Tag Archives: aarthi

ரவி மோகன் உதவிக்கு வந்த கார்ப்பரேட்டுகள்.. சொந்த காலில் நிற்க இதுதான் காரணம்..!

தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து ஆன பிறகு ரவி மோகன் கோவாவிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.

திரைப்படங்கள் நடிப்பதற்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்தவண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் அதற்குப் பிறகு ரவி மோகனின் கதை தேர்ந்தெடுப்புகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

முக்கியமாக கதை அம்சங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரவி மோகன். இந்த நிலையில் அடுத்த திரைப்படங்களை தயாரிக்கவும் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ரவி மோகன் ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மனைவியுடன் பிரிவு ஏற்பட்ட பிறகு ரவி மோகனிடம் அதிகமாக காசு இல்லை என்று தான் பேச்சுக்கள் இருந்தன.

அப்படி இருக்கும்பொழுது எப்படி படம் தயாரிக்கிறார் என்று பலருக்குமே கேள்விகள் இருந்தது. அதற்கு காரணம் என்னவென்றால் ரவி மோகனுக்கு நிறைய கார்ப்பரேட் நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் தான் இப்பொழுது திரைப்படங்களை தயாரிப்பதற்கு முன் வந்து இருக்கின்றனர்.

அவர்களுடன் பார்ட்னர்ஷிப் போட்டுதான் ரவி மோகன் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

குழந்தைகள் மீது இருவருக்குமே அக்கறையில்லை.. ஜெயம் ரவி ஆர்த்தி குறித்து சாடிய பிரபலம்.!

சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டின் திருமண விழாவில் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் வந்திருந்தார். இது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து குறித்த பேச்சுக்களை மீண்டும் துவக்கி வைத்து இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருந்தார். அதில் அவர் கூறும்பொழுது பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு குடும்பத்தை பார்த்துக் கொள்வதில் சிரமங்கள் இருக்க தான் செய்யும். எல்லா பிரபலங்களுமே இந்த சிக்கலை சந்திக்கின்றனர்.

இந்த நிலையில் விவாகரத்து என்பதும் நடந்து விடுகிறது. விவாகரத்து என்பதே அவர்கள் இரண்டு பேருக்கும் உள்ளே மட்டும் நடக்கக் கூடிய ஒரு விஷயம் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு அந்த திரையுலகம் என்பதே மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது.

jayam ravi

குடும்பம் தூக்கம் என பலவற்றையும் மறந்து தங்களுக்கான இடத்தை சினிமாவில் பிடிப்பதற்காக அவர்கள் அதிகமாக போராட வேண்டி இருக்கிறது. இதனால் அவர்களால் குடும்பத்தை கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதுதான் ஜெயம் ரவி ஆர்த்தி விஷயத்திலும் நடந்தது.

அதன் பிறகு சமூக ஊடகங்கள் இதை பெரிதாக பேச துவங்கியது. ஜெயம் ரவி ஆர்த்தி இருவருமே இப்படி சண்டை போட்டுக் கொள்வது அவர்களது குழந்தைகளை தான் மிகவும் பாதிக்கும். இவர்கள் இருவருமே படித்தவர்கள் தான் அவர்களது துறையில் வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டே இருக்கின்றனர் என்று இது குறித்து பேசி இருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.

விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயம் ரவி..! நீதிபதி போட்ட உத்தரவு.!

ஜெயம் ரவி விவாகரத்து குறித்த விஷயங்கள் சில மாதங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது ஏனெனில் தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாத ஒரு நடிகராக இருந்து வந்தவர் நடிகர் ஜெயம் ரவி.

ஆனால் அவரே விவாகரத்து விஷயத்தில் முதலில் அறிக்கை விட்டார் என்பது பலரும் அறிந்த விஷயமாக இருந்தது. பணரீதியான நெருக்கடி மற்றும் உறவுகளுக்கு இடையே இருந்த பிரச்சனை இந்த மாதிரியான நிறைய காரணங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல்தான் ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நீதிமன்றத்தின் பதில்:

jayam ravi aarthi

இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு ஒன்றை கொடுத்திருந்தார் ஜெயம் ரவி. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் ஜெயம் ரவி ஆஜரான பிறகு அவரிடம் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவனும் மனைவியும் ஆலோசனை பெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றனர்.

சமரச ஆலோசனைக்கு பிறகும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டாம் என்று முடிவுடனே இருந்தால் அதற்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளை பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

புருஷன்கிட்ட அதுக்காக அனுமதி கேட்ட ஆர்த்தி.. தடம் மாறிய ஜெயம் ரவி விவாகரத்து..

ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவருமே 18 வருடங்களாக நல்ல கணவன் மனைவியாக இருந்து தற்சமயம் பிரிவை கண்டுள்ளனர். இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனெனில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதில் எந்த ஒரு ப்ளாக் மார்க்கும் இல்லாத ஒரு நடிகராக இருந்து வந்தவர் ஜெயம் ரவி. மேலும் ஜெயம் ரவி ஆரம்பத்தில் இருந்தே நிறைய வெற்றி படங்களை கொடுத்துதான் தற்சமயம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அவர் கார்த்தியை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார் இத்தனை வருட ஜெயம் ரவியின் திருமண வாழ்க்கையில் யாருமே எந்த ஒரு குறையையும் கண்டதில்லை என்றுதான் கூற வேண்டும்.

புருஷன்கிட்ட அதுக்காக அனுமதி கேட்ட ஆர்த்தி:

மேலும் அவர்கள் வாழ்க்கை குறித்து சர்ச்சையான தகவல்கள் கூட எதுவும் வெளிவந்தது கிடையாது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் பரவி வந்தன. இது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்து வந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவியே தனது மனைவியை பிரிய போவதை சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த ஆர்த்தி கூறும்பொழுது ஜெயம் ரவி என்னுடைய விருப்பமே இல்லாமல் இந்த விவாகரத்தை கூறியிருக்கிறார்.

எனக்கு இது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. மேலும் எனது பிள்ளைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியிருந்தார் ஆர்த்தி. இந்த நிலையில் எப்பொழுதும் ஆர்த்தி ஜெயம் ரவியுடன் சேர்வதற்குதான் முயற்சி செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஆர்த்தி கூறும்போது ஜெயம் ரவியுடன் தனியாக சந்தித்து பேசுவதற்கு கூட எனக்கு சில காலங்களாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை நான் அவருடன் சேர்ந்து வாழ நினைக்கிறேன். என்று கூறி இருப்பது ரசிகர்களுக்கு ஆர்த்தி மத்தியில் நேர்மறையான கருத்துக்களை உண்டாக்கி இருக்கின்றன.

பிரிஞ்ச பிறகு இப்படி தரம் தாழ்ந்து போகணுமா?..ஜெயம் ரவி விவாகரத்து குறித்து மிஸ்கின் பேச்சு..!

ஜெயம் ரவி ஆர்த்தி இருவருக்கும் இடையே இருக்கும் விவாகரத்து குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதற்கு தகுந்தார் போல அந்த பிரச்சனை தொடர்பாக ஜெயம் ரவியும் ஆர்த்தியும் கூட தொடர்ந்து அவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை கூறி வருகின்றனர். தற்சமயம் ஜெயம்ரவி தான் அதிகமான விஷயங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் தன்னை தொடர்ந்து ஏமாற்றுவதாகவும் தன்னுடைய சொத்துக்களை பிடுங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் தற்சமயம் நடுரோட்டில் நிற்பதாகவும் தன்னுடைய கார் சாவியையும் பாஸ்போர்ட்டையும் மட்டுமாவது மீட்டு தர வேண்டும் என்றும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து:

இந்த நிலையில் ஆர்த்திக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. இவர்கள் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஜெயம் ரவியின் நலம் விரும்பிகள் பலரும் அவர்கள் இருவரும் சேர்வது தான் நல்லது என்று கூறி வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு இருக்கும் சண்டையை பார்த்தால் அவர்கள் சேர்வது சந்தேகம் தான் என்கின்றனர் நெட்டிசன்கள். இந்த நிலையில் மிஸ்கின் முன்பு பேட்டியில் பேசிய ஒரு விஷயம் வந்து அதிகமாக பரவி வருகிறது. என்னுடைய மனைவி என்னிடம் விவாகரத்து கேட்ட பொழுது நான் அவருக்கு கொடுக்கவில்லை.

என்னுடைய மகளின் நலன் கருதி நான் விவாகரத்து கொடுக்கவில்லை நாங்கள் இருவரும் ஆனால் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் என்றைக்கும் என் மனைவியை பற்றி நான் எங்கும் வெளியில் தவறாக பேசியது கிடையாது. இருவரும் பிரியப் போகிறோம் என்பதற்காக ஒருவரை ஒருவர் மோசமாக பேசிக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் கிடையாது என்று கூறி இருக்கிறார் மிஸ்கின். அவரின் இந்த பேச்சு ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்தோடு ஒத்து போவதால் தற்சமயம் பிரபலம் ஆகி வருகிறது.

எங்க வீட்டில் வேலைக்காரன் முன்னாடி அதை செய்தார்.. ஆர்த்தி குறித்து ஜெயம் ரவி பகீர் குற்றச்சாட்டு.. மானமே போச்சு..!

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையேயான விவாகரத்துக்கள் குறித்த விஷயங்கள் தான் பேசப்பட்டு வருகின்றன.

ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவரும் 18 வருடங்களாக கணவன் மனைவியாக நல்லபடியாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் ஆனால் சமீபத்தில் அவர்களின் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளது அதிகமாக சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏனெனில் தமிழ் சினிமாவை பொருத்தவரை அதில் அதிகமாக சர்ச்சைக்கு உள்ளாகாத ஒரு நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. அப்படிப்பட்ட ஜெயம் ரவியை திடீரென்று விவாகரத்து செய்து கொள்கிறேன் என கூறுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

ஜெயம் ரவி வெளியிட்ட உண்மை:

இதனிடையே ஜெயம் ரவிக்கு ஒரு பாடகியுடன் தொடர்பு உள்ளது என பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் மனரீதியான பிரச்சினைகள் காரணமாக தான் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்கிறார் என தெரிந்திருக்கிறது.

ஜெயம் ரவியின் கணக்கு வழக்குகள் எல்லாமே அவரது மாமியார் மற்றும் மனைவியின் கைவசம் தான் இருந்தது என்று கூறப்படுகிறது. ஜெயம் ரவி வெளி நாட்டுக்கு சென்று ஏதாவது செலவு செய்தால் கூட அதற்கான மெசேஜ் அவருடைய மனைவி ஆர்த்திக்குதான் செல்லுமாம்.

உடனே அவர் போன் செய்து என்ன செலவு செய்தீர்கள் என்று கேட்பாராம் இப்படி சுதந்திரமே இல்லாமல் இருந்திருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் எல்லாம் அவரது மாமியார்தான் தயாரித்து வந்தார் அந்த படங்களில் சில படங்கள் நல்ல வெற்றியை கொடுத்த பொழுதும் அவை தோல்வி அடைந்து விட்டன என்று கூறி ஜெயம் ரவியின் சம்பளத்தை குறைத்து இருக்கிறார் அவரது மாமியார்.

மேலும் வேலைக்காரர்கள் முன்பே வைத்து தன்னை திட்டுவது போன்ற விஷயங்களை ஆர்த்தியும் அவரது மாமியாரும் தொடர்ந்து செய்திருக்கிறார் அதனால் கோபமடைந்த ஜெயம் ரவி தற்சமயம் விவாகரத்து முடிவை எடுத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சொத்துக்களை அபகரித்த மாமியார்.. வீட்டை விட்டு விரட்டப்பட்ட ஜெயம் ரவி.. வெளியான பகீர் தகவல்..!

தற்சமயம் அதிகமாக ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையே நடந்த விவாகரத்து விஷயங்கள் தான் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.

தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. பெரிதாக தமிழ் சினிமாவில் கிசுகிசுகளுக்கு உள்ளாகாத ஒரு நடிகராக இவர் இருந்து வந்தார். இந்த நிலையில் 18 வருடங்களாக குடும்பம் நடத்தி வந்த ஜெயம்ரவி சமீபத்தில் தனது மனைவியை பிரியப்போவதாக அறிவித்திருந்தார்.

இது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்து இருந்தன. இதற்கு காரணம் பிரபல பாடகி ஒருவருடன் ஜெயம் ரவிக்கு இருந்த உறவின் காரணமாக தான் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்கிறார் என்றும் பேச்சுக்கள் வலம் பெற துவங்கின.

ஜெயம் ரவி பிரச்சனை:

ஜெயம் ரவி நடித்த பெரும்பான்மையான திரைப்படங்களை அவரது மாமியார் தான் தயாரித்து வந்தார். ஏனெனில் அவர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இந்த நிலையில் தற்சமயம் ஜீவனாம்சம் மூலமாக ஜெயம் ரவியின் சொத்துக்களில் பாதியை வாங்குவதற்கான திட்டத்தை அவரது மாமியார் போட்டிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

மேலும் ஜெயம் ரவியின் பாஸ்போர்ட் போன்ற விஷயங்களை முடக்கி வைப்பதற்கான வேலைகளையும் அவர் செய்கிறார் என்று கூறப்படுகிறது தனது மகளின் வாழ்க்கையை ஜெயம் ரவி கெடுத்ததற்காக அவர் பழிவாங்க முயற்சிகளை எடுத்துள்ளார் என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

ஆனாலும் தொடர்ந்து தமிழில் வாய்ப்பு நடைபெற்ற நடித்துக் கொண்டு தான் இருக்கிறார் ஜெயம் ரவி.

என்னை கல்யாணம் பண்ணலைனா..மனைவி குறித்து பேசிய ஜெயம் ரவி..! ட்ரெண்டாகும் வீடியோ..!

ஜெயம் ரவி எப்போது விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்தாரோ அப்போது முதலே அந்த பிரச்சனைகள் அதிகம் சூடு பிடிக்க துவங்கியிருக்கின்றன.

ஜெயம்ரவி நடிக்கும் பெரும்பான்மையான படங்கள் சமீபத்தில் தோல்வியைதான் கண்டு வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனை இருப்பதாக மூன்று மாதங்களாகவே பேச்சுக்கள் இருந்து வந்தன.

அதனை தொடர்ந்து சமீபத்தில் ஜெயம் ரவியே தனது மனைவியை விவாகரத்து செய்ய போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.  இது பல சர்ச்சைகளை எழுப்பி வந்தது. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும்  வகையில் அவரது மனைவி ஆர்த்தியும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

ஆர்த்தி அறிக்கை

ஏனெனில் ஜெயம் ரவி அறிக்கை வெளியிடும்பொழுது அதில் தன்னை சுற்றி இருப்பவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுப்பதாக கூறியிருந்தார். இது ஆர்த்திக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்திருக்க வேண்டும்.

எனவே ஆர்த்தி ஒரு பதிவை வெளியிட்டு அதில் சுற்றி உள்ளவர்களின் நன்மைக்காக எல்லாம் ஜெயம் ரவி எதையும் செய்யவில்லை. தன்னுடைய சுயநலத்திற்காக தான் செய்கிறார் என்று பேசி இருந்தார். மேலும் தன்னிடம் இது குறித்து எதுவுமே கேட்காமல் இந்த முடிவை ஜெயம் ரவி எடுத்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் ஜெயம் ரவி முன்பு பேசிய வீடியோ ஒன்று அதிக வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ஆர்த்தி சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்விக்கு ஜெயம் ரவி பதிலளிக்கும் போது அவருக்கு சினிமாவில் எல்லாம் சுத்தமாக ஆர்வம் கிடையாது.

தொழில்கள் மீது தான் அவருக்கு அதிக ஆர்வம். ஒரு தொழிலதிபராக வேண்டும் என்பதுதான் ஆர்த்தியின் ஆசை ஒருவேளை என்னை திருமணம் செய்ய வில்லை என்றால் பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பார் என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி. இந்த வீடியோ இப்பொழுது டிரெண்டாகி வருகிறது.

கணவனை தேடி கோவா சென்ற ஆர்த்தி.. ஹோட்டலில் இருந்து தப்பித்த ஜெயம் ரவி.. நடந்தது என்ன?

சமீபகாலமாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருக்கும் இடையேவிவாகரத்து குறித்த விஷயங்கள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த விவாகரத்து குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களும் வெளியாகி இருக்கின்றன. ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஒரு சில நாட்களில் ஆர்த்தியும் அதற்கு பதில் அளித்து இருந்தார்.

ஆர்த்தி கொடுத்த தகவல்:

அதில் ஆர்த்தி கூறும் பொழுது தன்னிடம் விவாகரத்து குறித்து ஜெயம் ரவி பேசவே இல்லை. மேலும் சமீபகாலமாக ஜெயம் ரவியை சந்திக்கவே முடியவில்லை என பதிவிட்டிருந்தார். அதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது ஜெயம் ரவி சென்னையில் படபிடிப்புகளில் இருந்த காலகட்டங்களில் கூட அவரது வீட்டில் தங்கவில்லை என்று கூறப்படுகிறது.

அவர் ஹோட்டல்களில்தான் தினமும் தங்கி வந்திருக்கிறார். அதேபோல படபிடிப்பு இல்லாத சமயங்களில் கோவாவிற்கு சென்று விடுவாராம் ஜெயம் ரவி. அவரிடம் பட கதை கூற வரும் இயக்குனர்கள் கூட கோவாவிற்குதான் வந்து கதை கூற வேண்டும் என்கிற நிலை இருந்துள்ளது.

கிட்டத்தட்ட இது சில மாதங்களாகவே நீடித்திருக்கிறது. இதை அறிந்து அவரை பார்க்க கோவாவிற்கு சென்று இருக்கிறார் ஜெயம் ரவியின் மனைவி ஆனால் அவர் வருவதை அறிந்து அங்கிருந்தும் தப்பித்து சென்று இருக்கிறார் ஜெயம் ரவி என்று கூறப்படுகிறது.

நைட்ல கூட டார்ச்சர்.. மாமியாரின் அட்டூழியம்? ஜெயம் ரவியை அநியாயமா.. வாய்விட்ட பிரபலம்..!

ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவருக்கும் இடையே உள்ள விவாகரத்து தொடர்பான விஷயங்கள்தான் சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சுபாயர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். பத்திரிகையாளர் சுபாஷ் கூறும் பொழுது ஆர்த்தியும் ஜெயம் ரவியும் மற்ற பிரபலங்களை போல் இல்லாமல் மிகவும் அன்பான கணவன் மனைவியாக இருந்து வந்திருக்கின்றனர்.

இந்த பிரச்சனை துவங்கிய பிறகு ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போது ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்ததாக பேசி வந்தனர். ஆனால் ஜெயம் ரவி அப்படிப்பட்ட ஆள் எல்லாம் கிடையாது. பெரும்பாலும் அவர் நைட் பார்ட்டிக்கு கூட போக மாட்டார்.

குடும்ப பிரச்சனைகள்:

அப்படியே போனாலும் தன் மனைவியை அழைத்து கொண்டுதான் அங்கு செல்வார். அதேபோல ஆர்த்தி தனது கணவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர் ஏதோ ஒரு புரிதல் இல்லாத காரணத்தினால்தான் இவர்கள் இருவருக்கும் இடையே இந்த பிரச்சனை உருவாகி இருக்கிறது.

ஆனால் சமூக வலைதளங்களில் பேசுபவர்கள் இரவுகளில் வந்து ஆர்த்தி ஜெயம் ரவியை டார்ச்சர் செய்தார். அவரது மாமியார் ஜெயம் ரவியை கொடுமைப்படுத்தினார் என்றெல்லாம் பேசுகின்றனர். ஆனால் இவர்கள் நேரில் சென்று பார்த்தார்களா? என்று தெரியவில்லை.

ஆனால் ஆர்த்தி சிறிது நேரம் உட்கார்ந்து பேசினார் என்றாலே சரி செய்யக்கூடிய பிரச்சினைதான் இந்த விஷயம் என்று கூறி இருக்கிறார் சுபாயர். மேலும் அதிகபட்சம் இவர்கள் விவாகரத்து வாங்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் குடும்ப நல நீதிமன்றத்தை பொறுத்தவரை இருவரும் விவாகரத்து பெறுவதாக சம்மதித்தால்தான் அவர்கள் எளிதாக விவாகரத்தை பெற முடியும் என்று கூறுகிறார்.

ஜாலியா சமையல்காரரோடு அடித்த கூத்து.. ஜெயம் ரவி விவாகரத்து குறித்து புட்டு புட்டு வைத்த பிரபலம்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய படங்களை வெற்றி படங்களாக கொடுத்தவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் என்கிற திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமான அதற்குப் பிறகு ஜெயம் ரவி நிறைய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அப்பொழுது அவர் நடித்த சம்திங் சம்திங், தில்லாலங்கடி மாதிரியான எக்கச்சக்கமான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஜெயம் ரவியும் ஒரு வளர்ந்து வரும் நடிகராக மாறினார். ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெறவில்லை.

இதற்கு நடுவே அவரது சொந்த வாழ்க்கையும் சுமூகமாக இல்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதாகவும் ஜெயம் ரவி அறிவித்திருந்தார்.

ஜெயம் ரவி விவாகரத்து

ஆனால் இதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவர்கள் இருவரும் பிரிய போவதாக பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் இருந்து வந்தன. இதற்கு என்ன காரணம் என்பதே பலரது கேள்வியாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் 15 வருடங்கள் நன்றாகதான் வாழ்ந்து வந்தனர். அவரது மனைவியான ஆர்த்திக்கு சமீபத்தில் இந்த நைட் பார்ட்டி மாதிரியான விஷயங்கள் மீது ஆர்வம் அதிகரித்தது.

அதற்கு அவர் சென்று விட்டு மறுநாள் காலையில் தான் வீடு திரும்புவார் என்கிற நிலை ஏற்பட்டது. அதனால்தான் ஜெயம் ரவி தற்சமயம் விவாகரத்து  செய்திருக்கிறார். பிரபலங்களை பொறுத்தவரையில் முதல் நாள் இரவு பார்ட்டிக்கு செல்கிறார்கள் என்றால் அங்கு ஈ.சி.ஆர்இல் நிறைய ரூம்கள் அவர்களுக்காக போடப்பட்டிருக்கும்.

அங்கு சென்று அந்த ஹோட்டலில் இருக்கும் சமையல்காரர்களுடன் ஜாலியாக இருப்பார்கள். இந்த மாதிரியான நடவடிக்கைகள் எல்லாம் இந்த பிரிவிற்கு காரணமாக இருந்திருக்கும் என்று கூறி இருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.

சட்டத்துக்கு விரோதமா ஜெயம் ரவி இதை செஞ்சுட்டார்.. விவாகரத்தில் வகையாக மாட்டிவிட்ட மனைவி..!

கடந்த இரண்டு நாட்களாக ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த வழக்குகள் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு முக்கிய காரணமாக ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை தான் காரணமாக இருக்கிறது.

அதன்படி ஜெயம் ரவி கூறும் பொழுது  அவர் அதிகாரப்பூர்வமாகவே ஆர்த்தியை விவாகரத்து செய்வதை அந்த அறிக்கையில் கூறியிருந்தார். மேலும் அதற்கு பல காரணங்களை முன் வைத்திருந்தார் ஜெயம் ரவி.

மேலும் மீடியாக்கள் தொடர்ந்து இதை பெரிதாக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் மீடியாக்கள் தொடர்ந்து இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று செய்திகளை வெளியிட்டு வந்து கொண்டிருந்தன.

ஆர்த்தியின் பதில்:

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆர்த்தி ஒரு நோட்டீசை இன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது விவாகரத்து செய்ய போகும் விஷயத்தை முதலில் தன்னிடம் ஜெயம் ரவி கூறவில்லை.

சமீபகாலமாக அவரை நிறைய முறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன் ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையவே இல்லை. அதற்குள்ளாக ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இதனால் எனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் என்னிடம் வந்துள்ளது என்று கூறியிருக்கிறார் ஆர்த்தி.

இது மட்டுமல்லாமல் மனைவியின் ஒப்புதல் வாங்காமலேயே குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. ஒரு வக்கீல் நோட்டீஸ் கூட அவர் தனது மனைவிக்கு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு கோர்ட்டில் வெற்றி பெறாது ஆர்த்தியும் மனசு வைத்தால் மட்டும் தான் ஜெயம் ரவி விவாகரத்து பெற்று செல்ல முடியும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.