கை மாறிய பிரதீப் ரங்கநாதன் படம்..! நயன்தாரா குடும்பத்தால் வந்த பிரச்சனை..?

லவ் டுடே திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அதற்கு பிறகு அவர் நடித்த டிராகன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது.

மிக சீக்கிரத்திலேயே தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக மாறினார் பிரதீப். அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் என்பது அதிகரிக்க துவங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் இயக்குனராக தமிழ் சினிமாவில் களம் இறங்கினாலும் கூட இப்பொழுது பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

பெரும்பாலும் இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான கதைகளை தான் பிரதீப் ரங்கநாதன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் அவர் நடிக்கும் பெரும்பான்மையாக திரைப்படங்கள் காதல் தொடர்பான திரைப்படங்களாகதான் இருக்கிறது. 

தொடர்ந்து காதல் கதைகள்:

ஏற்கனவே அவரது நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, டிராகன் ஆகிய திரைப்படங்களும் கூட காதல் கதையை முன்னிலைப்படுத்திய திரைப்படங்களாகதான் இருந்தது.

இந்த நிலையில் அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் திரைப்படம் டூட் இந்த டூட் திரைப்படம் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

ஏனெனில் டூட் திரைப்படம் வெளியாக இருக்கும் அதே காலகட்டத்தில் நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் எல்.ஐ.கே திரைப்படமும் வெளியாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அந்த படத்திலும் பிரதீப் தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ஒரே சமயத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இரண்டு திரைப்படங்கள் வெளியானால் பிறகு எப்படி அது அந்த படங்களுக்கு பெரிய வெற்றியை பெற்று தரும் என்பது விநியோகஸ்தர்களின் கவலையாக இருக்கிறது. இந்த நிலையில் டூட் திரைப்படத்தை வாங்குவதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் தற்சமயம் முன் வந்துள்ளதாக சில தகவல்கள் இருக்கின்றன.