ஏலியனை தேடி போகும் சிறுவன்… தமிழில் வரும் அட்டகாசமான அனிமேஷன் படம்.. Elio movie Trailer out…

ஹாலிவுட்டில் வெளியாகும் அனிமேஷன் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே தமிழ் சினிமா மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. முக்கியமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் எலியோ என்கிற திரைப்படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளது வால்ட் டிஸ்னி நிறுவனம். இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது ஏலியன்களை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஒரு சிறுவன்.

பிறகு ஏலியனின் உலகிற்கே செல்கிறான். அங்கு அவனுக்கும் ஒரு ஏலியனுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது இந்த நிலையில் பூமிக்கு அச்சுறுத்தலாக நடக்க போகும் விஷயங்களில் இருந்து எலியோவும் அவனது நண்பராக இருக்கும் ஏலியனும் சேர்ந்து எப்படி உலகை காக்க போகிறார்கள் என்பதாக கதை செல்கிறது.

குழந்தைகளுக்கு பிடித்த வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ட்ரைலர் இப்பொழுது வெளியாகி இருக்கிறது.