ரஜினியை வச்சி படம் பண்ணிட்டு ஜெயலலிதாவால் பயந்து போனேன்.. கே.எஸ் ரவிக்குமாருக்கு நடந்த சம்பவம்.!

கே.எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இப்போது இருக்கும் பெரிய நடிகர்கள் பலரும் பெரிய நடிகர்களாக இல்லாதப்போதே அவர்களை வைத்து ஹிட் கொடுத்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

ஆனால் இப்போது அவர் பெரிதாக திரைப்படங்கள் எல்லாம் இயக்குவதில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து மட்டும் வருகிறார். சமீபத்தில் கூட டிராகன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் தனக்கு படையப்பா திரைப்படத்தின் மூலம் நடந்த அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தை ஜெயலலிதாவை இன்ஸ்ப்ரேஷனாக வைத்துதான் உருவாக்கியிருந்தேன். எப்படி அவர்களுக்கு தெரிந்தது என தெரியவில்லை. படம் திரையரங்கில் ஓடி கொண்டிருந்தப்போதே ஆல்பர்ட் திரையரங்க முதலாளியிடம் பேசி  ஜெயலலிதா அவரது வீட்டிலேயே படையப்பா படத்தை பார்த்துவிட்டார்.

எனக்கு ஒரே பயமாக இருந்தது. முதலமைச்சரை வைத்து இப்படி ஒரு கதாபாத்திரத்தை எடுத்துள்ளோம். எப்போ ஜூப் வருமோ என பயத்தில் இருந்தேன். ஆனால் அன்று எந்த தகவலும் இல்லை. அதனை தொடர்ந்து அதற்கு மறுநாள் ரஜினிகாந்திடம் கேட்டப்போது படம் நன்றாக இருந்தது என ஜெயலலிதா கூறியதாக கூறினார்.

அவரை போலவே ஒரு பெண் கதாபாத்திரம் என்றதும் அது ஜெயலலிதாவுக்கு பிடித்துவிட்டது என அந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version