Tag Archives: ரம்யா கிருஷ்ணன்

ஏண்டா நடிக்கிறோம்னு இருந்துச்சு.. ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகை என்று கூறலாம். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடிக்கக் கூடியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

பஞ்சதந்திரம் மாதிரியான திரைப்படங்களில் ஜாலியான கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி. பாகுபலி மாதிரியான திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவி மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.

அதை சிறப்பாக செய்யக்கூடியவர் ரம்யா கிருஷ்ணன். அதனாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது படையப்பா திரைப்படம் குறித்து கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும்பொழுது படையப்பா திரைப்படத்தில் நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரம் என்று கூறிய பிறகு நான் அதில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆனாலும் வற்புறுத்திய பிறகு விருப்பம் இல்லாமல் தான் அந்த படத்தில் நடித்தேன்.

ஆனால் அது எனக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது அதேபோல நான் எதிர்பாராமல் நடித்த இன்னொரு திரைப்படம் பாகுபலி பாகுபலி எனக்கு இந்திய அளவில் இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்று தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த படமும் எனக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்று கூறியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

 

கமல் என்னை சுவற்றில் இழுத்து பிடிச்சி அதை பண்ணுனார். ஓப்பனாக கூறிய ரம்யாகிருஷ்ணன்.

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் ரம்யா கிருஷ்ணன் மிக முக்கியமான கதாநாயகியாக இருந்தார். வெகு வருடங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்தது. அதாவது ரம்யா கிருஷ்ணனுக்கு நிஜமாகவே வயது ஆகிறதா? இல்லையா? என்பதுதான் அந்த சந்தேகம்.

இந்த நிலையில் தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் திடீரென படையப்பா திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் எண்ட்ரி ஆனார். அதுவும் சாதாரண வில்லி கதாபாத்திரம் கிடையாது. இப்போது வரை நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு இணையான இன்னொரு வில்லி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் இல்லை என்று கூறலாம்.

இந்த நிலையில் மீண்டும் கவர்ச்சியாக பஞ்ச தந்திரம் திரைப்படத்தில் இவர் நடித்தார். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் ரம்யா கிருஷ்ணன் கூறும்போது நல்ல நடிகர்களுக்கே கமலுடன் நடிப்பது கஷ்டம் அப்படி என்றால் என் நிலையை யோசிச்சு பாருங்க

மேகி காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என என்னிடம் செய்து காட்டினார். நான் அவரை இழுத்து சென்று சுவற்றில் வைத்து கழுத்தை பிடித்து டயலாக் பேச வேண்டும். அதை என்னிடம் டெமோவுக்கு கமல் செய்து காட்டினார்.

நான் எடை கம்மி என்னை ஈஸியாக அவர் இழுத்து சென்றுவிட்டார். படப்பிடிப்பில் அவரை இழுத்து சென்று அந்த டயலாக்கை பேசுவதற்குள் எனக்கு போதும் போதும் என ஆகிவிட்டது என கூறியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

 

Mudhal mariyadhai : முதல் மரியாதையில் முதலில் நடிக்கவிருந்தது ரம்யா கிருஷ்ணன்.. அந்த ஒரு செயலால் வாய்ப்பை இழந்தார்!.

Actress Ramyakrishnan : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குனருக்கும் நடிகருக்கும் அப்போது இருந்த ஆசை என்னவென்றால் சிவாஜி கணேசன் உடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் அல்லது சிவாஜி கணேசனை வைத்து ஓர் திரைப்படமாவது இயக்கி விட வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருந்தது.

இந்த ஆசை இயக்குனர் பாரதிராஜாவிற்கும் இருந்தது. எனவே அவர் சிவாஜி கணேசனிடம் சென்று உங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க இருக்கிறேன் என் படத்தில் நடிப்பீர்களா என கேட்டுள்ளார்.

சிவாஜி கணேசன் அதற்கு ஒப்புக்கொள்ள சிவாஜி கணேசன் உடன் ஒரு போட்டோவை எடுத்துக்கொண்டு பாரதிராஜா வீட்டிற்கு வந்துவிட்டார். அதன்பிறகு பசும்பொன் என்கிற தலைப்பில் ஒரு கதையை எழுதினார் பாரதிராஜா.

ஆனால் அதில் எவ்வளவு மாறுபாடுகள் செய்தும் அந்த கதை அவர்களுக்கு ஒத்து வரவில்லை எனவே அதை ஒதுக்கிய பாரதிராஜா வேறு ஒரு கதையை தன்னிடம் இருந்த துணை இயக்குனரிடம் இருந்து கேட்டார். கிராமத்திற்கு பிழைக்க வரும் ஒரு பெண்ணுக்கும் அந்த கிராமத்தில் இருக்கும் பெரிய மனிதருக்கும் இடையே நடக்கும் காதலை அடிப்படையாகக் கொண்ட கதை.

அதை கேட்டதும் அதையே படமாக்கலாம் என்று யோசித்தார் பாரதிராஜா. அதுதான் முதல் மரியாதை. முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக ராதா நடித்திருப்பார். ஆனால் முதலில் ராதாவை நடிக்க வைப்பதற்கு திட்டமே இல்லை.

ஏனெனில் அதற்கு முந்தைய படம் எடுத்துக் கொண்டிருந்த பொழுதே ரம்யா கிருஷ்ணன் பாரதிராஜாவை சந்தித்து அவரிடம் வாய்ப்பு கேட்டிருந்தார். இந்த திரைப்படம் ஏற்கனவே படம் பிடிக்க துவங்கி விட்டது. இதில் ஏற்கனவே கதாநாயகிகளும் இருக்கிறார்கள்.

எனவே அடுத்த படத்தில் உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார் பாரதிராஜா. ஆனால் அடுத்த படம் வருவதற்கு முன்பே ரம்யா கிருஷ்ணன் வேறு ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க துவங்கிவிட்டார். இதனை அறிந்த பாரதிராஜா அதன் பிறகு தன்னுடைய திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனின் சேர்த்துக் கொள்ளவே இல்லை. ஒருவேளை ரம்யா கிருஷ்ணன் மட்டும் அப்பொழுது கொஞ்சம் காத்திருந்தால் முதல் மரியாதை திரைப்படத்திலேயே அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

அந்த நடிகை 80 தடவை அறைஞ்சி கன்னம் பழுத்துடுச்சி.. மிஸ்கினுக்கு நடந்த சம்பவம்!..

ஒரு திரைப்படத்தில் மிக முக்கிய ஆளாக இருப்பது அந்த படத்தின் இயக்குனர்தான், நடிகர்கள் வரை அனைவரையும் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஒரு ஆளாக இயக்குனர் இருக்கிறார்.

ஆனால் அதே இயக்குனர் வேறு திரைப்படத்தில் நடிகராக நடிக்க செல்லும் பொழுது நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அவரால் உணர முடியும். கெளதம் மேனன் கூட ஒரு பேட்டியில் திரைப்படத்தை இயக்குவதை விட அதில் நடிப்பது தான் மிகவும் கடினமான காரியம் எனக் கூறியுள்ளார்.

இப்படியான ஒரு சம்பவம் நடிகர் மிஷ்கினுக்கும் நடந்தது 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கினார். முதலில் மிஷ்கினுக்கு மனைவியாக அதில் நடித்தவர் நடிகை நதியா.

அதில் ஒரு காட்சியில் நதியா மிஸ்கினை அறைவது போன்று காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அறைவது போல செய்வது பார்க்க இயல்பாக இல்லை என்று நினைத்த மிஷ்கின் நிஜமாகவே என்னை அறைந்து விடுங்கள் மேடம், ஒன்றும் பிரச்சனை இல்லை என்று நதியாவிடம் கூறினார்.

ஆனால் அந்த காட்சி மட்டும் அன்று 80 முறை திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டது. இதனால் 80 முறை அறை வாங்கினார் மிஷ்கின். அதற்கு பிறகு சில காரணங்களால் நதியா அந்த திரைப்படத்தை விட்டு விலகி விட்டார். அதன் பிறகு படத்தில் திரும்பவும் மிஷ்கினின் மனைவியாக நடித்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதன் பிறகு மீண்டும் அந்த அறையும் காட்சி படமாகப்பட்டது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் மிஸ்கின்.