எங்களை மாதிரி ஆட்களை தூக்கி விடுபவரே சிம்புதான்.. மனம் திறந்த அஸ்வந்த் மாரிமுத்து.!
ஒரு காலகட்டத்தில் அதிக சர்சையான ஒரு நடிகராக இருந்தாலும் கூட இப்பொழுது சிம்பு தொடர்ந்து அதிக வரவேற்பு பெற்ற நடிகராக மாறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் நடிப்பு என்பது மாறி இருக்கிறது. பல தரப்பட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
வெறும் ஆக்ஷன் கதைகளை மட்டும் நடிக்காமல் பத்து தல மாதிரியான திரைப்படங்களைக் கூட தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து சிம்புவை வைத்து சிம்புவின் 51 ஒன்னாவது திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இது குறித்து அஸ்வந்த் மாரிமுத்து கூறும் பொழுது சிம்புவை பொறுத்தவரை ஒரு புதிய இயக்குனர் நல்ல வெற்றி கொடுத்து விட்டான் என்றெல்லாம் அவர் வாய்ப்புகள் கொடுப்பது கிடையாது.
அவரை பொறுத்தவரை புதுசா ஒருத்தன் வந்திருக்கான் அவன தூக்கிவிடணும் என்கிற மனநிலை மட்டும்தான். அதனால்தான் எனக்கு உடனடியாக அவர் வாய்ப்பு கொடுத்தார்.
டிராகன் திரைப்படத்தின் டிரைலரை உருவாக்கிய பொழுது அதை எனக்கு அனுப்பு என்று போன் செய்து கேட்டார். அதை நான் அனுப்பிய பிறகு அதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி சரி செய்ய சொன்னார் அந்த அளவிற்கு மற்றவர்கள் மீது அன்பு செலுத்தக்கூடியவர் சிம்பு என்று கூறியிருக்கிறார் அஸ்வந்த் மாரிமுத்து.