Tag Archives: படையப்பா

ஏண்டா நடிக்கிறோம்னு இருந்துச்சு.. ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகை என்று கூறலாம். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடிக்கக் கூடியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

பஞ்சதந்திரம் மாதிரியான திரைப்படங்களில் ஜாலியான கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி. பாகுபலி மாதிரியான திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவி மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.

அதை சிறப்பாக செய்யக்கூடியவர் ரம்யா கிருஷ்ணன். அதனாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது படையப்பா திரைப்படம் குறித்து கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும்பொழுது படையப்பா திரைப்படத்தில் நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரம் என்று கூறிய பிறகு நான் அதில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆனாலும் வற்புறுத்திய பிறகு விருப்பம் இல்லாமல் தான் அந்த படத்தில் நடித்தேன்.

ஆனால் அது எனக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது அதேபோல நான் எதிர்பாராமல் நடித்த இன்னொரு திரைப்படம் பாகுபலி பாகுபலி எனக்கு இந்திய அளவில் இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்று தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த படமும் எனக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்று கூறியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

 

ரஜினியை வச்சி படம் பண்ணிட்டு ஜெயலலிதாவால் பயந்து போனேன்.. கே.எஸ் ரவிக்குமாருக்கு நடந்த சம்பவம்.!

கே.எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இப்போது இருக்கும் பெரிய நடிகர்கள் பலரும் பெரிய நடிகர்களாக இல்லாதப்போதே அவர்களை வைத்து ஹிட் கொடுத்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

ஆனால் இப்போது அவர் பெரிதாக திரைப்படங்கள் எல்லாம் இயக்குவதில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து மட்டும் வருகிறார். சமீபத்தில் கூட டிராகன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் தனக்கு படையப்பா திரைப்படத்தின் மூலம் நடந்த அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தை ஜெயலலிதாவை இன்ஸ்ப்ரேஷனாக வைத்துதான் உருவாக்கியிருந்தேன். எப்படி அவர்களுக்கு தெரிந்தது என தெரியவில்லை. படம் திரையரங்கில் ஓடி கொண்டிருந்தப்போதே ஆல்பர்ட் திரையரங்க முதலாளியிடம் பேசி  ஜெயலலிதா அவரது வீட்டிலேயே படையப்பா படத்தை பார்த்துவிட்டார்.

எனக்கு ஒரே பயமாக இருந்தது. முதலமைச்சரை வைத்து இப்படி ஒரு கதாபாத்திரத்தை எடுத்துள்ளோம். எப்போ ஜூப் வருமோ என பயத்தில் இருந்தேன். ஆனால் அன்று எந்த தகவலும் இல்லை. அதனை தொடர்ந்து அதற்கு மறுநாள் ரஜினிகாந்திடம் கேட்டப்போது படம் நன்றாக இருந்தது என ஜெயலலிதா கூறியதாக கூறினார்.

அவரை போலவே ஒரு பெண் கதாபாத்திரம் என்றதும் அது ஜெயலலிதாவுக்கு பிடித்துவிட்டது என அந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

இவன் இயக்குனரா? இல்ல பொறுக்கியாடா… பிரபல இயக்குனர் செயலால் கடுப்பான சிவாஜி கணேசன்..

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆனால் அவருக்கே அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் என்றால் அது வேறு யாருமில்லை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்தான்.

கே.எஸ் ரவிக்குமார் படையப்பா படப்பிடிப்பில் செய்த சம்பவத்தால் ஆடிப்போன சிவாஜி கணேசனின் அனுபவம் குறித்து கே.எஸ் ரவிக்குமாரே ஒரு பேட்டியில் பேசியுள்ளார். படையப்பா திரைப்படம் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும்.

இதில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். நடிகை சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ராதா ரவி, நாசர் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். மேலும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு ரஜினியின் அப்பா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

sivaji-ganesan

அதில் ஒரு காட்சியில் மாடியில் இருந்து சிவாஜி கணேசன் இறங்கி வர வேண்டும். அப்போது ஊரார் எல்லாம் நடந்து வருவார்கள் என காட்சிகள் இருந்தது. அந்த மாடி ஒரு செட் என்பதால் அவ்வளவு வழுவான கை பிடிகள் எதுவும் இல்லை.

எனவே சிவாஜி கணேசன் ஆபத்து இல்லாமல் நடந்து வரவேண்டுமே என்பதே இதில் பெரும் விஷயமாக இருந்தது. இந்த நிலையில் சிவாஜி கணேசன் நடந்து வந்துக்கொண்டிருக்கும்போதே யாரோ ஃப்ரேமில் வந்துவிட அந்த காட்சி தடைப்பட்டது. இதனால் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார் அங்கு ஐயர் வேஷம் போட்டு நின்றவர் என பலரையும் அடித்துள்ளார்.

இதனை பார்த்த சிவாஜி கணேசன் படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினியிடம் சென்று இவன் பிரபலமான இயக்குனர் என கூறினாய். இவன் என்ன பொறுக்கி தனம் செய்கிறான். ஐயரை எல்லாம் போட்டு அடிக்கிறான் என கேட்டுள்ளார். ஐயா அது ஐயர் இல்லை அப்படி வேஷம் போட்டுள்ளனர் என விளக்கியுள்ளார் ரஜினிகாந்த்.

24 வருஷமா எங்க போயிருந்தீங்க!.. திடீர்னு வந்த தயாரிப்பாளரை பார்த்து ஷாக்கான ரஜினிகாந்த்!..

தமிழில் புகழ்பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த ரஜினிகாந்த் தொடர்ந்து இப்போது வரை இளம் நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் அவருக்கான அடையாள திரைப்படங்கள் என கூறலாம். அந்த திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களை விடவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

அப்படி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் படையப்பா. படையப்பா திரைப்படம் தமிழ் மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் தயாரித்திருந்தார். 1999 இல் வெளியானது படையப்பா.

1996 இல் வெளியான இந்தியன் படம்தான் அதுவரை தமிழில் அதிக வசூல் படைத்த திரைப்படமாக இருந்தது. படையப்பா திரைப்படம் அந்த வசூலை ப்ரேக் செய்தது. இந்த நிலையில் படையப்பா திரைப்படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் தேனப்பனை ரஜினிகாந்த் பார்க்கவே இல்லை,

இந்த நிலையில் 24 வருடங்களுக்கு பிறகு தேனப்பன் தற்சமயம் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அவரை பார்த்த ரஜினிகாந்த் இவ்வளவு நாட்களாக எங்கு சென்றிருந்தீர்கள். உங்களை பார்க்கவே முடியவில்லையே என கேட்டுள்ளார். பிறகு தேனப்பன் பேசும்போது படையப்பா திரைப்படத்தை மறுவெளியீடு செய்வது தொடர்பாக ரஜினிகாந்தை சந்திக்க வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

விரைவில் படையப்பா திரைப்படத்தை நாம் திரையில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

ரஜினி பிறந்த நாளுக்காக வாழ்த்து சொல்ல காத்திருந்த விஜய்!.. அப்போ ரஜினி செய்த காரியம்தான் ஹைலைட்!.

Vijay and Rajinikanth: விஜய்யும் ரஜினிகாந்தும் இப்போது சண்டை போட்டுக்கொள்ளும் நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் எல்லோரும் நட்பாகதான் இருந்து வந்தனர். 20 வருடங்களுக்கு முன்பு வரை சினிமா பிரபலங்களுக்கு இந்த அளவிற்கான மார்கெட் இருக்கவில்லை.

சினிமாவில் தங்களை தக்க வைத்துக்கொள்வதற்காக அவர்கள் எவ்வளவோ கஷ்டப்பட வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் பத்திரிக்கையாளர்கள் நினைத்தால் எளிதாக நடிகர்களை அவர்களது படப்பிடிப்பு தளங்களிலேயே காண முடியும்.

ஆனால் அதற்கெல்லாம் இப்போது வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. இப்போது சினிமா பிரபலங்களின் உயரம் என்பது எங்கோ சென்றுவிட்டது. இதுவே தற்சமயம் சினிமாவில் போட்டிகள் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்துவிட்டது.

முன்பு இப்படி இல்லாததால் அனைத்து நடிகர்களும் நல்ல நட்பில் இருந்துள்ளனர். விஜய்யும் ரஜினிகாந்தும் கூட அப்படி நல்ல நட்பில் இருந்துள்ளனர். முக்கியமாக அப்போதெல்லாம் விஜய் ரஜினிகாந்தின் மிகப்பெரும் ரசிகராக இருந்தார்.

அவர் நடிக்கும் சில திரைப்படங்களில் கூட ரஜினிகாந்த் ரசிகராக நடித்திருப்பார் விஜய். விஜய் படமான நெஞ்சினிலே திரைப்படம் கொஞ்சம் ஆவரேஜான பாடல் என்றாலும் அதில் வரும் தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா என்கிற பாடல் மிகவும் பிரபலமானது.

அந்த பாடலின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தப்போது பக்கத்து செட்டில் ரஜினிகாந்த் நடிக்கும் படையப்பா படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது. அன்று ரஜினிகாந்திற்கு பிறந்தநாள். எனவே தலைவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் விஜய்.

எனவே அங்கு படையப்பா படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வெகு நேரமாக காத்துக்கொண்டிருந்தார். இதனை அறியாத ரஜினிகாந்த் வெகு நேரமாக படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். இந்த நிலையில் விஜய் நிற்பதை மாடியில் இருந்து பார்த்த ரஜினி உடனே ஏய் விஜய் என அழைத்துள்ளார்.

எங்கு சத்தம் வருகிறது என விஜய் பார்ப்பதற்குள் வேகமாக படிக்கட்டுகளில் இறங்கி விஜய்யை வந்து பார்த்தார் ரஜினிகாந்த். பிறகு அவருக்கு வாழ்த்து சொன்ன விஜய் அவரோடு வெகுநேரம் பேசியுள்ளார். இப்படியெல்லாம் இருவரும் அப்போது நட்பாக இருந்துள்ளனர்.

அந்த படத்துல எனக்கு வாய்ப்பு இல்லன்னு சொல்லிட்டாங்க!.. ரஜினி ரெக்கமண்டேஷனில் வாய்ப்பை பெற்ற நடிகை!..

தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ப்ளாக் அண்ட் வொயிட் காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை அவரது திரைப்படத்திற்கு இருக்கும் வாய்ப்பு மட்டும் குறையவே இல்லை எனலாம்.

இந்த நிலையில் ரஜினியுடன் நல்ல பழக்கத்தில் இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சத்யப்ரியா. தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இவர் அம்மாவாக நடித்துள்ளார். முக்கியமாக வில்லி அம்மா கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகையாக இவர் இருந்து வந்தார்.

தற்சமயம் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் அம்மாவாக நடித்து வருகிறார். பாட்ஷா திரைப்படத்தில் கூட ரஜினிக்கு அம்மாவாக நடித்திருப்பார். படையப்பா திரைப்படம் எடுக்கப்பட்டப்போது அந்த படத்தில் இவருக்கும் வாய்ப்பளிப்பதாக படக்குழுவினர் கூறி இருந்தனர்.

மீண்டும் ரஜினியோடு ஒரு படம் நடிக்க போகிறோம் என்பது சத்திய ப்ரியாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மேலும் அந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனின் அம்மா கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதை தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கூறிவிட்டார் சத்யப்ரியா.

ஆனால் படக்குழு திடீரென அம்மா கதாபாத்திரம் வேண்டாம் அதை அப்பா கதாபாத்திரமாக மாற்றிவிடலாம் என முடிவெடுத்து அதற்காக ராதாரவியை தேர்ந்தெடுத்திருந்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சத்யப்ரியா உடனே ரஜினிகாந்திற்கு போன் செய்து அண்ணா உங்க படத்தில் நடிக்கப்போகிறேன் என ஊர் முழுக்க சொல்லிவிட்டேன்.

இப்போ நடிக்கலைனா அசிங்கமா போயிடும். அதுனால ஒரு சின்ன கதாபாத்திரமாவது வாங்கி கொடுங்க என கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து படையப்பாவில் அவருக்கு ரஜினிகாந்த் வாய்ப்பு வாங்கி தந்துள்ளார்.

சான்ஸ் இருந்தா படையப்பா 2 வரும்.. ஓப்பன் டாக் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் மனசு வைக்கணும்!.

தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார் தமிழில் இப்போது பிரபலமாக இருக்கும் அனைத்து நடிகர்களை வைத்தும் கே.எஸ் ரவிக்குமார் திரைப்படம் இயக்கியுள்ளார்.

அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் சில படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. அதில் ரஜினியை வைத்து அவர் இயக்கி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் படையப்பா. படையப்பா திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுதே அதன் மொத்த நேரம் 5 மணி நேரம் வரை இருந்தது.

அதை இரண்டு இடைவெளி வைத்து பெரும்படமாக வெளியிடலாமா? என்று ரஜினி நினைத்தார். ஆனால் கமலஹாசன் அப்படி வெளியிட்டால் ஓடாது என்று கூறியதனால் அந்த படம் எடிட் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்ற பேச்சுக்கள் இருந்து கொண்டே இருந்தன.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் படையப்பா இரண்டாம் பாகம் குறித்து கே.எஸ் ரவிக்குமாரிடம் கேட்டதாக சில வதந்திகள் பரவி வந்தன. இது குறித்து கே.எஸ் ரவிக்குமாரிடம் கேட்டுட்ட பொழுது அப்படி எதுவும் சிவகார்த்திகேயன் கேட்கவில்லை என்று கே.எஸ் ரவிக்குமார் கூறினார்.

ஒருவேளை சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தால் நீங்கள் படையப்பா 2 படத்தை எடுப்பீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுது அதற்கான வாய்ப்புகள் இருந்தால் கண்டிப்பாக படையப்பா 2 திரைப்படம் வெளிவரும் என்று கூறியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

எனவே எதிர்காலத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் படையப்பா பார்ட் 2 படம் வருவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இந்த நெல்சனால அந்த பொண்ணு முன்னாடி மானமே போயிட்டு!.. வெளிப்படையாக கூறிய ரஜினி..

தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதிற்கு மேல் ஆகியும் கூட இன்னமும் அவரது திரைப்படம் கோடிகளை குவிப்பது மூலம் சூப்பர் ஸ்டார் என்றால் யார் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறாமல் இருந்தது. எனவே அடுத்து நல்ல ஹிட் படமாக நடிக்க வேண்டும் என நினைத்தார். எனவே டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் சேர்ந்து ஒரு படம் நடிக்க இருந்தார்.

ஆனால் அவரின் கதை பிடிக்காத காரணத்தால் அடுத்து இயக்குனர் நெல்சனுடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் கமிட் ஆனார். ஜெயிலர் திரைப்படம் நெல்சனுக்கு முக்கியமான படமாக இருந்ததால் அவர் படத்தின் அனைத்து காட்சிகளும் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக நடிகர்களை வாட்டி எடுத்துவிட்டார்.

இதுக்குறித்து ரஜினி கூறும்போது பல வருடங்களுக்கு பிறகு நான் ரம்யா கிருஷ்ணனுடன் சேர்ந்து நடிக்கிறேன். ஒரு காட்சியில் என்னை 9 தடவைக்கு மேல் நடிக்க வைத்துவிட்டார் நெல்சன். இவ்வளவு நாள் கழித்து நீலாம்பரிக்கிட்ட படையப்பாவின் மானத்தை போக செய்துவிட்டார் நெல்சன் என கூறியுள்ளார் ரஜினி.

பைத்தியமா உனக்கு!.. பாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்த ரஜினி படத்தில் கட்டையை போட்ட கமல்ஹாசன்!..

ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மட்டும் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும் திரைப்படங்களாக இருந்துள்ளன. அப்படியான திரைப்படங்களில் படையப்பாவும் முக்கியமான திரைப்படமாகும்.

எப்போதுமே தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு ஹீரோவிற்கு வில்லனாக பெண்ணை நடிக்க வைப்பது குறைவுதான். அப்படியே நடித்தாலும் கூட அந்த பெண்ணுக்கு மாஸ் காட்சிகள் வைப்பது கடினம்தான். ஆனால் படையப்பா படத்தில் இதற்கெல்லாம் மாற்றாக அமைந்திருக்கும்.

படத்தில் ரஜினிக்காந்திற்கு சமமான மாஸ் காட்சிகள் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் இருக்கும். படம் பெரும் வெற்றியை பெற்றதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகும். இந்த படத்தின் கதையை எழுதும்போதே இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் படத்தின் கதையை சற்று பெரிதாக எழுதிவிட்டார்.

ஆனால் கதையை படித்த உடனே படமாக்கிவிடலாம் என ரஜினி கூறியதால் மிக நீளமாக படத்தை எடுத்துவிட்டார் கே.எஸ் ரவிக்குமார். இதனால் மொத்தமாக படம் 19 ரீலுக்கு வந்துவிட்டது. பொதுவாக திரைப்படங்கள் அதிகப்பட்சம் 14 ரீலுக்குதான் எடுக்கப்படும். ஆனாலும் ரஜினிக்கு முழு படமும் பிடித்திருந்தது.

இதே போல பாலிவுட்டில் ஒரு திரைப்படம் நீளமாக எடுக்கப்பட்டு இரண்டு இண்டர்வெல் விட்டு வெளியானது. நாம் ஏன் படையப்பா படத்தையும் அப்படி வெளியிடக்கூடாது என நினைத்தார் ரஜினிகாந்த். எனவே இதுக்குறித்து கமல்ஹாசனிடம் கேட்டார்.

அதற்கு கமல்ஹாசன் “பைத்தியமா உனக்கு, அந்த மாதிரி எல்லாம் வெளியிட்டால் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாது. இயக்குனரிடம் சொல்லி பட அளவை குறை” என கூறியுள்ளார். அதன் பிறகு பல காட்சிகள் குறைக்கப்பட்ட பிறகே படையப்பா திரைப்படம் வெளியானது. இந்த தகவலை கே.எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எதர்ச்சையா வச்ச சீனு செம ஃபேமஸ் ஆயிட்டு… – படையப்பா குறித்து கூறிய கே.எஸ் ரவிக்குமார்!

சமூக வலைத்தளங்களில் ஏன் எதற்கென்றே தெரியாமல் சில வீடியோக்கள் பிரபலமாகும். அதை போல ஏன் எதற்கு என்றே தெரியாமல் சில காட்சிகள் சினிமாவில் பிரபலமாகும்.

உதாரணத்திற்கு கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை கூறலாம். அதை விட சிரிப்பான பல காமெடிகளை கவுண்டமணி செந்தில் செய்திருந்தாலும் அந்த காமெடி மிகவும் பிரபலம்.

அதே போல படையப்பா திரைப்படத்தில் பிரபலமான ஒரு காட்சி உண்டு. நீலாம்பரியை பார்க்க படையப்பா வருவார். அதை அறிந்துக்கொண்ட நீலாம்பரி அங்கு இருக்கும் அனைத்து நாற்காலிகளையும் எடுத்துவிடுவார்.

அப்போது அங்கு வரும் படையப்பாவிற்கு அமர எதுவும் இருக்காது. உடனே தனது துண்டை எடுத்து மேலே கட்டி இருக்கும் ஊஞ்சலை இழுத்து அதில் அமர்வார். அந்த காட்சியை வைக்கும் யோசனையே முதலில் கே.எஸ் ரவிக்குமாருக்கு இல்லை.

ஓரத்தில் ஒரு ஷோபாவை வைத்து அதை ரஜினி துண்டால் இழுப்பது போலதான் காட்சி வைக்க ஏற்பாடாகி இருந்தது. அப்போதுதான் எதார்ச்சையாக அந்த ஊஞ்சலை பார்த்தார் கே.எஸ் ரவிக்குமார். அந்த ஊஞ்சலில் அவர்வது போல காட்சி வைத்தால் நன்றாக இருக்குமே என முடிவு செய்தார்.

அதன் பிறகு அதே போல ரஜினிகாந்த் ஊஞ்சலில் அமரும் சீன் காட்சியாக்கப்பட்டது. அதோடு ஏ.ஆர் ரகுமானின் இசையை சேர்த்து திரையில் அந்த காட்சி வந்தபோது வேற லெவல் ரெஸ்பான்ஸை பெற்றது அந்த காட்சி. இதுக்குறித்து கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது ஏன் அந்த காட்சி இவ்வளவு வரவேற்பை பெற்றது என தெரியவில்லை என்கிறார்.

எல்லா படமும் எடுக்குற மாதிரிதான் இந்த படமும் எடுத்தேன்! – ஆனால் படம் ஹிட்டு!- கே.எஸ் ரவிக்குமார் சொன்ன திரைப்படம் என்ன தெரியுமா?

கே.எஸ் ரவிக்குமார் தமிழ் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். பல பெரிய நட்சத்திரங்களை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார்.

தயாரிப்பாள ஆர்.பி செளத்ரியின் உதவியோடு முதன் முதலாக புரியாத புதிர் என்னும் திரைப்படத்தை இயக்கி இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் மாறிவரும் தமிழ் சினிமாவில் இப்போதைய காலக்கட்டத்தில் அவர் இயக்கிய லிங்கா, ஆதவன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.

கே.எஸ் ரவிக்குமாரிடம் இதுக்குறித்து ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. பெரும் ஹிட் அடிக்கும் என நீங்கள் எதிர்ப்பார்க்காமல் இயக்கி வெளியாகும்போது பெரும் ஹிட் அடித்த படம் இருக்கிறதா? என அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு கே.எஸ் ரவிக்குமார், ”ஆமாம் அப்படி ஒரு படம் என்றால் அது படையப்பாதான், படையப்பா படத்தையும் நான் மற்ற படங்களை இயக்குவது போலதான் இயக்கினேன். அதற்கு முன்பு ரஜினியை வைத்து இயக்கிய முத்து திரைப்படத்தை போலவேதான் இதையும் இயக்கினேன்.

ஆனால் படையப்பா திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் ஹிட் கொடுத்தது. இப்போதும் கூட மக்கள் படையப்பா படத்தை பற்றி பேசுவதை பார்க்க முடிகிறது.” என கூறியுள்ளார்.