Tag Archives: தமிழ் திரைப்படங்கள்

தொடர்ந்து வரும் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள்..! ராமரின் ஆயுதத்தை கைப்பற்றும் கதாநாயகன்.. வெளியான மிராய் ட்ரைலர்.!

தொடர்ந்து தென்னிந்தியாவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நிறைய பக்தி பாடல்களும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களும் தென்னிந்தியாவில் வந்த வண்ணம் இருக்கின்றன.

முக்கியமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நிறைய இந்த மாதிரியான திரைப்படங்கள் வருவதை பார்க்க முடிகிறது. இந்த படங்களுக்கும் வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்து தெலுங்கில் மிராய் என்கிற ஒரு திரைப்படம் வரவிருக்கிறது. இந்த படம் தமிழில் வெளியாக இருக்கிறது. 12 செப்டம்பர் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இதற்கு முன்பு நடிகர் தேஜா சஜா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை கொடுத்த அனுமன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தேஜா சஜா சூப்பர் ஹீரோ திரைப்படமாக மிராய் திரைப்படத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

தீய சக்திகளை கொண்ட வில்லன் தொடர்ந்து பல தீமைகளை செய்து வரும் நிலையில் அதனை சரி செய்ய உதவும் ஆயுதமாக ராமர் பயன்படுத்திய மிராய் என்கிற ஆயுதம் இருக்கிறது. அதனை கண்டடையும் கதாநாயகன் எப்படி அதன் மூலமாக சக்திகளை பெற்று வில்லனை அடக்குகிறார் என்பதாக படத்தின் கதை அமைந்து இருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி தற்சமயம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

1960 முதல் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் லிஸ்ட்!..

ஒவ்வொரு முறை ஆஸ்கார் விருது கொடுக்கும்பொழுதும் தமிழிலிருந்து ஒரு திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்காக அனுப்பி வைப்பது உண்டு ஆனால் இதுவரை ஒரு திரைப்படம் கூட ஆஸ்கார் விருதை வென்றது கிடையாது இருந்தாலும் 1960களில் இருந்து இந்த முயற்சி என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது அப்படியாக இதுவரை தமிழ் சினிமாவில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் விபரங்களை இப்பொழுது பார்க்கலாம்

01.தெய்வமகன் (1969)

02.நாயகன் (1987)

03.அஞ்சலி (1990)

04.தேவர் மகன் (1992)

05.குருதி புனல் (1995)

06.இந்தியன் (1996)

07.ஜீன்ஸ் (1998)

08.ஹே ராம் (2000)

09விசாரணை (2015)

Visaranai Movie Release Posters

10.கூழாங்கல் (2021)