உலகம் முழுக்க ப்ரஃபசர் என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தை மாற்றிய வெப் தொடர்தான் மணி ஹையஸ்ட். வங்கியில் சென்று திருடும் ஒரு கும்பல். அவர்களுக்கு மாஸ்டர் மைண்டாக செயல்படும் ப்ரொஃபசர். இதை கருவாக கொண்டு செல்லும் கதைதான் மணி ஹையஸ்ட்.
இந்த சீரிஸ் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இதன் அடுத்த அடுத்த சீசன்கள் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டன. இதன் இரண்டாவது சீசனுக்கு பிறகு தமிழ்நாட்டிலும் இந்த சீரிஸிற்கு அதிகமான ரசிகர்கள் உருவாக துவங்கினர்.
இதனால் நெட்ப்ளிக்ஸ் நிறுவனமே பிறகு இந்த சீரிஸை தமிழ் டப்பிங் செய்து வெளியிட்டது. மொத்தம் ஐந்து சீசன்களாக வந்த மணி ஹையஸ்ட் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் உள்ள கதாபாத்திரங்களுக்கு அதிக ரசிகரக்ள் உருவாக துவங்கினர்.
முக்கியமாக அதில் வரும் பெர்லின் என்கிற கதாபாத்திரம் அதிக வரவேற்பை பெற்றது. ப்ரொஃபசரின் சகோதரராக வரும் இந்த கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திலேயே இறந்துவிடும். இதனை தொடர்ந்து இந்த கதாபாத்திரத்தின் பழைய வாழ்க்கையை விளக்கும் விதத்தில் பெர்லினுக்கு தனி சீரிஸை எடுத்து வருகிறது நெட்ஃப்ளிக்ஸ்.
அதன் படி பெர்லின் வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.