இந்தியாவில் நடந்த படுகொலைகளில் தமிழ்நாட்டில் நடந்து இந்தியா முழுக்க தீயாய் பரவிய ஒரு படுகொலை என்றால் அது ராஜீவ் காந்தி படுகொலைதான்.
பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட அந்த சமயத்தில் அது பெரிதாக பேசப்பட்டது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அடுத்த நாளிலிருந்து விசாரணை துவங்கி 90 நாட்களில் அதற்கு சம்பந்தப்பட்டவர்களை உளவுத்துறை கைது செய்தது.
இந்த 90 நாட்களும் அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது அப்போதைய காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
ஆனால் இப்பொழுது இந்த தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு அது அவ்வளவாக தெரியாது. எனவே அதை விவரிக்கும் வகையில் இந்த சீரிஸ் எடுக்கப்பட்டு இருக்கிறது.
சோனி லைவில் வெளியாகி இருக்கும் இந்த சீரியஸிற்கு முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முக்கியமாக உண்மையில் இருந்தவர்களின் முகசாயலோடு ஒத்துப்போகும் வகையில் கதாபாத்திரங்களை இந்த சீரியஸில் உருவாக்கி இருக்கின்றனர். எனவே இதற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.