காந்தாரா படத்தை இப்படி பேசாதீங்க.. ப்ளீஸ்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்.!

இப்போது இந்தியாவில் அதிகமாக பேசப்படும் ஒரு இயக்குனராக மாறியிருப்பவர் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. கர்நாடகா சினிமாவை சேர்ந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா என்கிற திரைப்படம் மூலமாக இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.

2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் பழங்குடி மக்களின் தெய்வமான பஞ்சூருளி என்கிற தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஆகும். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்ததை அடுத்து இப்பொழுது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா சாப்டர் ஒன் என்கிற திரைப்படத்தை எடுத்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

முதல் பெரிய பட்ஜெட் படம்:

இந்த திரைப்படம் முதலில் வந்த காந்தாரா திரைப்படத்திற்கு முன்பு நடக்கும் கதையாக எழுதப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி காந்தாரா முதல் பாகம் குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது காந்தாரா திரைப்படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதுதான்.

அதற்கு முன்பு எடுத்த படங்கள் எல்லாம் அதைவிட குறைவான பட்ஜெட் தான். முதன் முதலில் நான் பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்தேன் என்றால் அது காந்தாராதான் அப்படி இருக்கும் பொழுது அந்த திரைப்படம் நான் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது.

ஏனெனில் 16 கோடிக்கு ஒரு படத்தை எடுத்து அதில் நானே கதாநாயகனாக நடிக்கிறேன் எனும் பொழுது ஒரு 32 கோடி ஆவது அந்த படம் ஓடினால் தான் அது வெற்றியாக இருக்கும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. எனவே இதுகுறித்து எனது மனைவியிடம் அப்பொழுதெல்லாம் புலம்பி கொண்டே இருப்பேன்.

இந்த படம் ஓடிவிடுமா? என்கிற கவலை எனக்கு இருந்து கொண்டே இருக்கும் ஆனால் அந்த படம் வெளியான பிறகு மக்கள் எல்லோருமே அது குறைந்த பட்ஜெட் படம் என்று திரும்பத் திரும்ப சொன்னார்கள். ஆனால் கர்நாடக இண்டஸ்ட்ரியை பொருத்தவரை அது பெரிய பட்ஜெட் படமாகும்.

எனவே திரும்பத் திரும்ப அதை சின்ன பட்ஜெட் படம் என்று கூறாதீர்கள் காந்தாராவின் அடுத்த பாகத்தை இப்பொழுது எடுத்தாலும் கூட முதல் பாகத்தின் போது தான் நான் அதிக டென்ஷனில் இருந்தேன் என்று கூறியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.