் தங்கள் சம்பளத்தை உயர்த்தினர்.

ஓ.டி.டியில் வந்த பிரச்சனை:

முக்கியமாக குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கு படத்தின் பட்ஜெட்டை விடவும் அதிக தொகை ஓ.டி.டி உரிமத்தின் வழியாக கிடைத்தது. இதனை கண்டுக்கொண்ட ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் 9 புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் அநியாய விலைக்கு திரைப்படங்களை விற்பதை அறிந்த ஓ.டி.டி நிறுவனங்கள் இனி தேர்ந்தெடுத்துதான் திரைப்படங்களை வாங்க வேண்டும். அதுவும் குறைந்த விலைக்குதான் வாங்க வேண்டும் என மொத்தமாக முடிவெடுத்துள்ளது.

இதனை அறிந்த ட்ரீம் வாரியர்ஸ் அந்த இயக்குனர்களிடம் வேறு தயாரிப்பாளரை பார்த்துக்கொள்ளுமாறு கூறியிருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.

இனிமே நாங்க வச்சதுதான் சட்டம்!.. ஓ.டி.டி எடுத்த முடிவு!.. கடைசியில் நடிகர்களுக்குதான் ஆப்பா… லிஸ்டில் லால் சலாமும் இருக்கு!.

Tamilnadu OTT Companies: தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பிறகு சினிமாவின் வளர்ச்சி என்பது அதிக வளர்ச்சியை கண்டிருப்பதை பார்க்க முடியும். அதுவும் நடிகர்களின் சம்பளங்களில் பெரும் மாற்றத்தை பார்க்க முடியும்.

உதாரணமாக கொரோனாவிற்கு முன்பு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் விஜய்யின் சம்பளம் 110 கோடியாக இருந்தது. அதற்கு இடைப்பட்ட சமயத்தில் இரண்டு திரைப்படங்களே நடித்தார் விஜய். ஆனால் தற்சமயம் அவரது சம்பளம் 200 கோடியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி நடிகர்களின் சம்பளம் திடீரென அதிகரிக்க ஓ.டி.டி நிறுவனங்களே காரணமாக அமைந்தது. கொரோனாவிற்கு முன்பு வரை இந்தியாவில் ஓ.டி.டி நிறுவனங்கள் அவ்வளவு பரவலாக இருக்கவில்லை. ஆனால் கொரோனா ஊரடங்கு ஏற்பட்டப்போது வீட்டில் இருந்தே படம் பார்ப்பதற்காக பலரும் ஓ.டி.டியை சப்ஸ்க்ரைப் செய்ய துவங்கினர்.

ott-1

இதனையடுத்து இந்தியா முழுவதும் ஓ.டி.டி வணிகம் களை கட்டியது. ஓ.டி.டி நிறுவனங்களும் அப்போது எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்களை போட்டி போட்டு வாங்க துவங்கின. அப்போதுதான் அதிகமான வாடிக்கையாளர்களை அவர்கள் பெற முடியும் அல்லவா.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு அதிக பணம் கொடுக்க ஓ.டி.டி நிறுவனங்கள் தயாராக இருந்தன. இதனால் ஓ.டி.டி உரிமம் என புதிதாக ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் உருவானது. எனவே நடிகர்கள் அதையும் கணக்கில் கொண்டு தங்களது சம்பளத்தை உயர்த்தி வந்தனர்.

இந்த நிலையில் ஓ.டி.டி நிறுவனங்கள் இனி பெரிய படங்களுக்கு அதிக காசு தர முடியாது என முடிவெடுத்துள்ளன. ஏனெனில் கொரோனா சமயத்தில் வந்த அளவிற்கு தற்சமயம் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் வராத காரணத்தால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர்.

rajinikanth-lal-salaam

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்தை அதிக விலைக்கு விற்கலாம் என லைக்கா நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் அவ்வளவு தொகைக்கு அந்த படத்தை வாங்க எந்த நிறுவனமும் தயாராக இல்லாததால் லால் சலாம் திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமம் இன்னமும் விற்கபடாமலேயே இருக்கிறது.

மேலும் இதனால் அடுத்து விஜய்,ரஜினி,அஜித் மாதிரியான முன்னணி நடிகர்களின் சம்பளமும் குறைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

தமிழ் படங்களை இலவசமாக பார்க்க உதவும் ஓ.டி.டி தளங்கள்

தமிழ் சினிமா திரைப்படங்களில் ஓ.டி.டி தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்போதெல்லாம் படங்கள் வெளியாகி சில நாட்களிலேயே ஓ.டி.டியில் வெளியாகிவிடுகின்றன.

ஆனால் பெரும்பாலான ஓ.டி.டி தளங்கள் அதிகமான அளவில் பணம் வசூலித்துவிட்டுதான் நமக்கு பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை பார்ப்பதற்கு அனுமதிக்கின்றன.

எனவே நாம் இலவசமாக நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை பார்க்க உதவும் சில ஓ.டி.டி தளங்களை பார்க்கலாம்.

01.எம்.எக்ஸ் ப்ளேயர் (MX Player)

எம்.எக்ஸ் ப்ளேயர் டைம்ஸ் இண்டர்நெட் நிறுவனத்தால் நடத்தப்படும் முக்கியமான தளமாகும். முதன் முதலாக ஆண்ட்ராய்டு செயலியாக வந்த எம்.எக்ஸ் ப்ளேயர் தற்சமயம் ஓ.டி.டி தளமாக மாறியுள்ளது.

எம்.எக்ஸ் ப்ளேயர் முற்றிலும் இலவசமான ஒரு ஓ.டி.டி தளமாகும். இதில் பல ஹாலிவுட் திரைப்படங்கள், டிவி தொடர்கள் மற்றும் தமிழ் படங்கள் இலவசமாக கிடைக்கின்றன.

ஆனால் அவற்றை பார்க்கும்போது இடை இடையே விளம்பரங்கள் ஒளிப்பரப்பாகும். இதற்காக நாம் எந்த லாகினும் செய்ய தேவையில்லை. இது ஆண்ட்ராய்டு ஆப் மற்றும் வெப்சைட் என இரண்டு வடிவிலும் உள்ளது.

எம்.எக்ஸ் ப்ளேயர் ஆப் லிங்க் :  க்ளிக் செய்க

எம்.எக்ஸ் ப்ளேயர் தளம்: https://www.mxplayer.in/

02.ஜியோ சினிமா – Jio Cinema

ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்காக வெளியிட்ட செயலி ஜியோ சினிமா. ஜியோ சிம் வைத்திருக்கும் நபர்கள் இதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு ஜியோ பயனர்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

ஹே சினாமிகா, காடன் போன்ற புதிய படங்கள் கூட இதில் இலவசமாக கிடைக்கிறது. மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்களும் கூட இதில் கிடைக்கின்றன.

ஜியோ சினிமாவும் ஆப் மற்றும் வெப்சைட் ஆகிய இரு வடிவங்களில் கிடைக்கின்றன.

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

வெப்சைட் லிங்க்: https://www.jiocinema.com

03.டிஸ்னி ஹாட் ஸ்டார் – Disney Hot Star

அமெரிக்க நிறுவனமான டிஸ்னி மற்றும் ஸ்டார் நிறுவனம் இணைந்து நடத்தும் ஓ.டி.டி தளம் டிஸ்னி ஹாட் ஸ்டார். டிஸ்னி ஹாட் ஸ்டாரை ஒரு முழுமையான இலவச ஓ.டி.டி தளம் என கூறிவிட முடியாது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா போன்ற சில நிகழ்ச்சிகள் இதில் இலவசமாக பார்க்க கிடைக்கிறது. ஆனால் அதில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை காண நாம் பணம் கட்ட வேண்டி இருக்கும்.

புதிதாக வெளியாகும் பல திரைப்படங்கள், அனிமேஷன் தொடர்கள், விளையாட்டு தொடர்கள், வெப் தொடர்கள் இதில் காண கிடைக்கின்றன.

குறைந்த விலையாக 400 ரூபாய்க்கு இதில் சப்ஸ்க்ரிபிஷன் ப்ளான் உள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரும் கூட ஆண்ட்ராய்டு ஆப் மற்றும் வெப்சைட் வடிவங்களில் உள்ளன.

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

வெப்சைட் லிங்க்: https://www.hotstar.com/in

04. BSNL Yipptv:

பி.சி.என்.எல் நிறுவனம் தனது பயனர்களுக்காக வெளியிட்டுள்ள இலவச ஓ.டி.டி தளம்தான் பி.எஸ்.என்.எல் யப் டிவி.

300 க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்கள், 500க்கும் அதிகமான டிவி சீரிஸ்கள், 8000க்கும் அதிகமான திரைப்படங்கள் இதில் கிடைக்கின்றன. பி.எஸ்.என்.எல் ப்ராண்ட் பேண்டில் 749 ரூபாய் ப்ளான் போடும் பயனர்களுக்கு இது இலவசமாக கிடைக்கிறது.

ஆனால் இந்தியாவில் குறைவான அளவிலே பி.சி.என்.எல் பயனர்கள் இருப்பதால் அவர்களை தவிர வேறு யாரும் இதை பயன்படுத்த முடியாது.

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

வெப்சைட் லிங்க்: https://cinemaplus.bsnl.in/

06.Vi Movies and TV

மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை போலவே விஐ நிறுவனம் தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ள தளம்தான் விஐ மூவிஸ் அண்ட் டிவி.

மற்ற தளங்களில் உள்ளது போலவே இதிலும் பல படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பார்ப்பதற்கு கிடைக்கின்றன. ஆனால் தமிழை விடவும் ஹிந்தி மொழி படங்களே இதில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

வெப்சைட் லிங்க்: https://moviesandtv.myvi.in/

07.சன் நெக்ஸ்ட் – Sun Nxt

சன் நெட்வொர்க் நிறுவனத்தால் நடத்தப்படும் ஓ.டி.டி தளம் சன் நெக்ஸ். சன் நெக்ஸ் ஆயிரக்கணக்கான தமிழ் படங்களை கொண்ட ஓ.டி.டி தளமாகும். பழைய எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களில் துவங்கி புதுப்படம் வரையிலும் இதில் கிடைக்கிறது.

ஆனால் இந்த தளத்திற்கு காசு கட்டியே நாம் படங்களை பார்க்க முடியும். ஆனால் சன் ட்ரைக்டு டி.டிஹெச் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இதில் இலவசமாக திரைப்படங்களை பார்த்துக்கொள்ள முடியும்.

வெப்சைட் லிங்க்: https://www.sunnxt.com/

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

08.ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

ஜியோ, விஐ, பி.எஸ்.என்.எல் போலவே ஏர்டெல் நிறுவனமும் தனது பயனர்களுக்காக ஓ.டி.டி தளத்தை வைத்துள்ளது. இந்த தளத்தில் இந்தியாவில் உள்ள பல மொழிகளை சார்ந்த திரைப்படங்கள், தொடர்கள் கிடைக்கின்றன.

முக்கியமாக ஹாலிவுட் திரைப்படங்களும் கிடைக்கின்றன. ஏர்டெல் இணையம் பயன்படுத்தும் பயனர்களில் குறிப்பிட்ட ப்ளான்களை பயன்படுத்துபவர்களுக்கு இது இலவசமாக கிடைக்கிறது. ஏர்டெல் சிம் பயன்பாட்டாளர்களிலும் குறிப்பிட்ட ப்ளான்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு இது இலவசமாக கிடைக்கிறது.

வெப்சைட் லிங்க்: https://www.airtelxstream.in

ஆப் லிங்க்: க்ளிக் செய்க

இவை அனைத்தும் இலவசமாக டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்ப்பதற்கு உதவுகின்றன.