All posts by Vishnu

GOAT Movie: அந்த ஹாலிவுட் படத்தோட கதைதான் கோட் கன்ஃபார் ஆயிடுச்சு!..

வெகு காலங்களாகவே விஜய் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வரும் திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படம் குறித்து பல செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தன.

முக்கியமாக இது ஏதோ ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல்தான் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அதெல்லாம் இல்லை படம் தனிப்பட்ட ஒரு கதையை கொண்டு எடுக்கப்படுகிறது என்று படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டது.

GOAT Movie:

இதனை அடுத்து கோட் படத்தின் சர்ச்சை கொஞ்சம் அமைதியாகியிருந்தது. ஆனால் அந்த படத்தின் பாடல்கள் விஜய் ரசிகர்களுக்கு அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. இந்த நிலையில் நேற்று திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

ட்ரெய்லர் வெளியானது முதலே அதற்கு அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்து வாழ்கின்றன. பலரும் படத்தின் டிரைலரை தொடர்ந்து பார்த்து வருகின்றனர் யூட்யூபில் அதிகமான பார்வையாளர்களைப்  பெற்ற டிரைலராக கோட் திரைப்படத்தின் டிரைலர் மாறி இருக்கிறது.

விஜய் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து சண்டையிடுவது போன்ற காட்சிகள் இருக்கின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட்டில் வெளியான ஜெமினிமேன் என்கிற திரைப்படத்தின் தழுவல்தான் கோட் என்று பேச துவங்கியிருக்கின்றனர்.

ஹாலிவுட் படம்:

ஜெமினிமேன் திரைப்படத்தின் கதையை பொருத்தவரை அதில் கதாநாயகன் இதே மாதிரியான ஒரு ரகசிய ஏஜெண்டாக இருந்து வருவார். இந்த நிலையில் அவரை யாராலும் எதிர்க்கொள்ள முடியாது அந்த அளவிற்கு திறமையான ஒரு ஏஜெண்டாக அவர் இருப்பார்.

ஆனால் அந்த நிறுவனம் ஒரு கட்டத்திற்கு மேல் ரகசியங்கள் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவர்களது நிறுவனத்தில் பணிபுரிபவர்களை கொலை செய்வார்கள். அந்த வகையில் கதாநாயகனை கொலை செய்ய ஒரு நபரை அனுப்புவார்கள் .

அது யார் என்று பார்க்கும் பொழுது இளம் வயது கதாநாயகனாக இருப்பான் குளோனிங் முறையில் அவனை உருவாக்கி இருப்பார்கள். அந்த படத்தை வைத்துதான் கோட் என்று படமாக்கி இருக்கின்றனர். ஆனால் அதில் க்ளோனிங் முறையில் இருந்ததற்கு பதிலாக இதில் அப்பா மகன் என்று வைத்திருக்கிறனர் என்று இது குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களும் வெளிவரவில்லை.

முன்னழகை கழட்டி காட்டும் விடுதலை பட நடிகை!.. இளசுகள் மத்தியில் பிரபலம்..

சினிமாவில் பல அறிமுக நடிகைகள் தங்களுடைய திறமையான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் சினிமா பின்புலத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வரும் வாரிசு நடிகர், நடிகைகள் கூட சுலபமாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அதனை தக்க வைத்துக் கொள்வதற்கு அவர்கள் போராட வேண்டும்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இசை குடும்பத்தில் இருந்து வந்த நடிகை பவானி ஸ்ரீ. ஒரு சிலரால் அறியப்பட்ட நடிகையாகவும், பலரால் அறியப்படாத நடிகையாகவும் உள்ளார். தற்பொழுது தமிழ் சினிமாவில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி இருக்கும் பவானி ஸ்ரீ, பல புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

நடிகை பவானி ஸ்ரீ

இவர் நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆவார். ஜி. வெங்கடேஷ் மற்றும் பின்னணி பாடகிஏஆர் ரெய்ஹானாவின் மகள் ஆவார். இவர் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி பிரகாஷின் தங்கையாவார்.

இந்நிலையில் பவானி ஸ்ரீ பாவக்கதைகள், கா பே ரண சிங்கம் மற்றும் விடுதலைப் பகுதி ஒன்றில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு zee5-வில் வெளியிட்ட தெலுங்கு வெப் சீரிஸான ஹைப்ரிஸ்டஸ் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த கா பே ரண சிங்கத்தில் நடித்திருந்தார். ஒரு நடிகையாக அறிமுகமானது இதுதான் முதல் படம்.

நெட்ஃபிளிக்ஸில் வெளியான பாவ கதைகள் என்ற தமிழ் தொகுப்புரை படத்தின் சுதா கொங்கராவின் தங்கம் பிரிவில் அவர் நடித்துள்ளார். மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான புத்தம் புது காலை என்ற தமிழ் தொகுப்பு திரைப்படத்தில் மூன்று பாடல்களை பாடியுள்ளார்.

அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் விடுதலை பாகம் 1 சூரியுடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார் பாவனி ஸ்ரீ.

சமூக வலைத்தளங்களில் பவானி ஸ்ரீ

தற்போது சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கும் பவானி ஸ்ரீ பல படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பவானி ஸ்ரீ பல வித்தியாசமான புகைப்படங்களை இணைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வந்து கொண்டு இருக்கும் பவானி ஸ்ரீ அவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு சிலர் விடுதலை படத்தில் நடித்த தமிழரசி பாப்பாவா என்று அனைவரும் ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விஜய் மகன் சொன்ன கதையை நோ சொல்லிட்டேன்.. சூரி கொடுத்த அப்டேட்!.

சினிமாவில் தற்போது வாரிசு நடிகர்கள் பலரும் நடித்து வருகிறார்கள். இவ்வாறு சினிமா பின்புலத்தைக் கொண்டு சுலபமாக வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக பல கஷ்டங்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியதாய் இருக்கும்.

அவ்வாறு அவர்களின் திறமையை வெளிக்காட்டினால் மட்டுமே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற முடியும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் நடித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கும் வேளையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜயின் மகன் சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்க இருக்கிறார்.

அவர் பிரபல காமெடி நடிகர் ஒருவருக்கு கதை கூற அவர் அந்த படத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரி

காமெடியனாக தன்னுடைய வாழ்க்கை தொடங்கிய சூரி தற்போது பல முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரின் நடிப்பில் வெளிவந்த விடுதலை, கருடன் என அடுத்தடுத்த படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இதனால் நடிகர் சூரியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் எழுந்துள்ளது. மேலும் அவை நடிப்பில் அடுத்ததாக வெளியாகப் போகும் கொடுக்காளி படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வரும் வேளையில் படத்தின் டிரைய்லர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

காமெடியானாக இதுவரை மக்களை மகிழ்வித்து வந்த சூரி தற்போது பல முக்கிய கதைகளை தேர்வு செய்து தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரியிடம் பிரபல நடிகர் விஜய்யின் மகன் ஜோசன் விஜய் கதை கூறியதாகவும், ஆனால் அந்த கதையை சூரி நிராகரித்து விட்டதாகவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சூரி விளக்கம் அளித்து இருக்கிறார்.

கதையை நிராகரித்ததற்கான காரணம்

சினிமா நடிகர்களின் வாரிசுகள் திரைப்படங்களில் நடிகர்களாக நடிக்க ஆசைப்படும் வேளையில் விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் இயக்குனராக வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, தற்போது தன்னுடைய முதல் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷனில் இயக்க இருக்கிறார்.

மேலும் தன்னுடைய திரைக்கதை பணியில் பிஸியாக இருக்கும் ஜோசன் சஞ்சய் படத்திற்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் விஜயின் மகன் நடிகர் சூரியிடம் ஒரு படத்தின் கதையை கூறியிருக்கிறார். இதை கேட்ட சூரி ஜோசன் சஞ்சயிடம் கதை அருமையாக இருக்கிறது எனவும், நிச்சயம் இந்த படம் வெற்றி அடையும். ஆனால் இது போன்ற படங்களில் நடித்தால் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே நீங்கள் இந்த படத்தை வேறு ஒரு மாஸ் ஹீரோ வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறிவிட்டாராம்.

ட்ரெஸ் போடாம அதை பண்ணுவீங்களா.. தொகுப்பாளரிடம் சர்ச்சை கேள்வி கேட்ட ஸ்டார் பட நடிகை!..

தற்போது சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி வரும் வேலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பெண்களும் தற்போது மாடலிங் துறையை தேர்வு செய்து சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பல தமிழ் பெண்களும் சினிமாவில் சாதிக்க தொடங்கியுள்ள நிலையில் சமீபத்தில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்.

இவர் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசி இருக்கும் கருத்து ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.

நடிகை ப்ரீத்தி முகுந்தன்

ப்ரீத்தி முகுந்தன் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். திருச்சியில் உள்ள என்ஐடி யில் படித்தவர். திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்பனிகேஷன் இன்ஜினியரிங் பி டெக் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் இந்தாண்டு 2024 ஆம் ஆண்டு வெளிவந்த “ஓம் பீம் புஷ்” என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தன் பயணத்தை தொடங்கினார்.

ப்ரீத்தி முகுந்தனின் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். ப்ரீத்தி முகுந்தன் ஏராளமான தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து திரைப்படத்துறையில் பிரபலமானார். மேலும் கல்லூரி பருவத்தில் இருந்தே மாடலிங் துறையை தேர்வு செய்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இவரின் முதல் இசை ஆல்பமான “முத்து மி2” வெளியிட்டு யூடியூப்பில் 4.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றார். இதன் மூலம் திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தை எடுத்தார்.

இதனால் இவருக்கு ஓம் பீம் புஷ் என்று என்ற திரைப்படத்தில் டோலிவுட்டில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. மேலும் கவின் உடன் ஸ்டார் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார். தற்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக ப்ரீத்தி முகுந்தன் இருக்கும் வேளையில் பல பேட்டிகளிலும் பேசி வருகிறார்.

தொகுப்பாளரிடம் சர்ச்சையாக கேள்வி கேட்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன்

பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ப்ரீத்தி முகுந்தனிடம், தொகுப்பாளர் மேக்கப் இல்லாமல் படம் முழுவதும் நடிக்க சொன்னால் நடிப்பீர்களா என கேள்வி கேட்டார். அதற்கு ப்ரீத்தி முகுந்தன் பேண்ட், சர்ட் இல்லாமல் உங்களால் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொன்னால் வழங்குவீர்களா என சர்ச்சையாக கேள்வி கேட்டார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1.8 கோடியில் வீடு.. ஆல்யாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க!.

வெள்ளித்திரையில் பல நடிகைகள் பிரபலமாக உள்ள நிலையில், சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆல்யா மானசா.

இவர் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் சஞ்சீவ் திருமணம் செய்து கொண்டு, தற்போது பிரபலமான ஜோடியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் தற்பொழுது 1.8 கோடிக்கு வீடு கட்டி இருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது ஆல்யா மானசாவின் சம்பளம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

புதிதாக வீடு கட்டி குடியேறிய ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் ஆல்யா மானசா நல்ல பிரபலம் அடைந்தார். மேலும் அந்த நாடகத்தில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த ஆல்யா மானசாவிற்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே வேளையில் சஞ்சீவும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற தொடரில் நடிக்கிறார். இருவரும் சமீபத்தில் புதிய வீடு ஒன்று கட்டி குடியேறினார்கள். சின்னத்திரை நண்பர்கள் அனைவரையும் அழைத்து மகிழ்ச்சியாக அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

தற்பொழுது அவர்கள் வீடு கட்டி குடியிருக்கும் அந்த வீட்டின் மதிப்பு 1.8 கோடி என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீட்டிற்கு அவர்களின் அம்மா அப்பா பெயரை வைத்திருப்பதாகவும் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்கள்.

ஆலியா மானசாவின் ஒருநாள் சம்பளம்

ஆலியா மானசா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் சம்பளத்தை பற்றி கூறியிருக்கிறார். அதில் கடந்த 2002 ஆம் ஆண்டு அவர் இனியா தொடரில் நடிக்கும் போது அவருக்கு ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 20000 முதல் 25000 வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும். தற்பொழுது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஜிம் உடையில் கலக்கும் தனுஷ் பட நடிகை!..

மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா மேனன். கேரளாவை சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய சாதி பெயரை பின்னால் வைத்துக் கொண்டுதான் தமிழ் சினிமாவிற்கு வந்தார் சம்யுக்தா.

ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் யாருமே பின்னால் ஜாதி பெயரை வைத்துக் கொள்வதில்லை என்பதை அறிந்தவுடன் அந்த விஷயம் சம்யுக்தாவிற்கு பிடித்து போனது.

அதனை தொடர்ந்து அவரது பெயரை வெறும் சம்யுக்தா என்று மாற்றிக் கொண்டார். மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான பாப்கான் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் சம்யுக்தா. அதனை தொடர்ந்து மலையாளத்தில் வரவேற்பு பெற்று வந்த இவர் முதன் முதலாக தமிழில் களரி என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.

தமிழில் அறிமுகம்

ஆனால் அந்த திரைப்படம் இவருக்கு பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை ஆனால் தனுஷிற்கு ஜோடியாக இவர் நடித்த வாத்தி திரைப்படம் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என்று இப்பொழுது மூன்று மொழிகளிலும் வாய்ப்புகளை பெற்று வருகிறார் சம்யுக்தா.

இந்த திரைப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார் சம்யுக்தா. அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிடும் சம்யுக்தா உடற் பயிற்சி கூடத்திற்கு சென்று வெளியிட்ட புகைப்படங்கள் அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றன. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் சம்யுக்தா.

தமிழ் சினிமாவில் நடிகர்களே திருவாய் மலர்ந்த பாடல்கள்!.. இவரெல்லாம் பாடி இருக்காரா?

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல பன்முகங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் நடிகர்களாக இருக்கும் ஒரு சிலர் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், திரைகதை எழுத்தாளராகவும், பாடகராகவும் என பன்முகங்களைக் கொண்டவர்களாக சினிமாவில் இருந்து வருவார்கள்.

இந்நிலையில் ஒரு சில நடிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு படத்தில் பாடலை பாடி அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும். இதனால் அவர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இருந்து படத்தில் பாடிய சில நடிகர்களின் பட்டியலை காண்போம்.

தமிழ் சினிமாவில் பாடல் பாடிய நடிகர்கள்

யாரும் எதிர்பாராத வகையில் ஆக்ஷனில், ரொமான்ஸில் கலக்கி கொண்டிருந்த நடிகர்கள் திடீரென்று சினிமாவில் பாடல்கள் பாடி வியப்பை ஏற்படுத்தி இருப்பார்கள். அந்த பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அவர்கள் அடுத்தடுத்து நடிக்கும் பாடல்களில் ஒரு சில பாடல்களை பாடுவார்கள். இதை அவர்கள் வழக்கமாகவே கொண்டு இருப்பார்கள். இந்நிலையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த, யாரும் எதிர்பாராத பாடர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த் தமிழில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும் இவர் உதவி இயக்குனராகவும் பணி புரிந்திருக்கிறார். இந்நிலையில் பல படங்களில் பாடகராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வரும் இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற படத்தில் “அடடா அடடா” என்ற பாடலை பாடியிருப்பார் இது தமிழ் ரசிகர்களுக்கு தற்போது வரை பேவர் பாடல் ஆகும்.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் பானுப்பிரியா இருவரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் “வெத்தலை போட்ட” என்ற பாடல் நடிகர் கார்த்திக் பாடியுள்ளார். இது தற்போது வரை ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் அளவிற்கு இருக்கும்.

நடிகர் நகுல்

இவர் நடிகர் விக்ரமனின் அசத்தலான நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அந்நியன். இந்த திரைப்படத்தில் வரும் “காதல் யானை” என்ற பாடல் நடிகர் நகுல் பாடியுள்ளார்.

நடிகர் விஷால்

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த மத கஜ ராஜா வெளிவரப்படாமல் உள்ள திரைப்படம் ஆகும். இந்த படத்தில் விஷால் பாடிய “மை டியர் லவ்வர்” என்ற பாடலை நடிகர் விஷால் பாடி இருப்பார்

நடிகர் அஜித்

நடிகர் அஜித் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தில் வரும் “சோனா சோனா” என்ற பாடலை ஹரிஹரன் மற்றும் அஜித் பாடியுள்ளார்கள்.

நடிகர் விடிவி கணேஷ்

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்து இங்க என்ன சொல்லுது திரைப்படம். இந்த திரைப்படத்தை வின்சென்ட் செல்வா இயக்கிருந்தார்கள். இந்த படத்தில் வரும் “பட்டாம் பூச்சி ” என்ற பாடல் ஒன்றை நடிகர் விடிவி கணேஷ் பாடியிருப்பார்.

சமந்தா விவாகரத்துக்கு காரணமே சோபிதா தான்.. பல நாள் கழித்து வெளிவரும் உண்மைகள்!..

சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு உள்ளான ஜோடி என்றால் அது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா. யாரும் எதிர்பாராத விதத்தில் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படம் வெளிவர அது ரசிகர்களுக்கும், சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து பெற்ற பிறகு, சோபிதா துலிபாலா உடன் நாக சைதன்யா இருவரை பற்றியும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் அது குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படத்தை நாகார்ஜுனா வெளியிட்டிருந்தா். எனவே அவர்களின் காதல் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரின் பிரிவிற்கு சோபிதா துலிபாலா தான் காரணம் என சமூக வலைத்தளத்தில் தற்பொழுது கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.

நட்சத்திர ஜோடிகளான நாக சைதன்யா சமந்தா

சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா. இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து பின் இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் செய்து கொண்டார்கள்.

அனைவரும் ரசித்த இந்த ஜோடி சிறிது காலங்களிலேயே பிரிந்து விட்டார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு தாங்கள் விவாகரத்து பெறப்போவதாக இருவரும் அறிவித்த நிலையில், சமந்தா நாங்கள் இருவரும் மனம் ஒத்து தான் பிரிகிறோம். எங்களை யாரும் விமர்சிக்க வேண்டாம் என இணையதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து நாக சைதன்யா தற்போது சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்.

நாக சைதன்யாவின் விவாகரத்திற்கு காரணமே சோபிதா தான்

இந்நிலையில் இருவரின் விவாகரத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது. சமந்தா கவர்ச்சியாக நடனமாடுவது, மேலும் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார் மற்றும் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. போன்ற பல காரணங்களினால் தான் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்தார் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் விவாகரத்து குறித்த அறிவிப்பு வெளிவந்த நிலையில் சமந்தாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவர் “இனிமேல் மோசமான பெண் உனக்குத்தான்” என பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது. ஏனென்றால் நாக சைதன்யா அப்பொழுது சோபிதாவுடன் தகாத உறவில் இருந்திருக்கிறார். அதனால் தான் சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்திருப்பார் என பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

என் மகனே தே*** சொன்னதால!.. மனம் வருந்தி படத்தை நிறுத்திய நதியா!.. இதுதான் காரணம்!.

Nadhiya: ஒரு சில நடிகைகளை ரசிகர்கள் எப்பொழுதும் மறப்பதில்லை. சில நடிகைகள் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிடுவார்கள். அந்த வகையில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர் நதியா.

இவர் சினிமாவில் அவருக்கென்று ஒரு வரைமுறையை வைத்து நடித்து வந்தார். இதனாலேயே இவருக்கு ரசிகர் கூட்டங்கள் பல இருந்தது. தமிழில் “பூவே பூச்சூடவா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பிரபல படத்தில் நடிக்க இருந்து அதன் பிறகு விலகி உள்ள நதியா அதற்கான காரணம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நதியா

நடிகை நதியாவிற்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அதிகமான பெண் ரசிகைகளும் இருந்தார்கள். அந்த காலகட்டத்தில் எந்த ஒரு பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லும் அளவிற்கு இருந்தது. உதாரணமாக நதியா புடவை, நதியா வளையல், நதியா பெண்கள் சைக்கிள் என நதியாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

பல படங்களில் நடித்தாலும் கவர்ச்சியான தோற்றங்களில் அவர் நடித்ததில்லை. மேலும் ஆபாசமான காட்சிகளிலும் அவர் நடித்ததில்லை. நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் “எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ” என்ற படத்தில் நடித்தார் இந்த படத்தில் ரி-என்ரி கொடுத்ததன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பிறகு பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். கடந்த 1988 ஆம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

படத்திலிருந்து விலகிய நதியா

தமிழ் சினிமாவில் ஒரு ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் அனைவராலும் நன்றாக அறியக்கூடியவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.

இவரின் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சூப்பர் டீலக்ஸ். இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு அதிகமான சர்ச்சைகளை பெற்றது. முக்கியமாக இந்த திரைப்படம் திருநங்கைகள் குறித்தும், அந்த திரைப்படத்தில் மோசமான காட்சிகள் இடம் பெற்று இருந்ததாகவும் அப்போது அதிகமான சர்ச்சைகள் வெளிவந்தன.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சமந்தா,ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்க கூடிய ஒரு பெண்ணாக அதில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் முதலாவதாக நடிக்க இருந்த நடிகை நதியா.

ஆனால் இந்த படத்தில் இருந்து அவர் விலகியதற்கான காரணம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. நதியா படத்தின் கதையை கேட்டுவிட்டு அவருக்கு பிடித்திருக்கிறது. கதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த கதாபாத்திரத்தில் அவரின் மகனே அவரைத் தே* என்று அழைக்கும் காட்சி இடம் பெற்று இருக்கிறது. இதனை கேட்டதும் நதியாவிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் மகனே அவ்வாறு அழைக்கும் பொழுது அதற்கு எப்படி பதில் அளிப்பது என எனக்கு புரியவில்லை. எனவே இந்த திரைப்படத்தில் இருந்து நான் விலகுகிறேன் என அவர் கூடியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் நதியா அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

படத்தில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து நடித்து வந்த நடிகை நதியா, ஒரு சில காட்சிகளில் நடிப்பதற்கு மறுத்திருக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் இந்த கேரக்டரில் நடித்தால் எங்கு இதுவரை அவர் பெற்ற நல்ல பெயர் போய் விடுமோ என்ற பயத்தினாலும், அந்த கதாபாத்திரத்தில் உடன்பாடு இல்லாததாலும் இந்த படத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.

அதன் பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

சோபிதா துலிபாலா வெர்சஸ் சமந்தா.. சொத்து விஷயத்தில் யாரு பெரிய கை தெரியுமா?

தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் ஹாட் டாபிக்காக மாறி இருக்கும் விஷயம்தான் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்.

நாகர்ஜுனா வீட்டில் எளிமையாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தம் புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

யாரும் எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்தம். நடிகர் நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா அவரின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனைப் பார்த்த நெடிசன்கள் பலரும் தற்போது சோபிதா துலிபாலாவை பற்றி இணையதளங்களில் தேட தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பையும், நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியான நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பையும் ஒப்பிட்டு தற்போது சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறது.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா ஆரம்பத்தில் தமிழ் திரைப்படமான மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ஒரு படம் நடித்து அது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் அவர் தெலுங்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டார். தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த சமந்தா தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல், பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமந்தா தற்பொழுது தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக இருந்து வருகிறார். சினிமா மட்டுமல்லாமல் பல விளம்பர படங்களில் நடித்து வரும் சமந்தா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சோபிதா துலிபாலா

மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சோபிதா துலிபாலா ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவராவார். மேலும் இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 என்ற பட்டத்தை பெற்றார். மாடலாக தன்னுடைய வாழ்க்கை தொடங்கிய போது பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானார். அமேசான் வீடியோ நாடகத் தொடராக வெளிவந்த மேட் இன் ஹெவன் என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

சமீபத்தில் கூட தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கிடையே பிரபலமானார். இந்நிலையில் சமந்தா மற்றும் சோபிதா துலிபாலா இருவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை நெட்டிசன்கள் இணையதளத்தில் தேட ஆரம்பித்துள்ளார்கள்.

நடிகை சமந்தா மற்றும் சோபியா துலிபாலா சொத்து மதிப்பு

நடிகை சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு 7 கோடி முதல் 10 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சமந்தாவின் சொத்து மதிப்பு 80 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது தான் பட வாய்ப்புகள் சோபிதா துலிபாலாவிற்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், சமந்தா பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில் இருவரின் சொத்து மதிப்பையும் விமர்சித்து நெடிசன்கள் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா?.. திடுக்கிடும் தகவல்களை வழங்கும் இயற்கை ஆர்வலர்!.

தற்பொழுது மாறிவரும் காலநிலை மாற்றத்தால் இந்த பூமி பல வகையான மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கோடைகாலத்தில் மழை பெய்வதும், மழைக்காலத்தில் வெயில் அடிப்பதும், குளிர் காலத்தில் அதிக குளிர் ஏற்படுவதும் என சமீப காலங்களாக காலநிலையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் உலகில் பல்வேறு இடங்களிலும் சுனாமி, நிலச்சரிவு, அதிக மழை, அதிக வெப்பம் போன்ற பல காரணங்களால் பல உயிரிழப்புகள் நடக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் பல உயிர்கள் பலியாகியுள்ளது. இது தற்பொழுது உலகத்தையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

தற்பொழுது சமூக ஆர்வலர் வெற்றிச்செல்வன் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வயநாடு நிலச்சரிவு

கேரளாவில் வயநாட்டில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு அங்குள்ள பல கிராமங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு அழிந்து போயின.

கடந்த 30 ஆம் தேதி கேரளா வயநாட்டில் யாரும் எதிர்பாராத நேரத்தில் இரவு நடைபெற்றது அந்த நிலச்சரிவு சம்பவம். இதில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட பல கிராமங்கள் அழிந்தன.

மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்கள். மீட்பு பணியினரும், ராணுவ குழுவும் சேர்ந்து நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் அதில் பல பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு மண்ணில் சிக்கியிருந்தது.

சமூக ஆர்வலர் வெற்றிச்செல்வன் கூறியது

அவர் கூறும் போது 48 மணி நேரத்தில் கேரளாவில் 572 மில்லி மீட்டர், அதாவது 57 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. ஆனால் கேரளா முதலமைச்சர் கூறும் போது, எங்களுக்கு கொடுத்தது ஆரஞ்ச் அலர்ட் தான். ஆரஞ்சு அலர்ட் என்றால் 20 செ.மீ-க்கும் குறைவாக தான் மழை பெய்யும் என கூறியிருக்கிறார்.

மேலும் இந்தியாவும், ஆப்பிரிக்காவும் ஒன்றாக இருந்து, அது பிளவுபடும் போது உருவான மலை தான் மேற்கு தொடர்ச்சி மலைகள். மேலும் பல இயற்கை இடர்பாடுகளை சந்தித்த இந்த மலை தற்பொழுது 57 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பது ஒன்றும் இந்த மலைக்கு பெரிய விஷயம் அல்ல. ஆனால் தற்பொழுது இந்த அளவு மழையை கூட தாங்க முடியாத அளவிற்கு அந்த மலையில் நடந்தது என்னவென்றால், அந்த மலைகளில் தேக்கு மரங்கள் அதிகம் இருந்திருக்கிறது. அதனை வெட்டி உள்ளார்கள். மலைப்பகுதியில் உள்ளிருக்கும் காடுகள் அழிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத பல விஷயங்கள் அங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்பகுதியில் உள்ள மண்ணின் தன்மை, பாறையின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீரை தாங்கி நிற்கக் கூடிய தன்மையை மண் இழந்து விடுகிறது. இதனால் தான் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர் வெற்றிச்செல்வன் கூறியிருக்கிறார்.

இனி லிவிங் ரிலேஷன்ஷிப் கிடையாது.. ப்ரியா பவானி சங்கர் எடுத்த திடீர் முடிவு!.

Priya Bhavani Shankar: தமிழ் சினிமாவில் சில நடிகைகள் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து அதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து வருவார்கள்.

மேலும் ஒரு சிலர் தங்களின் வாழ்க்கையை தொகுப்பாளராகவும், சின்னத்திரை நடிகையாகவும் தொடங்கி, தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் படங்கள் வெளியாகி மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.

மேலும் இவர்கள் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருப்பதாலும் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருவார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருபவர் பிரியா பவானி சங்கர். தற்பொழுது இவரின் காதலருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய வாழ்க்கை தொடங்கினார். அதன் பிறகு பிரபல தொலைக்காட்சியில் நியூஸ் வாசிப்பாளராகவும் வேலை பார்த்து இருக்கிறார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “கல்யாண முதல் காதல் வரை” என்ற சீரியல் தொலைக்காட்சியின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு சிறந்த அறிமுக தொலைக்காட்சி நடிகைக்கான விருது விஜய் டிவியில் கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு இவர் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, அத்தியாயம் ஒன்று, யானை, திருச்சிற்றம்பலம், பத்து தலை போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே பிரபலமானார்.

மேலும் கடைக்குட்டி சிங்கத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பல வெள்ளித்திரை படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ரசிகர்களின் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

லிவிங் ரிலேஷன்ஷிப்பில் பிரியா பவானி சங்கர்

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தனது கல்லூரி காதலரான ரத்தினவேல் என்பவருடன் அடிக்கடி இருக்கும் புகைப்படங்களை இணைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் இவர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் பேட்டி ஒன்றில் கூறியபோது நான் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமே அவர்தான். எங்கள் திருமணத்திற்கு பிளான் செய்வதற்கு சோம்பேறித்தனமாக இருப்பதால், திருமணத்தை தள்ளிப் போட்டு வருகிறோம். அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற யோசனையில் இருப்பதாக பிரியா பவானி சங்கர் தெரிவித்திருக்கிறார்.