கயாடு லோகர் தற்சமயம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவர் நடித்த முதல் திரைப்படமே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று தந்துள்ளது. டிராகன் திரைப்படமும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
பிரதீப் ரங்கநாதனுக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது டிராகன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகிய இருவருமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். என்னதான் அனுபாமாவின் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் கயாடுதான் பிரபலமடைந்தார்.
இதுக்குறித்து கயாடு லோகர் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது டிராகன் திரைப்படத்தில் முதலில் எனக்கு அனுபாமா நடித்த கீர்த்தி கதாபாத்திரம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் இடையில் இயக்குனர் என்னை பல்லவி கதாபாத்திரத்திற்கு மாற்றினார்.
பல்லவி கதாபாத்திரத்தை மக்கள் அதிகமாக ரசிப்பார்கள் என அவர் கூறினார். அதே மாதிரியே பல்லவி கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதே போல பிரதீப் ரங்கநாதனிடமும் நடிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார் கயாடு லோகர்.