தனுஷ் வாயை விட்ட நேரம் சிம்பு களத்தில் குதிச்சிட்டார்.. ஓப்பனாவே ஆரம்பிச்ச போட்டி.. மறுபடியும் பிரச்சனையில் வட சென்னை 2 

தொடர்ந்து நடிகர் தனுஷ் வித்யாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா.

குபேரா திரைப்படத்திற்கு நல்ல வகையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் குபேரா திரைப்படத்திற்குப் பிறகு அவரது நடிப்பில் இட்லி கடை திரைப்படம் வெளியாக இருக்கிறது.

அதற்குப் பிறகு நடிகர் தனுஷ் வடசென்னை 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் தனுஷ்.

இப்படி எல்லாம் பேசி வந்த நிலையில் திடீரென தற்சமயம் சிம்பு நடித்த ஒரு திரைப்படத்தை இயக்க துவங்கியிருக்கிறார் வெற்றிமாறன். இந்தத் திரைப்படமும் கூட வடசென்னையை அடிப்படையாகக் கொண்ட படம் என்று கூறப்படுகிறது.

இது வெளியானால் கண்டிப்பாக தனுஷ் வட சென்னை 2 வில் நடிப்பாரா என்பது சந்தேகம்தான் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன எனவே நேரடியாகவே நடிகர் தனுஷும் சிம்புவும் திரைப்படங்களுக்காக போட்டி பட துவங்கி விட்டனர் என்று இது குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன.