டைனோசர் திரைப்படங்கள் என்றாலே மக்களுக்கு அதன் மீது அதிக ஈடுபாடு உண்டு. ஜுராசிக் பார்க் வந்த காலத்தில் இருந்தே இந்த திரைப்படங்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து அடுத்து ஜுராசிக் வேல்டு என்கிற சீரிஸ் துவங்கியது. தற்சமயம் அதன் அடுத்த பாகமாக ஜுராசிக் வேல்டு ரீபர்த் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் கதைப்படி மனித குலத்தை காப்பாற்றுவதற்க்கு டைனோசர்களின் டி.என்.ஏ தேவைப்படுகிறது. எனவே குறிப்பிட்ட டைனோசர்களின் டி.என்.ஏவை எடுப்பதற்காக டைனோசர் இருக்கும் தீவுக்கு ஸ்கேர்லட் ஜான்சன் செல்கிறார்.
அங்கு பல ஆபத்துகளுக்கு நடுவே எப்படி அவர்கள் அந்த டி.என்.ஏவை எடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. சிறுவர்களுக்கு பார்க்க சிறப்பான வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் கதைப்படி பழைய படத்தில் இருந்து எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை.
ஒரே மாதிரியான கதை அமைப்பை கொண்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதற்கு நடுவே ஏலியன் டைனோசர் என ஒரு கதாபாத்திரம் வருகிறது. அதுவுமே கூட ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. படக்குழுவை பொறுத்தவரை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் காட்டிய கவனத்தை படத்தின் கதையிலும் கொஞ்சம் காட்டி இருக்கலாம் என்பதாக இருந்தது.