10 நாட்களில் குட் பேட் அக்லி வசூல்.. போட்ட காசை எடுத்துச்சா..!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவான ‘குட் பேட் அக்லி” திரைப்படம், கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அஜித்தின் பெரிய ரசிகனாக உள்ள ஆதிக், இந்த படத்தை ஒரு ஃபேன் பாய் படமாக சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

திரிஷா, அர்ஜூன் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, பிரியா வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முழு ஓட்டத்திலும் அஜித் தான் மையமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை பல்வேறு வித்தியாசமான தோற்றங்களில் ஆதிக் முன்னிறுத்தி ரசிகர்களுக்கு ட்ரீட் வழங்கியுள்ளார். வில்லன் வேடத்தில் அர்ஜூன் தாஸ் சிறப்பாக நடித்துள்ளார். கதையமைப்பு மிக வலுவாக இல்லாவிட்டாலும், படமே ஒரு ரசிகர்களுக்கான படம் என்பதால் ரசிகர்கள் சுலபமாக ரசித்து வருகிறார்கள்.

 

ரசிகர்கள் இந்த படத்தைக் கொண்டாடினாலும், பொதுமக்கள் இதை எவ்வளவு அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது சில நாட்களில் வெளிவரும். தற்போது வரை படம் ஹிட் கொடுத்துள்ளது, இன்னும் எவ்வளவு வசூலிக்க வேண்டுமெனும் கணக்குகள் செய்யப்படுகின்றன.

இந்தியாவிலேயே வசூல் விவரம்:

  • 1ம் நாள் – ₹29.25 கோடி
  • 2ம் நாள் – ₹15 கோடி
  • 3ம் நாள் – ₹19.75 கோடி
  • 4ம் நாள் – ₹22.3 கோடி
  • 5ம் நாள் – ₹15 கோடி
  • 6ம் நாள் – ₹7 கோடி
  • 7ம் நாள் – ₹5.55 கோடி
  • 8ம் நாள் – ₹5.37 கோடி
    👉 மொத்தம்: ₹119.22 கோடி

உலகளவில் கடந்த 8 நாட்களில் படம் ₹196.5 கோடியை தொட்டு இருந்தது. தற்சமயம் 10 நாட்களில் 228 கோடி வசூல் செய்துள்ளது இந்த திரைப்படம்

படத்தின் தயாரிப்பு, விளம்பர செலவுகள் சேர்த்து மொத்த பட்ஜெட் ₹200 கோடி ஆகும். தற்போது அந்த இலக்கைதாண்டி சென்று கொண்டுள்ளது குட் பேட் அக்லி. இன்னும் சில நாட்களில் லாபத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமைகள் மூலமும் கணிசமான வருமானம் கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது. உலகம் முழுவதும் 8000 திரையரங்குகளில் வெளியான படம் இது.

இந்த ஆண்டு மிகப்பெரியடாப் ஓபனிங்பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. ₹220 கோடி வசூல் செய்துவிட்டால், அதில் ₹114 கோடி விநியோகஸ்தர்களுக்காக போகும் – இதன் அடிப்படையில் படம் வெற்றி பெற்றதாக கருதப்படும். அந்த வகையில் ஏற்கனவே குட் பேட் அக்லி வெற்றி படமாக மாறியுள்ளது.

 

 

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version