Tag Archives: ஹாலிவுட் சினிமா

பேய் ஓட்ட வந்தவங்களுக்கே இந்த நிலைமையா.. உண்மை கதை.. காஞ்சுரிங் லாஸ்ட் ரைட்ஸ்..

1950 காலகட்டங்களில் அமெரிக்காவில் வாழ்ந்த பேய் ஓட்டும் தம்பதிகளான வாரன் தம்பதியினர் என்பவர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் காஞ்சுரிங்.

அவர்கள் நிறைய வகையான பேய்களை ஓட்டி இருக்கின்றனர். அந்த கதைகளை எடுத்து ஹாலிவுட்டில் தற்சமயம் படம் ஆக்கி வருகின்றனர். அப்படியான ஒரு திரைப்படம் தான் அடுத்து வெளியாக இருக்கும் காஞ்சுரிங் தி லாஸ்ட் ரியாட்.

இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

படத்தின் கதைப்படி இதுவரை வாரன் தம்பதியினர் சந்தித்த பேய் ஓட்டும் ஆத்மாக்களில் மிக மோசமான ஒரு ஆத்மாவை அவர்கள் சந்திக்கின்றனர். சின்ன வயதிலேயே ஒரு சாத்தானை பார்த்து இருக்கிறார் லொரைன்.

வெகு வருடங்களுக்கு பிறகு அந்த சாத்தான் ஒரு வீட்டில் குடி இருக்கிறது அதை விரட்டுவதற்காக வரும் வாரன் தம்பதியினர் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் இருக்கும்.

இதுவரை வந்த காஞ்சுரிங் திரைப்படத்திலேயே இதுதான் கொடூரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விலங்குகள் உலகில் நடக்கும் சுவாரஸ்யங்கள்.. வில்லனாக வந்த பாம்பு.. Zootopia 2 Trailer out..!

விலங்குகள் உலகை அடிப்படையாகக் கொண்டு வால்டு டிஸ்னி நிறுவனத்தில் வெளியான அனிமேஷன் திரைப்படம்தான் Zootopia. விலங்குகள் உலகில் இருக்கும் முயல் மற்றும் நரியை கதை நாயகர்களாக கொண்டு படத்தின் கதை செல்லும்.

சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்தது. Zootopia  நகரமானது பலவித விலங்குகள் மனிதர்கள் போலவே நாகரிகமாக வாழும் ஒரு நகரமாகும்.

அங்கு நடக்கும் குற்றங்களை கண்டறியும் போலீஸ் அதிகாரிகளாகத்தான் இந்த நரியும் முயலும் வருகின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுவதை அடிப்படையாகக் கொண்டு தான் முதல் பாகம் சென்று கொண்டிருந்தது.

இரண்டாம் பாகத்தைப் பொறுத்தவரை Zootopia நகரில் பாம்புகளுக்கு அனுமதியே கிடையாது இந்த நிலையில் அத்துமீறி நுழையும் ஒரு பாம்பை இவர்கள் இருவரும் தடுப்பது கதையாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் இப்பொழுது வரவேற்பை பெற்று வருகிறது.

மனிதர்களை கொல்வதற்காகவே உருவான கிரகம்… வெளியான Predator: Badlands  Official Trailer

ஹாலிவுட் சினிமாக்களை பொறுத்தவரை அதில் இருக்கும் பிரமாண்டங்களுக்குதான் அதிக மதிப்பு என கூறலாம். இந்த நிலையில் வித்தியாசமான கதை அமைப்பை கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம்தான் Predator: Badlands  Official Trailer.

ப்ரிடேட்டர் என்றதும் உடனே ஏலியன்களாக இருக்கும் என பலரும் நினைக்கலாம். ஆனால் அது அப்படி கிடையாது. வேட்டையாடும் விலங்குகளைதான் பொதுவாக ப்ரிடேட்டர் என அழைப்பார்கள்.

படத்தை பொறுத்தவரை ஒரு கிரகம் முழுக்கவே வேட்டையாடும் வித்தியாசமான விலங்குகள் மட்டுமே இருந்து வருகின்றன. அதற்குள் செல்லும் ஒரு பெண் மற்றும் ஒரு ஏலியனை அடிப்படையாக கொண்டு கதைக்களம் நகர்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

லீக் ஆன அவதார் அடுத்த பாகம் ட்ரைலர்.. செமையா இருக்கே..!

2009 ஆம் ஆண்டு ஆயிரம் கோடி பொருட் செலவில் உருவாகி உலகம் முழுக்க அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் அவதார்.

அவதார் திரைப்படம் மொத்தமாக பல பாகங்களாக எடுக்க அப்பொழுதே திட்டமிடப்பட்டிருந்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் அடுத்த பாகங்களை எடுக்க திட்டமிட்டு இருந்தார் படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன்.

இந்த திரைப்படம் பெரிய வசூல் சாதனையை கொடுத்தது. அதற்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு அவதார் திரைப்படத்தின் வசூலை எந்த திரைப்படத்தாலும் மிஞ்ச முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். வெகு வருடங்களுக்கு பிறகு அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படம் இந்த வசூலை பிரேக் செய்தது.

இந்த நிலையில் அதற்கு பிறகு அவதார் இரண்டாம் பாகம் தி வே ஆஃப் வாட்டர் என்று வெளியானது. தொடர்ந்து நீர் தொடர்பாகவே அந்த திரைப்படம் சென்றது அதற்குப் பிறகு மூன்றாம் பாகமாக அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் என்கிற படம் வெளிவரும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த படத்தின் ட்ரைலர் என்று ஒன்று வெளியாகியிருக்கிறது அதில் இதுவரை அவதார் திரைப்படத்தில் பார்க்காத பல காட்சிகளை பார்க்க முடிகிறது எனவே உண்மையாகவே அவதார் மூன்றாம் பாகத்தின் டிரைலர் லீக் ஆகிவிட்டது என்று பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

சண்டை போட்டாதான் உயிர் பிழைக்க முடியும்.. மார்டல் காம்பட் II (Mortal Kombat II) – Official Tamil Trailer

ஹாலிவுட்டில் வீடியோ கேம்களை அடிப்படையாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படியாக ஏற்கனவே Assasin Creed, F1 Race போன்ற வீடியோ கேம்களின் கதைகளை அடிப்படையாக கொண்டு திரைப்படங்கள் வந்துள்ளன.

இந்த வகையில் அடுத்ததாக உலக புகழ்ப்பெற்ற வீடியோ கேமான மார்டல் காம்பட் என்கிற விடீயோ கேமை அடிப்படையாக கொண்டு ஏற்கனவே முதல் பாகம் ஒன்று வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்சமயம் முதல் பாகத்தை விஞ்சும் அளவில் இரண்டாம் பாகமானது எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தை பொறுத்தவரையில் இந்த படத்தில் மார்டல் காம்பட் உலகிற்கு ஆட்களை தேர்ந்தெடுக்கின்றனர். ஒருமுறை அந்த உலகிற்குள் சென்றுவிட்டால் அதற்கு பிறகு சண்டைகளில் ஜெயித்தால் மட்டுமே வீடு திரும்ப முடியும் என்கிற நிலை இருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் ஹீரோ வெளி உலகில் ஒரு பிரபலமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு மார்டல் காம்பட் உலகிற்குள் செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அந்த உலகில் சண்டையிடும் ஒவ்வொருவருக்கும் ஒரு சக்தி இருக்கிறது.

ஆனால் கதாநாயகனுக்கு அப்படி எந்த சக்தியும் கிடையாது. இருந்தாலும் கூட அவர்களை எல்லாம் இவன் எப்படி ஜெயிக்க போகிறான் என்பதாக கதை அமைந்துள்ளது.

 

 

 

இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா.. பட்டையை கிளப்பும் சூப்பர் மேன் திரைப்படம்..!

இதுவரை வந்த சூப்பர் மேன் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான ஒரு சூப்பர் மேன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஜேம்ஸ்கன். டிசி நிறுவனமானது தொடர்ந்து சூப்பர் மேன் திரைப்படங்களை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் எடுக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று பாகங்கள் முடிந்த பிறகு மீண்டும் சூப்பர் மேனை முதல் பாகத்தில் இருந்து எடுப்பதையே வேலையாக போய் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் இப்பொழுது வந்துள்ளது இந்த புது சூப்பர் மேன் திரைப்படம்.

பொதுவாக சூப்பர் மேன் திரைப்படங்களில் யாராலுமே சூப்பர் மேனை அசைக்கக்கூட முடியாது என்பதாகதான் சூப்பர் மேன் காட்டப்பட்டிருக்கும் ஆனால் இந்த திரைப்படத்தில் அதற்கு மாறாக சூப்பர் மேன் கொஞ்சம் வலிமை இழந்த ஒரு கதாநாயகனாக காட்டப்பட்டுள்ளார்.

ஆனால் அது மக்கள் மத்தியில் ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். படம் வெளியானது முதலே அதிக வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது 6 நாட்களில் உலகம் முழுவதும் 2500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது சூப்பர் மேன் திரைப்படம்.

முக்கியமாக இந்தியாவில் மட்டுமே இந்த திரைப்படம் 32 கோடி வசூல் செய்து இருக்கிறது.

 

சூனியக்காரியன் மகள் செய்யும் காரியங்கள்- Wednesday season 2 trailer out

டார்க் காமெடி கேட்டகிரியில் நிறைய திரைப்படங்களும் சீரிஸ்களும் வந்துள்ளன. அந்த வகையில் ஹாலிவுட்டில் பிரபலமான சீரிஸாக வெட்னஸ்டே இருந்து வருகிறது. Jenna Marie Ortega இதில் வெட்னஸ்டே வாக நடித்திருப்பார். வெட்னஸ்டேவை பொறுத்தவரை அவர் ஒரு மனிதருக்கும் சூனியகாரிக்கும் பிறந்தவள் ஆவாள்.

அவளை சூனியக்காரர்களை சேர்க்கும் ஒரு பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். அங்கு நடக்கும் மர்மங்களை அவள் கண்டறிவதை வைத்து முதல் சீசன் கதை சென்றது. மக்கள் மத்தியில் அதற்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் சீசன் அடுத்து வர உள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதற்கான ட்ரைலரை வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலரில் பார்க்கும்போது முதல் சீசனை விடவும் இரண்டாம் சீசனில் அதிக ஆக்‌ஷன் மற்றும் மாயாஜால காட்சிகள் இருப்பதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் இந்த ட்ரைலருக்கு அதிக வரவேற்புகள் வர துவங்கியிருக்கின்றன. தற்சமயம் இது அதிக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

 

 

எந்திரன் கதையை காபி அடிச்சி ஹாலிவுட்டில் படம்.. வெளியானது மேகன் 2.0 ட்ரைலர்..!

தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுக்க பிரபலமான திரைப்படம்தான் எந்திரன். இந்த திரைப்படம் வந்தப்போது தமிழ் சினிமாவிற்கு கிராபிக்ஸ் தொழில்நுட்பமே புதிய விஷயமாக இருந்தது. அதனால் இந்த படம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அடுத்து அதன் தொடர்ச்சியாக 2.0 என்கிற திரைப்படமும் வந்தது. இது அனைவருக்குமே தெரியும். கிட்டத்தட்ட இதே மாதிரியான கதை அமைப்பில் ஹாலிவுட்டில் உருவான ஒரு திரைப்படம்தான் மேகன்.

எந்திரன் திரைப்படத்தில் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக உருவாக்கப்படும் ரோபோ பிறகு தீய சக்தியாக மாறிவிடும். அதே போல மேகன் திரைப்படத்திலும் ஒரு குழந்தையை பாதுக்காப்பதற்காக ரோபோவை உருவாக்குகின்றனர்.

ஆனால் அந்த ரோபோ குழந்தையை பாதுகாப்பதற்காக சுற்றி இருப்பவர்களை எல்லாம் கொலை செய்ய நினைக்கிறது. தொடர்ந்து கெட்ட வழியில் செல்லும் ரோபோவை இறுதியில் அடக்குகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ட்ரைலர் தற்சமயம் வெளியானது. இந்த ட்ரைலரின் படி மேகனின் நினைவுகளை எடுத்து அதை அப்படியே ஒரு ப்ளாஸ்டிக் ரோபோவுக்குள் செலுத்துகின்றனர்.

இதனால் மேகனால் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு நடுவே மேகனை விடவும் அதிக தீய குணங்களை கொண்ட அமேலியா என்கிற இன்னொரு ரோபோட்டை யாரோ தயாரித்து விடுகின்றனர். அது விஞ்ஞானியான கெம்மா ஃபாஸ்டரையும் அவளது மகள் கேடியையும் கொல்ல நினைக்கிறது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் வில்லியாக இருந்த மேகன் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்த குடும்பத்தை காப்பாற்ற களம் இறங்குகிறது.

கிட்டத்தட்ட தமிழில் வந்த 2.0 திரைப்படத்திலும் பக்‌ஷி ராஜனை அழிப்பதற்காக முதல் பாகத்தில் வந்த பேட் சிட்டியை வரவழைப்பார்கள். அதே கதை அம்சத்தை கொண்டுள்ளது மேகன் 2.0 திரைப்படம்.

ஜிராசிக் பார்க் திரைப்படத்தின் அடுத்த பாகம்.. JURASSIC WORLD: REBIRTH கதை சொல்லும் படத்தின் ட்ரைலர்

90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹாலிவுட் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ஜுராசிக் பார்க். டைனோசர்களை காட்சிக்காக வைத்திருக்கும் ஒரு தீவுக்கு சென்று அங்கு கதையின் கதாபாத்திரங்கள் டைனோசர்களிடம் இருந்து தப்பிப்பதாக இதன் கதைக்களம் இருக்கும். பெரும்பாலும் ஜுராசிக் பார்க் திரைப்படங்களை பொறுத்தவரை ஏதாவது ஒரு தீவில் டைனோசர்கள் வாழ்வதாகவும் அங்கு மக்கள் சென்று மாட்டிக் கொள்வதாகவும் தான் கதை இருக்கும்.

அவர்கள் செல்வதற்கான காரணங்கள் ஒவ்வொரு பாகத்திலும் மாறினாலும் கூட டைனோசர்களிடமிருந்து உயிர் பிழைப்பது தான் அனைத்து படங்களிலும் கதை கருவாக இருக்கும்.

அதனைத் தொடர்ந்து வந்த ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்தில் முற்றிலுமாக கதைக்களம் மாறி அமைந்தது.  மனிதர்களும் டைனோசர்களும் சேர்ந்து வாழும் சூழல் ஏற்பட்டால் அவர்களால் டைனோசர்கள் நிலை என்னவாகும் என விளக்குவதாக இந்த படம் இருந்தது.

இந்த நிலையில் JURASSIC WORLD: REBIRTH என்கிற அடுத்த பாகம் வருகிற ஜூலை 2 வெளியாக இருக்கிறது இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தை கேரட் எட்வர்ட் என்பவர் இயக்கி இருக்கிறார்.

அவெஞ்சர்ஸ் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்த நடிகை ஸ்கேர்லட் ஜான்சன் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் டைனோசர்களின் டிஎன்ஏவை எடுப்பதற்காக டைனோசர்கள் வாழும் ஒரு தீவுக்கு இவர்களெல்லாம் சேர்ந்து செல்கின்றனர்.

அங்கு அவர்களுக்கு நடக்கும் விபரீதங்களே கதை கருவாக இருக்கிறது பெரும்பாலும் இந்த மாதிரியாக வெளியாகும் திரைப்படங்களில் முகம் சுளிக்கும் வகையிலான காட்சிகள் இருக்கும்.

ஆனால் ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் அந்த மாதிரியான காட்சிகள் இருந்தது கிடையாது. எனவே பல காலங்களாக இந்த ஜுராசிக் பார்க் வகை திரைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு நல்ல ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோயினுக்காகவே பார்க்கலாம் போல.. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்.. பெண்டாஸ்டின் ஃபோர் புது பட ட்ரைலர்.!

90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ஹாலிவுட் திரைப்படங்களில் பெண்டாஸ்டிக் போர் மிக முக்கியமான திரைப்படமாகும். ஐந்து விஞ்ஞானிகள் விண்வெளிக்கு செல்லும்போது ஒரு எரிக்கல்லின் கதிரியக்கத்தால் அவர்களுக்கு கிடைக்கும் சக்தியை மையமாக கொண்டு இதன் கதை செல்லும்.

ஒரு நபர் பாறையாக மாறிவிடுவார். மற்றொருவர் நெருப்பாக மாறும் சக்தி கொண்டிருப்பார், தலைமையாக இருப்பவன் எலாஸ்டிக் மாதிரி வளையும் தன்மையை பெற்றிருப்பான். குழுவில் இருக்கும் பெண் மறையும் திறன் பெற்றிருப்பாள்.

இது இல்லாமல் இவர்களுடன் வரும் வில்லனும் தனிப்பட்ட சக்தியை பெற்றிருப்பான். எந்த ஒரு பவரையும் உறிஞ்சிக்கொள்ளும் சக்தி அவனுக்கு இருக்கும். இப்படியாக வெளிவந்த ஃபெண்டாஸ்டிக் போர் திரைப்படம் இரண்டு பாகங்கள் வரை வந்து பிறகு நின்றுவிட்டது.

இந்த நிலையில் இப்போது மீண்டும் ஃபெண்டாஸ்டிக் போர் கதையை படமாக்கியுள்ளனர். இதற்கு The Fantastic Four: First Steps என பெயரிடப்பட்டுள்ளது.  இது 90ஸ் கிட்ஸ்களுக்கு அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஹாலிவுட்டில் பிரபல கதாநாயகியான வெனிசா கிர்பி நடித்துள்ளார். ஏற்கனவே மிஷின் இம்பாசிபள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே இவருக்காகவே படத்தை பார்க்க ஒரு கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஃபெண்டாஸ்டிக் போர் கூட்டணி அடுத்து மார்வெல்லில் வெளியாகும் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார் மற்றும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே ஆகிய படங்களிலும் வர இருக்கின்றனர்.

இந்த திரைப்படங்களில் வில்லன் டூம்ஸ் டே கதாபாத்திரத்தில் அயர்ன் மேனாக நடித்த ராபர்ட் டோனி ஜே.ஆர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் The Fantastic Four: First Steps திரைப்படம் ஜுலை 25 திரையரங்குகளுக்கு வர இருக்கிறது.

Hollywood: அந்த ஹோட்டலுக்கு போனால் பித்து பிடிச்சிடும்.. பாக்கியராஜே புகழ்ந்த பேய் படம்.. ஸைனிங் படக்கதை..

தமிழ் சினிமா மக்களுக்கு எப்போதுமே ஹாரர் திரைப்படங்கள் மீது அலாதியான பிரியமுண்டு. அப்படியாக 1980 லேயே வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம்தான் ஷைனிங்.

ஆங்கிலத்தில் பேய் கதைகள் எழுதுவதில் புகழ்ப்பெற்ற எழுத்தாளரான ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்ட கதையாகும். அதே போல ஹாலிவுட்டில் புகழ் வாய்ந்த இயக்குனரான ஸ்டான்லி குப்ரிக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அதனாலேயே இந்த திரைப்படம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கிறது.

படத்தின் கதை:

ஜாக் டோரன்ஸ் என்கிற எழுத்தாளர்தான் கதை நாயகனாக இருக்கிறார்.ஓவர் லுக் ஹோட்டல் என்கிற ஹோட்டல் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் இருக்கிறது. இன்னும் திறக்கப்படாத அந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஜாக்கிற்கு வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் அந்த ஹோட்டல் ஒரு அமானுஷியம் நிறைந்த ஹோட்டலாக இருக்கிறது. தொடர்ந்து அங்கு நிறைய அமானுஷியங்களை பார்த்துக்கொண்டே இருக்கும் கதாநாயகனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பித்து பிடித்தது போல ஆகிவிடுகிறது.

அதனை தொடர்ந்து அவனே தனது குடும்பத்தை கொலை செய்ய நினைக்கிறான். இதற்கு நடுவே அவனது மகன் டானி என ஒருவன் இருக்கிறான். அந்த சிறுவனின் உடலில் இன்னொரு கதாபாத்திரம் இருக்கிறது. அது நடக்க போகும் ஆபத்துகளில் இருந்து டேனியை காப்பாற்றுவதற்காக அடிக்கடி டானியை எச்சரிக்கிறது.

டானியின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டாக்டர் ஸ்லீப் என்கிற இன்னொரு திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் டானியும் அவனது தாயாரும் ஜாக் டோரன்ஸிடம் இருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பதுதான் இந்த படத்தின் கதை.

படத்தின் கதையில் அந்த ஹோட்டலில் இந்த குடும்பத்தை தவிர யாருமே தங்கவில்லை. அதே போல அருகாமையிலும் வேறு கட்டிடங்கள் இருக்கவில்லை. இப்படியான சூழலில் அவர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என்பதை விளக்கும் வகையில் படத்தின் கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்.

தமிழில் வெளியான ட்யூன் 2 திரைப்படம் எப்படி இருக்கு!.. வசூலை குவித்ததா!.. இல்லையா..

Dune 2: தமிழ் சினிமாவிலும் சரி உலக சினிமாவிலும் சரி அறிவியல் புனைக்கதைகளுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் என்றே கூறலாம். நிஜ வாழ்வில் நாம் பார்க்க முடியாத விஷயங்களை அறிவியல் புனைகதைகளை கொண்ட திரைப்படங்கள் காட்டுகின்றன.

இதனாலேயே தமிழ்நாட்டில் உள்ள ஹாலிவுட் திரைப்பட ரசிகர்கள் அதிகம் மாயஜாலம் மற்றும் அறிவியல் புனைக்கதைகளையே விரும்புகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் ட்யூன் 2.

இந்த படத்தின் இயக்குனரான denis Villeneuve இப்படியான அறிவியல் புனைக்கதைகளை எடுப்பதில் பிரபலமானவர். ஏற்கனவே இவர் இயக்கிய ப்ளேட் ரன்னர் மற்றும் அரேவல் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

படத்தின் கதை:

ட்யூன் படத்தின் கதையானது கிட்டத்தட்ட இன்றிலிருந்து 8000 வருடம் கழித்து 10000 ஆண்டுகளில் நடக்கும் கதையாகும். 10,000களில் பூமி வாழவே தகுதியில்லாத கிரகமாக மாறியதால் பல கிரகங்களில் மனிதர்கள் வாழ துவங்குகின்றனர்.

இப்படி பல கிரகங்களில் மக்கள் வாழ்ந்தாலும் அரசாட்சி முறை மட்டும் அப்படியே இருக்கிறது. இந்த நிலையில் பல காரணங்களால் தனது குடும்பத்தை இழந்த கதாநாயகன் பழங்குடியினரின் உதவியோடு எதிரிகளை பழி வாங்குவதுதான் படத்தின் கதை.

படத்தில் கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் மக்களை வியப்பில் ஆற்றியுள்ளன. எது கிராபிக்ஸ் எது உண்மை என கண்டறிய முடியா வகையில் அவை அமைந்துள்ளன.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.