தமிழ் சினிமாவில் குணசத்திர வேடங்களில் நடித்து வரும் பல நடிகர், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து தற்போது முன்னணி நடிகர் நடிகைகளாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வாழ்ந்திருக்கும் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன்.
பல படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், ஆரம்ப காலகட்டத்தில் தொகுப்பாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி சினிமாவில் தனக்கான மார்க்கெட்டை வைத்திருக்கிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நன்றி மறந்த சிவகார்த்திகேயன்
இந்நிலையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும் பொழுது, சிவகார்த்திகேயன் இன்று பெரிய நடிகராக வளர்ந்து இருப்பதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ். பாண்டியராஜ் அவரை மெரினா படத்தில் அறிமுகப்படுத்தினாலும், அதன் பிறகு மனம் கொத்தி பறவை படத்தில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் தனுஷ் தான் நடித்த 3 திரைப்படத்தில் அவரை காமெடியனாக அறிமுகம் செய்தார்.
அதன் பிறகு எந்த நடிகரும் செய்யாததை நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்த படமான எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். இதனால் மக்கள் பலருக்கும் எதிர்நீச்சல் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்தப் படத்திற்கு பிறகு தான் சிவகார்த்திகேயனின் வாழ்க்கை மாறியது. மேலும் தனுஷ் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக மாற வேண்டும் என்றால் அவரின் உடல் தோற்றம் சற்று மாறுபட வேண்டும் என்பதற்காக தான் உடற்பயிற்சி செய்யும், அதே உடற்பயிற்சி கூடத்தில் சிவகார்த்திகேயனையும் பணம் கட்டி சேர்த்துள்ளார்.
மேலும் வெற்றிமாறன் ஒரு இடத்தில் பேசும் போது கூட தனுஷ் தன்னிடம் ஒரு நகைச்சுவை கதை இருந்தால் கூறுங்கள் என கூறி இருக்கிறார். வெற்றிமாறன் ஏன் இது போன்ற கதையை கேட்கிறீர்கள் என கேட்டதற்கு தனுஷ் இந்த கதை எனக்கு அல்ல சிவகார்த்திகேயனுக்கு என கூறியுள்ளதர். அவர் ஒரு திறமையான நடிகர் அவருக்கு இதுபோன்ற கதாபாத்திரங்கள் கொடுத்தால் நல்லா இருக்கும் என தனுஷ் கூறினார் என வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் கூறி இருப்பதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்தார்.
மேலும் பிஸ்மி கூறும் பொழுது தனுஷ் எந்த ஒரு இடத்திலும் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டது நான் தான், என்னால் தான் அவர் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என எங்கும் குறிப்பிட்டது இல்லை என அவர் தெரிவித்தார். ஆனால் சிவகார்த்திகேயன் அதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது அவரைப் பற்றி பேசியிருக்கும் கருத்து அனைவராலும் வெறுக்கப்படுகிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் கொடுக்காளி டிரைலர் நிகழ்ச்சியில் பேசியது என்ன?
நடிகர் சூரி நடித்து வரும் கொடுக்காளி திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் யாரையும் நான் கண்டுபிடித்து அவருக்கு நான் வாழ்க்கை கொடுத்துவிட்டேன், வளர்த்து விட்டேன் என சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லியே பழகி விட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் கிடையாது. இவ்வாறாக சிவகார்த்திகேயன் பேசியிருந்தார். பலரும் சிவகார்த்திகேயன் தனுஷ் தான் குறிப்பிடுகிறார் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.