4 நாட்களில் செம வசூல் செய்த காந்தாரா சாப்டர் 1… வசூல் நிலவரம்.!

2022 ஆம் ஆண்டு கர்நாடகாவில் படமாக்கப்பட்டு இந்திய அளவில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் காந்தாரா. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அந்த படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி இயக்கிய திரைப்படம் காந்தாரா சாப்டர் 1.

இந்த திரைப்படத்திலும் ரிஷப் ஷெட்டிதான் கதாநாயகனாக நடித்துள்ளார். மாறுபட்ட கதை அம்சத்தை கொண்டிருப்பதால் இந்த திரைப்படத்திற்கு இப்போது வரவேற்பு அதிகரித்துள்ளது. 

மேலும் இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெய்ராம் இன்னும் பலர் நடித்துள்ளனர். வெளியான முதல்நாளே காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியது. முதல் பாகத்தில் பஞ்சுருளி என்கிற தெய்வத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் சென்றது.

ஆனால் இரண்டாம் பாகத்தில் சிவன் மற்றும் சிவ கணங்களை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது. இந்த நிலையில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் 340 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. 

ஒரு வாரத்தில் இதன் வசூல் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.