Tag Archives: Pradeep Ranganathan

சாய் அபயங்கர் சரிப்பட்டு வருவாரா..! வெளியான DUDE first Single

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட ஒரு வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படமாக DUDE இருக்கிறது.

இந்த திரைப்படத்தை கீர்த்திஸ்ரன் இயக்கியிருக்கிறார். நடிகை மமிதா பைஜு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பொதுவாகவே இளைஞர்களின் வாழ்க்கையை குறிப்பிடும் வகையிலான கதைகளத்தில்தான் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் வேலைக்கு செல்லாமல் ஊர்சுத்தி கொண்டிருக்கும் ஜாலியான ஒரு இளைஞர் கதாபாத்திரம் தான் பிரதீப் ரங்கநாதனின் கதாபாத்திரமாக இருக்கும். இந்த படத்திலும் அப்படியான ஒரு கதாபாத்திரமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து இருக்கிறார். சமீப காலங்களாகவே நிறைய படங்களில் இசையமைப்பதற்கான வாய்ப்புகளை பெற்றிருக்கிறார் சாய் அபயங்கர்.

அதற்கு முக்கிய காரணம் அனிருத்தை விட சாய் அபயங்கருக்கு சம்பளம் குறைவு என்பது தான். இந்த நிலையில் அவரது இசையில் உருவான முதல் பாடல் சமீபத்தில் யூடியூபில் வெளியானது.

ஆனால் அந்த பாடல் பெரிதாக வரவேற்பை பெறவில்லை அவ்வளவாக பாடல் நன்றாக இல்லை என்பது மக்களது கருத்தாக இருக்கிறது வாய்ப்புகளை பெற்ற சில நாட்களிலேயே இப்படியான ஒரு எதிர்மறையான விமர்சனங்களை சாய் அபயங்கர் சந்திப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேச்சுக்கள் இருக்கின்றன.

 

 

 

ஒரு வழியா வெளிவந்த எல்.ஐ.கே ட்ரைலர்.. இந்த விஷயத்தை மறைச்சிட்டாங்களே.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றை வருடங்களுக்கு முன்பு துவங்கிய படம் தான் எல்.ஐ.கே. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நடிகை கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பெரும்பாலும் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படங்கள் காதல் கதை அம்சத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும்.

இந்த திரைப்படமும் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டுதான் இருக்கிறது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற நிறுவனத்தை நடத்துகிறார் எஸ் ஜே சூர்யா. பழைய காலகட்டத்தில் பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி ஷெட்டியை காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்களுக்கும் எஸ்.ஜே சூர்யா விற்கும் இடையே என்ன பிரச்சனை உருவாகும் என்பதாக கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ட்ரைலர் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தில் கௌரி கிஷான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் இரண்டாவது கதாநாயகியாக இருப்பார் என்று தான் ஏற்கனவே பேச்சுக்கள் இருந்தன.

ஆனால் அவரை குறித்த எந்த ஒரு காட்சியும் ட்ரைலரில் வெளியாகவில்லை எனவே படத்தில் ஏற்பட போகும் பெரிய மாற்றத்திற்கு கௌரி கிஷானின் கதாபாத்திரம் முக்கிய காரணமாக இருக்கும். அதனால் தான் அதை டிரைலரில் வெளிப்படுத்தவில்லை என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

பிரதீப் ரங்கநாதன்.. எல்.ஐ.கே ரிலீஸ் அப்டேட்.. பில்டப் அதிகமா இருக்கே..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக களம் இறங்கினார்.

கதாநாயகனாக அவர் நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் அவரே இயக்கிய திரைப்படமாகும். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் எல்.ஐ.கே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.

எதிர்காலத்தில் நடக்கும் காதல் கதையாக இது இருக்கிறது. செப்டம்பர் 18 அன்று இந்த திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு ஒரு ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

அது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தெலுங்கு சினிமாவுக்குள் எண்ட்ரி ஆகும் பிரதீப் ரங்கநாதன்.! வெளியான ஃபர்ஸ்ட் லுக்..!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் நடிகராக இருந்து வருகிறார். அவர் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி திரைப்படமே அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே.

இந்த திரைப்படம் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட்டை பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது. இப்போது 10 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படத்தை தொடர்ந்து கதாநாயகனாக நிறைய வாய்ப்புகளை இவர் பெற்றார்.

அப்படியாக டிராகன் திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு நடுவே தற்சமயம் அவரது நடிப்பில் புது படம் குறித்த அப்டேட் வந்துள்ளது. அதன்படி அடுத்து தெலுங்கு சினிமாவுக்குள் எண்ட்ரி ஆகிறார் பிரதீப் ரங்கநாதன்.

பிரதீப் ரங்கநாதன் டூயுட் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக நடிகை மமிதா பைஜு நடிக்கிறார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். மைதிரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

தென்னிந்தியாவில் பெரிய மார்க்கெட் என்றால அது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாதான். அந்த ரெண்டு மார்க்கெட்டையுமே பிடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

டிராகன் திரைப்படத்துக்கு போய் கடுப்பானதுதான் மிச்சம்… பதிவிட்ட ஸ்ரீகாந்த்.!

சமீபத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் டிராகன். ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து முதல் படத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றார் பிரதீப் ரங்கநாதன். இந்நிலையில் தற்சமயம் அவரது நடிப்பில் அடுத்து வெளியான திரைப்படம் டிராகன். டிராகன் திரைப்படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது.

மேலும் இந்த படம் மக்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே திரைப்படம் கூட கொஞ்சம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் டிராகன் நல்லப்படியான விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் அந்த படத்திற்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது டிராகன் திரைப்படத்திற்கு சென்று திரையரங்கில் பார்த்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு பின்னால் சிலர் அமர்ந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் காட்சி வருவதற்கு முன்பே அடுத்து கதையில் என்ன நடக்க போகிறது என கூறி கொண்டே வந்தனர். எனக்கு மிகுந்த கோபம் வந்தது. ஆனால் என் மனைவி என் கையை பிடித்து சண்டை போட வேண்டாம் என கூறிவிட்டார் என அந்த விஷயங்களை பகிர்ந்திருந்தார் ஸ்ரீகாந்த்.

அந்த படத்தை பிரதீப்பை வச்சு ரீமேக் செய்ய ஆசை… செமையா இருக்குமே.. விருப்பத்தை கூறிய கே.எஸ் ரவிக்குமார்.!

நடிகரும் இயக்குனருமான கே.எஸ் ரவிக்குமார் தமிழில் இருக்கும் முக்கிய நடிகர்கள் பலரை வைத்து வெற்றி படங்களை இயக்கிய முக்கியமான இயக்குனராவார்.

ரஜினி கமலை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் ஒரு காலகட்டத்தில் கே எஸ் ரவிக்குமாருக்கு பெரிய மார்க்கெட் இருந்தது என்று கூறலாம். அவர் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே அந்த படம் வெற்றி அடையும் என்கிற நிலை இருந்தது.

ஆனால் இப்பொழுது இளம் இயக்குனர்கள் நிறைய வந்த பிறகு கே.எஸ் ரவிக்குமார் பெரிதாக திரைப்படங்கள் இயக்குவது இல்லை. மாறாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட டிராகன் திரைப்படத்தில் நடித்திருந்தார் கே எஸ் ரவிக்குமார்.

pradeep ranganathan

இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கே.எஸ் ரவிக்குமார் கலந்து கொண்ட பொழுது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் ஏற்கனவே இயக்கிய திரைப்படங்களில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ரீமேக் செய்யலாம் என்று கூறினால் எந்த திரைப்படத்தை திரும்ப ரீமேக் செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கே.எஸ் ரவிக்குமார் கார்த்தி நடித்த பிஸ்தா திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் நடித்தால் ரீமேக் செய்வேன் என்று கூறினார் பிஸ்தா திரைப்படத்தின் கதாபாத்திரமானது முழுக்க முழுக்க பிரதீப் ரங்கநாதனுக்கு ஒத்து போகும் கதாபாத்திரமாகும்.

கண்டிப்பாக அந்த திரைப்படம் வரும் பட்சத்தில் பெரும் வெற்றியை கொடுக்கும் என்று இப்பொழுது இது பற்றி பேச்சுகள் வர துவங்கி இருக்கின்றன

விக்னேஷ் சிவனை ஓரம் தள்ளிய பிரதீப் ரங்கநாதன்.. வெளியான அடுத்த பட அப்டேட்.

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக பிரதீப் ரங்கநாதன் மாறி இருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரிய வெற்றியை கொடுத்து வருவதால் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதீப் ரங்கநாதனும் பெரிய இயக்குனர்களுக்கு படம் நடித்து கொடுக்காமல் அவரைப் போலவே சினிமாவிற்கு வரும் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்சமயம் வெளியான டிராகன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெகு நாட்களாகவே சென்று கொண்டிருக்கிறது ஆனாலும் கூட 50 சதவீத படப்பிடிப்புதான் முடிந்திருக்கிறது. இந்த படம் கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம் என்று கூறப்படுகிறது. நடிகை நயன்தாராதான் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்சமயம் நான்காவதாக ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படத்தை கீர்த்திசுவரன் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்று கூறப்படுகிறது.

மேலும் சாய் அபயங்கர் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் எனவே இந்த திரைப்படம் ஒரு புது காம்போவாக இருக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.கே திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியாத நிலையில் பிரதீப் ரங்கநாதன் பாதியிலேயே இப்படி செல்வதற்கு காரணம் என்ன என்று பலரும் இது குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

2025 இல் முதல் சாதனை.. டிராகன் செய்த சம்பவம்..!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிராகன். டிராகன் திரைப்படம் வெளியான பொழுது அது இவ்வளவு பெரிய வசூல் கொடுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

பிரதீப் ரங்கநாதனுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக தான் அமைகிறது. அவர் முதன்முதலாக நடித்த லவ் டுடே திரைப்படமே அவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

டிராகன் திரைப்படம் அதனையும் தாண்டி ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்து இருக்கிறது. ஆனால் லவ் டுடே திரைப்படத்துடன் ஒப்பிடும் போது டிராகன் திரைப்படத்தின் தயாரிப்பு செலவு என்பது கொஞ்சம் அதிகமாகவே இருந்துள்ளது.

மேலும் பிரதீப் ரங்கநாதனின் சம்பளமும் இந்த படத்தில் உயர்ந்தே இருக்கிறது அந்த வகையில் டிராகன் திரைப்படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த வருடம் வெளியான திரைப்படங்களிலேயே 150 கோடிக்கும் அதிகமாக ஓடிய திரைப்படம் டிராகன் தான் என்று கூறப்படுகிறது. விடாமுயற்சி கூட அந்த வசூலை தொடவில்லை என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இரண்டு வாரத்தில் டிராகன் நடத்திய வசூல் வேட்டை.!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிராகன். பொதுவாக கல்லூரி காலங்களை காட்டும் திரைப்படம் என்றாலே அதில் மிகவும் ஜாலியாக மாஸ் காட்டி கொண்டு சுற்றும் கதாநாயகன் என்கிற பாணியில்தான் கதை இருக்கும்.

ஆனால் கல்லூரி காலங்களுக்கு பிறகு அவர்கள் நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரிதாக எந்த படங்களிலும் இருக்காது. இந்த நிலையில் அதிலிருந்து மாறுபட்ட படமாக பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இருந்தது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கினார். படத்தின் கதைப்படி பள்ளியில் நல்லப்படியாக படித்து வரும் பிரதீப் ரங்கநாதன் பள்ளி காதலியின் பேச்சால் தடம் மாறுகிறார். அதற்கு பிறகு கல்லூரியில் 48 அரியர்கள் வைத்து டிகிரியே வாங்காமல் வெளியே வருகிறார்.

இந்த நிலையில் இனி எப்படி அவர் வாழ்க்கையில் சாதிக்க போகிறார் என்பதாகதான் கதை அமைந்திருந்தது. தற்போதைய இளைஞர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இந்த படம் நல்ல வசூலை கொடுத்து வருகிறது.

வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் இதுவரை மொத்தமாக 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது டிராகன் திரைப்படம். இதன் வசூல் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

தர்மம் பண்ணுவதில் கர்ணனை மிஞ்சிய மிஸ்கின்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.!

தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் மிஸ்கின்.

அந்த படத்திற்கு பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து வரிசையாக ஹிட் திரைப்படங்களாக கொடுத்து வந்தார் மிஸ்கின். இதற்கு நடுவே திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார்.

அவரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சவரக்கத்தி திரைப்படத்திலேயே அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்சமயம் இவர் டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்தில் நடித்தப்போது நடந்த அனுபவம் குறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “மிஸ்கின் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பேசுவதை நான் விரும்பி கேட்பேன். தினசரி படக்குழுவில் யாருக்காவது ஏதாவது பரிசு ஒன்றை கொடுத்துக்கொண்டே இருப்பார்.

ஒரு நாள் அங்கு பணிப்புரிந்த லைட் மேனுக்கு பிறந்தநாள் இருந்தது. அவரை அழைத்த மிஸ்கின் கையை பார்த்தார். உடனே என்ன நினைத்தாரோ கையில் இருக்கும் வாட்சை கழட்டி அவருக்கு பரிசாக கொடுத்தார். அப்படி ஒரு குணம் மிஸ்கின் சாருக்கு என கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

நண்பனால் ஏற்பட்ட காதல் தோல்வி.. மனம் திறந்த பிரதீப் ரங்கநாதன்.!

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக மாறியுள்ளார். அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து வந்துள்ளன. இதனால் வெகு சீக்கிரத்திலேயே நல்ல கலெக்‌ஷன் கொடுக்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் இப்போது பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நடித்த முதல் படமான லவ் டுடே திரைப்படமே காதல் கதையை அடிப்படையாக கொண்ட கதையாகதான் இருந்தது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனக்கு நடந்த பள்ளி கால காதலையும் அதனால் ஏற்பட்ட தோல்வியையும் கூறியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இதுக்குறித்து கூறும்போது பள்ளி காலங்களில் ஒரு பெண்ணை ஆழமாக காதலித்தேன். அந்த சமயங்களில் எங்கள் வீட்டில் லேன் லைன் போன் தான் இருந்தது. அதனால் நான் அந்த பெண்ணோடு லேன் லைனில் பேசி வந்தேன்.

பெரும்பாலும் நான் தான் அவளுக்கு போன் செய்வேன். அப்படியாக ஒரு நாள் போன் செய்தப்போது போன் பிஸியாக இருந்தது. நான் திரும்ப திரும்ப போன் செய்த பிறகு 1 மணி நேரம் கழித்து போனை எடுத்தாள். என் பக்கத்து வீட்டு பையனிடம் பாட்டு பாடி கொண்டிருந்தேன் என கூறினாள்.

உனக்கு பாட்டு எல்லாம் பாட தெரியுமாடி என அதிர்ச்சியாக கேட்டேன். பிறகு அவளிடம்தான் அதிகமாக பேசி வந்தாள். பிறகு ஒரு நாள் அவளிடம் பேசும்போது என்னை விட அவனுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறாய் உனக்கு நான் முக்கியமா அவன் முக்கியமா என கேட்டேன்.

அதற்கு அவள் எனக்கு நண்பன், காதலன் இருவருமே முக்கியம் என கூறினாள். எப்போது நான் முக்கியம் என தோன்றுகிறதோ அப்போது என்னிடம் பேசு என போனை நான் வைத்துவிட்டேன். அதற்கு பிறகு ஒரு மாசத்திற்கு அவள் போனே செய்யவில்லை.

சரி என்று நான் போன் செய்தேன் அவள் எடுக்கவில்லை. அதுதான் எனக்கு நானே வைத்துக்கொண்ட ஆப்பு என கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

முக்கிய ஹீரோக்கள் லிஸ்ட்டுக்கு வந்த பிரதீப்.. வாரி குவிக்கும் டிராகன். இதுவரை வந்த வசூல்.!

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது நடிகராக ட்ரெண்டாகி வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர் முதன் முதலாக கோமாளி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கூட ஒரு காட்சியில் இவர் வந்திருப்பதை பார்க்க முடியும்.

அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படத்தில் இவரே கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக ட்ரெண்ட் ஆனது. ஆனாலும் அதில் பெண்கள் குறித்த அவரது காட்சிகளுக்கு விமர்சனங்கள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் அந்த களங்கத்தை துடைக்கும் வகையில்தான் தற்சமயம் டிராகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். படத்தின் கதை ஆரம்பத்தில் வழக்கமான காலேஜ் வாழ்க்கையை கொண்ட கதையாக இருந்தாலும் ஒழுங்காக படிக்காத காரணத்தால் ஏற்படும் பின் விளைவுகளை படம் காட்டுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் டிராகன் வெளியான 10 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தற்சமயம் 11 நாட்களை கடந்த நிலையில் 112 கோடி வசூல் செய்துள்ளது. ஒரு மாத காலம் இப்படியே ஓடும் பட்சத்தில் படம் 250 கோடியை தாண்டி வசூல் கொடுக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.

இதன் மூலமாக தற்சமயம் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நடிகர்கள் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.