சோவியத் ராணுவத்தையே கதி கலங்க வைக்கும் கதாநாயகன்..! SISU: Road to Revenge – Official Trailer

ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலே சிறப்பான சண்டை காட்சிகளுக்கு அவை பெயர் பெற்றவை என்று கூறலாம்.

இன்னமும் கூட தமிழில் அந்த அளவிற்கான சண்டை காட்சிகளை உருவாக்க முடியவில்லை என்றே கூறலாம். இந்த நிலையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் SISU: Road to Revenge  என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

அந்த படத்தின் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி உள்ளது ஒரு தனி மனிதனை சோவியத் ராணுவமே தேடி வருவதாக கதை அம்சம் இருக்கிறது. அவரை கொல்வதற்கான ஆணை சோவியத் ராணுவத்திற்கு கொடுக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்த ராணுவம் அவரை கொலை செய்ய வரும்பொழுது மொத்த ராணுவத்தையும் துவம்சம் செய்து விட்டு தப்பிக்கிறார் கதாநாயகன். அவர் எப்படி உயிர் பிழைக்கிறார் என்பதுதான் கதை அம்சமாக இருக்கிறது. அதை எவ்வளவு பிரம்மாண்டமாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு பிரமாண்டமாக காட்டி இருக்கின்றனர்.

எனவே இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.