Tag Archives: vijay tv

கணவரால் கண்ணீர் விட்ட வி.ஜே பிரியங்கா.. இதுதான் நடந்தது..!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்து வரும் தொகுப்பாளர்களில் முக்கியமானவராக வி.ஜே பிரியங்கா இருந்து வருகிறார்.

பல வருடங்களாகவே விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார் வி.ஜே பிரியங்கா. வி.ஜே பிரியங்கா இதுவரை நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

வேலையை பொறுத்த வரை வி.ஜே பிரியங்கா மிகப் பிரபலமானவர். பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு அதிக வரவேற்பையும் பெற்றிருக்கிறார். அதே சமயம் சொந்த வாழ்க்கையை பொருத்தவரை வி.ஜே பிரியங்காவின் வாழ்க்கை மிக மோசமானதாகதான் இருந்திருக்கிறது.

VJ-Priyanka

முதல் திருமணத்தில் வி.ஜே பிரியங்காவிற்கு நல்லபடியான ஒரு வாழ்க்கை அமையவில்லை. அதனை தொடர்ந்து அவர் விவாகரத்து பெற்றுவிட்டு இருந்து வந்தார். எப்பொழுது வி.ஜே பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என்கிற கேள்வி பலருக்கு மத்தியிலும் இருந்தது.

இந்த நிலையில் வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் வி.ஜே பிரியங்கா. தற்சமயம் அவருடைய முழு திருமண வீடியோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் அந்த வீடியோவில் அவர் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்க முடிகிறது.

டிவி ஷோவில் இறங்கிய மிஸ்கின்.. முதல் நாளே நடந்த அட்ராசிட்டி..!

இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி நிறைய படங்களில் நடிகராகவும் களமிறங்கி நடித்திருக்கிறார் மிஷ்கின்.

இது இல்லாமல் நிறைய பாடல்களும் பாடியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் மிஷ்கின்.

மிஷ்கினை பொருத்தவரை மற்ற நடுவர்கள் போல் இல்லாமல் கண்டிப்பாக நிகழ்ச்சியை ட்ரெண்டிங்காக கொண்டு போவதற்கான அனைத்து விஷயங்களையும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் பொதுவாக மேடை நிகழ்ச்சிகளுக்கு வந்தாலே மிஸ்கின் பேசும் விஷயங்கள் அதிக பிரபலம் அடையும். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் முதல் ஷோ நடந்த பொழுது மிஷ்கின் செய்த விஷயங்கள் இப்பொழுது பேசப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சியில் பாடல்கள் பாடும் பொழுது பின்னால் சிலர் நடனம் ஆடுவது வழக்கமாக உள்ளது. அப்படியாக நடனம் ஆடிக் கொண்டிருந்த பொழுது சிறப்பாக நடனமாடிய பெண்ணை அழைத்து அவரை பாராட்ட வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறார் மிஷ்கின்.

அந்த பெண்ணுக்கு நடன பயிற்சி அளிக்க தானே செலவு செய்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார் மிஷ்கின். இந்த நிலையில் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அவர் என்னவெல்லாம் செய்ய போகிறாரோ? என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ட்ரான்ஸ்பரெண்ட் புடவையில் தண்ணீரில் நனைந்து.. வெளியான சுனிதாவின் புகைப்படங்கள்

விஜய் டிவி மூலமாக நிறைய பேர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கின்றனர்.

அப்படியாக விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர்தான் சுனிதா.

வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் கூட அவர் தமிழ் தெரியாமல் பேசும் அந்த தமிழுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கதான் செய்கிறது. அந்த வகையில் சுனிதாவிற்கு திரை துறையின் மீது ஆர்வம் இருந்து வருகிறது.

எப்படியாவது திரைத்துறையில் வாய்ப்பை பெறுவதற்காக முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அதிக கவர்ச்சியுடன் புடவை கட்டி புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

வெள்ளை புடவையுடன் தண்ணீரில் நனைந்து அவர் கொடுத்திருக்கும் போஸ் எல்லாம் இப்பொழுது மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கி இருக்கிறது.

சின்ன திரை முதல் வெள்ளி திரை வரை குக் வித் கோமாளி சீசன் 6 போட்டியாளர்கள் யார் யார்? வெளியான லிஸ்ட்..!

விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது

இதுவரை ஐந்து சீசன்களை கடந்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த ஐந்து வருடங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன.

ஆரம்பத்தில் மூன்று சீசன்களில் சிவாங்கி முக்கிய கோமாளியாக இருந்து வந்தார். அதற்கு பிறகு நான்காவது சீசனில் அவரே குக்காக வந்தார். அதற்கு பிறகு ஐந்தாவது சீசனில் மணிமேகலை தொகுப்பாளினியாக மாறினார்.

cook-with-comali

இந்த நிலையில் தற்சமயம் ஆறாவது சீசனுக்கு கோமாளியாக புதிதாக நிறைய நபர்களை விஜய் டிவி இறக்கியுள்ளது. பிக்பாஸ் மூலம் பிரபலமான சௌந்தர்யா களம் இறங்கியுள்ளார். அது மட்டுமின்றி பூவையர், சுனிதா, டாலி இன்னும் பலர் கோமாளியாக களம் இறங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில் போட்டியாளராக யார் யாரெல்லாம் களம் இறங்க இருக்கின்றனர் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன. அதன்படி நடிகை ப்ரீத்தி சஞ்சீவ், தீபக், பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, வடிவுக்கரசி ஆகியோர் குக்காக களம் இறங்க இருக்கின்றனராம்.

இப்போ புதுசா களம் இறங்குறோம்… மாற்றம் கொண்டு வந்த குக் வித் கோமாளி டீம்.. வெளியான ப்ரோமோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது.

பெரும்பாலும் சமையல் நிகழ்ச்சிகள் என்பவை மிகவும் சீரியசான ஒரு நிகழ்ச்சியாக செல்பவையாக இருக்கும். ஆனால் குக் வித் கோமாளியை பொறுத்தவரை இந்த நிகழ்ச்சியானது ஜாலியான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது ஐந்து சீசன்களாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்து அதன் ஆறாவது சீசன் துவங்கப்பட இருக்கிறது வெளியானது முதலே முக்கியமான ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது வழக்கமாக குக் வித் கோமாளிகள் இருப்பது போன்ற இந்த முறை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் ஐந்து சீசன்களாக ஒரே மாதிரி இந்த நிகழ்ச்சி செல்வது பலருக்குமே அலுப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதால் இப்பொழுது நிகழ்ச்சியில் மாற்றங்களை செய்துள்ளதாக குக் வித் கோமாளி டீம் கூறி இருக்கிறது.

அந்த மாதிரியான பெண்கள்கிட்ட இருந்து புருஷனை காப்பாத்துங்க.. மனம் நொந்த மதுரை முத்து மனைவி.!

விஜய் டிவியில் உள்ள பிரபலமான ஆட்களில் மதுரை முத்து மிக முக்கியமானவர். வெகு காலங்களாகவே சன் டிவி மற்றும் விஜய் டிவி இரண்டு சேனல்களிலுமே பணிபுரிந்து வருகிறார் மதுரை முத்து.

இந்த நிலையில் மதுரை முத்துவின் நிகழ்ச்சிகளுக்கு அதிகம் வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன. இதனால் நிறைய ஊர்களில் நடக்கும் திருவிழாக்கள் போன்ற விசேஷங்களில் நகைச்சுவை பட்டிமன்றம் நடத்துவதற்கு மதுரை முத்துவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இதன் மூலமாக அவர் நிறைய சம்பாதித்தும் வருகிறார். தனது சொந்த ஊரில் வீடு கட்டி நல்லபடியாக இருந்து வருகிறார் மதுரை முத்து. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு மதுரை முத்துவின் முதல் மனைவி கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார்.

madurai muthu

அதனை தொடர்ந்து இரண்டாவதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் மதுரை முத்து. இந்த நிலையில் மதுரை முத்துவின் மனைவி சமீபத்தில் பேசியிருக்கும் வீடியோ அதிக வைரலாகி வருகிறது.

இதுக்குறித்து அவர் கூறும் பொழுது இப்போது திருமணம் ஆன கணவர்களை மயக்கும் பெண்கள் அதிகரித்து விட்டனர். நிறைய இளம் பெண்கள் கவர்ச்சியான உடைகளை அணிந்து இந்த மாதிரி வசதியான ஆண்களை மடக்கி விடுகின்றனர்.

அந்த மாதிரியான பெண்களிடம் உஷாராக இருந்து கொள்ளுங்கள் அந்த மாதிரியான சமயங்களில் நான் சாமியை தான் நம்பி வருகிறேன் என்று கூறியிருக்கிறார் இந்த வீடியோ அதிக வைரல் ஆகி வருகிறது.

எனக்கும் வெங்கடேஷ் பட்க்கும் இருந்த சண்டை… வெளிப்படையாக கூறிய செஃப் தாமு.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் அதிக பிரபலமடைந்தனர். அவருக்கு முன்பு விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சில டிவி சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் சன் டிவியில் புதிதாக குக் வித் கோமாளி மாதிரியே ஒரு நிகழ்ச்சியை துவங்கிய காரணத்தினால் வெங்கடேஷ் பட் அந்த சேனலுக்கு சென்றார்.

இந்த நிலையில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக விஜய் டிவியில் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் இதற்கு தாமு பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும் பொழுது டிவி சேனலில் மாறியதுனால் எல்லாம் எங்களுடைய நட்பு பிளவுப்படவில்லை இன்னமும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். சமீபத்தில் கூட ரம்யா பாண்டியனின் திருமணத்தில் நான் வெங்கடேஷ் மாதம்பட்டி ரங்கராஜ் மூவருமே அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம்.

மாதம்பட்டி ரங்கராஜ் தான் அன்று சமையலை கவனித்துக் கொண்டிருந்தார் அவர் தான் எங்களுக்கு உணவுகளை பரிமாறினார். என்று அந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார் தாமு.

திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ்.. இதுதான் காரணம்.!

விஜய் டிவியில் அதிக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ். பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளியாக இரண்டு நிகழ்ச்சிகள்தான் விஜய் டிவியை இன்னமும் தமிழ் சின்னத்திரை சேனல்களில் தனித்துவமானதாக காட்டி வருகிறது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்குமே அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் பிக் பாஸ் ஜனவரி மாதம் முடிந்தது. இனி அடுத்து இந்த வருடத்தின் இறுதியில்தான் பிக் பாஸ் சீசன் 9 துவங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மீண்டும் துவங்கி தன்னுடைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தது. ஆனால் அதை யாரும் பார்க்கவில்லை.

ஏனெனில் ஒளிபரப்பான காலகட்டத்திலேயே அனைவரும் அதை பார்த்துவிட்டனர் என்பதால் பெரிதாக அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை இந்த நிலையில் கலர்ஸ் டிவி சேனல் தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி உள்ளது.

அவுத்து போட்டா சான்ஸ் கிடைக்குமா? நெட்டிசன்களை நேரடியாக விமர்சித்த சிவாங்கி.!

சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. ஆரம்பத்தில் விஜய் டிவியில் பாடகியாக அறிமுகமானாலும் கூட போக போக இவருக்கு வரவேற்புகள் கிடைக்க துவங்கின.

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார் சிவாங்கி. அப்படியாகதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் கலந்துக்கொண்டார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவர்கள் நினைத்ததை விடவுமே நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

இப்போது வரை விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் முக்கிய இடத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிடித்துள்ளது. இந்த நிலையில் குக் வித் கோமாளிக்கு பிறகு சிவாங்கிக்கு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

நாய் சேகர் ரிட்டன்ஸ், டான் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்ற சிவாங்கி அங்கிருந்து புகைப்படங்களை வெளியிட்டார். அது கொஞ்சம் கவர்ச்சியாக இருந்தது.

sivanghi

இந்த நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். சமீபத்தில் அதற்கு பதிலளித்த சிவாங்கி கூறும்போது ”அவுத்து போட்டு போட்டோ போட்டா வாய்ப்பு கிடைக்குமா? என்ன மனநிலை இது.

அப்படினா அவுத்து போட்டு போட்டோ போடுற எல்லோரும் வாய்ப்பு வாங்கிடுறாங்களா. பெரும்பாலும் நான் டைட்டான உடையே போட மாட்டேன். ஏன்னா அது என்னை குண்டா காட்டும். ஆனால் அன்னைக்கு அந்த உடை நன்றாக இருந்தது.

அதனால்தான் போட்டோ போட்டேன். வாய்ப்பு வாங்க வேண்டும் என்றெல்லாம் போட்டோ போடவில்லை. அதற்காக காலம் முழுக்க சுடிதார் மட்டுமே போட்டு கொண்டிருக்க முடியாது இல்லையா என கூறியுள்ளார் சிவாங்கி.

 

 

 

இனி சின்ன திரையே வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த மணிமேகலை..!

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த தொகுப்பாளர்களின் முக்கியமானவராக இருந்தவர் மணிமேகலை.

மணிமேகலை வெகு காலங்களாகவே சன் மியூசிக், விஜய் டிவி மாதிரியான டிவி சேனல்களில் தொகுப்பாளராக இருந்து வந்தார். ஆரம்பத்தில் சன் டிவியில் இருந்தாலும் அதற்குப் பிறகு விஜய் டிவியில்தான் வாய்ப்புகளை பெற்று பங்கேற்று வந்தார் மணிமேகலை.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் சீசன் துவங்கி ஐந்தாவது சீசன் வரை மணிமேகலை அதில் கோமாளியாக இருந்து வந்தார். ஐந்தாவது சீசனில் இருந்து தொகுப்பாளராக வாய்ப்பை பெற்று தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

ஆனால் அந்த சமயத்தில் அவருக்கும் விஜே.பிரியங்காவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய் டிவியில் இருந்து விலகினார் அவருக்கு இப்போது வரை பெரிதாக எந்த டிவி சேனலிருந்து தொகுப்பாளராக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதில் எந்த சேனலுக்கு போவது என்பது குறித்துதான் அவர் யோசித்து வருகிறார் என்றும் ஒரு பக்கம் பேச்சு இருக்கிறது.

மறுமணம் செய்ய எனக்கு.. மாப்பிள்ளை யார் தெரியுமா? திவ்யதர்ஷினி ஓப்பன் அப்..!

தமிழில் உள்ள மிக பிரபலமான தொகுப்பாளினிகளில் முக்கியமானவராக திவ்யதர்ஷினி இருந்து வருகிறார். சிறு வயதாக இருக்கும்போதே இவருக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதிக பிரபாலமானதை தொடர்ந்து அவருக்கு இசை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தொகுத்து வழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் சினிமா துறையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க பலரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அதில் எல்லாம் நடிப்பதற்கு விருப்பமில்லை என கூறிவிட்டார் திவ்யதர்ஷினி. அப்போதே அவர் நடிப்பதற்கு ஒப்புகொண்டிருந்தால் சினிமா கதாநாயகியாக கூட ஆகியிருப்பார்.

 

 

இருந்தாலும் கூட சில படங்களில் தொடர்ந்து அவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை திவ்யதர்ஷினி திருமணம் செய்து சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்தார்.

அதற்கு பிறகு கணவரை பிரிந்துவிட்டார். இந்த நிலையில் அவருக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவரால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமல் போனது. இந்நிலையில் அவரது இரண்டாம் திருமணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த திவ்யதர்ஷினி இளமை காலங்களில் திருமணம் குறித்த என்னுடைய கண்ணோட்டம் வேறு மாதிரி இருந்தது. இப்போது வேறு மாதிரி இருக்கிறது. திருமணம் செய்யாமல் கூட ஒருவர் வாழலாம் என புரிந்துக்கொண்டேன்.

எனவே எனக்கு திருமணம் செய்துக்கொள்ளவே விருப்பமில்லை என கூறியுள்ளார் திவ்யதர்ஷினி.

என் உடம்ப பத்தி அந்த மாதிரி.. ரசிகர்களால் கடுப்பான விஜய் டிவி பிரபலங்கள்..!

விஜய் டிவி நிறைய பேரை சினிமாவில் பிரபலமானவர்களாக மாற்றி உள்ளது. முன்பெல்லாம் சின்னத்திரையில் நடிப்பவர்கள் அவ்வளவு எளிதாக சினிமாவில் பிரபலமடைந்துவிட முடியாது. பல வருடங்களாக சீரியலில் நடித்தும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பிரபலங்கள் உண்டு.

இந்த நிலை மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்காட்சி பிரபலங்களுக்கு சினிமாவில் வரவேற்புகள் கிடைக்க துவங்கியது. விஜய் டிவியில் நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் வாய்ப்பை பெற்று சினிமாவிற்குள் நடிக்க சென்றார்.

அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் சினிமாவிற்கு சென்றார். அவர் இப்போது சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறியுள்ளார். இந்த நிலையில் பலரும் சிவகார்த்திகேயனை போலவே சினிமாவில் கால் பதிக்க ஆசைப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜோடி நம்பர் 1 மூலமாக விஜய் டிவியில் பிரபலமானவர்கள் அபிநயா மற்றும் அஞ்சனா. இவர்கள் இருவருக்குமே நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களில் அவர்கள் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகின்றனர்.

இதுக்குறித்து அபிநயா ஒரு பேட்டியில் கூறும்போது ஆரம்பத்தில் எனது உடல் குறித்து மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நான் எனது உடல் எடையை அதிகரித்தேன். அதற்கு பிறகு அவர்களே நான் அழகாக இருப்பதாக நல்லப்படியான விமர்சனத்தை கொடுத்து வந்தனர்.