Tag Archives: மிஸ்கின்

டிவி ஷோவில் இறங்கிய மிஸ்கின்.. முதல் நாளே நடந்த அட்ராசிட்டி..!

இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி நிறைய படங்களில் நடிகராகவும் களமிறங்கி நடித்திருக்கிறார் மிஷ்கின்.

இது இல்லாமல் நிறைய பாடல்களும் பாடியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் மிஷ்கின்.

மிஷ்கினை பொருத்தவரை மற்ற நடுவர்கள் போல் இல்லாமல் கண்டிப்பாக நிகழ்ச்சியை ட்ரெண்டிங்காக கொண்டு போவதற்கான அனைத்து விஷயங்களையும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் பொதுவாக மேடை நிகழ்ச்சிகளுக்கு வந்தாலே மிஸ்கின் பேசும் விஷயங்கள் அதிக பிரபலம் அடையும். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் முதல் ஷோ நடந்த பொழுது மிஷ்கின் செய்த விஷயங்கள் இப்பொழுது பேசப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சியில் பாடல்கள் பாடும் பொழுது பின்னால் சிலர் நடனம் ஆடுவது வழக்கமாக உள்ளது. அப்படியாக நடனம் ஆடிக் கொண்டிருந்த பொழுது சிறப்பாக நடனமாடிய பெண்ணை அழைத்து அவரை பாராட்ட வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறார் மிஷ்கின்.

அந்த பெண்ணுக்கு நடன பயிற்சி அளிக்க தானே செலவு செய்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார் மிஷ்கின். இந்த நிலையில் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அவர் என்னவெல்லாம் செய்ய போகிறாரோ? என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

தர்மம் பண்ணுவதில் கர்ணனை மிஞ்சிய மிஸ்கின்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.!

தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் மிஸ்கின்.

அந்த படத்திற்கு பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து வரிசையாக ஹிட் திரைப்படங்களாக கொடுத்து வந்தார் மிஸ்கின். இதற்கு நடுவே திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார்.

அவரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சவரக்கத்தி திரைப்படத்திலேயே அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்சமயம் இவர் டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்தில் நடித்தப்போது நடந்த அனுபவம் குறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “மிஸ்கின் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பேசுவதை நான் விரும்பி கேட்பேன். தினசரி படக்குழுவில் யாருக்காவது ஏதாவது பரிசு ஒன்றை கொடுத்துக்கொண்டே இருப்பார்.

ஒரு நாள் அங்கு பணிப்புரிந்த லைட் மேனுக்கு பிறந்தநாள் இருந்தது. அவரை அழைத்த மிஸ்கின் கையை பார்த்தார். உடனே என்ன நினைத்தாரோ கையில் இருக்கும் வாட்சை கழட்டி அவருக்கு பரிசாக கொடுத்தார். அப்படி ஒரு குணம் மிஸ்கின் சாருக்கு என கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

பிரதீப் ரங்கநாதன் என்ன பெரிய வெங்காயமா?.. மிஸ்கினிடம் நேரடியாக கேட்ட உதவி இயக்குனர்.!

பிரதீப் ரங்கநாதன் தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிலையில் அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

அதில் ஒன்று டிராகன் மற்றொன்று எல்.ஐ.கே. டிராகன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்தது. அதில் மிஸ்கின் பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியிருந்தார். ஏனெனில் டிராகன் திரைப்படத்தில் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதில் மிஸ்கின் கூறும்போது சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்களில் நல்ல கதாநாயகனாக நான் பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன். பெரும்பாலும் சில படங்களில் வெற்றி கொடுத்துவிட்டாலே ஒரு தலைகணம் வந்துவிடும்.

mysskin

சிலர் அவர்களது உயரத்தில் இருந்து 2 அடி கூடிவிட்டதாக நினைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே மிக மரியாதையுடன் இயக்குனர் கூறுவது போல நடிப்பவர்களாக இருப்பார்கள். அப்படியான நடிகர்களில் பிரதீப் ரங்கநாதனும் ஒருவன்.

ப்ரதீப்புக்கு எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் நிறைய ரசிகர்கள் வந்தார்கள் என்று நான் யோசித்துக்கொண்டே இருப்பேன். அவனுடன் நடிக்கும்போதுதான் அது தெரிந்தது. என்னுடைய உதவி இயக்குனர்கள் என்னிடம் பேசும்போது பிரதீப் என்ன அவ்வளவு பெரிய வெங்காயமா? என கேட்பார்கள்.

நான் அவர்களிடம் ஆமாண்டா அவன் அவ்வளவு பெரிய வெங்காயம்தான் என கூறியுள்ளேன் என தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார் மிஸ்கின்.

கஞ்# அடிச்ச மாதிரி வந்தான்… நடிகரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிய மிஸ்கின்.!

இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். பெரும்பாலும் மிஸ்கின் இயக்கும் திரைப்படங்கள் வித்தியாசமானதாகதான் இருக்கின்றன. அதே சமயம் மிஸ்கின் மேடையில் பேசும் விஷயங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் பாட்டல் ராதா திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்த மிஸ்கின் அங்கு பேசிய விஷயங்கள் கூட அதிக வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய மிஸ்கின் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்த நிலையில் இதே போல இன்னொரு நேர்க்காணலில் இவர் பேசிய வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் பேசிய மிஸ்கின் கூறும்போது நடிகர் கலையரசன் குறித்து பேசியிருந்தார்.

அப்போது பேசிய மிஸ்கின் முதன் முதலாக என்னிடம் வந்த கலையரசன் ஏதோ கஞ்சா அடிச்சா மாதிரி இருந்தான். அவனை நடிக்க வச்சேன். இப்ப ரொம்ப சீக்கிரமா வளர்ந்து வந்துட்டான். ரொம்ப நல்லா நடிக்கிறான் என அவரை புகழ்ந்து இருந்தார் மிஸ்கின்.

ஆனாலும் கஞ்சா அடிச்சவன் மாதிரி வந்தான் என கூறும்போது கலையரசன் சற்று முகம் சுளிக்கவே செய்தார். அந்த வீடியோ இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

நடிகையை தடவிக்கிட்டே இருப்பான்.. மிஸ்கின் குறித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்.!

இயக்குனர் மிஸ்கின் வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே, பிசாசு மாதிரியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இதற்கு நடுவே நடிப்பின் மீதும் ஈடுபாடு காட்டினார் மிஸ்கின். அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. லியோ, மாவீரன் மாதிரியான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

மேலும் இப்போதும் இவர் திரைப்படங்களை இயக்கி வருகிறார். அப்படியாக அவர் இயக்கிய பிசாசு 2 மற்றும் ட்ரெயின் ஆகிய திரைப்படங்கள் அவரது இயக்கத்தில் இயக்கப்பட்டு திரைக்கு வர இருக்கின்றன.

mysskin

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த மிஸ்கின் அங்கு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார். அது மிகவும் சர்ச்சையாகி வருகிறது. இந்த நிலையில் மிஸ்கின் குறித்து சர்ச்சையான கருத்தை அளித்துள்ளார் பத்திரிக்கையாளர் உமாபதி.

அதில் அவர் கூறும்போது மிஸ்கினை எனக்கு தெரியும். அவன் எல்லோரையும் அவன் இவன் என அழைக்கிறான். இப்போது யாராவது ஒரு நபர் மிஸ்கினிடம் வந்து டேய் மிஸ்கின் உன் படத்தை பார்த்தேண்டா. நல்லா இருந்துச்சு என கூறினால் அவன் சும்மா இருப்பானா? உடனே உதவி இயக்குனரை அழைத்து அவனை வெளியே அனுப்ப சொல்லுவான்.

ஆனால் மிஸ்கின் மட்டும் எல்லோரையும் அவன் இவன் என அழைப்பான். அதே மாதிரி மிஸ்கின் நடிகையின் தொடையில் கையை வைத்து தேய்த்து கொண்டே இருப்பான். கேட்டால் அது அவனுடைய பழக்கம் என கூறுவான் என மிஸ்கின் குறித்து மிக சர்ச்சையான கருத்தை பத்திரிக்கையாளர் உமாபதி கூறியுள்ளார்.

அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா.. நீ என்ன கிழிச்சிட்ட.. இயக்குனர் மிஸ்கினை மேடையிலேயே வச்சி செய்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் இயக்குனர் மிஸ்கினும் ஒருவர் அவர் இயக்கிய அஞ்சாதே, பிசாசு மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சில காலங்கள் மிஸ்கினுக்கு பட வாய்ப்புகள் குறைந்து இருந்தன.

அந்த சமயத்தில் அவர் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியாக அவர் நடித்த மாவீரன், லியோ மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தன. அதே சமயம் திரைப்படங்களை இயக்குவதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீப காலங்களாக அவர் நிறைய மேடைகளில் பேசி வருகிறார். அப்படி அவர் பேசும் விஷயங்கள் அதிக ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் அருள்தாஸ் மேடையில் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும்போது பெண் பத்திரிக்கையாளர் பெண்கள் என பலரும் இருக்கும்போது மேடையில் தகாத வார்த்தையில் பேசுவது தவறான விஷயமாகும். இந்த மேடைகள் ஆயிரக்கணக்கான நபர்களை பார்த்துள்ளன.

இந்த மேடைக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. நண்பர்களுக்குள் எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். ஆனால் மேடைக்கு என்று ஒரு நாகரிகள் உள்ளது. இத்தனை புத்தகம் படித்தும் மிஸ்கினுக்கு அதுக்குறித்த அறிவு இல்லை.

அந்த மேடையில் இருந்த வெற்றிமாறன், பா. ரஞ்சித் எல்லாம் இயல்பு மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கிய பெரும் இயக்குனர்கள். ஆனால் நீ உலக சினிமாவை காப்பியடித்து படம் எடுத்தவன். உனக்கு அவங்களை விட நீ பெரிய அப்பட்டக்கர்னு நினைப்பா என வெளிப்படையாக பேசியிருந்தார் அருள்தாஸ்.

பிரிஞ்ச பிறகு இப்படி தரம் தாழ்ந்து போகணுமா?..ஜெயம் ரவி விவாகரத்து குறித்து மிஸ்கின் பேச்சு..!

ஜெயம் ரவி ஆர்த்தி இருவருக்கும் இடையே இருக்கும் விவாகரத்து குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதற்கு தகுந்தார் போல அந்த பிரச்சனை தொடர்பாக ஜெயம் ரவியும் ஆர்த்தியும் கூட தொடர்ந்து அவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை கூறி வருகின்றனர். தற்சமயம் ஜெயம்ரவி தான் அதிகமான விஷயங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் தன்னை தொடர்ந்து ஏமாற்றுவதாகவும் தன்னுடைய சொத்துக்களை பிடுங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் தற்சமயம் நடுரோட்டில் நிற்பதாகவும் தன்னுடைய கார் சாவியையும் பாஸ்போர்ட்டையும் மட்டுமாவது மீட்டு தர வேண்டும் என்றும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து:

இந்த நிலையில் ஆர்த்திக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. இவர்கள் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஜெயம் ரவியின் நலம் விரும்பிகள் பலரும் அவர்கள் இருவரும் சேர்வது தான் நல்லது என்று கூறி வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு இருக்கும் சண்டையை பார்த்தால் அவர்கள் சேர்வது சந்தேகம் தான் என்கின்றனர் நெட்டிசன்கள். இந்த நிலையில் மிஸ்கின் முன்பு பேட்டியில் பேசிய ஒரு விஷயம் வந்து அதிகமாக பரவி வருகிறது. என்னுடைய மனைவி என்னிடம் விவாகரத்து கேட்ட பொழுது நான் அவருக்கு கொடுக்கவில்லை.

என்னுடைய மகளின் நலன் கருதி நான் விவாகரத்து கொடுக்கவில்லை நாங்கள் இருவரும் ஆனால் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் என்றைக்கும் என் மனைவியை பற்றி நான் எங்கும் வெளியில் தவறாக பேசியது கிடையாது. இருவரும் பிரியப் போகிறோம் என்பதற்காக ஒருவரை ஒருவர் மோசமாக பேசிக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் கிடையாது என்று கூறி இருக்கிறார் மிஸ்கின். அவரின் இந்த பேச்சு ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்தோடு ஒத்து போவதால் தற்சமயம் பிரபலம் ஆகி வருகிறது.

அந்த சீனுக்கு ஒவ்வொரு பொண்ண பெத்த தகப்பனும் அழணும்!.. மிஸ்கின் படத்தில் நடிகருக்கு வந்த சோதனை!..

சினிமாவில் பல காலங்களாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் பெரிய ஹீரோக்களுக்கு இருக்கும் அளவிற்கான ரசிக பட்டாளம் அவர்களுக்கு இருக்காது.

அப்படியான ஒரு சில நடிகர்களில் ஆடுகளம் நரேனும் முக்கியமானவர். அவரது இளமைக்காலம் முதலே தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்து வந்தது. ஆடுகளம் திரைப்படத்தில் அவருக்கு சின்ன கதாபாத்திரம் கிடைத்தாலும் கூட அதையும் சிறப்பாக நடித்து கொடுத்தார் நரேன்.

அதன் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. இந்த நிலையில் அஞ்சாதே திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது ஒரு பெண்ணுக்கு அப்பா கதாபாத்திரத்தில் அஞ்சாதே திரைப்படத்தில் நடித்தேன்.

என் பெண்ணை கடத்திய கும்பல் ஒரு கைலியில் அவளை சுற்றி சாலையில் வீசியெறிந்துவிட்டு சென்றுவிடுவார்கள். அப்போது அவள் அருகில் நான் செல்ல வேண்டும் அதுதான் காட்சியாக இருந்தது. நான் அந்த காட்சியில் வேகமாக ஓடியப்போது மிஸ்கின் என்னை தடுத்து வேகமாக செல்ல வேண்டாம். மெதுவாக நடந்து வாருங்கள் என கூறினார்.

கதைப்படி என்னுடைய பெண் கற்பழிக்கப்பட்டு ரோட்டில் கிடக்கும்போது ஒரு தந்தையாக நான் எப்படி மெதுவாக நடந்து வர முடியும் என கேட்டேன். அதற்கு பதிலளித்த மிஸ்கின் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் 1 நிமிடத்திற்கும் அதிகமாக இந்த காட்சிக்காக ஒரு இசையை வைத்திருக்கிறேன். அது இல்லாமல் வில்லன் கொல்லப்பட போவதை நியாயப்படுத்தும் காட்சி. இதை பார்க்கும் ஒவ்வொரு தகப்பனும் அழ வேண்டும்.

அதற்கு தகுந்தாற்போல காட்சி எனக்கு வேண்டும் என கூறி படப்பிடிப்பை நிறுத்தி ஆடுகளம் நரேனுக்கு இசையை போட்டு காட்டியுள்ளார். அதை கேட்ட பிறகு மறு பேச்சு பேசாமல் அந்த காட்சியை மிஸ்கின் சொன்னது போலவே நடித்து கொடுத்துள்ளார் ஆடுகளம் நரேன்.

பகல்ல பசுமாடே தெரியமாட்டேங்குது!.. நைட்ல எப்புடி கண் தெரியுது!.. மிஸ்கினை கலாய்த்த நடிகர்!.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்க கூடிய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்கி வரும் மிஸ்கின் தற்சமயம் நிறைய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் மாவீரன் திரைப்படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார். தற்சமயம் விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மிஸ்கின். ஒரு ட்ரெயினிலேயே மொத்த படமும் நடக்கும் கதையாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக பெரிய ட்ரெயின் செட் போட்டு அதில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மிஸ்கின்.

சமீபத்தில் ப்ரூஃப் என்கிற திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் யூகி சேது மற்றும் மிஸ்கின் இருவருமே கலந்துக்கொண்டனர். அதில் பேசிய யூகி சேது மிஸ்கினை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது ட்ரெயின் படத்தில் நான் நடித்து வருகிறேன்.

mysskin

அவர் அழகான விஷயங்களை தன்னுள் மறைத்து கொள்வார். அவர் சிரித்தால் நன்றாக இருக்கும். ஆனால் எந்த மீட்டிங்கிலும் சிரிக்கவே மாட்டார். அனைவரையும் முறைத்தப்படியே இருப்பார். அதே போல அவரது கண்கள் அழகாக இருக்கும். ஆனால் அதை கண்ணாடியை வைத்து அவர் மறைத்துவிடுவார்.

பகலில் கண்ணாடி போட்டாலே எம்.ஜி.ஆர் யார் சிவாஜி யார் என நமக்கு தெரியாது. ஆனால் மிஸ்கின் இரவு 12 மணிக்கு கூட கண்ணாடி அணிந்திருப்பார். அவரது கண்களை பார்த்தால் எனக்கு பொறாமயாக இருக்கிறது. இப்படி ஒரு கண்கள் எனக்கு இல்லையே என எனக்கு தோன்றுகிறது என்கிறார் யூகி சேது.

மிஸ்கின் படத்தை தயாரித்ததுதான் தப்பு… ரத்த கண்ணீர் வடிக்கும் தயாரிப்பாளர்.. இதுதான் காரணமாம்!..

Director Mysskin : தமிழில் கொஞ்சம் மாறுபட்ட சினிமாக்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மிஷ்கின் அதற்குப் பிறகு எடுத்த அஞ்சாதே திரைப்படம் பெரும் வெற்றியை கண்டது.

அஞ்சாதே திரைப்படத்திற்கு பிறகு மிஷ்கினுக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அவரும் நிறைய திரைப்படங்களை இயக்கி வந்தார் அதன்பிறகு அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் அவர் இயக்கிய நந்தலாலா இன்னும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவரே நடித்திருந்தார்.

mysskin

அதன் மூலமாக அவருக்கு படங்களில் நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. தற்சமயம் இயக்குனராக கிடைக்கும் வாய்ப்பை விட நடிப்பதற்கு தான் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது. இதற்கு இடையே விஷாலின் நடிப்பில் துப்பறிவாளன் என்கிற திரைப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார்.

அந்த திரைப்படம் நல்ல வெற்றியை கண்டிருந்தது எனவே அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் படமாக்கினார். ஆனால் இரண்டாம் பாகத்தை படமாக்கும் பொழுது அதில் அதிகமாக செலவு செய்தார் என்று கூறி விஷால் அவரை படத்தில் இருந்து நீக்கினார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்சமயம் அவர் இயக்கி வரும் திரைப்படத்திலும் அதே பிரச்சனை எழுந்து வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் ட்ரெயின் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் அதிகமான நேரத்தை படப்பிடிப்புக்காக மிஸ்கின் எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. காலை 7 மணிக்கு படப்பிடிப்பு துவங்கினாலும் 11 மணிக்கு தான் படப்பிடிப்பை மிஸ்கின் துவங்குகிறாராம்.

இதனால் ஆறு மணிக்கே கிளம்ப வேண்டிய ஊழியர்கள் எட்டு மணி வரை பணிபுரிய வேண்டி இருக்கிறதாம். எனவே அவர்கள் அதற்காக ஊதியத்தை இரண்டு மடங்காக கேட்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

தாயை பத்தி தப்பா பேசுவீங்களா!.. நாம எல்லாம் ஆம்பளையே இல்ல!.. த்ரிஷா விஷயம் குறித்து மிஸ்கின் காட்டம்!..

Director Mysskin: தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மிஸ்கின். தொடர்ந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கும் திரைப்படங்களாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வரவே தற்சமயம் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாவீரன் லியோ மாதிரியான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் மிஷ்கின்.

mysskin

இந்த நிலையில் தற்சமயம் பெரிதாக பேசப்பட்டு வரும் த்ரிஷா சர்ச்சை குறித்து வாய் திறந்து இருக்கிறார் மிஸ்கின். த்ரிஷா குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அதிமுக அரசியல்வாதி ஒருவர் பேசியிருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இது குறித்து மிஷ்கின் தனது பேட்டியில் கூறும் பொழுது திரிஷாவை எனக்கு வெகு நாட்களாகவே தெரியும். அவருடன் ஒரு சில காட்சிகளில் பணிபுரிந்து இருக்கிறேன். அவர் ஒரு நல்ல நடிகை அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர் அவரை பற்றி இப்படி தவறாக பேசியிருப்பது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

trisha

உங்கள் தாயைப் பற்றியோ இல்லை வீட்டில் உள்ள பெண்களைப் பற்றியோ இப்படி தவறாக பேசுவீர்களா என்று கேட்டிருக்கிறார். மேலும் அவர் கூறும் பொழுது ஒரு நடிகையாக இருப்பது மிகவும் கடினமான விஷயம். என்னுடைய திரைப்படத்தில் ஒரு குழந்தை தற்சமயம் நடித்து வருகிறது அந்த குழந்தைக்கு தமிழே சுத்தமாக தெரியாது. இருந்தாலும் சிறப்பாக நடித்து வருகிறது.

இப்படி பல கஷ்டங்களை தாண்டித்தான் அவர்கள் நடித்து வருகின்றனர் எனவே ஒரு பெண்ணை அழ வைப்பவர்கள் கண்டிப்பாக ஆணாக இருக்க முடியாது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் மிஷ்கின். இதனை அடுத்து மிஸ்கின் பேச்சுக்கு ஆதரவுகள் அதிகமாகி வருகின்றன.

விஷால் மேல அன்பு வந்துட்டு!.. வாய்ப்பு கொடுத்தானா படம் பண்ணுவேன்!.. பல்டி அடித்த மிஸ்கினுக்கு விஷால் சொன்ன பதில்!..

Mysskin and Vishal: விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் இடையே பஞ்சாயத்து துவங்கியது துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் துப்பறிவாளன். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்துதான் துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க லண்டனில் எடுக்கப்பட்டது. ஏனெனில் துப்பறிவாளன் கதையின் அடித்தளமான ஷெர்லாக் ஹோம்ஸ் கதை லண்டனில்தான் நடக்கும்.

ஆனால் எதனாலோயோ மிஸ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டது. இதனையடுத்து பொது வெளியில் விஷாலை மோசமாக திட்டினார் மிஸ்கின். இதற்கு மிஸ்கின் தரப்பில் கூறும்போது 2 கோடி சம்பளம் அதிகமாக கேட்டதே இருவருக்கும் சண்டை வருவதற்கு காரணம் என கூறுகிறார்.

thuparivaalan 2

ஆனால் விஷால் கூறும்போது படத்திற்கு தேவையில்லாமல் நிறைய செலவுகளை மிஸ்கின் செய்ததே காரணம் என்கிறார். இதனால் இப்போதுவரை துப்பறிவாளன் முழு படமாக மாறமலே இருக்கிறது. இதுக்குறித்து சமீபத்தில் மிஸ்கின் பேசும்போது விஷால் மீது எனக்கிருந்த கோபம் எல்லாம் போய்விட்டது.

அதற்கு பதிலாக அவன் மீது முன்பிருந்த அன்பு வந்துவிட்டது. எனவே திரும்ப படம் பண்ண கூப்பிட்டால் நான் செல்வேன் என மிஸ்கின் கூறியுள்ளார். ஆனால் அதே கேள்வியை விஷாலிடம் கேட்கும்போது மிஸ்கின் மட்டும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை எடுத்திருந்தால் பிறகு விஷால் பிலிம் பேக்டரியே இல்லாமல் போயிருக்கும்.

அவர் எனக்கு செய்த துரோகத்தை மன்னிக்கவே முடியாது எனவே நாங்கள் ஒன்றினைவதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என கூறியுள்ளார் விஷால்.

Source – Link