நடிகரும் இயக்குனருமான கே.எஸ் ரவிக்குமார் தமிழில் இருக்கும் முக்கிய நடிகர்கள் பலரை வைத்து வெற்றி படங்களை இயக்கிய முக்கியமான இயக்குனராவார்.
ரஜினி கமலை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் ஒரு காலகட்டத்தில் கே எஸ் ரவிக்குமாருக்கு பெரிய மார்க்கெட் இருந்தது என்று கூறலாம். அவர் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே அந்த படம் வெற்றி அடையும் என்கிற நிலை இருந்தது.
ஆனால் இப்பொழுது இளம் இயக்குனர்கள் நிறைய வந்த பிறகு கே.எஸ் ரவிக்குமார் பெரிதாக திரைப்படங்கள் இயக்குவது இல்லை. மாறாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட டிராகன் திரைப்படத்தில் நடித்திருந்தார் கே எஸ் ரவிக்குமார்.
இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கே.எஸ் ரவிக்குமார் கலந்து கொண்ட பொழுது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் ஏற்கனவே இயக்கிய திரைப்படங்களில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ரீமேக் செய்யலாம் என்று கூறினால் எந்த திரைப்படத்தை திரும்ப ரீமேக் செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கே.எஸ் ரவிக்குமார் கார்த்தி நடித்த பிஸ்தா திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் நடித்தால் ரீமேக் செய்வேன் என்று கூறினார் பிஸ்தா திரைப்படத்தின் கதாபாத்திரமானது முழுக்க முழுக்க பிரதீப் ரங்கநாதனுக்கு ஒத்து போகும் கதாபாத்திரமாகும்.
கண்டிப்பாக அந்த திரைப்படம் வரும் பட்சத்தில் பெரும் வெற்றியை கொடுக்கும் என்று இப்பொழுது இது பற்றி பேச்சுகள் வர துவங்கி இருக்கின்றன