Tag Archives: bahubali

ஏண்டா நடிக்கிறோம்னு இருந்துச்சு.. ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகை என்று கூறலாம். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடிக்கக் கூடியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

பஞ்சதந்திரம் மாதிரியான திரைப்படங்களில் ஜாலியான கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி. பாகுபலி மாதிரியான திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவி மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.

அதை சிறப்பாக செய்யக்கூடியவர் ரம்யா கிருஷ்ணன். அதனாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது படையப்பா திரைப்படம் குறித்து கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும்பொழுது படையப்பா திரைப்படத்தில் நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரம் என்று கூறிய பிறகு நான் அதில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆனாலும் வற்புறுத்திய பிறகு விருப்பம் இல்லாமல் தான் அந்த படத்தில் நடித்தேன்.

ஆனால் அது எனக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது அதேபோல நான் எதிர்பாராமல் நடித்த இன்னொரு திரைப்படம் பாகுபலி பாகுபலி எனக்கு இந்திய அளவில் இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்று தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த படமும் எனக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்று கூறியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

 

ஏன் இந்த பொழப்பு பொளைக்கணும்!.. ஆர்ட்டிஸ்டிடிடம் திருடிய கல்கி படக்குழு.. இது வேறயா!..

பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் அடுத்து நடித்து வரும் திரைப்படம்தான் கல்கி 2898 ஏடி. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் பாகுபலிக்கு பிறகு அவர் நடித்த படங்களில் சலார் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமானது கலியுகத்தின் இறுதியில் வரும் என்பது புராணங்களில் எழுதப்பட்ட நம்பிக்கையாகும். அதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வந்தது. அதில் பார்க்கும்போது மகாபாரத கதையில் துரோணாச்சாரியாரின் மகனாக வரும் அசுவத்தாமன் கதாபாத்திரம் படத்தில் வருவதை பார்க்க முடிந்தது. அதே சமயம் நடிகர் பிரபாஸ் அந்த கல்கி அவதாரம் இல்லை என தெரிகிறது.

திரைப்படம் குறித்து குற்றச்சாட்டு:

நடிகை தீபிகா படுகோன் அவரது வயிற்றில் சுமந்து வரும் குழந்தைதான் கல்கி அவதாரம். அடுத்த பாகத்தில்தான் அந்த கல்கி அவதாரம் யார் என்பதே கூறப்படும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே இந்த திரைப்படத்தின் காட்சிகள் பல ஹாலிவுட் திரைப்பட காட்சிகளின் தழுவலாக தெரிகிறது என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதற்கு நடுவே கொரியாவை சேர்ந்த ஓவியர் ஒருவர் தன்னுடைய ஓவியத்தை திருடி படத்தில் பயன்படுத்தியுள்ளதாக கல்கி திரைப்படம் குறித்து குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இனி என்னென்ன படங்கள் வாயிலாக இந்த படத்திற்கு குற்றச்சாட்டு வரப்போகிறது என தெரியவில்லை.

பாகுபலி அடுத்த பார்ட் எடுக்கப்போறோம்… கன்ஃபார்ம் செய்த ராஜமௌலி…

ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி தமிழில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். அதன் இரண்டாம் பாகமும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் என்னவென்று தெரிந்தும் கூட அதை ஆர்வமாக பார்க்கும்படி செய்திருப்பார் ராஜமௌலி. இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியான பிறகு அதன் மூன்றாம் பாகம் வேண்டும் என தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இதற்கு முன்பு இதுக்குறித்து பிரபாஸிடம் கேட்டப்பொழுது பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் என் கையில் இல்லை. அது இயக்குனர் ராஜமௌலி கையில்தான் இருக்கிறது. ஆனால் பாகுபலி திரைப்படம் எனது இதயத்துக்கு நெருக்கமான திரைப்படம் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குனர் ராஜமௌலியிடமும் கூட பாகுபலி 3 ஆம் பாகம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி பாகுபலி 3 ஆம் பாகம் கண்டிப்பாக வரும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.