பாரதிராஜாவும் பாக்யராஜும் தமிழ் சினிமாவில் இருந்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர்கள். இருவருமே குறைந்த பட்ஜெட்டில் திரைப்படங்கள் எடுத்து அதன் மூலமாக பெரும் வெற்றியை கொடுக்க கூடியவர்கள்.
இதனாலேயே இவர்கள் இருவருக்கும் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்தது. இந்த நிலையில் 16 வயதினிலே திரைப்படத்தில் துவங்கி சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் வரையிலுமே பாக்யராஜ் பாரதிராஜாவுடன் சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.
அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்த நிலையில் இதுக்குறித்து இயக்குனரும் நடிகருமான மனோபாலா கூறியுள்ளார். மனோபாலா அந்த காலக்கட்டத்தில் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் மனோபாலா பாரதிராஜா இயக்கத்தில் படம் தயாரிக்க முடிவு செய்தார்.
இதற்காக பாரதிராஜாவை நேரில் சந்தித்தார். அந்த சமயத்தில் பாரதிராஜா சொன்ன கதை மனோபாலாவுக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில்தான் அவர் பாக்யராஜை தேடியுள்ளார். அவர் பாரதிராஜாவிடம் உங்களிடம் இருந்தாரே உதவி இயக்குனர் பாக்யராஜ் அவர் எங்கே? என கேட்டார்.
அதற்கு பதிலளித்த பாரதிராஜா அவன் ரொம்ப ஓவரா பண்ணுனான், அவனை விரட்டிட்டேன் என கூறினார். அது தப்பு சார் இப்பதான் திறமையான ஆட்களை கூட வச்சிக்கணும் என கூறிய மனோபாலா பாரதிராஜாவுக்காக பாக்யராஜிடம் சென்று பேசினார்.
ஆனாலும் கூட பிறகு பாரதிராஜாவின் திரைப்படங்களில் பாக்யராஜ் வேலை செய்யவில்லை. இந்த நிகழ்வை மனோபாலா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.