நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படமே நல்ல வெற்றியை கொடுத்ததால் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி வெளியான முதல் நாள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் போக போக அந்த படத்திற்கான வரவேற்பு என்பது குறைய துவங்கியது.

ஏனெனில் முழுக்க முழுக்க இந்த படம் ரசிகர்களுக்கான திரைப்படமாக எடுக்கப்பட்டது. எனவே பொது மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் இந்த திரைப்படம் இதுவரையில் 283 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மற்ற அஜித் திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவான வசூல்தான் என கூறப்படுகிறது.