பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் அடுத்து நடித்து வரும் திரைப்படம்தான் கல்கி 2898 ஏடி. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் பாகுபலிக்கு பிறகு அவர் நடித்த படங்களில் சலார் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமானது கலியுகத்தின் இறுதியில் வரும் என்பது புராணங்களில் எழுதப்பட்ட நம்பிக்கையாகும். அதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.
சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வந்தது. அதில் பார்க்கும்போது மகாபாரத கதையில் துரோணாச்சாரியாரின் மகனாக வரும் அசுவத்தாமன் கதாபாத்திரம் படத்தில் வருவதை பார்க்க முடிந்தது. அதே சமயம் நடிகர் பிரபாஸ் அந்த கல்கி அவதாரம் இல்லை என தெரிகிறது.
திரைப்படம் குறித்து குற்றச்சாட்டு:
நடிகை தீபிகா படுகோன் அவரது வயிற்றில் சுமந்து வரும் குழந்தைதான் கல்கி அவதாரம். அடுத்த பாகத்தில்தான் அந்த கல்கி அவதாரம் யார் என்பதே கூறப்படும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
இதற்கு நடுவே இந்த திரைப்படத்தின் காட்சிகள் பல ஹாலிவுட் திரைப்பட காட்சிகளின் தழுவலாக தெரிகிறது என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதற்கு நடுவே கொரியாவை சேர்ந்த ஓவியர் ஒருவர் தன்னுடைய ஓவியத்தை திருடி படத்தில் பயன்படுத்தியுள்ளதாக கல்கி திரைப்படம் குறித்து குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இனி என்னென்ன படங்கள் வாயிலாக இந்த படத்திற்கு குற்றச்சாட்டு வரப்போகிறது என தெரியவில்லை.
Salaar Cease Fire : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான திரைப்படம் சலார். திரைப்படத்தின் முதல் போஸ்ட்டர் வெளியான நாள் முதலே படத்திற்கான வரவேற்பு என்பது ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில் சலார் திரைப்படம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திரையில் வெளியானது. முதல் நாளே யாரும் எதிர்பார்க்காத வகையில் 190 கோடி ரூபாய்க்கு ஓடி பெரும் வசூலை கொடுத்தது சலார் திரைப்படம்.
salaar1
கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் அதிக வசூலை செய்து வந்தது சலார் மூன்று நாட்களின் முடிவில் கிட்டத்தட்ட 400 கோடி வசூல் செய்திருந்தது சலார் திரைப்படம். ஆனால் தென்னிந்தியாவில் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் சலார் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு இல்லை.
கே.ஜி.எஃப் பார்த்துவிட்டு சலார் மீது எதிர்பார்ப்பு கொண்டு பார்த்த மக்கள்தான் இந்த மூன்று நாளும் படத்தை வெற்றியடைய செய்திருக்கின்றனர். சாதாரண ரசிகர்கள் படத்தை பார்க்க சென்ற பொழுது அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பல திரையரங்குகளில் சலாருக்கு கூட்டம் வரவில்லை என்று சலாருக்கு பதிலாக வேறு படங்களை மாற்றி உள்ளனர் இதனை அடுத்து தமிழகத்தில் சலார் திரைப்படத்திற்கு திரையரங்குகள் குறைந்துள்ளன. ஆனால் மற்ற மாநிலங்களில் இன்னும் வரவேற்பை பெற்று ஓடி கொண்டுள்ளது சலார் திரைப்படம்.
Salaar Cease Fire Movie Collection : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடித்து இயக்குனர் பிரசாத் நீல் இயக்கிய திரைப்படம் சலார் சீஸ் ஃபயர் . இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பை காட்டும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படம் சலார்.
இதற்கு முன்பு எடுக்கப்பட்ட கே.ஜி.எப் திரைப்படத்தில் தாய் மற்றும் மகனுக்கும் இருக்கும் உறவை சொல்லும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நட்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
salaar
கான்சார் என்னும் பகுதியை ஆளும் பிரித்திவிராஜ் மற்றும் பிரபாஸிற்கும் இடையே உள்ள நட்பை முக்கிய விஷயமாக வைத்து அதற்கு நடுவே கன்சாரில் நடக்கும் ஆட்சி அரசியலை பேசுகிறது சலார் திரைப்படம். படம் வெளியான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது சலார்.
இந்த நிலையில் உலக அளவில் முதல் நாளே 175 கோடி வசூல் சாதனை படைத்தது. கண்டிப்பாக இந்த படம் ஆயிரம் கோடி வசூலை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாள் 295.7 கோடிக்கு படம் ஓடி உள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி என்று கூறப்படுகிறது இந்த நிலையில் இரண்டாம் நாளே படத்தின் தயாரிப்பு செலவை விட அதிக தொகைக்கு படம் ஓடிள்ளது.
இது இல்லாமல் ஓ.டி.டி ரைட்ஸ் சேட்டிலைட் ரைட்ஸ் மூலம் ஏற்கனவே படம் லாபத்தை ஈட்டியுள்ளது. இந்த நிலையில் தற்சமயம் மூன்று நாட்களின் முடிவில் சலார் திரைப்படம் ஒரு கோடி வசூலை தொட்டுள்ளது. கண்டிப்பாக இந்த வார இறுதியில் ஆயிரம் கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Salaar Movie : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வெளியாகியிருக்கும் திரைப்படம் சலார். சலார் திரைப்படம் வெளியானது முதல் நாளே 170 கோடிக்கு ஓடி பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் மொத்தம் 3 பாகங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப் திரைப்படத்தை விடவும் இதில் கதை மாந்தர்கள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாதி அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக பலரும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
என்னவென்று பார்க்கும்போது மூன்று பாகத்திற்கான அறிமுகமாக இந்த முதல் பாதி இருப்பதால்தான் அந்த தொய்வு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக படம் முழுக்க சுருதி ஹாசன் யார் என்றே கூறவில்லை. ஆனால் ஒரு கிராமத்தில் எந்த வித சண்டையும் போடாமல் வாழும் பிரபாஸை ஒரு கூட்டம் தேடி கொண்டிருக்கிறது.
salaar2
அதே போல சுருதி ஹாசனையும் அதே கூட்டம் தேடி கொண்டிருக்கிறது. இந்த தேடுதலை வைத்தே முதல் பாதி சென்றுவிட்டது. பெரிதாக கதை எதுவும் நகரவில்லை. இரண்டாம் பாதியில்தான் பிரபாஸ் கன்சார் நகருக்குள்ளேயே செல்கிறார்.
எனவே திரைப்படத்தில் அது ஒரு பெரும் தொய்வாக அமைந்துவிட்டது. மேலும் இந்த படத்தின் ஏன் அந்த கூட்டம் பிரபாஸை தேடி வருகிறது என்றும் தெரியவே இல்லை. பிறகுதான் தெரிகிறது. கன்சாரில் நடக்கும் மீதி விஷயங்களே அடுத்த பாகத்தில்தான் வருகிறது என்று. எனவே நமக்கு முதல் பாதியில் காண்பித்தது அனைத்துமே மூன்றாம் பாகத்தில் வரும் காட்சிகளாகும். இதுதான் இந்த படம் முதல் பாதியின் தொய்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
அநேகமாக மூன்றாவது பாகத்தில்தான் சுருதிஹாசன் யார் என்பதே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Salaar: கே.ஜி.எஃப் இயக்குனரின் மற்றுமொரு படைப்பாக தயாரான திரைப்படம்தான் சலார். இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் ஆழமான நட்பை அடிப்படையாக கொண்டு பிரசாந்த் நீல் எழுதிய கதைதான் சலார். சலார் படத்தின் கதையை கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு முன்பே எழுதிவிட்டார் இயக்குனர்.
ஆனால் அப்போது அதை இயக்குவதற்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் அந்த படத்தை இயக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது சலார்.
பழங்குடிகளின் ஆட்சியின் கீழ் இருக்கும் கான்சார் என்னும் பகுதியை யார் ஆள்வது என்பதை வைத்து செல்லும் சண்டைதான் இதற்கு காரணமாக இருக்கிறது. படத்தை மூன்று பாகத்திற்கு எடுக்க இருப்பதால் இதன் முதல் பாதி படத்தின் அறிமுகத்திற்கே சென்றுவிட்டது.
salaar1
இதனால் முதல் பாதி கொஞ்சம் தொய்வாக இருந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த படத்தின் புக்கிங் துவங்கியப்போதே உலக அளவில் 30.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இந்த நிலையில் ப்ரீ புக்கிங் மூலம் மட்டுமே 95 கோடிக்கு டிக்கெட் விற்றது.
அதனை தொடர்ந்து நேற்று படம் வெளியாகிய நிலையில் தற்சமயம் உலக அளவில் மொத்தம் 175 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது சலார். இப்படியே போனால் அடுத்து இந்த படமும் 1000 கோடி வசூல் சாதனை செய்வதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் திரைப்படங்களில் அதிகமான படங்களை கொண்ட சினிமாவாக தென்னிந்திய சினிமா உள்ளது. அதிலும் முக்கியமாக திடீரென கன்னட சினிமா பெரிதாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அமைதியாக இருந்த கன்னட சினிமாவை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது கே.ஜி.எப் திரைப்படம். இது மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரும் லாபத்தை ஈட்டிய படமாகும். கே.ஜி.எப் முதல் பாகம் வந்த பொழுது ரசிகர் மத்தியில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை.
ஆனால் இரண்டாம் பாகம் வந்த பொழுது ஆயிரம் கோடியை தாண்டி அது வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்து இயக்கி வரும் திரைப்படம் சலார். இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கே.ஜி.எஃப் படத்தின் தொடர்ச்சியாகவே இந்த கதை இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சலார் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
ஆனால் அதே நாளில் ஷாருக்கான் நடிக்கும் டங்கி என்கிற திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இருந்தாலும் அதே தேதியை சலார் குழு தேர்ந்தெடுத்து இருப்பதன் மூலம் ஷாருக்கானுடன் நேரடியாக போட்டியில் இறங்கி உள்ளனர் என்பது தெரிகிறது.
ரசிகர்கள் நினைத்தால் ஒரு படத்திற்கு போஸ்டர் ஒட்டலாம், பிரபலங்களுக்காக நன்மைகள் செய்யலாம் என்றெல்லாம் பார்த்திருப்போம். ஆனால் சினிமா ரசிகர்கள் நினைத்தால் ஒரு திரைப்படத்தையே மாற்றி அமைக்க முடியும் என்பது ஆதிபுருஷ் திரைப்படத்தில் உண்மையாகியுள்ளது.
ராமாயண கதையை அனிமேஷனில் எடுத்து பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடித்தார். போன வருடம் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியானது.
வழக்கமாக இந்தியாவில் அனிமேஷன் திரைப்படங்கள் என்றாலே அவை அவ்வளவு நன்றாக வருவதில்லை. அதே போல ஆதிபுருஷ் திரைப்படத்தின் ட்ரைலரும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதனால் சினிமா ரசிகர்கள் அந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை வைத்தனர்.
படம் வெளியானால் அதை மக்கள் பார்க்க வருவார்களா? என்பதே சந்தேகமாக இருந்தது. இந்த நிலையில் மொத்த படத்தையும் மீண்டும் ரீ எடிட் செய்து, அனிமேஷன் வேலைகளை வேறு நிறுவனத்திடம் கொடுத்து நல்ல முறையில் அனிமேஷன் செய்தனர் படக்குழுவினர்.
இந்த நிலையில் அந்த படத்தின் புது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர் அட்டகாசமாக உள்ளது. மக்கள் இந்த படத்திற்கு தற்சமயம் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஹாலிவுட்டில் இதே போல சோனிக் படத்தின் முதல் பாகம் வந்தபோது ரசிகர்கள் சோனிக் நன்றாக இல்லை என கழுவி ஊற்றிய பிறகு படத்தை ரீ எடிட் செய்த சம்பவம் நிகழ்ந்தது.
பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் ஒன்லி பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஏனெனில் பாகுபலி திரைப்படம் அப்படியான ஒரு ஹிட்டை கொடுத்தது.
அதே போல பாகுபலிக்கு பிறகு இவர் நடிக்கும் படங்கள் யாவும் அதிக பட்ஜெட் கொண்ட படங்களாகவே உள்ளன. இந்த நிலையில் பாகுபலிக்கு பிறகு ராதே சியாம் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை.
அதற்கு பிறகு பிரபாஸ் நடித்த திரைப்படம் சாஹோ. இந்த படத்தை இயக்குனர் சுஜித் இயக்கினார். இந்த படமும் கூட தென்னிந்தியாவில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் பாலிவுட்டில் இந்த படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து பாலிவுட் சினிமாவை டார்கெட் செய்து நடித்து வருகிறார் பிரபாஸ். அடுத்து ப்ரோஜக்ட் கே என்னும் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். தீபிகா படுகோனே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
மற்ற பிரபாஸின் திரைப்படங்களை போலவே இந்த படமும் ஒரு அதிக பட்ஜெட் பேன் இந்தியா திரைப்படமாகும். இந்த படத்தில் துல்கர் சல்மான், அமிதா பச்சன், திஷா பதானி, பவன் கல்யாண் போன்ற முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அடைந்த வெற்றியை தொடர்ந்து மிகவும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்துக்கொண்டுள்ளன. தற்சமயம் இவர் தெலுங்கு நட்சத்திரம் பிரபாஸை வைத்து இயக்கி வரும் திரைப்படம் சலார்.
கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாலே நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதற்கடுத்து ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் பிரசாந்த் நீல்.
இந்த நிலையில் ஹம்பாலே நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் கிரகந்தூர் ஒரு பேட்டியில் கூறும்போது “சலார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு புதிய சாதனையை படைக்கும். இதுவரை ஓடிய பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்களை மிஞ்சி அந்த படம் ஓடும்” என கூறியுள்ளார்.
இந்த திரைப்படம் செப்டம்பர் 28 2022 அன்று இந்திய அளவில் வெளியாவதற்காக தயாராகி வருகிறது. படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் பிரபாஸ் இந்திய சினிமாவில் ஒரு பான் இந்தியா கதாநாயகன் ஆவார். இவர் நடித்து வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் நல்ல ஹிட் கொடுத்த திரைப்படமாகும்.
இதற்கு பிறகு சாஹோ, ராதே ஷியாம் என வரிசையாக பேன் இந்தியா படமாக நடித்தார் பிரபாஸ். ஆனால் இந்த படங்கள் எதுவுமே பாகுபலி அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.
அதிலும் ராதே ஷியாம் திரைப்படம் பயங்கரமான தோல்வியை கண்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் என கூறப்படுகிறது. இதையடுத்து மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் மூலம் பிரபாஸ் நடித்து உருவான படம் ஆதிபுருஷ். இதுவும் கூட எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் 100க்கும் அதிகமான நாடுகளில் தங்களது ஓ.டி.டி சேவையை வழங்கி வருகிறது. இந்தோனிசியாவில் உள்ள நெட்ப்ளிக்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாஸை கலாய்த்து பதிவு ஒன்றை போட்டிருந்தனர்.
அதில் பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படம் குறித்து விமர்சிக்கப்பட்டது. இந்த பிரச்சனை பெரிதாகவும் நெட்ப்ளிக்ஸ் இந்தோனிசியா அந்த டிவிட்டை அழித்துவிட்டது. இதனால் கோபமான பிரபாஸின் ரசிகர்கள் தொடர்ந்து நெட்ப்ளிக்ஸை அன்இன்ஸ்டால் செய்து தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பான் இந்தியா படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ராதே ஷியாம் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் அடுத்த பான் இந்தியா திரைப்படமாக ஆதிபுருஷ் திரைப்படம் உள்ளது.
இந்த படத்தின் டீசர் வெளியானது முதலே படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மிகவும் குறைந்த தரத்தில் அனிமேஷன் செய்யப்பட்டு உள்ளதால் மக்கள் பலரும் இந்த படத்தை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற பொங்கலுக்கு இந்த படத்தை இந்திய அளவில் வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. அதே சமயம் வருகிற பொங்கலை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களும் வெளிவர இருக்கின்றன.
வாரிசு மற்றும் துணிவுடன் போட்டி போட்டு ஆதிபுருஷ் திரைப்படம் வசூல் சாதனை படைப்பது கடினமான காரியம். இந்திய அளவில் படம் வெளியானாலும் நடிகர் பிரபாஸிற்கு தென்னிந்தியாவில்தான் அதிக மார்கெட் உள்ளது.
எனவே இந்த படத்தை பொங்கலுக்கு முன்பாக ஜனவரி 6 அன்று வெளியிடலாம் என முடிவு செய்துள்ளது படக்குழு.
ராஜ மெளலியின் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய திரை ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதன் பிறகு பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிக்கும் நடிகராக பிரபாஸ் ஆகிவிட்டார். சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் அனைத்துமே அவருக்கு பான் இந்தியா படமாகவே அமைந்துள்ளது.
இந்த நிலையில் பிரபாஸ் நடித்து வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம்தான் ஆதி புருஷ். இந்த படம் முழுக்க முழுக்க அனிமேஷனாக எடுக்கப்பட்ட படம்.
ஆனால் கோச்சடையான் போலவே இந்த படமும் அனிமேஷனில் சொதப்பிவிட்டது என்றே கூறலாம். கார்ட்டூன் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் தொடர்களை விடவும் சுமாரான அனிமேஷனில் இந்த படம் தயாராகியுள்ளது.
இதனால் பிரபாஸின் ரசிகர்களே பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் ஆதி புருஷ் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருக்கு கார் வாங்கி தந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது ரசிகர்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips