2025 இல் முதல் சாதனை.. டிராகன் செய்த சம்பவம்..!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிராகன். டிராகன் திரைப்படம் வெளியான பொழுது அது இவ்வளவு பெரிய வசூல் கொடுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

பிரதீப் ரங்கநாதனுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக தான் அமைகிறது. அவர் முதன்முதலாக நடித்த லவ் டுடே திரைப்படமே அவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

டிராகன் திரைப்படம் அதனையும் தாண்டி ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்து இருக்கிறது. ஆனால் லவ் டுடே திரைப்படத்துடன் ஒப்பிடும் போது டிராகன் திரைப்படத்தின் தயாரிப்பு செலவு என்பது கொஞ்சம் அதிகமாகவே இருந்துள்ளது.

மேலும் பிரதீப் ரங்கநாதனின் சம்பளமும் இந்த படத்தில் உயர்ந்தே இருக்கிறது அந்த வகையில் டிராகன் திரைப்படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த வருடம் வெளியான திரைப்படங்களிலேயே 150 கோடிக்கும் அதிகமாக ஓடிய திரைப்படம் டிராகன் தான் என்று கூறப்படுகிறது. விடாமுயற்சி கூட அந்த வசூலை தொடவில்லை என்று பேச்சுக்கள் இருக்கின்றன.