Cinema History
நிக்சனுடன் நெருக்கமாக பழகும் பூர்ணிமா..! கடுப்பில் சுற்றும் விஷ்ணு!..
Nixen and Poornima: பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கியது முதலே பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதனால் இவர்கள் இருவரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் சண்டைகளுக்கு இடையே சில வாரங்கள் கழித்து இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு உருவாக துவங்கியது. பூர்ணிமா மீது விஷ்ணுவிற்கு ஒரு விருப்பம் இருந்ததையும் பார்க்க முடிந்தது.
பிறகு விஷ்ணு பூர்ணிமாவிடம் சென்று மிகவும் ராசியாக பேச தொடங்கினார். இருவரும் நன்றாகதான் பழகி வந்தார்கள் ஆனால் போன வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் அந்த வீட்டிற்குள் வந்தனர்.
அப்படி வந்த பொழுது விஷ்ணுவின் பெற்றோர்கள் அவரை பூர்ணிமாவுடன் பழகக் கூடாது என்று கூறி அட்வைஸ் செய்தனர். இருந்தாலும் கூட அவர் பூர்ணிமாவுடன் பேசுவதை நிறுத்தவில்லை. இப்படி இருக்கும் பொழுது முதல் வாரத்தில் இருந்து பூர்ணிமா மீது ஒரு கண் வைத்திருந்தார் நிக்சன்.
ஆனால் பூர்ணிமா கூறும் பொழுது நிக்சன் தன்னுடைய தம்பி போல என்று நிறைய தடவை கூறியிருக்கிறார் ஆனால் இந்த வாரம் தன்னுடைய தம்பியுடன் பழகுவது போல பழகியதாக தெரியவில்லை.
இருவரும் மிக நெருக்கமாக பழகி டான்ஸ் ஆடி வருகின்றனர். இதை பார்க்கும் போதெல்லாம் விஷ்ணு கோபமாகி வருகிறார் இந்த வீடியோ வெளியான நிலையில் இது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
பூர்ணிமா இப்படி செய்வது தவறு என்று ஒரு சாரார் பேசி வந்தாலும் விஷ்ணு இருவேடத்தனமாக இருந்தார் அவர் பலமுறை பூர்ணிமாவை தவறாகவும் பேசியிருக்கிறார் அதனால் இவருக்கு இது தக்க பதிலடிதான் என்றும் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.