இப்போது லோகேஷ் கனகராஜ் இருப்பது போல ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.
இதனால் பட தயாரிப்பாளர்கள் பாக்யராஜின் அலுவலகத்திலேயே தங்கி இருந்தனர். எப்போது நமக்கு இவர் வாய்ப்பு கொடுப்பார் என்று காத்திருந்தனர். அந்த வகையில் பெரும் இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ் முக்கியமாக ஒவ்வொரு வாரமும் பாக்யராஜை பார்ப்பதற்காக ஒரு பெரும் கூட்டமே வரும். அதில் பாதி பேர் பாக்யராஜிடம் உதவி இயக்குனாரவதற்கு வருபவர்களே என்று கூறப்படுகிறது.
அப்படி இருந்த சமயத்தில்தான் நடிகை பூர்ணிமாவை காதலித்தார் பாக்யராஜ் .ஆனால் முதன்முதலில் சந்தித்தபோது அவர்களுடைய சந்திப்பு அவ்வளவு இனிமையாக இருக்கவில்லை. பாக்கியராஜின் மிகப்பெரும் ரசிகையாக பூர்ணிமாய் இருந்தார். எனவே ஒரு முறையாவது அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஒருநாள் அதே போல நேரில் சந்திக்க முடிந்தது அப்பொழுது அவரைப் பார்த்து உங்களது திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது சார் என்று பாக்யராஜிடம் ஆங்கிலத்தில் கூறினார் பூர்ணிமா. அதற்கு எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் பாக்யராஜ் நேராக சென்றுவிட்டார்.
இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானார் பூர்ணிமா. பிறகு பாக்யராஜ் எப்போது பூர்ணிமாவை பார்த்தாலும் அவரிடம் பெரிதாக பேசிக்கொள்ளாமல் அவரை நிராகரித்தே வந்துள்ளார். இதனால் கோபமான பூர்ணிமா ஒரு நாள் நேரடியாகவே பாக்யராஜை பார்த்து ஏன் என்னை பார்த்தால் பேசாமல் செல்கிறீர்கள் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த பாக்கியராஜ் நீங்கள் ஆங்கிலத்தில் ஏதாவது பேசுவீர்கள் எனக்கு அதற்கு அர்த்தமும் புரியாது. இவ்வளவு பெரிய இயக்குனருக்கு ஆங்கிலம் கூட தெரியவில்லையா? என்று எல்லாருக்கும் என்னை கேலி செய்வார்கள் அதனால்தான் உங்களிடம் பேசவில்லை என்று கூறியிருக்கிறார் பாக்யராஜ். அந்த வெளிப்படைத்தன்மை பூர்ணிமாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவே பிறகு காதலானது.