Tag Archives: Hollywood cinema news

இனப்பெருமை பேசி சிக்கிய நடிகை.. இது தேவையா?

ஹாலிவுட்டை பொறுத்தவரை இந்தியா மாதிரி இல்லாமல் அங்கு வேறுபாடு பேசுவது குறித்த சட்டங்கள் சற்று கடுமையானதாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சரி மற்றும் மாநிலங்களிலும் சரி ஜாதி பெருமை பேசுவது ஆணவ கொலை நிகழ்த்துவது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பார்க்க முடியும்.

உணவகங்களுக்கு கூட ஜாதி பெயரில் பெயர்கள் இருப்பதை பார்க்க முடியும் அதேபோல தெரு பெயர்களும் சாதியின் பெயரில் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை எந்த ஒரு சொல்லும் வேற்றுமையை ஏற்படுத்த கூடியதாக இருக்கக் கூடாது என்பது மிக முக்கியமான சட்டமாக இருக்கிறது.

இந்த நிலையில் இப்பொழுது ஹாலிவுட் பிரபலமாக இருந்து வரும் நடிகை சிட்னி ஸ்வீனி பேசியிருந்த ஒரு விளம்பரம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்சமயம் ஹாலிவுட்டில் பிரபலமாகி வரும் நடிகையாக சிட்னி ஸ்வீனி இருந்து வருகிறார்.

இவர் எந்த அளவிற்கு பிரபலம் என்று கூறினால் இவர் குளித்த நீரின் சொட்டுக்களை பயன்படுத்தி சோப்பு செய்து இருக்கிறது ஒரு நிறுவனம் அந்த சோப்பை வாங்குவதற்கு பெரிய ரசிக்கப்பட்டாளமே இருந்து வருகிறது.

அவ்வளவு பிரபலமாக இருக்கும் சிட்னி சமீபத்தில் ஒரு ஜீன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார். அப்பொழுது அவர் ஜீன்ஸ் குறித்து பேசும் பொழுது ஒரு மனிதனின் முகத்தோற்றம் கண் அமைப்பு முடி ஆகியவற்றை ஜீன் தான் முடிவு செய்கிறது என்று அறிவியல் ரீதியாக பேசியிருந்தார்.

அந்த விளம்பரத்தின் இறுதியில் சிட்னி நல்ல ஜீனை கொண்டு இருக்கிறார் என்று விளம்பரம் முடிந்தது. அப்படியென்றால் வெள்ளையர்கள் மட்டும்தான் நல்ல ஜீன் கொண்டவர்களாக இருக்கிறார்களா என்று ஒரு கேள்வி என தொடங்கியுள்ளது.

எனவே இன வேறுபாட்டை கிளப்பும் வகையில் அந்த விளம்பரம் இருந்ததாக இப்பொழுது சர்ச்சை துவங்கி இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு நடுவே சிட்னிக்கு தன்னுடைய ஆதரவை அளித்து இந்த விஷயத்தை இன்னமும் அதிக சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கொஞ்சம் வித்தியாசமான முயற்சி… வெளியாக இருக்கும் புது சூப்பர் மேன்..!

பல காலங்களாகவே ஹாலிவுட்டில் சூப்பர் மேன் திரைப்படங்கள் உருவான வண்ணமே இருக்கின்றன. பல காலங்களாக சூப்பர் மேனாக நடிக்கும் நடிகர்கள் மாறுகிறார்களே தவிர கதை அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

லெக்ஸ் லூதர் என்கிற தொழிலதிபர்தான் எல்லா சூப்பர் மேனிலும் வில்லனாக வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் பிரபல இயக்குனரான ஜேம்ஸ் கன் இயக்கத்தில் மீண்டும் சூப்பர் மேன் கதையை படமாக்குகின்றனர். இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது.

 

ஆபிரகாம் லிங்கனும் ரத்த காட்டேரிகளும்.. இந்த ஹாலிவுட் படத்தை பார்த்து இருக்கீங்களா?

2012 ஆம் ஆண்டு வெளியான “Abraham Lincoln: Vampire Hunter” எனும் ஹாலிவுட் திரைப்படம், வரலாறு மற்றும் கற்பனையை ஒன்றிணைத்து ஒரு தனித்துவமான கதையை முன்வைக்கிறது.

இந்த திரைப்படம், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, அவர் ஒரு இரத்த காட்டேறியை (வாம்பயர்) வேட்டையாடுபவராக மாறும் கற்பனைக் கதையைச் சொல்கிறது. இயக்குநர் திமூர் பெக்மாம்பெடோவின் திரைக்கதை, பாரம்பரிய வரலாற்று நிகழ்வுகளுடன் கற்பனை உறுப்புகளை கலந்து, பார்வையாளர்களை ஒரு புதிய அனுபவத்தில் ஈர்க்கிறது.

நடிப்பு:

பெஞ்சமின் வாக்கர், ஆபிரகாம் லிங்கனாக நடித்துள்ளார். அவரது நடிப்பு, லிங்கனின் உண்மையான வரலாற்று தன்மையை பிரதிபலிக்கும் விதமாகவும், அதே நேரத்தில் கற்பனை உலகின் அதிரடி நிகழ்வுகளுக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது. மேரி எலிசபெத் வின்ஸ்டெட், டொமினிக் கூப்பர் மற்றும் அந்தோணி மாக்கி போன்ற நடிகர்களும் தங்கள் பாத்திரங்களில் நன்றாக விளங்குகிறார்கள்.

காட்சிகள் மற்றும் விசுவல் எஃபெக்ட்ஸ்:

இந்த திரைப்படத்தின் காட்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளன. வாம்பயர்களுடன் நடக்கும் போராட்டக் காட்சிகள், அதிரடி நிறைந்தவையாகவும், கண்ணைக் கவரும் விசுவல் எஃபெக்ட்ஸுடனும் உள்ளன. குறிப்பாக, இரவு நேர காட்சிகள் மற்றும் வாம்பயர்களின் வடிவமைப்பு பாராட்டத்தக்கது.

இசை:

இசையமைப்பாளர் ஹென்றி ஜாக்மன், திரைப்படத்திற்கு உணர்ச்சிமிக்க பின்னணி இசையை வழங்கியுள்ளார். இசை, கதையின் முக்கியமான தருணங்களை மேலும் சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது.

விமர்சனம்:

“Abraham Lincoln: Vampire Hunter” என்பது வரலாற்று உண்மைகளையும் கற்பனையையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். இது பாரம்பரிய வரலாற்று திரைப்படங்களை எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், கற்பனை மற்றும் அதிரடி கதைகளை விரும்பும் பார்வையாளர்களுக்கு இது ஒரு வேடிக்கையான அனுபவத்தை வழங்கும். கதை மற்றும் காட்சிகளில் சில இடங்களில் மந்தமான தருணங்கள் இருப்பினும், ஒட்டுமொத்தமாக இது ஒரு மனரம்மியமான திரைப்படமாக உள்ளது.

 

சாகுறதுக்கு முன்னாடி அந்த படத்தை பாக்கணும்..! ரசிகரின் கடைசி ஆசைக்காக போராடிய ஹாலிவுட் இயக்குனர்!

ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்னாலேயே சாகக் கிடக்கும் ரசிகருக்காக அவருக்கு மட்டும் ஸ்பெஷலாக காட்டியுள்ளார் பிரம்மாண்ட ஹாலிவுட் இயக்குனர்.

ஆங்கிலத்தில் ஃப்ராங்க் ஹெர்பர்ட் எழுதிய புகழ்பெற்ற நாவல் டுயுன். இந்த நாவலை 2019ல் ஹாலிவுட் இயக்குனர் டெனிஸ் விலெனுவெ இரண்டு பாகங்களாக படமாக்க ஆரம்பித்தார். டிமோத்தி சாலமட், ஸென்டாயா, படிஸ்டா உள்ளிட்ட பலர் நடித்த டுயுன் பார்ட் 1 கடந்த 2021ல் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது.

dune-2

அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள டுயூன் பார்ட் 2-ம் உலகம் முழுவதும் கடந்த 4 நாட்களில் ரூ.1556 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் இந்த மாதம் மார்ச் 1ல் தான் வெளியானது. ஆனால் ஒரே ஒரு ரசிகருக்காக இந்த படம் ஜனவரி மாதமே அவருக்கு மட்டும் திரையிடப்பட்டுள்ளது.

நோயாளியின் இறுதி ஆசை:

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்துள்ளார். தான் இறப்பதற்குள் டுயுன் படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்து விட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவர் உடல்நிலைக்கு அவர் வீட்டை விட்டே வெளியே செல்ல முடியாது. இந்நிலையில் இந்த செய்தி டுயுன் பட இயக்குனர் டெனிஸ் விலெனுவெவிற்கு தெரிய வந்துள்ளது..

இது நடந்தது ஜனவரி மாதத்தில். இப்போது டுயுன் 2 படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள்தான். ஆனால் அப்போது கட் செய்திருந்த வெர்ஷனில் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள். அப்போதுதான் டுயுன் ரசிகர் ஒருவர் விரைவில் மரணமடைய போகிறார் என்றும், அதற்கு முன் டுயுன் 2ம் பாகத்தை பார்க்க விரும்புகிறார் என்றும் இயக்குனர் டெனிஸ் விலெனுவெவிற்கு தகவல் வந்துள்ளது.

அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு டுயுன் 2வின் அன்கட் வெர்சனை வேகமாக தயார் செய்து அதை ஒரு லேப்டாப்பில் வைத்து லேப்டாப்பை தனது உதவியாளர் ஒருவரிடம் கொடுத்து அந்த நோயாளியை சென்று பார்த்து படத்தை போட்டுக் காட்டுமாறு அனுப்பியுள்ளார். இதற்காக அந்த உதவியாளர் அமெரிக்காவில் இருந்து கனடா பயணித்து அந்த நோயாளிக்கு படத்தை காண்பித்துள்ளார்.

படம் பார்த்து முடிந்த 4 நாட்களுக்கு பின்னர் அந்த நோயாளி உயிரிழந்து விட்டாராம். இந்த செய்தியை லவாண்ட் கனடிய சேரிட்டி அமைப்பை சேர்ந்தவர் ஒரு நேர்க்காணலில் தெரிவித்துள்ளார். ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்ற இயக்குனர் செய்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழில் வெளியான ட்யூன் 2 திரைப்படம் எப்படி இருக்கு!.. வசூலை குவித்ததா!.. இல்லையா..

Dune 2: தமிழ் சினிமாவிலும் சரி உலக சினிமாவிலும் சரி அறிவியல் புனைக்கதைகளுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் என்றே கூறலாம். நிஜ வாழ்வில் நாம் பார்க்க முடியாத விஷயங்களை அறிவியல் புனைகதைகளை கொண்ட திரைப்படங்கள் காட்டுகின்றன.

இதனாலேயே தமிழ்நாட்டில் உள்ள ஹாலிவுட் திரைப்பட ரசிகர்கள் அதிகம் மாயஜாலம் மற்றும் அறிவியல் புனைக்கதைகளையே விரும்புகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் ட்யூன் 2.

இந்த படத்தின் இயக்குனரான denis Villeneuve இப்படியான அறிவியல் புனைக்கதைகளை எடுப்பதில் பிரபலமானவர். ஏற்கனவே இவர் இயக்கிய ப்ளேட் ரன்னர் மற்றும் அரேவல் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

படத்தின் கதை:

ட்யூன் படத்தின் கதையானது கிட்டத்தட்ட இன்றிலிருந்து 8000 வருடம் கழித்து 10000 ஆண்டுகளில் நடக்கும் கதையாகும். 10,000களில் பூமி வாழவே தகுதியில்லாத கிரகமாக மாறியதால் பல கிரகங்களில் மனிதர்கள் வாழ துவங்குகின்றனர்.

இப்படி பல கிரகங்களில் மக்கள் வாழ்ந்தாலும் அரசாட்சி முறை மட்டும் அப்படியே இருக்கிறது. இந்த நிலையில் பல காரணங்களால் தனது குடும்பத்தை இழந்த கதாநாயகன் பழங்குடியினரின் உதவியோடு எதிரிகளை பழி வாங்குவதுதான் படத்தின் கதை.

படத்தில் கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் மக்களை வியப்பில் ஆற்றியுள்ளன. எது கிராபிக்ஸ் எது உண்மை என கண்டறிய முடியா வகையில் அவை அமைந்துள்ளன.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kung Fu panda 4 : மீண்டும் களம் இறங்கும் டிராகன் வாரியர்… 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான குங் ஃபூ பாண்டா நான்காம் பாகம்.. விரைவில்!.

Kung Fu panda 4 : 90ஸ் கிட்ஸ்களுக்கும் ஹாலிவுட் டப்பிங் திரைப்படங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என கூறலாம். ஏனெனில் 1990 களில் பிறந்த குழந்தைகள் வளர துவங்கிய காலகட்டங்களில்தான் ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வரத் துவங்கின.

அதிலும் விசேஷமாக தமிழில் வந்த அனிமேஷன் திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு அதிகமாகவே இருந்தது.  அப்படி மக்கள் மத்தியில் பிரபலமான ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படத்தில் முக்கியமான திரைப்படம் குங்ஃபூ பாண்டா.

டிராகன் வாரியர் என அழைக்கப்படும் குழு கெட்டவர்களிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றும். அப்படிப்பட்ட டிராகன் வாரியர் குழுவில் சேரும் ஒரு பாண்டா கரடியின் கதைதான் குங்ஃபூ பாண்டா. குங்ஃபூ பாண்டாவை பொறுத்தவரை அதில் மனிதர்களே வர மாட்டார்கள்.

kung fu panda 4

முழுக்க முழுக்க விலங்குகளின் உலகத்தில்தான் கதை நடக்கும். மேலும் மனிதர்களால் வலிமையற்ற விலங்குகளாக பார்க்கப்படும் விலங்குகள் தான் வலிமையானவையாக குங்ஃபூ பாண்டாவில் காட்டப்படும். உதாரணத்திற்கு ஆமை முயல் போன்ற விலங்குகள் குங்ஃபூ சண்டை போடுவதை அந்த படத்தில் பார்க்க முடியும்.

அதேபோல மனிதர்கள் விரும்பி ரசிக்கும் மயில் மாதிரியான பறவைகள் அதில் வில்லனாக காட்டப்படும் வினோதமும் நடக்கும். ஏற்கனவே மூன்று பாகங்கள் வந்து வெற்றி பெற்ற நிலையில் தற்சமயம் குங் பூ பாண்டா வின் நான்காம் பாகம் தயாராகியுள்ளது.

இதன் ட்ரெய்லர் தற்சமயம் வெளியாகி உள்ளது இந்த படத்தில் ஒரு பச்சோந்தி வில்லனாக இருப்பதாக தெரிகிறது. குங் பூ பாண்டா திரைப்படத்தில் உள்ள முக்கிய அம்சமே எப்போதுமே சீரியஸான ஒரு கதாபாத்திரமாக அந்த பாண்டா கரடி மாறவே மாறாது என்பதுதான் அதை இந்த பாகத்திலும் சரியாக செய்திருக்கிறார்கள் என தெரிகிறது.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் டிரைலர் தமிழிலும் வெளியாகி உள்ளது 

World Cinema : லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், வெற்றிமாறன் எல்லோரும் புகழ்ந்த படம்!.. சில்ட்ரன் ஆஃப் ஹெவன் – படத்தின் கதை.

தமிழில் உள்ள இயக்குனர்களில் துவங்கி உலகம் முழுவதும் உள்ள இயக்குனர்கள் பலரும் புகழ்ந்த ஒரு சிறப்பான திரைப்படம்தான் சில்ட்ரன் ஆஃப் ஹெவன். 1997 இல் ஈரானில் வெளியாகி பல விருதுகளை குவித்த இந்த திரைப்படம் ஒரு சாதாரண கதையமைப்பை கொண்ட திரைப்படமாகும்.

படத்தின் கதைப்படி கதையின் நாயகன் அலி ஃபெட்சஸிற்கு வயது 9, அவனது தங்கை சாஹ்ராவிற்கு வயது 6. இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஈரானில் பள்ளிகளை பொறுத்தவரை அங்கு காலணியாக ஷூ அணிந்து வரவேண்டும் என்பது கட்டாயமாகும்.

ஆனால் அலியின் குடும்பம் ஏழ்மையில் வாழும் குடும்பமாகும். எனவே சாஹ்ராவின் ஷூ கிழிந்துப்போக அதை தைப்பதற்கு கொண்டு போகும் அலி கொண்டு வரும் வழியில் ஒரு காய்கறி கடையில் அதை தொலைத்து விடுகிறான். இந்த விஷயத்தை சாஹ்ராவிடம் கூறும் அலி அந்த ஷூவை கண்டுப்பிடித்து தருவதாகவும் அதுவரை வீட்டில் விஷயத்தை சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறான்.

அதற்கு லஞ்சமாக தன் தங்கைக்கு பென்சில், பேனா போன்றவற்றை கொடுத்து வருகிறான். ஆனால் பள்ளிக்கு இருவருமே ஷூ போட்டுக்கொண்டுதான் போக வேண்டும். சாஹ்ராவிற்கு காலையில் பள்ளி, அலிக்கு மதியம்தான் பள்ளி. எனவே காலையில் அலியின் ஷூவை போட்டு கொண்டு செல்லும் சாஹ்ரா மதியம் ஓட்டமும் நடையுமாக வந்து தினசரி ஷூவை அலியிடம் கொடுப்பதும் அவன் அதை போட்டுக்கொண்டு பள்ளிக்கு தாமதமாக செல்வதுமாக இருக்கிறது.

இந்த நிலையில் அந்த ஷூவை அலி கண்டுப்பிடிக்க போகிறானா.. அல்லது புது ஷூவை வாங்கத் தர போகிறானா? எப்படி இந்த பிரச்சனையை சரி செய்ய போகிறான் என்பதே கதையாக இருக்கிறது. இந்த கதையின் வழியாக ஈரானில் ஏழை மக்களின் வாழ்க்கை முறையையும் அதே சமயம் பணக்கார மக்களின் மேம்பட்ட வாழ்க்கையையும் படம் காட்டுகிறது.

அலி மற்றும் சாஹ்ராவின் உயிரோட்டமான நடிப்பு படத்திற்கு மேலும் சிறப்பளிக்கும் விதமாக இருக்கிறது. அனைத்து இயக்குனர்களும் புகழ்வதற்கு நிகரான ஒரு திரைப்படம்தான் என்பதை இந்த படம் நிரூபித்துள்ளது என்றே கூறலாம்.

World Cinema : 29 வருஷத்துக்கு ஒருமுறை பிணமெல்லாம் எழுந்திருக்கும்!.. அடி வயிற்றை கலக்கும் இந்தோனிய படம்!.. ரொம்ப பயந்து வருதே!.

தமிழ் சினிமாவில் பொதுவாக பேய் படம் என்றாலே நல்லெண்ணம் கொண்ட ஒருவர் இருப்பார். அவரை ஒரு சில காரணங்களுக்காக கெட்டவர்களான சிலர் கொலை செய்திருப்பர். அப்படி கொலை செய்யப்பட்டவர்கள் கெட்டவனை பலி வாங்குவதற்காக பேயாக காத்திருப்பர்.

அந்த சமயம் பார்த்து எதார்த்தமாக அந்த பக்கம் வரும் கதாநாயகன் அல்லது பெண் மீது ஏறும் அந்த ஆத்துமா அந்த கெட்டவனை பழி வாங்கும். முனி, அரண்மனை என எல்லா படத்திலும் இதுதான் கதை. ஆனால் உலக சினிமாவை பொறுத்தவரை பல்வேறு மாறுப்பட்ட கதை அம்சத்தை கொண்ட பேய் திரைப்படங்கள் வெளிவருவதை பார்க்க முடியும்.

இந்தோனிசியாவில் வெளியாகி அனைவரையும் குலை நடுங்க செய்த திரைப்படம்தான் சாத்தான் ஸ்லேவ் (satan Slave) என்னும் திரைப்படம். சாத்தானுக்கு தத்து கொடுத்து குழந்தையை பெறும் ஒரு தம்பதியினரிடம் திரும்ப சாத்தான் அந்த குழந்தையை கேட்டு வருவதாக படத்தின் கதை இருக்கும்.

அதன் இரண்டாம் பாகத்தை பற்றிதான் நாம் பார்க்க போகிறோம். சாத்தான் ஸ்லேவ் 2 கம்யூனியன் (Satan’s Slaves 2: Communion) என்னும் இந்த திரைப்படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றது. 1955 இல் இந்தினோசியாவில் உள்ள ஒரு பகுதியில் வித்தியாசமான ஒரு சம்பவம் நடக்கிறது. அங்கு ஒரு சின்ன குடிசையில் நிறைய பிணங்கள் கிடப்பதை பார்க்க முடிகிறது.

முதல் நாள் இரவு அவை புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து எழுந்து அங்கு வந்திருந்தன. ஆனால் போலீஸ் போய் பார்க்கும்போது அவை உயிரற்ற நிலையிலேயே இருக்கின்றன. என்னவென்று அறியாத போலீஸார் அவற்றை அப்புறப்படுத்துகின்றனர்.

பிறகு அந்த இடம் இடிக்கப்படுகிறது. அங்கு மிகப்பெரிய குடியிருப்பு கட்டப்படுகிறது. அடுத்து கதை நடக்கும் காலக்கட்டம் 1984. பஹ்ரி என்னும் நபரின் குடும்பம் இந்தோனிசியாவில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு வாடகைக்கு வருகின்றனர். அவர்கள் குடி வந்த பிறகு அங்கு அடிக்கடி சில பயமுறுத்தும் விஷயங்களை அவர்கள் பார்க்கின்றனர்.

ஆனால் அவை பிரம்மை என அவர்கள் நினைக்கின்றனர். இந்த நிலையில் ஒருநாள் அந்த குடியிருப்பில் உள்ள லிஃப்ட் பழுதாகி கீழே விழுகிறது அதில் மொத்தமாக 30 பேர் உயிரிழக்கின்றனர். இந்த சமயம் பார்த்து குடியிருப்பிற்கு கீழ் வெள்ளம் சூழ்கிறது. அந்த நீரில் மின்சார வயரும் தொட்டிருப்பதால் அதில் காலை வைத்தாலே அவர்கள் இறந்து போக வேண்டியதுதான்.

எனவே பிணங்கள் அவரவர் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் அந்த சம்பவம் நடக்கிறது. அதாவது 1955 இல் பிணங்கள் ஒரு இடத்தில் கூடியது அல்லவா!. அங்குதான் இவர்கள் வாழும் இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அந்த இடம் சாத்தானால் சபிக்கப்பட்ட இடம்.

29 வருடத்திற்கு ஒருமுறை அங்கிருக்கும் பிணங்கள் எழுப்பப்பட்டு சாத்தனுக்கு அடிமையாகி மனிதர்களை கொலை செய்யும். அதே நாளில் சாத்தானும் வந்து அந்த பிணங்களுக்கு காட்சி கொடுக்கும். இந்த நிலையில் வெள்ளம் வந்த அந்த நாளின் இரவில் பிணங்கள் எல்லாம் உயிர் பெறுகின்றன. அவற்றிடம் இருந்தும் சாத்தானிடம் இருந்தும் குடியிருப்பை சேர்ந்தவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை.

மிகவும் த்ரில்லரான இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் ஒளிப்பரபானது.

மணி ஹையஸ்ட்டின் தொடர் கதை வெளிவர இருக்கிறது!.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!..

உலகம் முழுக்க ப்ரஃபசர் என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தை மாற்றிய வெப் தொடர்தான் மணி ஹையஸ்ட். வங்கியில் சென்று திருடும் ஒரு கும்பல். அவர்களுக்கு மாஸ்டர் மைண்டாக செயல்படும் ப்ரொஃபசர். இதை கருவாக கொண்டு செல்லும் கதைதான் மணி ஹையஸ்ட்.

இந்த சீரிஸ் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இதன் அடுத்த அடுத்த சீசன்கள் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டன. இதன் இரண்டாவது சீசனுக்கு பிறகு தமிழ்நாட்டிலும் இந்த சீரிஸிற்கு அதிகமான ரசிகர்கள் உருவாக துவங்கினர்.

இதனால் நெட்ப்ளிக்ஸ் நிறுவனமே பிறகு இந்த சீரிஸை தமிழ் டப்பிங் செய்து வெளியிட்டது. மொத்தம் ஐந்து சீசன்களாக வந்த மணி ஹையஸ்ட் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் உள்ள கதாபாத்திரங்களுக்கு அதிக ரசிகரக்ள் உருவாக துவங்கினர்.

முக்கியமாக அதில் வரும் பெர்லின் என்கிற கதாபாத்திரம் அதிக வரவேற்பை பெற்றது. ப்ரொஃபசரின் சகோதரராக வரும் இந்த கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திலேயே இறந்துவிடும். இதனை தொடர்ந்து இந்த கதாபாத்திரத்தின் பழைய வாழ்க்கையை விளக்கும் விதத்தில் பெர்லினுக்கு தனி சீரிஸை எடுத்து வருகிறது நெட்ஃப்ளிக்ஸ்.

அதன் படி பெர்லின் வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

Announcement video link

அனிமே ரசிகர்களுக்கு அடுத்து ஒரு ட்ரீட் ! – அரக்கர்களை அழிக்கும் டீமன் ஸ்லேயர்..!

இணையதளம் உலகம் முழுக்க பரவ தொடங்கியதை அடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள், தமிழ் சினிமா என்கிற வட்டத்தை தாண்டி தற்சமயம் உலக அளவில் உள்ள அனைத்து திரைப்படங்கள் டிவி சீரியஸ்களை பார்க்க துவங்கியுள்ளனர்.

ஜப்பான் அனிமேஷன் தொடர்கள் இதில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன. ஜப்பானில் அனிமேஷனை அனிமே என்றே கூறுவார்கள். தமிழில் ஏற்கனவே நருட்டோ மாதிரியான சில சீரியஸ்கள் பிரபலமாக உள்ளன.

அந்த வரிசையில் இன்னும் பிரபலமான ஒரு பெரிசாக டீமன் ஸ்லேயர் என்கிற சீரிஸ் பிரபலமாகியுள்ளது. இந்த சீரிஸில் இதுவரை 3 சீசன்கள் வந்துள்ளன. தற்சமயம் நான்காவது சீசனில் ஒவ்வொரு எபிசோடையும் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இந்த சீரிஸின் கதைப்படி கதாநாயகன் டாஞ்சிரோ கமாடோ கிராமத்தில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் விறகு வெட்டுவதற்காக வீட்டை விட்டு வெகுத்தூரம் வரும் டாஞ்சிரோ நேரமாகி விட்டதால் வீட்டிற்கு செல்லாமல் வெளியிலேயே தங்கிவிடுகிறான். 

மறுநாள் காலையில் தனது வீட்டிற்கு செல்கிறான் டாஞ்சிரோ. அங்கே பயங்கரமான காட்சி ஒன்றை பார்க்கிறான். டாஞ்சிரோவின் குடும்பமே ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. ஆனால் அவனது தங்கை மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருக்க அவளை தூக்கி கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடுகிறான் டாஞ்சிரோ.

ஆனால் அவள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பிசாசாக மாற அவளை கொல்ல ஒரு ஆள் வருகிறான். அவன்தான் டீமன் ஸ்லேயர். ஜப்பானில் அப்போது டீமன் எனப்படும் அரக்கர்கள் உலவி வருகின்றன. அவை ஜப்பான் மக்களை இரவு நேரங்களில் உண்கின்றன. அவர்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுதான் டீமன் ஸ்லேயர்.

இந்த டீமன் ஸ்லேயர் குழுவில் டாஞ்சிரோவும் சேர்கிறான். பிறகு என்ன நடக்கிறது என்பதே கதையாக உள்ளது. தற்சமயம் தமிழ் மக்கள் மத்தியில் டீமன் ஸ்லேயர் பிரபலமாகி வருகிறது.

ஹனி மூன் போன இடத்துல டிடெக்டிவ் வேலை..- காமெடி டிடெக்டிவ் படம்- மர்டர் மிஸ்ட்ரி

ஒரு சுவாரஸ்யமான தமிழ் டப்பிங் ஹாலிவுட் திரைப்படம் குறித்து இப்போது பார்க்க போகிறோம். சும்மா ஹனி மூன் போகலாம் என கிளம்பி வம்படியாக ஒரு கொலை குற்றத்திற்குள் சிக்கும் ஜோடிகளை வைத்து செல்லும் கதைதான் மர்டர் மிஸ்ட்ரி.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பெரு நகரில் என்.ஒய்.பி.டி என்னும் காவல் துறை அமைப்பில் பணியாற்றி வருபவர்தான் கதாநாயகன் நிக், அவரது மனைவி ஆட்ரே. நிக்கிற்கு ஒரு டிடெக்டிவ் ஆக வேண்டும் என்றுதான் ஆசை என்றாலும் பலமுறை முயற்சி செய்தும் அவரால் டிடெக்டிவ் ஆக முடியவில்லை.

எனவே தனது மனைவியிடம் தான் ஒரு டிடெக்டிவ் என்று பொய் சொல்லி வைக்கிறார். வெகு வருடமாக ஆட்ரேவிற்கு யூரோப்பிற்கு ஒரு பயணம் சென்று வர ஆசை. எனவே திருமணமாகி 15 வருடம் கழித்து இவர்கள் இருவரும் யூரோப்பிற்கு ஹனி மூன் செல்கின்றனர்.

அப்போது ஆட்ரே ஒரு பணக்காரரை பார்க்கிறார். அந்த பணக்காரர் இவர்களை ஒரு திருமணத்திற்கு அழைக்கிறார். அந்த திருமணத்தில் உள்ள முக்கியமான நபர் மர்மமான முறையில் சாகிறார். தொடர்ந்து அங்கு மர்மமான முறையில் கொலைகள் நடக்க பழி இந்த தம்பதிகள் மீது விழுகிறது.

நிஜமாக டிடெக்டிவ் ஆகவில்லை என்றால் என்ன?. இந்த குற்றத்தில் குற்றவாளியை கண்டுப்பிடிப்போம் என களம் இறங்குகிறார் ஹீரோ. அவர் எப்படி குற்றவாளியை கண்டறிகிறார் என்பதை மிகவும் நகைச்சுவையான கதை ஓட்டத்தின் மூலம் காட்டியுள்ளனர். இந்த படம் நெட்ப்ளிக்ஸில் தமிழில் காண கிடைக்கிறது.

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்! – ஹாலிவுட்டை விட்டே சென்ற ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் நடிகை!

ஹாலிவுட்டில் பல காலங்களாக நடிகையாக நடித்து வருபவர் க்ரேஸ் வான் டியான். மான்ஸ்டர் அண்ட் மியூசஸ் என்கிற குறும்படத்தையும் இவர் இயக்கியுள்ளார். இதுவரை 30க்கும் அதிகமான டிவி சீரிஸ்கள் மற்றும் படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஆனால் இவரை புகழைய செய்தது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் என்னும் வெப் தொடர்தான். இந்த வெப் சீரிஸில் நடித்த பிறகு இவரது மார்க்கெட் பெரிதானது நிறைய பட வாய்ப்புகளை பெற்றார்.

ஆனால் தற்சமயம் எந்த படங்களிலும் நடிக்க விருப்பம் காட்டாமல் இருக்கிறார் க்ரேஸ். அமெரிக்காவில் பிரபலமான சமூக தளமான டிவிட்ச் என்னும் தளத்தில் அவரது நேரத்தை அதிகமாக செலவிடுவதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு ஒரு பேட்டியில் அவர் கூறும்போது பட தயாரிப்பாளர் ஒருவர் அவரது படத்தில் நடிப்பதற்கு முன்பு படுக்கைக்கு வர வேண்டும் என அழைத்தார். அது என்னை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. டிவிட்ச் ஆப்பில் பல்வேறு மக்களுடன் பேசும்போது எனக்கு மன ஆறுதலாக உள்ளது. இந்த மன உளைச்சலில் இருந்து வெளிவர அது உதவுகிறது என கூறியுள்ளார்.