Latest News
அந்த நடிகரோட என்னால நடிக்க முடியாது..! இயக்குனர் ராஜமௌலியே அழைத்தும் நடிக்க மறுத்த த்ரிஷா..!
அமீர் இயக்கிய மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. மிக இளம் வயதிலேயே தன்னுடைய 17 வயதிலேயே திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் த்ரிஷா.
அதனை தொடர்ந்து அவருக்கு அதிக வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து லேசா லேசா, சாமி மாதிரியான படங்களில் நடித்து வந்த த்ரிஷாவிற்கு கில்லி திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து த்ரிஷா திருப்பாச்சி, ஆதி என்று பல திரைப்படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து வந்தார்.
த்ரிஷா வெற்றி:
விஜய்யுடன் அதிக படங்களில் சேர்ந்து நடித்த நடிகையாக த்ரிஷாதான் பார்க்கப்படுகிறார். அந்த அளவிற்கு அவர்கள் இருவரின் காம்போ என்பது ஒரு வெற்றி காம்போவாக அமைந்திருக்கிறது. அவர்கள் வெற்றியடையாத ஒரு திரைப்படம் என்றால் அது ஆதி திரைப்படம் மட்டும்தான்.
இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் த்ரிஷாவிற்கு மார்க்கெட் குறைய தொடங்கியது. ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே வாய்ப்பு பெற்று நடித்து வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார் த்ரிஷா.
ரீ எண்ட்ரி:
திரும்பவும் தமிழ் சினிமா மக்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து தற்சமயம் மீண்டும் பெரும் நடிகர்களுடன் நடிக்க தொடங்கி இருக்கிறார் த்ரிஷா.
இந்த நிலையில் முன்பே த்ரிஷாவிடம் ராஜமௌலி ஒரு படத்திற்கு நடிக்க சொல்லி கேட்டதாகவும் ஆனால் அதற்கு த்ரிஷா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. காமெடி நடிகர் சுனில் நடித்த மரியாதை ராமண்ணா என்கிற படத்தில் த்ரிஷாவை கதாநாயகி நடிக்க அழைத்துள்ளார் ராஜமௌலி.
ஆனால் காமெடி நடிகர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தால் அது மார்க்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் த்ரிஷா அதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.