Tag Archives: ராஜமௌலி

உங்களை மிஸ் பண்ணினது வருத்தம்தான்.. சந்தானத்திடம் பேசிய ராஜமௌலி..!

காமெடி நடிகர்களை பொருத்தவரை தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான காமெடி காட்சிகளை அவர்களே அமைத்துக் கொள்வதுதான் வழக்கம்.

நடிகர் வடிவேலு கூட நிறைய திரைப்படங்களில் அவருக்கான காமெடி காட்சிகளை அவரே அமைத்துக் கொள்வார். அதேபோலதான் நடிகர் சந்தானமும் இது குறித்து சந்தானம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது பொல்லாதவன் திரைப்படத்தில் நான் நடித்த பொழுதே வெற்றிமாறன் எனக்கு என்று எந்த காட்சியும் எழுதவில்லை. தயாரிப்பாளர் சொன்னதால்தான் என்னை அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

அப்பொழுதே வெற்றிமாறன் என்னிடம் கூறியது என்னவென்றால் நடிகர் கருணாஸுக்காக சில காட்சிகள் நான் படத்தில் வைத்திருக்கிறேன். உங்களுக்கென்று எந்த கட்சியும் நான் எழுதவில்லை. எனக்கு காமெடியாக எழுதவும் தெரியாது.

எனவே நீங்களே உங்களுக்கான காட்சிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். நானும் அந்த இடத்திற்கு தகுந்த மாதிரியான காமெடிகளை உருவாக்கினேன். அது நல்ல வரவேற்பையும் பெற்றது. அதேபோல நான் ஈ திரைப்படத்தில் நான் நடித்த பொழுது இயக்குனர் ராஜமௌலி அதை தான் கூறினார்.

எனக்கு காமெடி எல்லாம் எழுத தெரியாது திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்திற்கு டயலாக்கே கிடையாது அவருக்கு தகுந்த மாதிரியாக காமெடி காட்சிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

நானும் மைண்ட் வாய்ஸில் பேசுவது போலவே அந்த கதாபாத்திரத்தை அமைத்திருந்தேன் பிறகு ராஜமவுலி அந்த படத்தை பார்த்த பிறகு உங்களை நான் மிஸ் செய்து விட்டேன் என்று என்னிடம் கூறினார் என்று சந்தானம் இந்த நிகழ்வுகளை பகிர்ந்து விட்டார்.

ராஜமௌலி முக்கோண காதலின் அதிர்ச்சி பின்னணி..!

 

இயக்குனர் ராஜமௌலி குறித்த விஷயங்கள்தான் இப்போது தென்னிந்திய சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயங்களாக இருந்து வருகின்றன.இயக்குனர் ராஜமௌலியின் நண்பர் என கூறிய ஒருவர் வெளியிட்ட மரண வாக்குமூலம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜமௌலி குறித்து வீடியோ வெளியிட்ட அவர் நானும் ராஜமௌலியும் ஒரு பெண்ணுடன் நட்பாக இருந்து வந்தோம். ராஜமௌலி அந்த பெண்ணை காதலித்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு என் மேல்தான் காதல் இருந்தது. எனவே என் மீது அவர் காதல் கொண்டார்

எங்களுக்குள் நெருக்கமான காதல் உருவானது. இதனால் என்னை ராஜ மௌலி தொல்லை செய்ய துவங்கினார் என்றெல்லாம் கூறியிருந்தார் அந்த நபர். இந்த நிலையில் இதுக்குறித்து போலீஸ் விசாரணை நடத்துமா? என ஒரு பக்கம் கேள்விகள் எழுந்து வருகின்றன.

1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அடுத்த படம்.. ராஜமௌலியின் பட பூஜை நடந்தது..!

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ராஜமௌலி. ராஜமௌலி இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களாகதான் இருக்கும்.

ஆனால் அவர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிட் கொடுத்துவிடும் என்பதால் பல நடிகர்கள் நீ நான் என போட்டி போட்டுக்கொண்டு அவரிடம் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். ஆனால் ராஜமௌலி தொடர்ந்து தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அடுத்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து திரைப்படத்தை இயக்க இருக்கிறார் ராஜமௌலி. இந்த திரைப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது.

இந்த படம் முழுக்க முழுக்க அமேசான் காடுகளில் எடுக்கப்படும் சாகச படமாக இருக்கும் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 1000 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் உருவாகிறது. வருகிறா 2027 ஆம் ஆண்டு முதல் பாகமும் 2029 ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

அன்னைக்கு நான் தேர்ந்தெடுத்த தவறான பாதை.. இன்னமும் அங்கேயே நிக்கிறேன்.. ராஜமௌலியிடம் மனம் வருந்திய சூர்யா.!

ஒரு காலகட்டத்தில் நடிகர் அஜித் விஜய்க்கு போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. ஆனால் போகப் போக 2000 களுக்கு பிறகு சூர்யா தேர்ந்தெடுத்த நிறைய கதைகள் அவருக்கு தோல்வியை பெற்றுக் கொடுத்தன.

அந்த சமயங்களில் தொடர்ந்து ஆக்ஷன் கதைகளாக தேர்ந்தெடுத்து அஜித் மற்றும் விஜய் இருவரும் சினிமாவில் முக்கிய நடிகர்களாக மாறினார்கள். இப்பொழுது அஜித் விஜய் இடத்தை சூர்யா தொட முடியாத அளவிற்கு அவர்கள் இருவரும் பெரிய நடிகர்களாக மாறிவிட்டனர்.

இந்த நிலையில் நிறைய நல்ல படங்களில் வாய்ப்புகள் வந்தும் அவற்றை தவறவிட்டிருந்தார் சூர்யா. சமீபத்தில் கங்குவா திரைப்படத்திற்காக அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது அங்கு ராஜமௌலியும் வந்திருந்தார்.

surya kanguva

ராஜமௌலி கொடுத்த வாய்ப்பு:

அப்பொழுது ராஜமௌலியிடம் பேசிய சூர்யா அவருடைய திரைப்படம்  தவறவிட்டது குறித்து பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ராஜமௌலி காட்டிய பாதையை அன்று தவறவிட்டதன் காரணமாக இன்னமும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

அதாவது ராஜமௌலி பெரும் இயக்குனர்களாக மாறுவதற்கு முன்பு அவர் இயக்கிய திரைப்படம் மகதீரா. இந்த திரைப்படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்தார். ஆனால் முதலில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தது நடிகர் சூர்யாதான்.

ஆனால் அந்த கதையை கேட்டுவிட்டு சூர்யா நடிப்பதற்கும் மறுத்துவிட்டார் அந்த சமயத்தில்தான் சூர்யா ரத்த சரித்திரம் என்கிற மற்றொரு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் ரத்த சரித்திரம் பெரும் தோல்வியை பெற்று கொடுத்தது. மகதீரா திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த விஷயத்தைதான் போட்டியில் பகிர்ந்து இருந்தார் சூர்யா.

உங்களை விட அந்த இயக்குனர்தான் எனக்கு முக்கியம்.. ராஜமௌலியை அவமானப்படுத்திய ஹிந்தி நடிகர்.. அவர்லாம் இயக்குனரா?

Rajamouli has given many hits in South Indian cinema. When he goes to a function in Bollywood, he is mocked by a big actor.

தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ராஜமௌலி இந்தியாவிலேயே அதிகமாக 1000 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை படைத்த படங்களை இயக்கியவர் ராஜமௌலிதான்.

அதுவும் தென்னிந்தியாவிலிருந்து இப்படி ஒரு இயக்குனர் இந்திய அளவில் பிரபலம் அடைந்திருப்பது இதுவே முதல் முறை. ராஜமௌலி இயக்கிய பாகுபலி மாதிரியான திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

ராஜமௌலி புகழ் ஹாலிவுட்டிற்கு சென்ற பிறகு அவர் இயக்கிய நான் ஈ திரைப்படம் மீண்டும் ஹாலிவுட்டில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. அந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பு கிடைத்திருப்பது வட இந்தியாவில் உள்ள திரை பிரபலங்களுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு பேச்சு உண்டு.

ரன்பீர் கபூர் சொன்ன விஷயம்:

ஏனெனில் வட இந்தியாவில் கூட அந்த சமயங்களில் ஆயிரம் கோடி ரூபாய் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் வெளியாகவில்லை. ஆனால் தென்னிந்தியாவில் இருந்து வெளியாகி இருந்தது. தென்னிந்தியாவை விட வட இந்திய சினிமா மார்க்கெட் மிகவும் பெரியது என்றாலும் கூட ராஜமௌலியின் சாதனையை முறியடிக்க அவர்களுக்கு அதிக காலம் எடுத்தது.

ranbir kapoor

இந்த நிலையில் ராஜமௌலி ஒரு ஹிந்தி விழாவில் கலந்து கொண்ட பொழுது ஹிந்தியில் பிரபல நடிகரான ரன்பீர் கபூரிடம் ஒரு கேள்வியை கேட்டார். அதாவது ரன்பீர் கபூரிடம் உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டார்.

அதற்கு சந்திப் ரெட்டி வங்கா அவர்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருந்தார் ரன்பீர் கபூர். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் படம் நடிக்க வேண்டும் அல்லது என்னுடைய இயக்கத்தில் படம் நடிக்க வேண்டுமென்றால் யாருடைய இயக்கத்தில் படம் நடிப்பீர்கள் என்று அவரிடம் கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்தார் ரன்பீர் சிங்.

அவர் கூறும்போது சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தான் நான் நடிப்பேன் என்று கூறினார். இது ராஜமௌலியை அவமானப்படுத்தும் விதமாக இருந்தது. யார் அந்த சந்தீப் ரெட்டி வங்கா என்று பார்க்கும் பொழுது அர்ஜுன் ரெட்டி. அனிமல் மாதிரியான திரைப்படங்களை இயக்கியவர் தான் அவர்.

இதனை அறிந்த நெட்டிசன்கள் அவர் சைக்கோ படம் போல திரைப்படங்களை எடுப்பவர் அவரும் ராஜமௌலியும் ஒன்றா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த நடிகரோட என்னால நடிக்க முடியாது..! இயக்குனர் ராஜமௌலியே அழைத்தும் நடிக்க மறுத்த த்ரிஷா..!

அமீர் இயக்கிய மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. மிக இளம் வயதிலேயே தன்னுடைய 17 வயதிலேயே திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் த்ரிஷா.

அதனை தொடர்ந்து அவருக்கு அதிக வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து லேசா லேசா, சாமி மாதிரியான படங்களில் நடித்து வந்த த்ரிஷாவிற்கு கில்லி திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து த்ரிஷா திருப்பாச்சி, ஆதி என்று பல திரைப்படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து வந்தார்.

த்ரிஷா வெற்றி:

விஜய்யுடன் அதிக படங்களில் சேர்ந்து நடித்த நடிகையாக த்ரிஷாதான் பார்க்கப்படுகிறார். அந்த அளவிற்கு அவர்கள் இருவரின் காம்போ என்பது ஒரு வெற்றி காம்போவாக அமைந்திருக்கிறது. அவர்கள் வெற்றியடையாத ஒரு திரைப்படம் என்றால் அது ஆதி திரைப்படம் மட்டும்தான்.

இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் த்ரிஷாவிற்கு மார்க்கெட் குறைய தொடங்கியது. ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே வாய்ப்பு பெற்று நடித்து வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார் த்ரிஷா.

ரீ எண்ட்ரி:

திரும்பவும் தமிழ் சினிமா மக்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து தற்சமயம் மீண்டும் பெரும் நடிகர்களுடன் நடிக்க தொடங்கி இருக்கிறார் த்ரிஷா.

இந்த நிலையில் முன்பே த்ரிஷாவிடம் ராஜமௌலி ஒரு படத்திற்கு நடிக்க சொல்லி கேட்டதாகவும் ஆனால் அதற்கு த்ரிஷா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. காமெடி நடிகர் சுனில் நடித்த மரியாதை ராமண்ணா என்கிற படத்தில் த்ரிஷாவை கதாநாயகி நடிக்க அழைத்துள்ளார் ராஜமௌலி.

ஆனால் காமெடி நடிகர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தால் அது மார்க்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் த்ரிஷா அதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பாகுபலி அடுத்த பார்ட் எடுக்கப்போறோம்… கன்ஃபார்ம் செய்த ராஜமௌலி…

ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி தமிழில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். அதன் இரண்டாம் பாகமும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் என்னவென்று தெரிந்தும் கூட அதை ஆர்வமாக பார்க்கும்படி செய்திருப்பார் ராஜமௌலி. இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியான பிறகு அதன் மூன்றாம் பாகம் வேண்டும் என தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இதற்கு முன்பு இதுக்குறித்து பிரபாஸிடம் கேட்டப்பொழுது பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் என் கையில் இல்லை. அது இயக்குனர் ராஜமௌலி கையில்தான் இருக்கிறது. ஆனால் பாகுபலி திரைப்படம் எனது இதயத்துக்கு நெருக்கமான திரைப்படம் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குனர் ராஜமௌலியிடமும் கூட பாகுபலி 3 ஆம் பாகம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி பாகுபலி 3 ஆம் பாகம் கண்டிப்பாக வரும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ராஜமௌலி இயக்கத்தில் களம் இறங்கும் டேவிட் வார்னர்.. இது என்னப்பா புதுக்கதை!..

ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரராக இருந்தாலும் இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவர் டேவிட் வார்னர். இவர் ஆடும் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, டிக்டாக்கில் தெலுங்கு, தமிழ் பட பாடல்களுக்கு இவர் ஆடும் ரீல்ஸுக்கு கண்டிப்பாக ஏராளமான பேன்ஸ் இருப்பார்கள்.

தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் பாடல்களுக்கு டேவிட் வார்னர் செய்த ரீல்ஸ் ட்ரெண்டான நிலையில் தற்போது ரசிகர்கள் அவரை ‘புஷ்பா’ வார்னர் என்றே அழைத்து வருகின்றனர். கிரிக்கெட் மைதானத்தில் ஃபீல்டிங்கில் நிற்கும்போது கூட புஷ்பா பாட்டு போட்டால் வார்னர் ஆடி விடுவார்.

விரைவில் வார்னர் தெலுங்கு படத்தில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என ரசிகர்கள் பேசி வந்த நிலையில் அப்படியான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

தெலுங்கி சினிமாவில் மகதீரா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி, பின்னர் பாகுபலி, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட பல பேன் இந்தியா வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இவரது பாகுபலி -2, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்கள் உலகளவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்தவை.

தற்போது தனது 29வது படத்தை இயக்கி வரும் ராஜமௌலி கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை இயக்குவதாக விளம்பர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.க்ரெட் செயலி குறித்த அந்த விளம்பரத்தில் பேமண்டில் டிஸ்கவுண்ட் வேண்டும் என ராஜமௌலி கேட்க, அதற்கு தன்னை வைத்து படம் இயக்க வேண்டும் என வார்னர் கேட்கிறார்.

அதை தொடர்ந்து ராஜமௌலியின் பிரபலமான பாகுபலி உள்ளிட்ட படங்களில் வார்னர் நடிப்பது போன்ற ஷூட்டிங் காட்சிகள் காட்டப்படுகின்றன. காமெடியான இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இதை பகிர்ந்து வரும் ரசிகர்கள் பலரும் விரைவில் டேவிட் வார்னர் ராஜமௌலி படத்தில் நிஜமாகவே நடிக்கும் காலம் வரும் என்று கூறி வருகின்றனர்.

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவரா இவரு!.. அஜித் செய்கையால் ஆடி போன ராஜமௌலி!..

Rajamouli and  Ajithkumar : தெலுங்கு திரை உலகின் பெரும் சக்கரவர்த்தி என்று ராஜமௌலியை கூறலாம். தெலுங்கு சினிமா என்றாலே கவர்ச்சியான காட்சிகளும் சண்டை காட்சிகள் மட்டும்தான் இருக்கும் என்று இருந்த தமிழ் மக்களின் மனதில் தெலுங்கு சினிமாவிலும் நல்ல திரைப்படங்கள் உண்டு என்கிற விதையை போட்டவர் ராஜமௌலி.

ராஜமௌலி திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வரத் துவங்கிய பிறகுதான் தெலுங்கு சினிமாவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு வரத் துவங்கியது. இப்போதும் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ராஜமௌலி இயக்கி இருக்கலாம் என கூறும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கதான் செய்கிறது.

அப்படிப்பட்ட ராஜமௌலியே தமிழ் நடிகர் அஜித்தை பார்த்து வியந்து போன சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு முறை ஒரு ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சாப்பிடலாம் என்று சென்றிருக்கிறார் ராஜமௌலி. அப்பொழுது அவர் பார்க்கும் தூரத்தில் இன்னொரு மேஜையில் அஜித் அமர்ந்திருக்கிறார்.

அஜித்திற்கு ராஜமௌலியை பார்த்தவுடனேயே அவருக்கு தெரிந்து விட்டது இவர் பாகுபலி பட இயக்குனர்தான் என்று, உடனே அங்கு சென்று ராஜமௌலிக்கு கை கொடுத்து சார் நான்தான் அஜித் தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கிறேன் என்று அறிமுகம் கொடுத்து இருக்கிறார்.

ராஜமௌலிக்கு ஏற்கனவே அஜித்தை தெரியும் என்றாலும் அவர் பேசுவாரா என்கிற சந்தேகத்தில் அவர் அஜித்தை பார்த்தும் பார்க்காதது போல இருந்தார் இருந்தும் அஜித்தே வந்து பேசவும் அவருக்கு கை கொடுத்து பேசியிருக்கிறார் ராஜமௌலி.

பிறகு குடும்பத்துடன் ராஜமௌலி வந்து இருக்கிறார் என்பதை அறிந்து மீண்டும் போய் தனது மேஜையில் அமர்ந்து கொண்டார் அஜித். அதன் பிறகு ராஜமௌலியின் மனைவி வந்தவுடன் அங்கிருந்து சைகை மூலம் உங்களது மனைவியா என்று கேட்டிருக்கிறார் அஜித்.

ஆமாம் என்று ராஜமௌலி கூறவும் திரும்பவும் எழுந்து வந்து அவருக்கும் கை கொடுத்து தன்னை அறிமுகம் செய்திருக்கிறார் அஜித். இதை பேட்டியில் கூறிய ராஜமௌலி தமிழ் சினிமாவில் கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு மனிதர் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று நான் ஆச்சரியப்பட்டு போய் விட்டேன் என்று இந்த நிகழ்வு குறித்து கூறி இருக்கிறார்.