Tag Archives: கல்கி

கல்கி மாதிரியே கலக்கலாக மற்றொரு படம்.. வெளியான மிராய் டீசர்.!

இந்திய அளவில் பேண்டசி படங்களுக்கு அதிக மதிப்பு இருந்து வருகிறது. இப்போதெல்லாம் சாமி படங்களின் வெர்ஷன் மொத்தமாக பேண்டசியாக மாறியுள்ளது. முன்பெல்லாம் க்ளைமேக்ஸ் காட்சிகளில் அம்மன் வருவதுதான் மிகப்பெரிய மாயாஜாலமாக மாறியுள்ளது.

ஆனால் இப்போது புராண்ட சாமி கதைகளை அடிப்படையாக கொண்டு வரும் படங்கள் வேறு மாதிரி அப்டேட் ஆகியுள்ளன. சமீபத்தில் வந்த கல்கி திரைப்படம் கூட சிறப்பான கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.

அடுத்து கல்கி 2 எப்போது வரும் என்பது பலரது ஆவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தென்னிந்தியாவில் ஏற்கனவே தெலுங்கில் ஹனுமான் என்கிற திரைப்படம் போன வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் நடித்த கதாநாயகன் தேஜா சஜா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் மிராய். ராமனின் கையில் இருந்த ஆயுதமான மிராய் என்கிற ஆயுதத்தை அடிப்படையாக கொண்டு படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த படம் செப்டம்பர் 5 திரைக்கு வர இருக்கிறது,

தற்சமயம் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அந்த விஷயத்தில் கோட்டை விடாமல் இருந்திருக்கலாம்!.. கல்கி 2898 ஏ.டி திரைப்படம்.. ஓ.டி.டி விமர்சனம்!..

சமீபத்தில் மாபெரும் பொருட் செலவில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏடி திரைப்படம். மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படம் தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளது.

அதன் கதை எப்படியிருக்கிறது என இப்போது பார்க்கலாம். படத்தின் கதைப்படி கதை காசியில் நடக்கிறது. காசியில் பைரவா எனப்படும் பிரபாஸ் வாழ்ந்து வருகிறார். அங்கு கடவுள்கள் வாழும் பகுதி இருக்கிறது. அதற்குள் செல்வது அவ்வளவு எளிது கிடையாது.

படத்தின் கதை:

அப்போது இருக்கும் பணத்தில் 1 மில்லியன் தொகை கொடுத்தால்தான் அவர்களால் அந்த இடத்திற்குள் சென்று வாழ முடியும். அதாவது பணக்காரர்கள் மட்டுமே அங்கு வாழ முடியும். ஏழைகள் வாழும் பகுதில் ஒரு புல் பூண்டுக்கூட இருக்காது.

மொத்த உலகமும் தண்ணீர் இல்லாமல் வறட்சியடைந்து காணப்படும். இந்த நிலையில் காம்ப்ளக்ஸ் என்னும் அந்த இடம் மட்டுமே செழிப்பாக இருக்கிறது. அதை உருவாக்கிய சுப்ரீம் எஸ்கின் என்பவர்தான் கடவுளாக கருதப்படுகிறார்.

இந்த நிலையில் ஒரு போராட்ட குழு அவர்களிடம் இருந்து தப்பித்து தனியாக வாழ்ந்து வருகிறது. இதிகாச கதைகளில் வரும் கல்கி அவதாரத்தின் பிறப்பு தங்கள் வாழ்க்கையை மாற்றும் என அவர்கள் கருதுகின்றனர்.

மகாபாரத கதை:

இதற்கு நடுவே மகாபாரத போர் கதை செல்கிறது. அதில் அசுவத்தாமன் பாண்டவ குலம் அழிவதற்காக எய்யும் அம்பு அபிமன்யுவின் மனைவி வயிற்றில் இருக்கும் சிசுவை கொல்கிறது.

இதனால் கோபமடைந்த கிருஷ்ணன் என்றென்றைக்கும் சாகா வரத்தை சாபமாக தருகிறார். போரால் ஏற்பட்ட வடு ஆறாமல் அந்த வாழ்க்கையை வாழ்கிறார் அசுவத்தாமன். இந்த நிலையில் கல்கி அவதாரத்தை வயிற்றில் கொண்டுள்ள பெண்ணை காப்பதன் மூலம் அசுவத்தாமனுக்கு முக்தி கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறது.

இந்த நிலையில் அதை சுமக்கும் தீபிகா படுகோனேவிடம் இருந்து அந்த குழந்தையை அபகரிக்க நினைக்கிறது காம்ப்ளக்ஸ். எனவே 1 மில்லியன் காசுகளை அவளை பிடிப்பவர்களுக்கு தருவதாக அறிவிக்கிறது. இந்த நிலையில் அவரை பிடிக்க பிரபாஸ் கிளம்புகிறார். அதே சமயம் அசுவத்தாமனும் அவரை காக்க கிளம்புகிறார்.

இதனை வைத்து கதை செல்கிறது.

படத்தின் பிரச்சனைகள்:

கதையம்சம், கிராபிக்ஸ் எல்லாம் மிரட்டும் வகையில் இருந்தாலும் கூட இந்தியாவின் சாயலே படத்தில் இல்லை. முழுக்க முழுக்க ஹாலிவுட் படங்களின் மீது மோகம் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தின் கதை அதிகப்பட்சம் ஹாலிவுட்டில் வந்த அலிட்டா பேட்டல் ஏஞ்சல் திரைப்படத்தின் கதையை ஒத்திருப்பதை பார்க்க முடிகிறது. படத்தில் மாஸான ஒரு கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக இண்ட்ரோ செய்கின்றனர்.

ஹாலிவுட் தாக்கத்தில் இல்லாமல் நம்ம ஊர் பாணியில் இந்த படம் இருந்திருந்தால் இன்னமுமே சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் பரவலான கருத்தாக இருக்கிறது.

ராயன் முதல் கல்கி வரை.. இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியாகும் படங்கள்!.

தற்போது தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் பல மொழி திரைப்படங்களும் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் தற்போது வெளிவரும் திரைப்படங்கள் இதுவும் ரசிகர்களின் மனதில் அவ்வளவாக இடம் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வரும் நிலையில், 124 படங்கள் வெளிவந்து அதில் எட்டு திரைப்படங்கள் மட்டுமே வெற்றி அடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது வரும் எந்த ஒரு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடவில்லை என குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

அந்த வகையில் திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாகி கொண்டு இருக்கும் நிலையில் இந்த வாரம் இறுதியில் ஓ.டி.டியில் எந்த திரைப்படங்கள் வெளிவரப்போகிறது என்ற அப்டேட்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தற்போது ஓ.டி.டியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் படங்களை பற்றி காணலாம்.

ராயன்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ராயன் திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாக அமைந்தது. மேலும் தனுஷ் இயக்கி அவர் நடித்திருந்த திரைப்படம் என்பதால் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த திரைப்படம் தனுஷ்க்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

இந்த திரைப்படத்தில் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆகும். இந்த வார இறுதியில் ஓ.டி.டியில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.

கல்கி

அடுத்ததாக கல்கி 2898 ஏடி சயின்ஸ் பிக்சன் திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், பிரபாஸ் ஆகியோர் முக்கிய இடத்தில் நடித்திருந்தார்கள். மேலும் 2024 ஆம் ஆண்டு அதிக வசூல் குவித்த திரைப்படம் என்ற பெருமையும் இத்திரைப்படம் பெற்று இருக்கிறது. இத்திரைப்படம் netflix மற்றும் பிரைம் இரண்டிலும் வெளியாக இருக்கிறது.

இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஓ.டி.டியில் வெளியாக உள்ள இந்த இரண்டு திரைப்படங்களும் என்ன மாதிரியான விமர்சனங்களை பெறப்போகிறது என்பது எதிர்பார்ப்பில் உள்ளது.

போட்ட காசில் பாதியை எடுக்கவே நான்கு நாட்கள் ஆயிடுச்சு.. கல்கி 4 நாள் ரிப்போர்ட்!..

விலைவாசி அதிகரிப்பதை போலவே போக போக தயாரிக்கப்படும் திரைப்படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து கொண்டே போகின்றன. முன்பெல்லாம் ஒரு படத்தை 10 கோடியில் எடுத்தால் பெரிய விஷயமாக இருந்தது.

இப்பொழுது எல்லாம் 50, 60 கோடி என்று போய் தமிழ் சினிமாவில் அதிகமாக 200, 250 கோடி பட்ஜெட்டில் திரைப்படங்கள் உருவாக துவங்கியிருக்கின்றன. இதற்கு நடுவே 700 கோடி பட்ஜெட்டில் உருவான பேன் இந்தியா திரைப்படம்தான் கல்கி.

பெரும் பட்ஜெட் படம்:

பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் இந்தியாவில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் பெருமளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

வெளியான மூன்று நாட்களிலேயே அதிக வசூலை செய்திருக்கிறது. பிரபாஸ் நடித்து வெளியான திரைப்படங்களில் எந்த ஒரு திரைப்படத்தை விடவும் இந்த திரைப்படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என்பது திரைத்துறையினர் கணிப்பாக இருக்கிறது.

அதிக வசூல்:

இந்த திரைப்படம் எப்படியும் 2000 கோடி வசூல் சாதனை படைக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு தகுந்தார் போல படம் வெளியாகிய நான்கு நாட்களே ஆன நிலையில் இதுவரை 500 கோடி வசூல் செய்திருக்கிறது கல்கி திரைப்படம்.

kalki

தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு திரைப்படமும் இப்படி ஒரு வசூலை கொடுத்தது கிடையாது. ஆனால் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடும் பொழுது இப்பொழுதுதான் மூன்றில் இரண்டு பங்கு பணம் வந்திருக்கிறது இன்னும் படத்தின் லாபமே வர துவங்கவில்லை என்று கூறப்படுகிறது ஆனால் இன்னும் ஒரு வாரத்தில் கல்கி திரைப்படத்தின் வசூல் வேறு லெவல் இருக்கும் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

கல்கி 2898 ஏடி தியேட்டர்ல போய் பார்க்கலாமா? இல்ல வீட்லையே இருக்கலாமா.. பட விமர்சனம்!..

இன்று நடிகர் பிரபாஸ் நடிப்பில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் கல்கி 2898 ஏடி படத்தின் கதை முழுக்க முழுக்க ஒரு பேண்டஸி கதை என்றாலும் இந்து மதத்தின் புராணமான மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு பாடத்தின் கதைகளும் அமைக்கப்பட்டிருப்பது எமோஷனலாக மக்கள் மத்தியில் கனெக்ட் செய்வதற்கான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்கள் பிரபாஸிற்கு தோல்வியை கொடுத்த நிலையில் தற்சமயம் சலார் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து இந்த படமும் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கதைப்படி கலியுகத்தின் முடிவில் பகவானின் அவதாரமான கல்கி அவதாரம் தோன்றும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் மகாபாரத போருக்கு பிறகு கிருஷ்ணன் இறக்கிறார். கிருஷ்ணனுக்கு அடுத்த அவதாரம் தான் கல்கி அவதாரம்.

கல்கி அவதாரம்:

இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் கல்கி அவதாரத்திற்காக மகாபாரத காலத்தில் இருந்தே காத்திருக்கிறார் அஸ்வத்தாமன். துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமனுக்கு காந்தாரியால் ஒரு சாபம் கிடைக்கிறது. அது என்னவென்றால் சாகா வரம் என்பதே அந்த சாபம்.

kalki 2898 AD

அந்த சாபத்தை நீக்கும் வல்லமை கொண்ட ஒரே ஆள் கல்கி அவதாரம் மட்டுமே. எனவே கலியுகத்தின் முடிவுக்காகவும் கல்கி அவதாரத்தின் தோன்றலுக்காகவும்  அஸ்வத்தாமனான அமிதாப் பச்சன் காத்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் கல்கி அவதாரம் தீபிகா படுகோனே வயிற்றில் உருவாகிறது. உலகமே அழியும் தருவாய்க்கு வந்து பல நகரங்கள் அழிந்து கடைசியாக காசி நகரம் மட்டுமே இருந்து வரும் நிலையில் கல்கி அவதாரம் மறு உலகத்தை உருவாக்குவதற்கான ஒரு விஷயமாக உருவாகிறது.

வில்லனாக ஹீரோ:

இந்த நிலையில் சில தீய மனிதர்கள் இந்த கல்கி அவதாரம் உருவாகக்கூடாது என்று நினைக்கின்றனர். அதற்காக தீபிகா படுகோனேவை அவர்கள் பிடிக்க நினைக்கின்றனர். இந்த நிலையில் காசுக்காக வேலை செய்யும் அடியாட்களுக்கு அதிக பணம் தருவதாகவும் அதற்கு பதிலாக தீபிகா படுகோனேவை பிடித்து தரும்படியும் கூறுகின்றனர்.

அந்த அடியாட்கள் கூட்டத்தில் நடிகர்  பிரபாஸும் ஒருவராக இருக்கிறார் இந்த நிலையில் காசுக்காக அவர் தீபிகா படுகோனேவை தூக்க செல்கிறார் அப்பொழுது இவருக்கும் அமிதாப்பச்சனுக்கும் இடையே சண்டை நடைபெறுகிறது.

kalki

ஆரம்பத்தில் வில்லனாக பிரபாஸ் இருந்தாலும் போக போக கல்கி அவதாரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள துவங்குகிறார் அதற்கு பிறகு அமிதாப்பச்சன் தீபிகா படுகோனே பிரபாஸ் 3 பேரும் ஒரு அணியாக உருவாகின்றனர்.

தொடர்ந்து கல்கி அவதாரத்திற்காக காத்திருக்கும் பலரும் இந்த அணியில் வந்து சேருகின்றனர். கல்கி அவதாரத்தை காப்பாற்றுவது தான் படத்தின் கதையாக இருக்கிறது.

படத்தில் உள்ள பெரிய மைனஸ் என்று பார்த்தால் படத்தின் நேரம் 3 மணி நேரம் இந்த திரைப்படம் இருக்கிறது. இது பலருக்கும் அயற்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. மேலும் முதல் பாதி மிகவும் பொறுமையாக செல்கிறது.

இரண்டாம் பாதியில்தான் படத்தின் கதையே துவங்குகிறது. முதல் பாதியில் வெறுமனே நேரத்தை கடத்த வேண்டும் என்பதற்காக படத்தை ஓட்டுவது போல தெரிகிறது. ஆனால் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் சென்று பார்ப்பதற்கு உகந்த படம் தான் என்று கூறப்படுகிறது.

லியோ படத்தை பின்னுக்கு தள்ளிய கல்கி.. சர்வரே ஸ்லோ ஆயிட்டாம்.. ரிலீசுக்கு முன்னாடியே இவ்வளவு வசூலா?.

மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு இப்போதைய தொழில்நுட்பாகத்திற்கு தகுந்தார் போல எடுக்கப்பட்ட திரைப்படம்தான் கல்கி.

இந்த திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட திட்டமிட்ட காரணத்தினால் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலிருந்தும் முக்கியமான நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கல்கி பட்ஜெட்:

கிட்டத்தட்ட 780 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த திரைப்படம் ஓடினாலும் கூட அது படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது குறைந்த அளவு வெற்றிதான் என்று கூற வேண்டும்.

kalki

படம் எப்படியும் 1500 கோடிக்காவது ஓட வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்த உடனே இலட்சக்கணக்கான டிக்கெட்டுகள் புக்கிங் ஆகி இருக்கின்றன.

ஒரே நேரத்தில் எக்கச்சக்கமான நபர்கள் புக்கிங் செய்ய துவங்கியதால் சர்வர் ஸ்லோவாகி இருக்கிறது. இதற்கு முன்பு லியோ திரைப்படத்திற்கு இதே மாதிரி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு அளவில் மட்டும்தான் லியோ திரைப்படத்திற்கு அந்த பிரச்சனை வந்தது.

புக்கிங்கில் பிரச்சனை:

kalki

ஆனால் இந்திய அளவிலேயே டிக்கெட் புக்கிங் செய்வதில் பிரச்சனையை சந்தித்துள்ளது கல்கி எனும்பொழுது டிக்கெட் புக்கிங் இடையே கிட்டதட்ட 150 கோடி ரூபாய் இந்த திரைப்படம் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இது இல்லாமல் முதல் நாள் தியேட்டரில் டிக்கெட் எடுப்பவர்களையும் சேர்த்தால் கிட்டத்தட்ட முதல் நாளை இந்த திரைப்படம். 500 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன வட இந்திய திரைப்படமாக தயாராகி வரும் கல்கி திரைப்படம் ஜவான் திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட்டில் அதிக வசூல் கொடுக்கும் ஒரு திரைப்படம் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இந்த பொழப்பு பொளைக்கணும்!.. ஆர்ட்டிஸ்டிடிடம் திருடிய கல்கி படக்குழு.. இது வேறயா!..

பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் அடுத்து நடித்து வரும் திரைப்படம்தான் கல்கி 2898 ஏடி. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் பாகுபலிக்கு பிறகு அவர் நடித்த படங்களில் சலார் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமானது கலியுகத்தின் இறுதியில் வரும் என்பது புராணங்களில் எழுதப்பட்ட நம்பிக்கையாகும். அதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வந்தது. அதில் பார்க்கும்போது மகாபாரத கதையில் துரோணாச்சாரியாரின் மகனாக வரும் அசுவத்தாமன் கதாபாத்திரம் படத்தில் வருவதை பார்க்க முடிந்தது. அதே சமயம் நடிகர் பிரபாஸ் அந்த கல்கி அவதாரம் இல்லை என தெரிகிறது.

திரைப்படம் குறித்து குற்றச்சாட்டு:

நடிகை தீபிகா படுகோன் அவரது வயிற்றில் சுமந்து வரும் குழந்தைதான் கல்கி அவதாரம். அடுத்த பாகத்தில்தான் அந்த கல்கி அவதாரம் யார் என்பதே கூறப்படும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே இந்த திரைப்படத்தின் காட்சிகள் பல ஹாலிவுட் திரைப்பட காட்சிகளின் தழுவலாக தெரிகிறது என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதற்கு நடுவே கொரியாவை சேர்ந்த ஓவியர் ஒருவர் தன்னுடைய ஓவியத்தை திருடி படத்தில் பயன்படுத்தியுள்ளதாக கல்கி திரைப்படம் குறித்து குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இனி என்னென்ன படங்கள் வாயிலாக இந்த படத்திற்கு குற்றச்சாட்டு வரப்போகிறது என தெரியவில்லை.

கலியுகத்தின் அழிவுக்காக காத்திருக்கேன்!.. ராஜமௌலிக்கு டஃப் கொடுக்கும் பிரபாஸின் கல்கி!. கதை இதுதான்!..

பாகுபலி திரைப்படம் மூலமாக தென்னிந்தியா மட்டுமில்லாது மொத்த இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களாக மட்டுமே நடித்து வருகிறார் பிரபாஸ்.

இதனால் இவரது திரைப்படங்களின் பட்ஜெட்டும் அநியாயத்திற்கு அதிகமாகியுள்ளது. ஆனால் பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் வெற்றியடையவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சலார் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து தற்சமயம் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் கல்கி. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

படத்தின் கதை:

கலியுகத்தின் இறுதியில் விஷ்ணு பகவான் எடுக்கும் 10 ஆவது அவதாரம்தான் கல்கி என்பது புராணங்கள் கூறும் கதையாகும். அதை அடிப்படையாக கொண்டுதான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது டீசரின் வழியாக தெரிகிறது.

அந்த கல்கி அவதாரமாகதான் பிரபாஸ் இருப்பார் என தெரிகிறது. ஏனெனில் கதையில் துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமனாக அமிதாப் பச்சன் வருகிறார். எனவே இந்த படம் மகாபாராத கதையோடு தொடர்புடைய திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி அவதாரத்தின் வருகைக்காக அசுவத்தாமன் காத்துக்கொண்டிருக்க வேற்று கிரகத்தில் இருந்து வரும் பிரபாஸ் அந்த கல்கி அவதாரமாக வருகிறார் என பேச்சுக்கள் இருக்கின்றன.