Tag Archives: Hollywood movie

கலிஃபோர்னியா நெருப்புக்குள் சிக்கும் பள்ளி பேருந்து.. உண்மையை கதையை தழுவிய படம்.. The Lost Bus – Official Trailer – Apple TV+

உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியாக இருக்கும் திரைப்படம் தான் இந்த லாஸ்ட் பஸ் என்கிற திரைப்படம்.

திரையரங்குகளில் செப்டம்பர் 19ஆம் தேதியும் ஓடிடியில் அக்டோபர் 3ஆம் தேதியும் இது வெளியாக இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மிகப்பெரிய காட்டு தீ உருவானது.

அது அருகில் இருக்கும் பல நகரங்களை சூறையாடியது. அப்படியான விபத்தின் பொழுது தப்பித்த ஒரு உண்மை பஸ் டிரைவரின் கதை தான் இந்த லாஸ்ட் பஸ் என்கிற திரைப்படம்.

கலிபோர்னியாவில் நெருப்பு பரவத் துவங்கிய போது பக்கத்தில் இருந்த நகரங்களில் இருந்து பலரும் இருப்பிடத்தை காலி செய்து கொண்டு கிளம்பினர் அப்படியாக சில மாணவர்களை தனது பேருந்தில் ஏற்றி கொண்டு கெவின் என்கிற பஸ் ட்ரைவர் கிளம்புகிறார்.

ஆனால் அவர் அந்த ரகரை தாண்டுவதற்கு உள்ளாகவே காட்டுத்தீ நகருக்குள் புகுந்து அதற்குள் இந்த பேருந்தும் சிக்கிக் கொள்கிறது. இந்த நிலையில் இந்த குழந்தைகளை இவர் எப்படி காப்பாற்றி அழைத்து வர போகிறார் என்பதாக கதைக்களம் அமைந்து இருக்கிறது.

வானத்தில் பறக்கும் பைக்.. ஏ.ஐயால் வந்த வினை.. தமிழில் வரும் Tron: Ares திரைப்படம்

இயக்குனர் Joseph Kosinski இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ட்ரான் லீகசி (Tron Legacy) இந்த படத்தின் கதைப்படி ஒரு ஏ.ஐ உலகத்தை உருவாக்குகிறார் விஞ்ஞானி ஒருவர். அவரது மகனான சாம் அதிக ஆய்வுகளை செய்து அந்த உலகிற்குள் செல்கிறான்.

அந்த உலகில் அவன் காணும் அதிசயங்களை வைத்து அந்த படம் செல்லும். இந்த நிலையில் அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகமான ட்ரான் ஏரிஸ் Tron Ares திரைப்படத்தின் ட்ரைலர் அடுத்து வெளியாக இருக்கிறது. இந்த ட்ரைலரின்படி கதை அம்சம் முழுமையாக இதில் மாறுப்பட்டுள்ளது.

இயக்குனர் Joachim Rønning இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் Jared Leto தான் ஏரிஸ் என்கிற கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஐ உலகில் வாழ்ந்து வரும் ஒருவனாக ஏரிஸ் என்பவன் இருந்து வருகிறான். அவனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பணியின் காரணமாக அவன் நிஜ மனிதர்களின் உலகிற்கு வர வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் மனித குலம் முதன் முதலாக ஏ.ஐ மனிதர்களை பார்க்கிறது. அதிலிருந்து இவர்கள் இருவருக்கும் இடையேயான போராட்டம் எப்படி செல்கிறது என்பதாக இந்த படத்தின் கதை செல்கிறது. தற்சமயம் வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் ட்ரைலர் தமிழிலும் கூட வெளியாகியுள்ளது.

இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா.. பட்டையை கிளப்பும் சூப்பர் மேன் திரைப்படம்..!

இதுவரை வந்த சூப்பர் மேன் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான ஒரு சூப்பர் மேன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஜேம்ஸ்கன். டிசி நிறுவனமானது தொடர்ந்து சூப்பர் மேன் திரைப்படங்களை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் எடுக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று பாகங்கள் முடிந்த பிறகு மீண்டும் சூப்பர் மேனை முதல் பாகத்தில் இருந்து எடுப்பதையே வேலையாக போய் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் இப்பொழுது வந்துள்ளது இந்த புது சூப்பர் மேன் திரைப்படம்.

பொதுவாக சூப்பர் மேன் திரைப்படங்களில் யாராலுமே சூப்பர் மேனை அசைக்கக்கூட முடியாது என்பதாகதான் சூப்பர் மேன் காட்டப்பட்டிருக்கும் ஆனால் இந்த திரைப்படத்தில் அதற்கு மாறாக சூப்பர் மேன் கொஞ்சம் வலிமை இழந்த ஒரு கதாநாயகனாக காட்டப்பட்டுள்ளார்.

ஆனால் அது மக்கள் மத்தியில் ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். படம் வெளியானது முதலே அதிக வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது 6 நாட்களில் உலகம் முழுவதும் 2500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது சூப்பர் மேன் திரைப்படம்.

முக்கியமாக இந்தியாவில் மட்டுமே இந்த திரைப்படம் 32 கோடி வசூல் செய்து இருக்கிறது.

 

விலங்கின் உடலுக்குள் செல்லும் சிறுவனின் ஆன்மா..! அனிமேஷன் பட ட்ரைலர்.. Hoppers | Teaser Trailer

ஹாலிவுட்டை பொறுத்தவரை பெரியவர்களுக்கு படங்கள் வருவது போலவே சிறுவர்களுக்கான படங்களும் அதிகமாக வருவது உண்டு. நல்ல வகையில் இப்பொழுது Hoppers என்கிற ஒரு திரைப்படம் அதிக வரவேற்பு துவங்கியிருக்கிறது.

பிக்சல் என்கிற அமெரிக்க தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து வால் டிஸ்னி போலவே அனிமேஷன் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அப்படி பிக்சர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் Hoppers.

திரைப்படத்தின் கதைப்படி ஒரு சிறுவனின் ஆன்மாவானது ஒரு குட்டி விலங்கிற்குள் சென்று விடுகிறது. அதனால் காட்டில் இருக்கும் மற்ற விலங்குகள் பேசுவதையும் அவனால் கேட்க முடிகிறது. தொடர்ந்து அந்த காட்டுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பதாக கதை சொல்கிறது.

முழுக்க முழுக்க இது ஒரு காமெடி திரைப்படமாக இருக்கிறது. எனவே சிறுவர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் மார்ச் 6ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

 

 

வசூல் சாதனையில் உச்சம் தொட்ட Jurassic World Rebirth: 2 நாளில் இவ்வளவு வசூலா..!

உலக மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஹாலிவுட் படங்களில் பிரபலமான திரைப்படமாக ஜுராசிக் பார்க் திரைப்படங்கள் இருக்கின்றன. முதன் முதலாக இயக்குனர் ஸ்டீபன் ஸ்பல்பெர்க் இயக்கத்தில் வந்த ஜுராசிக் பார்க் திரைப்படத்தை தொடர்ந்து டைனோசர் திரைப்படங்கள் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு Jurassic World Rebirth திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்கேர்லட் ஜான்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மனித இனத்தை காப்பதற்கு டைனோசர்களின் டி.என்.ஏ தேவைப்படுகிறது.

அதை எடுப்பதற்காக ஸ்கேர்லட் ஜான்சன் தனது குழுவுடன் டைனோசர் இருக்கும் தீவுக்கு செல்கிறார் அங்கு நடக்கும் விஷயங்களே கதையாக இருக்கிறது. இந்த படம் வெளியான முதல் நாளே உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்தது.

தற்சமயம் இரண்டாம் நாளும் கூட 1000 கோடி வசூல் செய்துள்ளது Jurassic World Rebirth திரைப்படம். இந்தியாவில் மட்டும் இரண்டு நாட்களில் 30 கோடி வசூல் செய்துள்ளது இந்த திரைப்படம். இன்னும் பெரிய வெற்றியை இந்த படம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே கதையை எத்தனை வாட்டி எடுப்பீங்க.. எப்படியிருக்கு Jurassic World Rebirth தமிழ் விமர்சனம்..

டைனோசர் திரைப்படங்கள் என்றாலே மக்களுக்கு அதன் மீது அதிக ஈடுபாடு உண்டு. ஜுராசிக் பார்க் வந்த காலத்தில் இருந்தே இந்த திரைப்படங்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து அடுத்து ஜுராசிக் வேல்டு என்கிற சீரிஸ் துவங்கியது. தற்சமயம் அதன் அடுத்த பாகமாக ஜுராசிக் வேல்டு ரீபர்த் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதைப்படி மனித குலத்தை காப்பாற்றுவதற்க்கு டைனோசர்களின் டி.என்.ஏ தேவைப்படுகிறது. எனவே குறிப்பிட்ட டைனோசர்களின் டி.என்.ஏவை எடுப்பதற்காக டைனோசர் இருக்கும் தீவுக்கு ஸ்கேர்லட் ஜான்சன் செல்கிறார்.

அங்கு பல ஆபத்துகளுக்கு நடுவே எப்படி அவர்கள் அந்த டி.என்.ஏவை எடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. சிறுவர்களுக்கு பார்க்க சிறப்பான வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் கதைப்படி பழைய படத்தில் இருந்து எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை.

ஒரே மாதிரியான கதை அமைப்பை கொண்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதற்கு நடுவே ஏலியன் டைனோசர் என ஒரு கதாபாத்திரம் வருகிறது. அதுவுமே கூட ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. படக்குழுவை பொறுத்தவரை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் காட்டிய கவனத்தை படத்தின் கதையிலும் கொஞ்சம் காட்டி இருக்கலாம் என்பதாக இருந்தது.

துரத்தும் கொலைக்கார கும்பல்.. 30 நாள் தாக்குபிடிக்கும் நாயகன்.. The Running man.. வெளியான ட்ரைலர்.!

ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலே அந்த படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது எப்போதுமே இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. மக்களுக்காகவே தொடர்ந்து ஹாலிவுட் நிறுவனங்களே இந்திய மொழிகளில் டப்பிங் செய்து திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் அடுத்து யுனிவர்செல் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Running Man. இந்த திரைப்படத்தில் Glen Powell கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர்   Edgar Wright இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி தற்சமயம் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் கதைப்படி கதாநாயகனின் குழந்தைக்கு தீவிரமான நோய் உள்ளது. அதனை சரி செய்ய அதிக தொகை தேவைப்படுகிறது.

இந்த நிலையில்தான் கதாநாயகனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதாவது The Running Man என்கிற நிகழ்ச்சியை ஒரு நிறுவனம் நடத்தி வருகிறது. அதன்படி நாயகன் தன்னை கொல்ல வரும் கும்பலிடம் இருந்து தப்பி ஒரு மாதம் உயிர் வாழ வேண்டும்.

அப்படி செய்தால் அவருக்கு பெரிய தொகை பரிசாக கிடைக்கும். இந்த நிலையில் கதாநாயகன் 30 நாள் எப்படி பிழைக்கிறார் என்பதாக கதை செல்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஃபைனல் டிஸ்டினேஷன் ப்ளட்லைன்… புதுப்படம் ட்ரைலர் ரிலீஸ்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே ஹாலிவுட் திரைப்படங்கள் மீது அதிகமான ஈடுபாடு உண்டு. இணைய வசதி எல்லாம் வருவதற்கு முன்பே டிவிடிகளில் தமிழ் டப்பிங் படங்களை போட்டு பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

அப்போதைய காலக்கட்டம் முதலே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் திரைப்படம்தான் ஃபைனல் டிஸ்டினேஷன். தமிழில் விதியின் விளையாட்டு என்கிற பெயரில் இந்த படத்தின் டிவிடிகள் விற்பனையாகி வந்தது.

பல பாகங்களாக வந்திருந்தாலும் ஃபைனல் டிஸ்டினேஷன் திரைப்படத்தின் கதைகளம் ஒரே மாதிரிதான் இருக்கும். அதாவது ஒரு மாபெரும் விபத்தில் பல உயிர்கள் சாக வேண்டி இருக்கும். அந்த விபத்து ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ தெரிந்து அவர்கள் அந்த விபத்தில் இருந்து ஒரு சிலரை மட்டும் காப்பாற்றி விடுவார்கள்.

அந்த தப்பித்த ஒரு சிலர் விதியின்படி செத்திருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் சாகாமல் உயிர் பிழைத்து இருப்பதால் விதியே அவர்களது கதையை முடிக்கும். இந்த நிலையில் அவர்களின் மரணம் கொடூரமாக அமைவதை காட்சிப்படுத்தும் வகையில் படத்தின் கதை இருக்கும்.

இந்த நிலையில் அந்த படத்தின் அடுத்த பாகமாக ஃபைனல் டிஸ்டினேஷன் ப்ளட் லைன் என்கிற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு நபரின் வாரிசுகளுக்கு மட்டும் விதி ஸ்கெட்ச் போட்டு தூக்குவதாக இதன் கதை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதன் ட்ரைலர் தற்சமயம் தமிழில் வெளியாகி உள்ளது. அதில் டாட்டூ போடும் பையன் ஒருவனை ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறது விதி. இந்த படம் வருகிற மே 16 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 

 

 

கல்லறையில் புதைச்சா உயிர் வந்திடும்.. உயிரை உறையவைக்கும் பேய் படம்..! பெட் செமட்டரி  படம் தெரியுமா?

தமிழ்நாட்டில் க்ரைம் த்ரில்லர் கதைகளை எழுதுவதற்கு ராஜேஷ் குமார் மாதிரியான எழுத்தாளர்கள் இருப்பது போல ஹாலிவுட்டில் பேய் கதைகள் எழுதுவதில் பிரபலமானவர் எழுத்தாளர் ஸ்டீபன் கிங். அவரது பல கதைகளை ஹாலிவுட்டில் படமாக்கி உள்ளனர். அப்படியாக எடுக்கப்பட்டு இரண்டு முறை ஹிட் கொடுத்த திரைப்படம்தான் பெட் செமண்ட்ரி.

இந்த கதையை ஏற்கனவே 1989 ஆம் ஆண்டு படமாக்கினார். இந்த படத்தை மேரி லாம்பர்ட் என்பவர் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு மீண்டும் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் கெவின் கோயிஸ் மற்றும் டெனிஸ் விட்மெயிர் இயக்கத்தில் இந்த கதை படமாக்கப்பட்டது. இரண்டு முறையும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இந்த படத்தின் கதையை இப்போது பார்க்கலாம்.

லூயிஸ் க்ரீட் என்னும் மருத்துவர் அவரது மனைவி ரேச்சல் மகள் எல்லி, மகன் கேஜ் உடன் லட்லோ என்கிற ஒரு சிறு கிராமத்திற்கு குடி வருகின்றனர்.இந்த கிராமத்தில் அனைவருடனும் சகஜமாக பழகினாலும் கூட வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு முதியவர் மட்டும் கொஞ்சம் மர்மமான ஆசாமியாகவே இருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு நாள் எல்லி ஆசையாக வளர்த்து வரும் பூனை ஒன்று விபத்துக்கு உள்ளாகி இறக்கிறது. இதனால் எல்லி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். இந்த சமயத்தில் விஷயத்தை அறிந்த முதியவர் ஒரு ரகசியத்தை லூயிஸிடம் கூறுகிரார்.

அதாவது பழங்குடி மக்கள் பயன்படுத்தும் கல்லறை ஒன்று தேவாலயத்திற்கு பின்னால் உள்ளது. அது செல்லப்பிராணிகளை புதைப்பதற்கான கல்லறை. ஆனால் அது கொஞ்சம் மர்மமானது என கூறுகிறார்.

அதனை தொடர்ந்து லூயிஸ் தனது பூனையை அங்கு புதைக்கிறார். மறுநாள் அந்த பூனை உயிரோடு வருகிறது. இது லூயிசுக்கு அதிசயமாகவு அதிர்ச்சியாகவும் உள்ளது. ஆனால் அந்த பூனையிடம் அதற்கு பிறகு அமானுஷ்ய மாற்றங்களை பார்க்க முடிகிறது.

எப்போதுமே அழுக்காக இருக்கும் அந்த பூனை அனைவரிடமும் ஆக்ரோஷமாக நடந்துக்கொள்கிறது. இதனை தொடர்ந்து அந்த பூனையை தனது மகளே வெறுக்கிறாள் என்பதை அறிந்த லூயிஸ் அதை ஊருக்கு ஒதுக்குப்புறமாக விட்டு விடுகிறார்.

இதற்கு பிறகு ஒரு பிறந்த நாள் விழாவில் விபத்துக்குள்ளாகி எல்லி இறக்கிறாள். தனது மகளின் இறப்பை தாங்கி கொள்ள முடியாத லூயிஸ் அவளையும் அந்த செல்ல பிராணி கல்லறையில் புதைக்கிறார். மறுநாளே எல்லி உயிரோடு வருகிறாள்.

ஆனால் அவள் பார்ப்பதற்கு பேய் போல இருக்கிறாள். மேலும் மிக மோசமனவாளக அந்த சிறுமி இருக்கிறாள். திடீரென அவள் அனைவரையும் கொலை செய்ய துவங்குகிறாள். இந்த நிலையில் அவளிடம் இருந்து இந்த குடும்பம் தப்பித்ததா? இல்லையா? என்பது படத்தின் கதையாக இருக்கிறது.

பேய் பட விரும்பிகள் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படமாக இது இருக்கும்.

ஒரு பேயும் 3 பசங்களும், ஹேங்க் ஓவரை மிஞ்சிய காமெடி… த்ரி மேன் அண்ட் அ கோஸ்ட் படம் பார்த்து இருக்கீங்களா?

எப்போதுமே நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. தொடர்ந்து பேய்களை வைத்து ஹாரர் திரைப்படங்கள் எடுத்து வந்த சமயத்தில் ஹாரர் காமெடி என்கிற வகையில் எடுக்கப்பட்ட நிறைய திரைப்படங்கள் தமிழில் வெற்றியை கொடுத்து இருக்கின்றன.

தில்லுக்கு துட்டு மாதிரியான திரைப்படங்கள் தான் அவை. அப்படியாக இத்தாலியில் எடுக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் 3 மேன் அண்ட் எ கோஸ்ட்.

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஹேங் ஓவர் திரைப்படத்தைப் போலவே இருக்கிறது. மூன்று நண்பர்கள் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

அதில் ஒரு நண்பர் எப்பொழுதுமே அதிர்ஷ்ட குழுக்கள் மீது ஆசை கொண்டவர். அப்படியாக அவருக்கு அதிர்ஷ்ட குழுக்களில் ஒரு வீட்டில் தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

இதற்கு இந்த மூன்று நண்பர்களும் செல்கின்றனர் ஆனால் அந்த வீட்டில் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேய் இவர்களை என்ன செய்யப்போகிறது அதிலிருந்து இவர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள், என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஆனால் முழுக்க முழுக்க காமெடியாக இந்த கதையை கொண்டு சென்றிருக்கின்றனர் இந்த படம் அமேசான் பிரைமில் கிடைக்கிறது.

 

அப்படி என்ன இருக்கு.. வரவேற்பை பெறும்  Wild Robot Movie – இதுதான் கதை.. விமர்சனம்..!

Wild Robot Movie: சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமாக த வைல்ட் ரோபோட் திரைப்படம் இருக்கிறது. இயற்கை நேசிப்பவர்களுக்கு பிடித்த ஒரு படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் கதையே வித்தியாசமான கதையாக இருக்கிறது. படத்தின் கதை எதிர்காலத்தில் நடக்கும் கதையாகும். கதைப்படி மனிதர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்று தவறுதலாக ஒரு தீவில் உள்ள காட்டுக்குள் சென்று விழுகிறது. அந்த காட்டில் அதற்கு டாஸ்க்  கொடுக்க எந்த மனிதர்களும் இல்லை.

படத்தின் கதை:

the wild robot

எனவே விலங்குகளின் பாஷையை கற்றுக்கொள்வதற்காக அந்த ரோபோ சில காலங்கள் அங்கு தங்கி பாஷையை கற்றுக்கொள்ளும். இப்படி இருக்கும்போது ஒரு நாள் தவறுதலாக அந்த ரோபோ ஒரு வாத்து கூட்டில் போய் விழுந்துவிடும். அதில் உள்ள ஜோடி வாத்துகள் இறந்துவிடும்.

ஒரே ஒரு முட்டை மட்டும் இருக்கும். அந்த முட்டைக்குள்ளிருந்து ஒரு குட்டி வாத்து வரும். அது அந்த ரோபோவை தன்னுடைய அம்மாவாக நினைக்க துவங்கிவிடும். அதனை தொடர்ந்து அந்த வாத்துக்கும் ரோபோவுக்கும் இடையே உள்ள உறவை வைத்து கதை செல்லும்.

இந்த படம் உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தற்சமயம் இங்கும் கூட பலரும் இந்த படத்தை பார்க்க துவங்கியுள்ளனர்.

தமிழ் டப்பிங்கில் வந்து அலறவிட்ட ரத்தக்காட்டேறி படம்..! Abigail Movie Review

ஹாலிவுட்டில் இரத்தக்காட்டேரி திரைப்படங்களுக்கு எப்போதுமே பஞ்சமே இருந்தது கிடையாது. எப்போதுமே அங்கு இரத்த கட்டேரி திரைப்படம் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் சமீபத்தில் வெளியான Abigail என்கிற திரைப்படம் தமிழ் டப்பிங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் கதை:

அபிகெயில் என்கிற பெண் ஒருவர் பெரிய பணக்காரரின் மகளாக இருக்கிறார். அவரை கடத்தி வைத்துக்கொண்டு பணம் பார்க்கலாம் என்கிற நோக்கில் ஒரு வயதான நபர் ஐந்து பேரை இதற்கு நியமிக்கிறார். அந்த ஐந்து பேரும் மயக்க மருந்து கொடுத்து அந்த சிறுமியை கடத்துகின்றனர்.

கடத்திய பிறகு அந்த முதியவர் அனைவரையும் ஒரு வீட்டில் வைத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு இங்கு இந்த குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர்களுக்கு வேலை தருகிறார்.

அவர்களும் அந்த பெண்ணை பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் அந்த கூட்டத்தில் உள்ள ஒரு நபர் திடீரென தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடக்கிறான். அவனை ஏதோ ஒரு மிருகம் தாக்கி கொன்றது போல தெரிகிறது.

இதனை அடுத்து யார் இதையெல்லாம் செய்கிறார்கள் என பார்க்கும்போது இதையெல்லாம் செய்வது அபிகெயில் என்கிற அந்த பெண் தான் என தெரிகிறது. அவள் ஒரு இரத்தக்காட்டேரியாக இருக்கிறாள். அவள் வேட்டையாடும் நபர்களை அவளே தேர்ந்தெடுக்கிறாள்.

பிறகு அவளே இந்த கடத்தல் நாடகத்தை நடத்துகிறாள் என்பது பிறகுதான் அவர்களுக்கு தெரிகிறது. இந்த நிலையில் நாம் தான் அந்த இரத்த காட்டேரியிடம் சிக்கியுள்ளோம் என்பதை அவர்கள் உணர்வதற்குள்ளாகவே அவர்கள் குழுவில் இரண்டு பேர் இறந்துவிடுகின்றனர்.

இந்த நிலையில் இந்த 24 மணி நேரத்தில் இவர்கள் எப்படி அபிகெயிலிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது. படத்தில் அதிகமாக இரத்த காட்சிகள் இருப்பதால் சிறுவர்கள் பார்ப்பதற்கு உகந்த படமல்ல.