விலங்குகள் உலகை அடிப்படையாகக் கொண்டு வால்டு டிஸ்னி நிறுவனத்தில் வெளியான அனிமேஷன் திரைப்படம்தான் Zootopia. விலங்குகள் உலகில் இருக்கும் முயல் மற்றும் நரியை கதை நாயகர்களாக கொண்டு படத்தின் கதை செல்லும்.
சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்தது. Zootopia நகரமானது பலவித விலங்குகள் மனிதர்கள் போலவே நாகரிகமாக வாழும் ஒரு நகரமாகும்.
அங்கு நடக்கும் குற்றங்களை கண்டறியும் போலீஸ் அதிகாரிகளாகத்தான் இந்த நரியும் முயலும் வருகின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுவதை அடிப்படையாகக் கொண்டு தான் முதல் பாகம் சென்று கொண்டிருந்தது.
இரண்டாம் பாகத்தைப் பொறுத்தவரை Zootopia நகரில் பாம்புகளுக்கு அனுமதியே கிடையாது இந்த நிலையில் அத்துமீறி நுழையும் ஒரு பாம்பை இவர்கள் இருவரும் தடுப்பது கதையாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் இப்பொழுது வரவேற்பை பெற்று வருகிறது.
ஹாலிவுட்டை பொறுத்தவரை பெரியவர்களுக்கு படங்கள் வருவது போலவே சிறுவர்களுக்கான படங்களும் அதிகமாக வருவது உண்டு. நல்ல வகையில் இப்பொழுது Hoppers என்கிற ஒரு திரைப்படம் அதிக வரவேற்பு துவங்கியிருக்கிறது.
பிக்சல் என்கிற அமெரிக்க தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து வால் டிஸ்னி போலவே அனிமேஷன் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அப்படி பிக்சர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் Hoppers.
திரைப்படத்தின் கதைப்படி ஒரு சிறுவனின் ஆன்மாவானது ஒரு குட்டி விலங்கிற்குள் சென்று விடுகிறது. அதனால் காட்டில் இருக்கும் மற்ற விலங்குகள் பேசுவதையும் அவனால் கேட்க முடிகிறது. தொடர்ந்து அந்த காட்டுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பதாக கதை சொல்கிறது.
முழுக்க முழுக்க இது ஒரு காமெடி திரைப்படமாக இருக்கிறது. எனவே சிறுவர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் மார்ச் 6ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips