90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹாலிவுட் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ஜுராசிக் பார்க். டைனோசர்களை காட்சிக்காக வைத்திருக்கும் ஒரு தீவுக்கு சென்று அங்கு கதையின் கதாபாத்திரங்கள் டைனோசர்களிடம் இருந்து தப்பிப்பதாக இதன் கதைக்களம் இருக்கும். பெரும்பாலும் ஜுராசிக் பார்க் திரைப்படங்களை பொறுத்தவரை ஏதாவது ஒரு தீவில் டைனோசர்கள் வாழ்வதாகவும் அங்கு மக்கள் சென்று மாட்டிக் கொள்வதாகவும் தான் கதை இருக்கும்.
அவர்கள் செல்வதற்கான காரணங்கள் ஒவ்வொரு பாகத்திலும் மாறினாலும் கூட டைனோசர்களிடமிருந்து உயிர் பிழைப்பது தான் அனைத்து படங்களிலும் கதை கருவாக இருக்கும்.
அதனைத் தொடர்ந்து வந்த ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்தில் முற்றிலுமாக கதைக்களம் மாறி அமைந்தது. மனிதர்களும் டைனோசர்களும் சேர்ந்து வாழும் சூழல் ஏற்பட்டால் அவர்களால் டைனோசர்கள் நிலை என்னவாகும் என விளக்குவதாக இந்த படம் இருந்தது.
இந்த நிலையில் JURASSIC WORLD: REBIRTH என்கிற அடுத்த பாகம் வருகிற ஜூலை 2 வெளியாக இருக்கிறது இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தை கேரட் எட்வர்ட் என்பவர் இயக்கி இருக்கிறார்.
அவெஞ்சர்ஸ் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்த நடிகை ஸ்கேர்லட் ஜான்சன் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் டைனோசர்களின் டிஎன்ஏவை எடுப்பதற்காக டைனோசர்கள் வாழும் ஒரு தீவுக்கு இவர்களெல்லாம் சேர்ந்து செல்கின்றனர்.
அங்கு அவர்களுக்கு நடக்கும் விபரீதங்களே கதை கருவாக இருக்கிறது பெரும்பாலும் இந்த மாதிரியாக வெளியாகும் திரைப்படங்களில் முகம் சுளிக்கும் வகையிலான காட்சிகள் இருக்கும்.
ஆனால் ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் அந்த மாதிரியான காட்சிகள் இருந்தது கிடையாது. எனவே பல காலங்களாக இந்த ஜுராசிக் பார்க் வகை திரைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு நல்ல ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.