ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் ரவி மோகன். பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்கிற அளவில் இருந்தார் ரவி மோகன்.
ஆனால் சமீப காலங்களாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெறாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்து கதைகளங்களை தேர்ந்தெடுப்பதில் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கு நடுவே ரவி மோகனின் சொந்த வாழ்க்கை குறித்த விஷயங்கள் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. அந்த வகையில் ஆர்த்தி மற்றும் ரவி மோகனின் விவாகரத்து குறித்த விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டு வந்தது.
அதற்கு பிறகு பாடகி கெனிஷாவுக்கும் ரவி மோகனுக்கும் இடையே உறவு இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன. இதனை தொடர்ந்து ரவி மோகன் இதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு ரவி மோகன் கெனிஷாவுடன் ஜோடியாகவே வந்திருந்தார்.
இதுக்குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் கூறும்போது கெனிஷாவுக்காக ரவி மோகன் கோவாவில் ஒரு வீடே கட்டி கொடுத்துள்ளார் என அவர் கூறியிருப்பது இப்போது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.