தமிழ் சினிமாவில் பல படங்கள் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பல நடிகர்களும் பட குழுவினர்களும் தங்களுடைய படத்தை பிரமோஷன் செய்வதற்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
அவ்வாறு கலந்து கொண்டு வரும் படக்குழுவினரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பது என்பது வழக்கமான ஒன்றுதான். இதில் அவர்கள் கேள்வி கேட்கும் பொழுது சில சர்ச்சையான கேள்விகளையும் கேட்பார்கள். ஆனால் அதற்கு படக்குழுவினர்கள் சாமர்த்தியமாக பதில் சொல்லி அவர்களின் கேள்விகளில் இருந்து தப்பித்து விடுவார்கள்.
அந்த வகையில் தற்பொழுது ஒரு படத்தின் ப்ரோமோஷன்க்கு சென்ற நடிகை ஒருவரிடம் பத்திரிக்கையாளர் தகாத கேள்வி கேட்க அதற்கு சக நடிகர் ஒருவர் தக்க பதிலடி கொடுத்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படம்
தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசாந்த். இவருடைய அப்பா சினிமா துறையில் இயக்குனராக இருந்தாலும் அவரின் பெயரை பயன்படுத்தாமல் தன்னுடைய நடிப்பு திறமையால் மட்டுமே தமிழ் சினிமாவில் நிலைத்து நின்றார்.
ஒரு காலகட்டத்தில் நடிகர் விஜய், அஜித்துக்கு போட்டியாக வளர்ந்து வந்த நடிகர் என்றால் அது பிரசாந்த். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக சினிமாவை விட்டு சில ஆண்டுகள் விலகி இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய பிரசாந்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. அவரின் தந்தை இயக்கத்தில் மம்பட்டியான் என்ற திரைப்படத்தில் பிரசாந்த் நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை.
நடிகையிடம் தகாத கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்
இந்நிலையில் அந்தகன் படத்தின் ப்ரோமோஷனில் நடிகை பிரியா ஆனந்த் நடிகர் பெசன்ட் ரவி, எனக்கு ஒர்க் அவுட் சொல்லிக் கொடுத்தார். அப்பொழுது எனக்கு இடுப்பு வலி ஏற்பட்டது என கூறினார்.
உடனே பத்திரிக்கையாளர் பிரியா ஆனந்திடம் ஏன் இடுப்பு வலி ஏற்பட்டது என தகாத முறையில் கேட்க, இதற்கு பிரியா ஆனந்த் கோபப்பட்டார். மேலும் இதற்குத் தான் நான் தமிழில் எங்கும் பேசுவதில்லை எனவும் கூறினார். உடனே தியாகராஜனும் முதன்முறையாக பெண் ஒருவர் உடற்பயிற்சி செய்கிறார் என்றால் அவருக்கு இடுப்பு வலி வரும். இதனை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறினார்.
இதன் பிறகு மைக்கை வாங்கி பேசிய பெசன்ட் ரவி பத்திரிக்கையாளரை நோக்கி நீங்கள் வேண்டுமானால் ஒரு முறை என்னுடன் உடற்பயிற்சி செய்ய வாருங்கள். உங்களுக்கு இடுப்பு வலிக்கிறதா இல்லையா என்று பார்ப்போம். எந்தநேரத்தில் என்ன மாதிரியான கேள்வி கேட்கிறீர்கள் என அவரை கண்டிக்கும் விதத்தில் கூறினார்.