Tag Archives: dragon

டிராகன் திரைப்படத்துக்கு போய் கடுப்பானதுதான் மிச்சம்… பதிவிட்ட ஸ்ரீகாந்த்.!

சமீபத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் டிராகன். ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து முதல் படத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றார் பிரதீப் ரங்கநாதன். இந்நிலையில் தற்சமயம் அவரது நடிப்பில் அடுத்து வெளியான திரைப்படம் டிராகன். டிராகன் திரைப்படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது.

மேலும் இந்த படம் மக்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே திரைப்படம் கூட கொஞ்சம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் டிராகன் நல்லப்படியான விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் அந்த படத்திற்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது டிராகன் திரைப்படத்திற்கு சென்று திரையரங்கில் பார்த்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு பின்னால் சிலர் அமர்ந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் காட்சி வருவதற்கு முன்பே அடுத்து கதையில் என்ன நடக்க போகிறது என கூறி கொண்டே வந்தனர். எனக்கு மிகுந்த கோபம் வந்தது. ஆனால் என் மனைவி என் கையை பிடித்து சண்டை போட வேண்டாம் என கூறிவிட்டார் என அந்த விஷயங்களை பகிர்ந்திருந்தார் ஸ்ரீகாந்த்.

எங்களை மாதிரி ஆட்களை தூக்கி விடுபவரே சிம்புதான்.. மனம் திறந்த அஸ்வந்த் மாரிமுத்து.!

ஒரு காலகட்டத்தில் அதிக சர்சையான ஒரு நடிகராக இருந்தாலும் கூட இப்பொழுது சிம்பு தொடர்ந்து அதிக வரவேற்பு பெற்ற நடிகராக மாறி இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் நடிப்பு என்பது மாறி இருக்கிறது. பல தரப்பட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

வெறும் ஆக்ஷன் கதைகளை மட்டும் நடிக்காமல் பத்து தல மாதிரியான திரைப்படங்களைக் கூட தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து சிம்புவை வைத்து சிம்புவின் 51 ஒன்னாவது திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

simbu

இது குறித்து அஸ்வந்த் மாரிமுத்து கூறும் பொழுது சிம்புவை பொறுத்தவரை ஒரு புதிய இயக்குனர் நல்ல வெற்றி கொடுத்து விட்டான் என்றெல்லாம் அவர் வாய்ப்புகள் கொடுப்பது கிடையாது.

அவரை பொறுத்தவரை புதுசா ஒருத்தன் வந்திருக்கான் அவன தூக்கிவிடணும் என்கிற மனநிலை மட்டும்தான். அதனால்தான் எனக்கு உடனடியாக அவர் வாய்ப்பு கொடுத்தார்.

டிராகன் திரைப்படத்தின் டிரைலரை உருவாக்கிய பொழுது அதை எனக்கு அனுப்பு என்று போன் செய்து கேட்டார். அதை நான் அனுப்பிய பிறகு அதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி சரி செய்ய சொன்னார் அந்த அளவிற்கு மற்றவர்கள் மீது அன்பு செலுத்தக்கூடியவர் சிம்பு என்று கூறியிருக்கிறார் அஸ்வந்த் மாரிமுத்து.

டிராகனில் எனக்கு இருந்த கதை வேற..! வெளிப்படையாக கூறிய கயாடு லோகர்..!

கயாடு லோகர் தற்சமயம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவர் நடித்த முதல் திரைப்படமே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று தந்துள்ளது. டிராகன் திரைப்படமும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

பிரதீப் ரங்கநாதனுக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது டிராகன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகிய இருவருமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். என்னதான் அனுபாமாவின் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் கயாடுதான் பிரபலமடைந்தார்.

இதுக்குறித்து கயாடு லோகர் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது டிராகன் திரைப்படத்தில் முதலில் எனக்கு அனுபாமா நடித்த கீர்த்தி கதாபாத்திரம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் இடையில் இயக்குனர் என்னை பல்லவி கதாபாத்திரத்திற்கு மாற்றினார்.

பல்லவி கதாபாத்திரத்தை மக்கள் அதிகமாக ரசிப்பார்கள் என அவர் கூறினார். அதே மாதிரியே பல்லவி கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதே போல பிரதீப் ரங்கநாதனிடமும் நடிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார் கயாடு லோகர்.

எஸ்.கே அளவுக்கு பிரதீப் கஷ்டப்படல.! அந்த அளவுக்கு அவர் பேசியிருக்க வேண்டாம்.. சர்ச்சையை கிளப்பிய பிரதீப் பேச்சு.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் முக்கிய நடிகராக இருந்து வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் தமிழில் முதன் முதலாக கோமாளி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது.

ஆனால் அவருக்கு கதாநாயகனாக முதல் படமாக அமைந்த திரைப்படம் லவ் டுடே. லவ் டுடே திரைப்படம் பிரதீப் ரங்கநாதனே இயக்கி நடித்த திரைப்படமாகும். தற்போதைய தலைமுறையினரின் காதலில் உள்ள பிரச்சனைகளை அந்த படம் பேசியது.

அதனை தொடர்ந்து அந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதனை தொடர்ந்து அடுத்து கதாநாயகனாக வரிசையாக வாய்ப்பை பெற்று அவர் நடித்து வருகிறார். அப்படியாக சமீபத்தில் அவர் நடித்த டிராகன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன் தனக்கு நிறைய இடையூறுகள் ஏற்பட்டதாக கூறியுள்ளார். சினிமா துறையில் தனக்கு பிரச்சனைகள் வருவதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் அந்தணன் பேசியுள்ளார். அவர் கூறும்போது சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த போது அனுபவித்த கஷ்டங்கள் அளவிற்கு பிரதீப் ரங்கநாதன் அனுபவிக்கவில்லை. அவர் இப்போது பிரபலமான நடிகராக இருக்கிறார்.

அதனால் அவர் தங்களுடைய படங்களில் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் நினைத்திருப்பார்கள். அதற்காகதான் அவர்கள் தொல்லை செய்திருப்பார்கள். அதனை போய் ஒரு பெரிய விஷயமாக பிரதீப் சொல்லியிருக்க தேவையில்லை என அந்தணன் கூறியுள்ளார்.

 

 

இரண்டு வாரத்தில் டிராகன் நடத்திய வசூல் வேட்டை.!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிராகன். பொதுவாக கல்லூரி காலங்களை காட்டும் திரைப்படம் என்றாலே அதில் மிகவும் ஜாலியாக மாஸ் காட்டி கொண்டு சுற்றும் கதாநாயகன் என்கிற பாணியில்தான் கதை இருக்கும்.

ஆனால் கல்லூரி காலங்களுக்கு பிறகு அவர்கள் நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரிதாக எந்த படங்களிலும் இருக்காது. இந்த நிலையில் அதிலிருந்து மாறுபட்ட படமாக பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இருந்தது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கினார். படத்தின் கதைப்படி பள்ளியில் நல்லப்படியாக படித்து வரும் பிரதீப் ரங்கநாதன் பள்ளி காதலியின் பேச்சால் தடம் மாறுகிறார். அதற்கு பிறகு கல்லூரியில் 48 அரியர்கள் வைத்து டிகிரியே வாங்காமல் வெளியே வருகிறார்.

இந்த நிலையில் இனி எப்படி அவர் வாழ்க்கையில் சாதிக்க போகிறார் என்பதாகதான் கதை அமைந்திருந்தது. தற்போதைய இளைஞர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இந்த படம் நல்ல வசூலை கொடுத்து வருகிறது.

வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் இதுவரை மொத்தமாக 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது டிராகன் திரைப்படம். இதன் வசூல் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

தர்மம் பண்ணுவதில் கர்ணனை மிஞ்சிய மிஸ்கின்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.!

தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் மிஸ்கின்.

அந்த படத்திற்கு பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து வரிசையாக ஹிட் திரைப்படங்களாக கொடுத்து வந்தார் மிஸ்கின். இதற்கு நடுவே திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார்.

அவரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சவரக்கத்தி திரைப்படத்திலேயே அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்சமயம் இவர் டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்தில் நடித்தப்போது நடந்த அனுபவம் குறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “மிஸ்கின் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பேசுவதை நான் விரும்பி கேட்பேன். தினசரி படக்குழுவில் யாருக்காவது ஏதாவது பரிசு ஒன்றை கொடுத்துக்கொண்டே இருப்பார்.

ஒரு நாள் அங்கு பணிப்புரிந்த லைட் மேனுக்கு பிறந்தநாள் இருந்தது. அவரை அழைத்த மிஸ்கின் கையை பார்த்தார். உடனே என்ன நினைத்தாரோ கையில் இருக்கும் வாட்சை கழட்டி அவருக்கு பரிசாக கொடுத்தார். அப்படி ஒரு குணம் மிஸ்கின் சாருக்கு என கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

முக்கிய ஹீரோக்கள் லிஸ்ட்டுக்கு வந்த பிரதீப்.. வாரி குவிக்கும் டிராகன். இதுவரை வந்த வசூல்.!

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது நடிகராக ட்ரெண்டாகி வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர் முதன் முதலாக கோமாளி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கூட ஒரு காட்சியில் இவர் வந்திருப்பதை பார்க்க முடியும்.

அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படத்தில் இவரே கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக ட்ரெண்ட் ஆனது. ஆனாலும் அதில் பெண்கள் குறித்த அவரது காட்சிகளுக்கு விமர்சனங்கள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் அந்த களங்கத்தை துடைக்கும் வகையில்தான் தற்சமயம் டிராகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். படத்தின் கதை ஆரம்பத்தில் வழக்கமான காலேஜ் வாழ்க்கையை கொண்ட கதையாக இருந்தாலும் ஒழுங்காக படிக்காத காரணத்தால் ஏற்படும் பின் விளைவுகளை படம் காட்டுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் டிராகன் வெளியான 10 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தற்சமயம் 11 நாட்களை கடந்த நிலையில் 112 கோடி வசூல் செய்துள்ளது. ஒரு மாத காலம் இப்படியே ஓடும் பட்சத்தில் படம் 250 கோடியை தாண்டி வசூல் கொடுக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.

இதன் மூலமாக தற்சமயம் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நடிகர்கள் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

விஜய்யின் வசூலை மிஞ்சிய டிராகன்… மாஸ் காட்டும் பிரதீப்.!

தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகராக மாறி வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். முன்பை விட தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் மிக எளிதாக நடிகர்கள் பிரபலமாகிவிடுகிறார்கள். ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலமே எக்கச்சக்க வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன்.

அவரே இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே. தற்கால காதல் குறித்து பேசப்பட்ட திரைப்படம் என்பதால் அந்த திரைப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் படத்தில் நிறைய விஷயங்கள் பெண்கள் மீது பழி சுமத்தும் வகையில் அமைந்திருந்தது.

இந்த நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படம் டிராகன். இந்த திரைப்படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியிருந்தார். இவர் இயக்கிய ஓ மை கடவுளே திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இவர்கள் இருவருக்கும் இதுதான் இரண்டாவது திரைப்படம்.

டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து வெளியான சில நாட்களிலேயே 100 கோடி ஹிட் கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தற்சமயம் வசூல் சாதனை கொடுக்கும் நடிகர்களில் வந்துவிட்டார் எனதான் கூற வேண்டும்.

இந்த நிலையில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் டிராகன் திரைப்படம் விஜய்யின் கோட் வசூலை மிஞ்சுயுள்ளது. கோட் திரைப்படம் 13.5 கோடி வசூல் செய்திருந்த நிலையில் டிராகன் திரைப்படம் அதனை தாண்டி 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

டிராகன் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் அதர்வா.. இப்படி ஒரு காரணம் இருக்கா?

தற்சமயம் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படம் டிராகன். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. டிராகன் திரைப்படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதனுக்கான மார்க்கெட் என்பது வேற லெவலில் அதிகரித்துள்ளது.

அவருக்கான சம்பளம் என்பதும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படம் 100 கோடி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டுள்ளது. படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள் இருந்தனர். நடிகை அனுபாமா பரமேஸ்வரி மற்றும் கயாடு லோகர் ஆகிய இருவர் கதாநாயகியாக நடித்திருந்தனர்.

ஆனால் படம் வெளியான பிறகு அனுபாமாவை விட கயாடு லோகர்தான் அதிக பிரபலமாகியுள்ளார். கயாடு லோகருக்கு இந்த ஒரு படத்தின் மூலமாகவே அதிக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த நிலையில் கயாடு லோகர் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற துவங்கியுள்ளார்.

ஏற்கனவே இவர் நடிகர் அதர்வா நடிக்கும் இதயம் முரளி திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் இவர் இப்படி பிரபலமடைந்திருப்பது அந்த படக்குழுவிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

டிராகன் திரைப்படம் 6 நாள் வசூல் நிலவரம்..! அடுத்த சாதனையை செய்த பிரதீப் ரங்கநாதன்.!

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். அவர் முதன் முதலாக  நடித்த லவ் டுடே திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படம் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 80 கோடிக்கு மேல் ஹிட் கொடுத்தது.

அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு கதாநாயகனாக நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அவரது சம்பளமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டிராகன் மற்றும் எல்.ஐ.கே ஆகிய 2 படங்களில் தற்சமயம் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

இந்த நிலையில் டிராகன் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இருந்தே இந்த படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரித்தது. அதனை தொடர்ந்து 3 நாட்களில் 50 கோடி வரை வசூல் செய்தது இந்த திரைப்படம்.

இந்த நிலையில் தற்சமயம் 6 நாட்களில் 75 கோடி வசூல் செய்துள்ளது. எனவே எப்படியும் 10 நாட்களுக்குள் இந்த திரைப்படம் 100 கோடி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என் அம்மா அப்பாக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. வெளிப்படையாக பதிவிட்ட டிராகன் பட இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக மாறியிருப்பவர் நடிகர் அஸ்வத் மாரிமுத்து. எப்படி பிரதீப் ரங்கநாதன் இரண்டே திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இவ்வளவு பிரபலமாகி இருக்கிறாரோ அதே போல இரண்டே திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.

அவரது முதல் படமான ஓ மை கடவுளே திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. இருந்தாலும் தொடர்ந்து அடுத்த கதையை சில வருடங்கள் கழித்தே படமாக்கினார்.

அப்படியாக அவர் படமாக்கிய திரைப்படம்தான் டிராகன்., தற்சமயம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது டிராகன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் வழக்கமான காலேஜ் நாயகன் போலவே கதைக்களம் அமைந்தாலும் பிறகு கதையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

வாழ்க்கையில் முன்னேற கல்லூரி படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை திரைப்படம் உணர்த்துகிறது. இந்த படம் பலருக்கும் பிடித்த படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இதுக்குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் அஸ்வத் மாரிமுத்து.

அந்த பதிவில் அவர் கூறும்போது என் தாய் தந்தையரிடம் நான் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன். நான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற அவர்களது ஆசையில் மண்ணை அள்ளி போட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். என் ஆசைக்காக என்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்து அதில் ஒழுங்காக படிக்காமலும் இருந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த மன்னிப்பு கேட்கும் விதமாகதான் டிராகன் படத்தை எடுத்தேன் என கூறியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

சிவகார்த்திகேயனை ஓரம் தள்ளிய பிரதீப்… ஸ்கோர் செய்யும் டிராகன். பட விமர்சனம்!..

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் டிராகன். இந்த திரைப்படத்தில் அனுபாமா மற்றும் கயடு லோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். மேலும் கே.எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், வி.ஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் கதை குறித்து ஏற்கனவே கலவையான விமர்சனங்கள் இருந்து வந்தன லவ் டுடே திரைப்படத்திலேயே நிறைய அபத்தமான விஷயங்கள் இருந்தன. அதே போலவே கல்லூரியில் மாஸ் காட்டுவதுதான் கெத்து என்று இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் கதை களமாக இது இருக்கலாம் என பேச்சு இருந்து வந்தது.

ஆனால் ஒரு நல்ல கதைகளத்தை கொண்டுள்ளது டிராகன் திரைப்படம். படத்தின் கதைப்படி பிரதீப் ரங்கநாதன் பள்ளியில் டாப் ரேங்க் வாங்கும் ஒழுக்கமான மாணவனாக இருந்து வருகிறார். அந்த சமயத்தில் அவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அந்த பெண் நல்ல பையனை பிடிக்காது என கூறி அவரை நிராகரிக்கிறார்.

இதனால் கோபமடைந்த பிரதீப் கல்லூரியில் முழுக்க முழுக்க ரவுடித்தனம் செய்துக்கொண்டு சுற்றுகிறார். இதனால் காதல் எல்லாம் கிடைக்கிறது. ஆனால் கல்லூரி முடித்த பிறகு வேலை மட்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர் என காதலியும் பிரதீப்பை விட்டு செல்கிறார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் ஜெயிக்க பிரதீப் செய்யும் விஷயங்கள்தான் படமாக இருக்கிறது. கல்லூரி வாழ்க்கையை பொறுத்தவரை அதில் ஊதாரியாக சுற்றுவது மாஸ் கிடையாது. நன்றாக படிப்பதுதான் மாஸ் என்பதைதான் கதை விளக்குகிறது. அந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை கருத்தியல் ரீதியாக ஓரம் தள்ளியுள்ளது டிராகன்.

அதே மாதிரி ஒரு விஷயத்துக்காக தவறு செய்கிறேன் என இறங்கினால் பிறகு தவறு மட்டுமே செய்யும் சூழ்நிலைகள்தான் ஏற்படும் என்பதை படம் விளக்குகிறது. ஓ மை கடவுளே திரைப்படம் போலவே இந்த படமும் அஸ்வத் மாரிமுத்துக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.